உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இனி வரும் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் ஒரு நாளைக்கு 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர பூஜை காலங்களில் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருடம் தோறும் வருவார்கள். ஆனால், கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி மண்டல மகர விளக்கு பூஜை காலங்களில் ஒரு நாளைக்கு 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். நிலக்கல்லில் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படும். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் இவ்வாறு திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் வன்முறைகளுக்கு சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்படுவதற்கான ஒரு முக்கிய முடிவாக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வங்க தேச இந்துக்கள் மீதான...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: கோவில் நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகள் மற்றும் பணி நியமனங்கள் இந்த வழக்கு, மத அடிப்படையில் பணி நியமனங்களை சட்டரீதியாக உணர்ந்து தீர்மானிக்க...
உத்தவ் தாக்ரே மற்றும் அவரது சிவசேனாவின் வீழ்ச்சி என்பது, மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் சுவாரஸ்யமான திருப்பமாகவும் முக்கியமான பாடமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த வீழ்ச்சியை மேலும் ஆழமாக புரிந்துகொள்ள,...
சபரிமலை - எரிமேலி பாபர் சமாதி விவாதம் சபரிமலை ஐயப்பன் கோயில், இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் தெய்வீக புனிதத் தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள்...
தருமபுத்திரர், அறநெறி சிறிதும் தவறாதபடி, பல்லுயிர்களும் மகிழ்ச்சி யுடன் வாழும்படி, தன் அரசாட்சியைத் தன்னிகரற்ற தன் வெண்கொற்றக் குடை யின் கீழ் இருந்து, உலகினைப் பாதுகாத்து வந்தார்....