அந்த வகையில் உடல் சூட்டை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் நமக்கு உதவும் லெமன் புதினா சர்பத்தை எடுத்துக் கொள்ளவது சிறந்த தேர்வு ஆகும். இந்தப் பானத்தை தயாரிப்பதற்கென தனி கோச்சிங் எல்லாம் போக தேவையில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் முடித்து விடலாம்.
சரி, இப்போ செய்யுமுறைக்கு வருவோம். இல்லை. கொஞ்சம் பொறுங்கள்.
லெமன் (எலுமிச்சை) – புதினாவின் ஆரோக்கிய நன்மைகள்
லெமன் (எலுமிச்சை) மற்றும் புதினா இரண்டும் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன. அவை தொற்றுநோயை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை விலக்கி வைக்க உதவுகின்றன.
இந்த இரண்டு பொருட்களும் மிகவும் நீரேற்றம் கொண்டவை. எனவே இவை கோடை வெப்பத்தில் நிச்சயம் நமக்கு உதவும்.
இந்த இரு பொருட்களின் கலவையில் உருவாகும் இந்த பானத்தில் நோயெதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதாக அறியப்படுகின்றன. இந்த பெருந் தொற்று காலத்தில் நிச்சயம் நமக்கு கைகொடுக்கும்.
லெமன் புதினா சர்பத்தின் செய்யமுறை என்ன?
லெமன் புதினா சர்பத் பானம் செய்வதற்கு முதலில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ற அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கப் புதினா இலைகள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2-3 டீஸ்பூன் தேன், அரை தேக்கரண்டி வறுத்த சீரகத்தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். பிறகு அனைத்தையும் மிக்சியில் வைத்து நன்கு அரைத்து விடவும். தேவைப்பட்டால் சிறிதளவு குளிர்ந்த நீரைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த பானத்தில் தேனிற்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்த்தும் கொள்ளலாம். இவை உங்கள் பானத்திற்கு கூடுதல் சுவை தருகிறது.
இப்போது உங்கள் பானம் தயாரானதும், அவற்றை ஒரு கிளாசில் ஊற்றி அனுபவிக்கவும். இது கோடை வெப்பத்தில் இருந்து புத்துணர்ச்சி அளிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.
இந்த சுவைமிகுந்த பானத்தை நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாமே மக்களே.!!!