பல ஆண்டுகளாக நீடித்த அயோத்தி நிலப்பிரச்சினை, கடந்த ஆண்டு நவம்பரில் முடிவுக்கு வந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, கோவில் கட்டும் பணி துவங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த 500 ஆண்டுகளாக ராமர் கோவில் போராட்டத்தில் கலந்துகொண்ட கரசேவகர்களின் தியாகத்தை அங்கீகரிக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதற்காக ராமர் கோவில் வளாகத்தில் கரசேவகர்களின் போராட்ட வரலாற்றை பதிவு செய்யும் வகையில் ஒரு நினைவகம் அமைக்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், ‘ராம ஜென்ம பூமி வளாகத்தில் அமையும் அனைத்திலும் நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன. இக்கோவிலுக்காக கடந்த 500 ஆண்டுகளாக போராடிய கரவேகர்கள் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் நினைவகம் அமைக்க ஆலோசித்து வருகிறோம். ராமாயணத்தின் காட்சிகளை சித்தரிக்கும் ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்படவுள்ளது’ என்றனர்.
இதன்மூலம், ராமர் கோவிலுக்கு வருபவர்கள் இடையே விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி.,) புகழை பரப்பும் நோக்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நினைவகத்தில் வி.எச்.பி., தலைவர் அசோக் சிங்கால், வி.எச்.பி., அறக்கட்டளை தலைவர் ஸ்ரீராமச்சந்திர பரமஹம்ஸ் ஆகியோரின் வரலாறும் இடம்பெற உள்ளது. கரசேவை செய்து உயிர்நீத்த கோத்தாரி சகோதரர்கள் உள்ளிட்டோரின் படங்களும் அதில் இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் வன்முறைகளுக்கு சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்படுவதற்கான ஒரு முக்கிய முடிவாக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வங்க தேச இந்துக்கள் மீதான...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: கோவில் நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகள் மற்றும் பணி நியமனங்கள் இந்த வழக்கு, மத அடிப்படையில் பணி நியமனங்களை சட்டரீதியாக உணர்ந்து தீர்மானிக்க...
உத்தவ் தாக்ரே மற்றும் அவரது சிவசேனாவின் வீழ்ச்சி என்பது, மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் சுவாரஸ்யமான திருப்பமாகவும் முக்கியமான பாடமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த வீழ்ச்சியை மேலும் ஆழமாக புரிந்துகொள்ள,...
சபரிமலை - எரிமேலி பாபர் சமாதி விவாதம் சபரிமலை ஐயப்பன் கோயில், இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் தெய்வீக புனிதத் தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள்...
தருமபுத்திரர், அறநெறி சிறிதும் தவறாதபடி, பல்லுயிர்களும் மகிழ்ச்சி யுடன் வாழும்படி, தன் அரசாட்சியைத் தன்னிகரற்ற தன் வெண்கொற்றக் குடை யின் கீழ் இருந்து, உலகினைப் பாதுகாத்து வந்தார்....