பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் சிவசேனா ஆதரவாளர்களுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
குடால் பகுதியில் பாஜக எம்.பி.யும் முன்னாள் சிவசேனா தலைவருமான நாராயண் ரானேவுக்கு நெருங்கியவா் நடத்தும் பெட்ரோல் நிலையம் இருந்ததாக மாவட்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நிலையத்திற்கு வந்த வாகன ஓட்டிகளுக்கு சிவசேனா எம்.எல்.ஏ வைபவ் நாயக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சனிக்கிழமை பணம் செலுத்தினர். இதைப் பார்த்த பாஜக ஆதரவாளர்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் கூடி வைபவ் நாயக்கிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் மோதினர்.
இது தெரிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அனைவரையும் கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தனது ஆதரவாளர்கள் 12 பேர் மற்றும் பாஜகவில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வைபவ் நாயக் தெரிவித்தார்.