அந்த பங்களாவில் கழிவறையில் பொருத்தப்பட்டிருக்கும் சிங்க் இந்தியாவிலேயே விலைமதிப்பற்ற தாக இருக்க வேண்டும் என்று கடைக்காரரிடம் கேட்டு வாங்கியதாதவும் அதேபோல் ஷவர் விலை அதிகமாக இருக்க வேண்டும் என்று கேட்டு வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளது லாசரசைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்பிக்கள் போல் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு கட்டிய இந்த வீட்டிற்கு பால் காய்ச்சும் நிகழ்வைக் கூட படு ரகசியமாக செய்ததாகவும் பங்களாவின் குளியலறை 25 அடி நீளமும் 50 அடி அகலமும் கொண்டது என்றும் கூறப்படுகிறது. “பத்துக்கு பத்து அடி குடிசை போட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் கொடுக்கும் காணிக்கையில்தான் நீங்கள் வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். இது தேவையா?” என்று லாசரசின் உறவினரான மத போதகரே கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறு பல கோடிகள் கொட்டி கட்டப்பட்ட இந்த பங்களாவில் அவர் தினமும் வசிப்பது கூட இல்லை என்றும் என்றோ ஒருநாள் அங்கு சென்று தங்குவதற்கு இவ்வளவு ஆடம்பரமான பங்களா கட்டியுள்ளார் என்றும் விமர்சிக்கப்படுகிறது. அந்த பங்களாவிற்குள் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜிம், 10 கார்கள் வைப்பதற்கான கார் ஷெட் என்று கார்ப்பரேட் முதலாளி போல் லசாரஸ் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறாராம்.
முதலமைச்சர்கள் கூட இந்த அளவுக்கு வசதியான பங்களா வைத்திருக்க மாட்டார்கள் என்றும் போயஸ் கார்டனை விட மிகவும் மதிப்பு மிக்க வீடு என்றும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? இயேசுவைப் பற்றி இரண்டு மூன்று வார்த்தைகள் பேசுவது மட்டுமே இவரது வேலை எனும் போது இவ்வளவு மதிப்புள்ள சொத்துக்களை வாங்க அவருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த பங்களாவில் செய்யப்பட்டிருக்கும் உள் வேலைகளை அவர் தனது இரண்டு வீடியோக்களில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த பங்களாவின் வேலைப்பாடு மிகவும் கச்சிதமாகவும் விலை உயர்ந்ததாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சுவர் முழுவதும் இன்டீரியர் டெக்கரேசன்கள் செய்யப்பட்டும் அந்நியர்கள் உள்ளே நுழையாதவாறு பிங்கர் பிரிண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டும் இருப்பது அந்த வீடியோ பதிவு மூலம் தெரிய வருகிறது.
ஏற்கனவே லாசரஸ் மீது பாலியல் குற்றங்கள் இருந்து வரும் நிலையில், இது போன்ற மர்ம பங்களாக்களை மதபோதகர்கள் எதற்காக ஊருக்கு வெளியே கட்டி வைத்துள்ளனர், அந்த பங்களாவிற்குள் அப்படி என்னதான் நடக்கின்றது என்று சமூக ஆர்வலர்கள் திகில் கிளப்புகின்றனர்.
இப்போது தான் மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து ₹120 கோடி கணக்கில் காட்டாத வருமானம் மற்றும் 5 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றியது. அடுத்ததாக மோகன் லாசரஸ் வீட்டிலும் ஐ.டி ரெய்டு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
The post கிறிஸ்தவ மோகன் சி லாசரஸ் மீது வருமான வரித்துறையினர் நடவடிக்கை பார்வை…! appeared first on தமிழ் செய்தி.