மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளை இசை, நடனம் இவற்றில் பயிற்சி பெற செய்வீர்கள். கணவன் – மனைவிக்குள் இடையே அன்யோன்யம் உண்டாகும்.
ரிஷபம்: பரபரப்புடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். வெளிநாட்டில் உள்ள உறவினரால் சில திட்டங்கள் நிறைவேறும். வீடு, மனை வாங்குவது குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
மிதுனம்: மறைமுகமாக எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். உங்களின் தன்னடக்கத்தை அனைவரும் பாராட்டுவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்: பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். எந்தப் பிரச்சினைகளானாலும் அவற்றை சாதுர்யமாக எதிர்கொள்வீர்கள். பணவரவு உண்டு.
சிம்மம்: மன உளைச்சல், டென்ஷன், சோர்வு, விரக்தி வந்துபோகும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. பிள்ளைகளின் உயர்கல்விக்கான செலவு திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.
கன்னி: யாரையும் யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். தாயாரின் உடநலம் பாதிக்கக் கூடும்.
துலாம்: புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் இன்று முடிவுக்கு வரும். கலைப்பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பணவரவு திருப்தி தரும். பாதியில் நின்றுபோன கட்டிட வேலைகளையெல்லாம் விரைந்து முடிக்க திட்டமிடுவீர்கள்.
தனுசு: பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய இனிய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
மகரம்: எளிதில் முடிய வேண்டிய விஷயங்கள் கூட இழுபறியாகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
கும்பம்: தடைகள் உடைபடும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.
மீனம்: அரசு அதிகாரிகளின் துணையுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். வெளி விவகாரங்களில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வாகனம் செலவு வைக்கும்..
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.