காலபைரவரருக்கு உகந்த மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது நாம் வேண்டிய வேண்டுதல்கள் அத்தனையும் அப்படியே பலிக்கும்.
பைரவர்களின் அவதாரத்தில் 64 வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் காலபைரவர் முதன்மையானவராக விளங்குகின்றார். அனைத்துக் கோவில்களையும் காலபைரவர் பாதுகாப்பதாக கூறப்படுகிறது.
கால பைரவர் உடைய அருள் பெற அவருடைய வாகனமாக விளங்கும் நாய்களுக்கு உணவு தானம் செய்ய வேண்டும். இரவில் மீந்து போகும் சாப்பாட்டை வீணாக்காமல், தனியாக ஒரு தட்டு வைத்து அதில் நாய்களுக்கு உணவிட்டால் நவக்கிரஹ தோஷங்கள் விலகும்.
பைரவரை வழிபட அஷ்டமி நாட்கள் மிகவும் விசேஷமானதாகும்.
வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி ஆகிய இரண்டு நாட்களும் பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறும். வளர்பிறை அஷ்டமியை விட, தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் உடைய சக்திகள் அதீதமானதாக இருக்கும்.