Today Rasi Palan Tamil : இன்றைய ராசி பலன்கள் (18 ஜனவரி 2021)

0
3

 

மேஷம்
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
மிதுனம்
மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.
கடகம்
கடகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.
சிம்மம்
சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
கன்னி
கன்னி: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.
துலாம்
துலாம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். நினைத்த காரியம் வெற்றி பெறும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.
தனுசு
தனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும்.தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகார பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகன வசதி உயரும். வியாபாரத்தில் பற்று வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.
கும்பம்
கும்பம்: கணவன்- மனைவிக்குள் அன்னியோம் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்க்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
மீனம்
மீனம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here