”வேல் என்பது ஆயுதம் அல்ல அறிவை குறிப்பது” என ஆன்மிக பேச்சாளர் திருப்புகழ் மதிவண்ணன் கூறினார்.
அவர் கூறியதாவது: தமிழ் மொழியின் சிறப்பு வேல். இலக்கணப்படி பார்க்கையில் முதல்நிலை நீண்ட தொழிற்பெயர். வேலுக்கு பூஜை செய்வது குறித்து சிலப்பதிகாரத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் இருக்கிறார் என்பதற்கு சாட்சியே தமிழ் பாடல்கள் தான். முதல் கடவுள் வணக்கமே திருமுருகாற்றுப்படை தான். பிறகு கந்தபுராணம் திருப்புகழ் கந்தசஷ்டி கவசம் என நீள்கிறது.
முருகப்பெருமானுக்கு எல்லாமே ஆறு தான். கந்தபுராணம் ஆறு பகுதி வளர்த்த கார்த்திகை பெண்கள் ஆறு முருகனின் முகங்கள் ஆறு. அருணகிரிநாதர் நாவில் முருகன் வேல் கொண்டு எழுதினார். அதன்பின் அவர் எழுதிய பாடல் தமிழ் இலக்கியத்திற்கு பெரும் புகழை சேர்க்கிறது. இப்படி ஒரு பாடலை எந்த மொழியிலும் பார்க்க முடியாது. அந்த பாடலில் அருணகிரிநாதர் வலதுபுறம் இடதுபுறம் முன்னும் பின்னும் காக்க வேண்டும் என பாடியிருக்கிறார். அதுதான் கந்தசஷ்டி கவசத்தின் தோற்றுவாய். அதில் மொத்தமாக சொன்னதை பாலன் தேவராயர் ஒவ்வொரு அங்கமாக பிரித்து ‘காக்க வேண்டும்’ என கூறியுள்ளார். வேல் என்றால் அறிவுவேல் என்பதும் அறிவு என்பதும் ஒன்றுதான். வேலின் அமைப்பை பாருங்கள்…
முதலில் கூர்மையாக பின்னர் அகன்று அதன் பின் ஆழமாக இருக்கிறது. அதாவது அறிவு கூர்மையாக இருக்க வேண்டும் என்பதை வேலின் முனை காட்டுகிறது. அறிவு அகன்று இருக்க வேண்டும் என்பது வேலின் நடுப்பகுதி கூறுகிறது. அறிவு ஆழமாக இருக்க வேண்டும் என்பதை வேலின் அடிப்பகுதி உரைக்கிறது. இதற்கு சீவக சிந்தாமணியே சாட்சி. அதில் ஒரு பெண் மயக்கமுற்று விழுந்து விடுகிறாள். பின் மயக்கம் தெளிந்து எழும் போது அவள் ‘வேல்பெற்று எழுந்தாள்’ என்கிறார் ஆசிரியர் திருத்தக்க தேவர். அதாவது அறிவு பெற்று எழுந்தாள் என்கிறார்.
ஆயுதங்களிலேயே மனிதன் பெயர் வைக்க கூடிய ஒரே ஆயுதம் வேல் தான். அரிவாள் கத்தி சூலாயுதம் என்பதெல்லாம் பெயர்களில் இருக்காது. வெற்றி வேல் வைர வேல் வஜ்ரவேல் என வேல் பெயர் தாங்கிய மனிதர்கள் ஏராளம்.எனவே வேல் என்பது ஆயுதமல்ல… அறிவு. எனவே அனைவரும் அறிவு பெற்று விளங்க வேல் வணக்கம் செய்வோம்.இவ்வாறு கூறினார்.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...