”எனக்கும் தலையில் தான் உயிர்நிலை உள்ளது” எனத் துரியோதனன் பொய்யு ரைத்தான். துரியோதனன் கூறியது உண்மை என நம்பி பீமன், அவன் தலையில் ஓங்கி அடித்தான். சிறிது நேரம் மயங்கி அமர்ந்த துரியோதனன் எழுந்து பீமன் தலையைப் பலமாகத் தாக்கினான். பீமன் நிலை குலைந்து களைப்படைந்து போனதை அர்ச்சுனன் கண்டான். உடனே அவன் கண்ணபிரானைப் பார்த்து, கண்ணா! துரியோதனனைவிட பீமன் களைத்துப் போவதற்குக் காரணம் யாது?எனக் கேட்டான். அதற்குக் கண்ணபிரான், “அர்ச்சுனா! உயிர்நிலை சிரசிலே உள்ளது என உண்மை உரைத்ததனால் பீமன் மிகவும் தடுமாறிக் களைப்புறுகின்றான்.
ஆனால் துரியோ தனன் பொய்யுரைத்துள்ளான். அதனால் அவன் சிறிதே களைப்புறுகின்றான். துரியோதனன் பீமனைக் காட்டிலும் சாமர்த்தியமுள்ளவன். அவன் கூறியபடி அவன் தலையில் அடித்து அவனைக் கொல்ல முடியாது. அவன் பொய் கூறியத னால் அதர்ம வழியைத்தான் பின்பற்ற வேண்டும். அன்று அரசவையில் பீமன், துரியோதனனின் “இரண்டு தொடை களையும் பிளப்பேன்” என்று சபதம் செய்துள்ளான். அதனைப் பின்பற்றி இப்போது துரியோதனன் இடுப்பிற்குக் கீழேயுள்ள தொடையை அடித்துத் தன் சபதத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் துரியோதன னைக் கொல்ல முடியாது” என்று கூறினாள். கண்ணன் சொன்ன வார்த்தையைக் கேட்ட அர்ச்சுனன், பீமன் கண்களுக்கு முன்பாகத் தன் தொடையில் கை வைத்து எதிரினில் வந்து நின்றான். அந்தக் குறிப்பை அறிந்து கொண்டு பீமன் இட மாகவும், வலமாகவும் கதையைச் சுழ சுழற்றிக் கொண்டு, துரியோதனனைத் தாக்கினான். நீண்ட நேரம் போர் செய்தபின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். பிறகு துரியோ தனன் கோபத்துடன் பீமன் தலையில் அடித்தான்.
அந்த அடியினால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு மூர்ச்சை அடைந்தான். பின்னர் ஒருவாறு தேறி தன்னைத் தயார் செய்து கொண்டு துரியோதனனை அடிப்ப தற்கு ஓடினான். தொடைகள் முறிந்த துரியோதனன் பீமனின் அடி தன்மேல் விழாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணித் துரியோதனன் உடனே மேலே எழும்பினான். அதனைக் கண்டான் பீமன். துரியோதனன் எம்பிக் குதிக்க எத்தனித்த போது இரண்டு தொடைகளையும் குறி வைத்துத் தன் கதையால் ஓங்கி அடித்தான். எகிறியபோது அந்த அடியானது அவனது தொடைகளில் நன்றாக விழுந்தது. அதனால் அவனுடைய இரண்டு தொடை களும் முறிந்தன. தொடைகள் முறிந்த வுடன் பூமியே எதிரொலிக்கும்படி கத்திக் கொண்டு கீழே விழுந்தான். அப்பொழுது பெருங்காற்று வீசியது. இடி இடித்தது. புழுதி மழை பொழிந்தது; பெருமரங்களும், பெரும்பாறைகளும், சரிந்து வீழ்ந்தன. பூமி அதிர்ந்தது.
வானத்தில் இருந்து நெருப்புக் கொள்ளிகள் கீழே வீழ்ந்தன. இராக்ஷசர்கள், யக்ஷர்கள், பிசாசுகள் பேரொலி செய்தனர். நீர் நிலைகள் இரத்தத்தைக் கக்கின. இந்தக் கோரமான காட்சியைக் கண்டு பாண்டவர்கள் அச்சம் கொண்டனர். பலராமரின் கோபமும் கண்ணபிரானின் சமாதானமும் பெரிய மரம் வெட்டப்பட்டுக் கீழே கிடக்கும் காட்சியைப் போன்று பூமியில் விழுந்து கிடக்கும் துரியோதனனைக் கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிங்கத்தினால் தள்ளப்பட்ட மதங்கொண்ட யானை போல துரியோதனன் எழுந்திருக்க முடிவாது பூமியில் கிடந்தான். எழுந்திருக்க முடியாது தரையில் படுத்துக்கிடந்த துரியோதனனை நோக்கி, பீமன், “அறிவற்றவனே! ஆணவம் கொண் டவனே! அன்று சபையில் திரெளபதியைத் துகிலுரியச் செய்து இகழ்ந்து பேசினாய். அதன் பயனை இப்போது நன்றாக அனுபவிக்கிறாய், கெடுவார் கேடு நினைப்பார் அல்லவா” என்று கூறித் தன் இடக்காலால் எட்டி உதைத்தான். ஒரு முறை அன்று பலமுறை பலர் காண புரட்டிப் புரட்டி அவன் தலையை உதைத்தான் பீமன் மீது பலராமர் கோபம் பீமனின் இந்தச் செயலைக்கண்டு அங்கிருந்த அனைவரும் மிகுந்த வருத்தம் கொண்டனர்.
குறிப்பாக, தருமபுத்திரர் மனம் வருத்தம் மிக அடைந்தார். அவர், “பீமா! உன் சபதம் நிறைவேறிவிட்டது. பகையைப் பழி தீர்த்துக் கொண்டாய். எனவே அவனைக் காலால் எட்டி உதைக் காதே, அது நியாயமன்று. வணங்காமுடி மன்னனாக, பேரரசனாக அரியாசனத்தில் வீற்றிருந்தவனை இவ்வாறு எட்டி உதைப்பது அநாகரிகம்” என்று பீமனிடம் கூறிவிட்டு, துரியோதனனிடம் சென்று, கண்களில் கண்ணீர் ததும்ப, “அப்பா, துரியோதனா! நீ கோபம் கொள்ள வேண் டாம். விதிப்படி எல்லாம் நடந்துவிட்டது. பேராசை, அறியாமை, ஆணவம் போன்ற-வற்றால் நீ இந்நிலையை அடைந்தாய். உன்னுடைய அடாத செயலால் உன் னுடைய உறவினர் எல்லோரும் கொல்லப் பட்டனர். உனக்கும் மேலான மரணமே ஏற்பட்டுள்ளது உனக்குச் சொர்க்கம் நிச்சயம்” என்று பேசினார்.