பேரரசனாகிய துரியோதனன் நடந்து செல்வதைப் பார்த்ததும், தருமபுத்திரரும் தேரினின்று இறங்கி அவனுடன் நடந்து செல்லலானார். அப்பொழுது தருமபுத்திரர் துரியோதனனை நோக்கி, “தம்பி! இனி போர் எதற்கு ? உன்னுடைய கட்டளை களை நாங்கள் ஐவரும் நிறைவேற்று கிறோம். நீயே ஆட்சி செய் என்று கூறினார். அதற்குத் துரியோதனன்.
“மூத்தவரே! என்னுடன் இருந்தவர்கள் எல்லாம் இறந்தபின் நான் தனியே வாழ்ந்து அரசாட்சி செய்து என்ன பயன் உள்ளது? அதுமட்டுமன்று, உமது தயவினால் ஆட்சிக் கட்டிலில் ஏறுதலைவிட இறத் தலே மேல்” என்று கூறி, போர் செய்தற்குச் சொன்ன ஸ்யமந்த பஞ்சகத்தை அடைந் தான். அவ்விடத்தில் பாண்டவர்களைச் சார்ந்தவர்கள் எல்லோரும் இருக்க, துரியோதனன் பீமன்முன் போய் நின்றான். இருவரும் நேராக நெருங்கி வந்து தமது சங்குகளை வாயில் வைத்து போர் தொடங்கியது என்பதற்கு அறிகுறியாகச் சங்கநாதம் செய்தார்கள்.
சங்கநாதம் செய்தற்குப் பின்னும் போர் தொடங்குதற்கு முன்னம் உள்ள இடைவேளையில் தீர்த்த யாத்திரை சென்று முடித்துக் கொண்டு பலராமன் திரும்பி வந்து கொண்டிருப் பதை அனைவரும் கண்டார்கள். அனை வரும் மகிழ்ச்சியுடன் அப்பெருமகனை எதிர்கொண்டு வரவேற்றார்கள். கண்ணபிரானும் அண்ணன் பலராமனை வணங்கி, போரின் நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினார். பலராமனும் தான் போய்வந்த தீர்த்தத் தலங்களின் சிறப்புக்களையெல்லாம் எடுத்துக் கூறினார். தீர்த்தயாத்திரை முடி கின்ற காலத்தில் நாரதர் போர் நிகழ்ச்சிகளை முறையாகக் கூறியதால் அறிந்ததாக வும். அதனால் இங்கே வரமுடிந்ததாகவும் கூறினார்.
அதன்பின் துரியோதனன், பீமன் ஆகிய இருவரும் பலராமனை வணங்கி னர். அவரது ஆசி பெற்றுப் போர் தொடங் கினார்கள். இருவரின் கண்களும் சிவந்தன. பாம்பு போலச் சீறினார்கள். தத்தம் வலிமையை எடுத்துக் கூறிக் கர்ச்சித்தனர்; பற்களை நறநறவென்று கடித்தனர்.
இடிபோலப் பேராரவாரம் செய்தனர்; இரண்டு தோள் களையும் பருத்து விளங்கத் தட்டினர்; தாவிப் பாய்ந்து பூமி அதிரக் குதித்தனர். இரு மலைகள் போலப் பெருமிதம் தோன்ற தங்கள் தங்கள் இரண்டு கால்களை யும் ஒருத்தொருக்கொருத்தர் பின்னிக் கட்டினர். வலமும் இடமுமாகத் திரும்பித் திரும்பித் திரிந்து நால்விகற்பங்கள் பயின்றனர்; கதையை ஒரு கையாலே சுழற்றினர். அக்கதைகளைக் கொண்டு இருவரும் மாறி மாறித் தாக்கினர். ஒருவர் எறிந்த கதையை மற்றொருவர் பிடித்துத் தடுத்தனர். பொய்யுரைத்த துரியோதனன் இவ்வாறு உக்கிரமாகப் போரிடுகின்ற காலத்து துரியோதன மன்னன் களைப் படைந்தான். அதனால் அவன், “பொழுது போயிற்று; உயிர் நிலையை அறிந்து அந்த இடத்தில் கதையால் தாக்கி யாரொருவர் வெல்கின்றாரோ அவரே பூமியை ஆள லாம். ஆதலின் உன் உயிர் நிலை இருக்கு மிடத்தை முதலில் சொல்” என்றான்.
பீமன் தன் உயிர் நிலை தலையில் உள்ளது என உண்மையைக் கூறினாள். அதனை அறிந்து கொண்ட துரியோதனன் தன் கதையினால் அவன் தலையினை ஓங்கி அடித்தான். அதனால் பீமன் மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தான். பின்னர் தெளிவு பெற்று ”உன் உயிர் நிலை எங்கே உள்ளது ?” என பீமன் துரியோதனனைத் திருப்பிக் கேட்டான்.