அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள கோவில் மணி மற்றும் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகள் அடங்கிய ராமரத யாத்திரை வாகனத்தை பா.ஜ.க வழியனுப்பி வைத்தது.அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் தங்கம், வெள்ளி, கட்டுமான பொருட்களை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
நேற்று பிரதமர் மோடியின் 70வது பிறந்த தினத்தையொட்டி சென்னையில் உள்ள சட்ட உரிமைகள் குழு தேசிய பொதுசெயலர் ராஜலட்சுமி மன்தா ஏற்பாட்டில் 613 கிலோ கோவில் மணி, செம்பு உலோகத்தில் வடிவமைத்த ராமர், சீதை, லட்சுமணர், அனுமான், விநாயகர் சிலைகள் அடங்கிய ராமரத யாத்திரை வாகனம் அயோத்திக்கு செல்ல ராமேஸ்வரம் வந்தது.
ராமேஸ்வரம் கோவில் முன்பு மெகா மணி, சிலைகளுக்கு பூஜை செய்து தமிழக பா.ஜ.க துணை தலைவர் நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளீதரன் கொடியசைத்து ரதயாத்திரையை துவக்கி வைத்தனர்.
Related