திருப்பதி திருமலை கோவிலில் செப். 30 ம் தேதி வரையில் இலவச ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மத வழிபாட்டுதலங்களில் வழிபாடு நடத்த மாநில மற்றும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை கடந்த சில மாதங்களாக விதித்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலில் வழிபாடு நடத்தஅனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கப்பட்ட ஒரு சிலநாட்களில் கோவிலில் பணி புரியும் ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கோவில் அடைக்கப்பட்டது.
இதனிடையே கோவில் நிர்வாகம்சார்பில் வெளி்யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: திருப்பதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வரும் 30 ம் தேதி வரையில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related