ஆண்டவனையே ஆண்ட ஆண்டாளின் திருப்பாவை….வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களில் 473 முதல் 503 வரை உள்ள பாடல்களின் தொகுப்பு திருப்பாவை பாடல்கள். மார்கழி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது திருப்பாவையும் ஆண்டாளும்.
மொத்தம் 30 பாடல்களை கொண்ட திருப்பாவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. தாய்லாந்தில் மன்னருக்கு முடிசூட்டும்போது திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன.
பூஜைக்கான நல்ல நேரம்..
ஞாயிறு
நல்ல நேரம் 7.30-8.30; 1.30-2.30.
எமகண்டம் மதியம் 12.00-1.30
இராகு காலம் மாலை 4.30-6.00
10.1.2021 ஞாயிற்றுக்கிழமை சார்வரி வருடம் மார்கழி மாதம் – 26ம் நாள்
காஞ்சிபுரம் மகா பெரியவர் ஆராதனை.
குளிகை: மாலை 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பொது: தேய்பிறை. துவாதசி திதி மாலை 4.53 மணி வரை; பிறகு திரயோதசி. அனுஷ நட்சத்திரம் பகல் 10.49 மணி வரை ; பிறகு கேட்டை. யோகம்: மரண யோகம்.
பிரதோஷம்
பரிகாரம்: வெல்லம்
திருப்பாவை பாசுரம் 26
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீல நிறத்தவனே! ஆர்ப்பரிக்கும் மாக்கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு உன் அருளைத் தரவேண்டும். இந்த அண்டத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் கொடுப்பாயாக. அது இந்த நோன்பை நிறைவேற்றுவதற்கு உன் அருளைக் கொடுக்கும்.
பாஞ்சசன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருக்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின. இதுதான் இந்த pஆஞ்சன்யம் என்ற சங்கின் கதையாகும்.