வணங்காமுடி மன்னனாகிய துரியோ தனன் தோற்று மீண்டதைப் பார்த்து மனம் பொறுக்காத சேனைத் தலைவனாகிய சல்லியன் ரதகஜதுரகபதாதிகளோடு கிருத வன்மா, அஸ்வத்தாமா, கிருபாசாரியார் முதலானவர்களுடன் இடியொலி என்னும் படி வில்லின் நாணைத் தெறித்து, பேரொலி எழுப்பிப் போருக்குச் சித்தமான போது, இயமன் மகனாகிய தருமபுத்திரர் தன் தம்பியர்களும், மன்னர்களும் படை வீரர்களும் உடன் வர அந்தச் சல்லியன் மீது போரிடலானார்.
இரத்தக்கடலானது பாய்ந்து அலைக ளெனச் செந்நிறத்தை வீச, அதனோடு புழுதிபட்டு, வானத்தில் சூரியனது கிரகணங்களை மறையச் செய்து, இருள் காட்டவும், எட்டுத்திக்கு யானைகளும் போர்ப்பறையினால் செவிடாகும்படியும், தேவர்கள் கண்களைக் கைகளால் மூடிக் கொள்ளவும், எதிரெதிராக நின்ற வீரர்கள் யுத்த நெறி முறைப்படி போரினைச் செய்யவும் ஆகத் தருமபுத்திரரும், சல்லியனும், தங்கள் தங்கள் விற்களை வளைத்துச் செய்யும் போர்ப்பராக்கிரமத்தை நம் ஒருவரால் சொல்ல முடியுமோ?” (சொல்ல இயலாது.) மத்திர தேசத்து மன்னனான சல்லியனும் சில கணைகளைக் கொண்டு தரும புத்திரரின் கவசம், அழகிய தேர்.
குதிரைகள், முதலானவற்றை அழித்து, அத்தரும புத்திரரின் தலையிலும், மார்பிலும் புதிய காயங்கள் உண்டாகச் செய்து புன்முறுவல் பூத்தான். உடனே தருமபுத்திரர் வேறொரு தேரின் மீது ஏறிவந்து, ஓர் வேலாயுதத்தை எடுத்து ஒரு கணப் பொழுதில் ஒரு காலத்தில் காற்றி னால் மேரு மலையின் சிகரம் தன்னப் பட்டது போல சேனாதிபதியாகிய சல்லி யன் தலையை லையை விழச்செய்தார். ஆக. சல்லியன் தலை கீழே விழுந்தது. அப்பெரு மகனும் மாண்டான். அது கண்டு கௌரவப் படை நிலைத்து நிற்க முடியாமல் புறங் காணலாயிற்று.