உத்திரகண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனித தலங்களில் ஜூலை 1 முதல் செப்., 7 வரை 39,741 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில் ஆகிய நான்கு கோயில்கள் இந்துக்களின் புனித தலங்கள். ஆண்டுதோறும் கோடைகாலத்தில், இந்துக்கள் இந்நான்கு தலங்களுக்குக் பயணிப்பது, வடமொழியில் சார் தாம் யாத்திரை என அழைக்கப்படும்.
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சார் தாம் யாத்திரையை உத்திரகாணட் அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 1 முதல் செப்., 7 வரை, இந்த 4 புனித தலங்களுக்கும், 39,741 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளனர் என உத்தரகண்ட் சார் தாம் தேவஸ்தானம் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.