சல்லியன் இறந்துவிட்டது கேட்டு அச்சல்லியனது அங்கமாகவுள்ள எழுநூறு தேர்வீரர்கள், துரியோதனன், அவன் மாமன் சகுனி, துரியோதனன் தம்பியர்கள் முதலானவர்கள் தருமபுத்திரரை நெருங்கிச் சூழ்ந்து கொண்டனர். அதனைக் கண்டு வலிமைமிக்க பீமன் உள்ளம் பதைத்து, தன் தம்பியரோடும் தன் படைகளோடும் நெருங்க வந்து, புலி பாய்வது போல அக்கெளரவப்படையினர் மேல் பாய்ந்து. கொல்லலாயினர்.
பீமன் கொல்லும் பாங்கினை எவரால் எடுத்துக் கூற முடியும்?(முடியாது என்றவாறு.) பீமனோ கௌரவர் படையினர் மேல் பாய்ந்து பலவாறாகப் போரிட்டான். பின்னர் துரியோதனன் தம்பியர் எழுவரைக் கொன்று விண்ணுலகிற்கு அனுப்பினான். அதன் காரணமாக வெற்றிச் சங்கினை ஊதினான். அந்தத் தம்பியர்கள். (1) ஜயகந்தன். (2) ஜயவர்மா, (3) ஜயஸேநன், (4) ஸோநாவிந்து, (5) ஜயத்ரதன்.(6) ஜயவிந்து.(7) ஜயவிக்ரமன் என்பர். இறந்த தம்பியர்களைக் கண்டு கோபங்கொண்டு சித்திரபாகு, பலசேதன், ஐயசூரன், சித்திரன். உத்தமவித்து, என்ற மேலும் ஐந்து தம்பியர்களும் பீமனைச் சூழ்ந்து கொண்டு தாக்க அப்பீமன் அவர்களுடன் போரிட்டு, அவர்களையும் கொன்று விண்ணுலகிற்கு அனுப்பினான்.
தம்பியர்கள் குவியல் குவியலாக பீமன் கையால் மாண்டு வருதலைக் கண்டு ளம் வருந்தினான். துரியோதனன் உள்ளம் பின்னர் கோபங்கொண்டு கணக்கற்ற வீரர்களுடன் சென்று. வில்லினை வளைத்து விடுத்த அம்பு மழையால் பாண்டவர்களின் உடல்களைப் புண் மயமாக்கினான். அதன்பின் சகாதேவனின் வில்லை அறுத்தான். அதனால் சகாதேவன் கோபங்கொண்டு, இரண்டு கண்களும் சிவக்க வேறொரு வில்லை எடுத்து, துரியோதனன் சரீரத்தை அம்புகளால் துளைத்தெடுத்தான். அதே நேரத்தில் பீமனோடு, துரியோதனன் தம்பியரும் சகுனியும் போரிட்டனர்.
ஆனால் பீமனோ சகுனி நீங்கலாகத் தம்மோடு போரிட்ட அந்தத் துரியோதனனது ஒன்பது தம்பிய ரையும் கொன்றான். இதனால் கோபமுற்ற துரியோதனனின் மற்ற தம்பியர் அனைவரும் ஒன்று கூடி எதிர்த்த காலத்து, அவர்களையும் துரியோதனன் நேரிலே காணும்படி பீமன் கொன்று குவித்தான். தனி பீமன் ஒருவனாலேயே தன் தம்பியர் தொண்ணூற்றொன்பது பேரும் கொன் றொழிக்கப்பட்டதைக் கண்ட துரியோ தனன் தனித்திருந்து, வாய்விட்டு, “அன்று பெரியோர்கள் கூறிய அறிவுரைகளைக் கேளாது, இன்று பூமியையும் இழந்தேன்; அருமைத் தம்பியர் அனைவரையும் இழந்தேன்” என்று அலறினான். தளர்ச்சியுற்ற துரியோதனனுக்கு இரண்டு கண்கள் போல உதவிடும் சகுனி மாமன் போரினை மேலும் செய்யுமாறு கூற. துரியோதனன் தெளிந்து தனது தேரிலேறி, தன் படைஞர்கள் அனைவரோடும் வந்து பீமனைத் தாக்கினான். அவன் தேரினைச் சிதைத்தான்.
பீமனும் சீறித் தன் கதையை எடுத்துக்கொண்டு கொடிய போரினைச் செய்தான். பீமன் தன் கதையினால் துரியோதனனின் நாற்படைகளையும் கொன்று குவித்தலைக் கண்ட அவ் வணங்காமுடி மன்னன் தளர்ச்சியுற்றிட, அது கண்டு சகுனி, “நாம் எல்லோருமாகச் சேர்ந்து பீமனை எதிர்ப்போம்” என்று கூறினான். அதனைத் துரியோதனன் ஏற்றுக் கொண்டு போர்க்களம் புகுந்து மற்றவர் களோடு சேர்ந்து சக்கரம், வேல், வாள், தோமரம், கதை முதலானவற்றைச் செலுத்தி உக்கிரமான போரினைச் செய்தான்.