துரியோதனன் ஓடிப் போனான் என்பதை அறிந்த பாண்டவர் சேனை ஒன்று சேர்ந்து எஞ்சிய கௌரவசேனையைக் கொன்று குவித்து, பேய்களுக்கும், கழுகு களுக்கும், காகங்களுக்கும், நரிகளுக்கும் குவிந்திருக்கின்ற பிண மலைகளையும் இரத்த ஆறுகளையும் விருந்தாகக் கொடுத்தார்கள். தேவர்கள் மலர் மாறி பொழிந்து பாண்டவர்களின் வெற்றி யினைப் பாராட்டினார்கள். வாய்மையாள னாகிய தருமபுத்திரர் வெல்லவே தரும தேவதை மகிழ்ச்சியால் பூரித்தாள்.
நிலமகள் பாரம் குறையப் பெற்று மகிழ்ந் தாள். அதற்குக் காரணமான பூபாரந்தீர்க்க வந்த புயல் வண்ணனாகிய கண்ணபிரானை ஏத்திப் போற்றிப் புகழ்ந்தாள். துரியோதனன் வீழ்ச்சி வாகனங்களையும், ஆயுதங்களையும், படைகளையும் இழந்த துரியோதனன் தனித்து நின்றான். பாண்டவ சே சேனையின் பேராரவாரத்தைக் கேட்டும், தன்னுடைய பதினொரு அக்குரோணி சேனை அழிந்ததைக் கண்டும் அஞ்சி நடுங்கினான். இப்பொழுது அவனுடன் எஞ்சி நின்ற வர்கள் அஸ்வத்தாமா, கிருபாசாரியார். கிருதவன்மா என்ற மூவரே ஆவர்.
தனித்துவிடப்பட்ட அத்துரியோதனன், ஒரு கதையை மட்டும் எடுத்துக் கொண்டு பகைவர்கள் அறிந்து கொள்வதற்கரிதான ஓர் இடத்தைத் தேடி ஓடினான்; ஓடினான். வழியில் நீர் நிறைந்த ஒரு ந்த ஒரு மடுவினைக் கண்டான். அதனுள் புகுந்து கொண்டான். அப்பொழுது அவன், “ஞானவான்களாகிய பிதாமகர் கர் பீஷ்மர், ஆசார்யர் துரோணர், சிற்றப்பா விதுரர், முதல் ஆசார்யர் கிருபர் போன்றோரின் நல்லுபதேசங்களைத் தள்ளி, மாமன் சகுனி, கர்ணன், துச்சாதனன் போன்றோரின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டதனால் இன்று பகைவர் பாண்டவர்களுக்கு என் அரிய உயிரையும், பின் என் குரு நாட்டையும் கொடுக்க இருக்கின்றேன்.
என்றாலும் இன்னொரு முயற்சி செய்யப் போகின்றேன். அதில் வெற்றி இல்லையென்றால் போரிட்டு மடிவேன்” என்று தன் உள்ளத்துள் கூறிக் கொண்டான். இறந்தவரை உயிர்ப்பிக்கும் மந்திரம் மடுவில் இருந்து கொண்டு முன்பு ஒரு முனிவன் உபயோகித்த இறந்தவர் அனை வரும் மீண்டும் உயிர் பெற்று வருகின்ற மந்திரத்தை உச்சாடனம் செய்யலானான்.
அந்த நேரத்தில் சஞ்சயன் அங்கு வந்தான். வந்த சஞ்சயனிடம் துரியோதனன், “சஞ்சயா! ஒரு முனிவன் முன்பு எனக்குக் கூறிய மந்திரத்தால் இறந்தவர் அனை வரையும் எழுப்பப் போகிறேன். அதன் மூலம் பாண்டவர்களை வெற்றிக் கொள் வேன்.மீண்டும் ஆட்சி புரிவேன். அம்மந்திரம் கைகூடவில்லையெனில் போர் புரிந்து மாண்டு போவேன்” என்று கூறிய அவன், மேலும், ‘நான் தன்னந்தனியாய் வாழேன். இவற்றை என் தாய் தந்தையரி டம் கூறுவாயாக’ என்று கூறி அனுப்பி விட்டு நீரில் மறைந்திருந்து இறந்தவரைப் பிழைக்க வைக்கும் மந்திரத்தை முறைப் படி உச்சாடனம் செய்யலானான்.
போரிட்டுத் தோற்றோடிய அஸ்வத் தாமா, கிருதவன்மா, கிருபாசாரியார் ஆகிய மூவரும் துரியோதனனைத் தேடிக் கொண்டு வரும்வழியில் சஞ்சயன் மூலம் துரியோதனன் மடுவில் ஒளிந்திருப்பதனை அறிந்தார்கள். பின்னர் துரியோதனனிடம் வந்து, “அரசே இங்கே வந்து ஏன் ஒளிந்து கொண்டீர்கள்? ஒன்று போரிடல் வேண்டும். இல்லையென்றால் மரணம் அடைதல் வேண்டும். இந்த இரண்டும் இல்லாது ஒளிந்து கொள்வது அரசர்க்கு தகுதி அன்று. எங்கள் பராக்கிரமத்தை உணராமல் நமக்கு இனி யார் வெற்றி தேடிக் கொடுப்பார்கள் என்று எண்ணி இந்த நீர் நிலைக்கு வந்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். அஸ்வத்தாமன் சபதம் அப்பொழுது அஸ்வத்தாமன் மிக்க கோபத்தோடு, “அரசே! சூரியன் அஸ்தமிப் பதற்கு முன் குந்தியின் புதல்வர்களைக் கொல்வேன்.
கொல்லேனாயின் நான் ஆசார்யர் துரோணர் மகன் அல்லேன்” எனச் சபதம் செய்து அரசனை வெளியில் வருமாறு கூறினான். இந்த வார்த்தை களைக் கேட்ட துரியோதனன் மடுவி லிருந்து வெளியே வந்து, “பகைவருடன் போரிட்டதனால் உடல் சோர்ந்து நீருள் புகுந்தேன்; சில நாழிகைப் பொழுதில் நீரில் தங்கியிருப்பேன். பின்னர் வெளியே வந்து பகைவரை அழிப்பேன். அதுவரை யாரும் காணாதபடி இந்த ஆலமரத்தின் நிழலில் அமர்ந்திருங்கள் ” என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டுப் பண்டைய நிலையில் இருந்தான்.
சஞ்சயன் சொற்படி யுயுத்சு (திருத ராட்டிரர் மகள்) என்பவன் இருதிறத்துப் பாடிவீடுகளிலுள்ள பெண்களை அத்தினா புரிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தான். தீர்த்தயாத்திரை சென்று திரும்பிய சான்றோர் விதுரர் பதினெட்டு நாட்களில் நடந்த போ போரின் விளைவுகளை அறிந்து பெரிதும் துயரம் அடைந்தார். சஞ்சயன் துரியோதனன் செய்த செயலைத் திருதராட்டிாரிடமும் அன்னை காந்தாரி விடமும் கூற, இருவரும் ‘இனி என்னாகுமோ ? என்ன நேருமோ?’ என்று கூறிப் புலம்பினர்.