வருகிறார் வருகிறார் வனசாஸ்தா வருகிறார்.
வருகிறார் வருகிறார் வன்புலிமேல் வருகிறார்.
பெருங்குளக்கரை வாசம் செய்யும் வனசாஸ்தா வருகிறார்.
சொர்க்க போக வாழ்வழிக்க வில்லேந்தி வருகிறார்.
ஐந்துமலை அதிபதியாம் ஐயப்பசாமி வருகிறார். பெருங்குளக்குரை குடியிருக்கும் வனசாஸ்தா வருகிறார்.
வருகிறார் வருகிறார் வனசாஸ்தா வருகிறார்.
பாறைகளின் தோரணத்தில் படை சூழ நிற்கிறார்.
ஆலமர அலங்காரத்தில் அம்புவில்லுடன் நிற்கிறார். நீலவேஷ்டி தரித்துகிட்டு நித்திய பிரம்மசாரி நிற்கிறார். மகிர்ஷியை அளித்த அந்த மனிகண்டவாசனும் நிற்கிறார்.
தேவி அமர்ந்த ஊரதாம் தேவிகோட்டில் நிற்கிறார்.
கண்கண்ட வனசாஸ்தா கண்னேதிரே நிற்கிறார்.
வருகிறார் வருகிறார் வனசாஸ்தா வருகிறார்.
வனம்தன்னில் வாசம் செய்யும் வனசாஸ்தா வருகிறார். துன்பங்களை துடைப்பதற்கு துர்காதேவி வருகிறார். பக்தர்களை காப்பதற்கு பத்ரகாளி வருகிறார்.
இன்னல்களை தீர்ப்பதற்கு இசக்கியம்மா வருகிறார். அகிலம் எல்லாம் காக்கும் அந்த ஐயனாரும் வருகிறார். நாகதோஷம் தீர்பதற்கு நாகராஜா வருகிறார்.
வருகிறார் வருகிறார் வனசாஸ்தா வருகிறார்.
அச்சம் கோயில் வாழும் எங்கள் அம்மை அப்பன் வருகிறார்.
அரியுடன் அரனும் சேர்ந்த அரிஹர சுதன் வருகிறார். எரிமேலி வாசம் செய்யும் தர்மசாஸ்தா வருகிறார்.
பம்பையின் பாலகனும் பரிவுடனே வருகிறார். பெருகுளங்கரை வாசம் செய்யும் வனசாஸ்தா வருகிறார்.
சொர்க்க போக வாழ்வுபெற பக்தர்களே வாருங்கள்.
வருகிறார் வருகிறார் வனசாஸ்தா வருகிறார்.
வருகிறார் வருகிறார் வனசாஸ்தா வருகிறார்… பெருங்குளக்கரை வாசம் செய்யும் வனசாஸ்தா வருகிறார்…