திருமலையில் நாதநீராஜன மண்டபத்தில், நடந்த சுந்தரகாண்ட பாராயணத்தின் போது ஸ்ரீராம நாமத்தால் திருமலை எதிரொலித்தது.திருமலையில் கொரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் நலம் பெற தேவஸ்தானம் கடந்த ஜூன் மாதம் முதல் சுந்தரகாண்ட பாராயணத்தை துவங்கி நடத்தி வருகிறது. 68 சர்க்கங்களை கொண்ட சுந்திரகாண்டத்தில் தற்போது, 14 சர்க்கங்களின் பாராயணம் நடந்து முடிந்துள்ளது.
இவை தேவஸ்தான தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 150 முதல் 200 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டவுடன், அதை தேவஸ்தானம் அகண்ட பாராயணமாக நடத்தி வருகிறது.இதுவரை, 3 அகண்ட பாராயணங்கள் திருமலையில் முடிந்துள்ள நிலையில் நேற்று காலை 12 சர்க்கம் முதல் 14ம் சர்க்கம் வரையிலுள்ள 146 ஸ்லோகங்கள் அகண்ட பாராயணம் செய்யப்பட்டது. 200 வேதபண்டிதர்கள் இணைந்து திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் அகண்ட பாராயணம் செய்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த அகண்ட பாராயணத்தின் போது ஸ்ரீராமநாமம் பாராயணம் செய்யப்பட்டது. இந்த ராமநாம பாராயணத்தில் பக்தர்களும் கலந்து கொண்டனர்.இதனால், திருமலை முழுவதும் ஸ்ரீராம நாமம் எதிரொலித்தது. இதில், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதுபோன்ற அகண்ட பாராயணத்தால் உலக மக்கள் சுபிக் ஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பர் அதனால், தேவஸ்தானம் இதுபோன்ற பாராயணங்களை திருமலையில் நடத்தி வருகிறது.
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
128 வயது பழக்கப்பட்டு, கும்பமேளாக்களில் பங்கேற்று சாதனை புரிந்துள்ள சுவாமி சிவானந்த பாபாவின் வாழ்க்கை பலர் நம்ப முடியாத அதிசயங்களின் தொகுப்பாக உள்ளது. அவர் வாழ்க்கை முறையும்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...