அதன் பின்னர் போர் ஆரம்பித்தது. தேரோடு தேரும், யானையோடு யானை யும், குதிரையோடு குதிரையும், மன்ன ரோடு மன்னரும், வீரரோடு வீரரும். நேருக்கு நேராக எதிர்த்துப் பாய்ந்து போரிட்டனர். ஒருவர்க்கொருவர் செலுத் திய ஆயுதங்களால் அடிபட்டு முதுகு காட்டி ஓடியவர்கள் பலபேர்; அங்ஙன மில்லாது உயிரிழந்து வீரமரணம் அடைந்த வர்கள் பலர். மற்றும் பலர் விழுப்புண் பெற்றும் போர்க்களத்தை விட்டு அகலாது நின்றார்கள். இவர்கள் உடம்பிலிருந்து பெருகிய இரத்தம் ஆறாகப் பெருகி. கருங்கடல் நீரையும் செங்கடல் நீராக ஆக்கியது. போர்க்களத்தில் எங்கணும் பிணமலைகள் குவிந்து விளங்கின.
கண்ணபிரான் கூறிய வாய்மொழிப் படியே தருமபுத்திரர் மீது சல்லியன் கோபத்தோடு போருக்கு எழுந்தான். தருமபுத்திரரும் கோபித்து சல்லியன் மீது போருக்கு எழுந்து அம்புகளைச் சரமாரி யாக அவன் மீது தொடுத்தார். அதே போலச் சல்லியனும் தருமபுத்திரர் மீது அம்புகளை மழையெனப் பொழிந்தான். அவர்கள் இருவரும் செய்கின்ற ஆக்ரோஷ மான போரைக் கண்டு தேவர்கள் அஞ்சி, இமைக்காத தம் கண்களைத் தங்கள் கைகளால் மூடிக் கொண்டார்கள்.
அப்போரைக் கண்டு இந்திரனின் யானை ஐராவதமும் அஞ்சியது எனில் மற்றவரைச் சொல்லவும் வேண்டுமோ? போர்க் களத்தில் எழுந்த புழுதிப்படலம் சூரியனையே மறைத்தது. பிரளயகாலமே வந்துள்ளது என யாவரும் நடுங்கும் படியாகத் தருமபுத்திரரும் சல்லியனும் விற்போர் புரிந்தனர். அப்பொழுது சல்லியன், தருமபுத்திரரின் வில்லும். கொடியும், தேரும். குதிரை களும், தேர்ப்பாகனும் சிதைந்து வீழவும், தருமர் குருதியைப் பெருக்கவும் ஆக. அம்புகளைச் சரமாரியாக எய்தான்.
தேரிழந்த தருமபுத்திரர் தரையில் நிற்பதைச் சேனைத் தலைவன் திட்டத் துய்மன் கண்டு, அந்தச் சல்லியனுடன் போரிட்டான். அதே நேரத்தில் பீமன் அங்கு வந்து தன் தமையன் தருமபுத்திரரை, தேரையும், தேர்ப்பாகனையும், வில்லை யும், கொடியையும் இழக்கச் செய்தது போலவே சல்லியனுடன் போரிட்டு, அனைத்தையும் சிதைத்து அவனைத் தரையில் நிற்கச் செய்தான். ஆனால் சல்லியன் மற்றொரு தேரில் ஏறி, வில்லை வளைத்து பீமனின் தேர்.
முதலானவற்றை அழித்தான். பீமன் தன் கதாயுதத்தை எடுத்து, அவன் தன் கிரீடத்தைத் தரையில் உருளும்படி செய்து கடுமையான சொற்களால் நிந்தித்தான். மேலும் தன் கதாயுதத்தின் மூலம் கெளரவர் சேனையைச் சிதறும்படி செய்தான், கதை கொண்டு போரிடும் பீமன் முன் வந்து, “உன்னைக் கொல்லுவேன்” என்று கோபத்தோடு கூறி, சல்லியன் தோமரத்தை எறிய, அதை பீமன் விலக்கி, தேரினில் போரிட வந்த மற்ற பகைவர்களை அழித்தொழித்தான்.
அதே சமயத்தில் கர்ணன் மைந்தர்களான சித்திரசேனன், சூரியவர்மன் என்னும் பெயருடையவர்கள் நகுலனோடு விற்போரிட்டு அந்த நகுலனால் மாண்டார்கள். அதே போலச் சகுனி மைந்தர் இருவர் சகாதேவன் விடுத்த அம்புகளுக்கு ஆற்றாது புறங்காட்டி ஓடினர். மற்றோரிடத்தில் திரிகர்த்தராயர் என்ற கணக்கற்றவர்கள் அர்ச்சுனனால் மாண்டனர்.
அப்பொழுது சல்லியன் இயமனின் மகனாகிய தருமபுத்திரரை எதிர்க்கலா னான். அம்புகளை மழையெனச் சொரிந் தான். அதனால் தருமபுத்திரர் கோபித்து, தன் வில்லை வளைத்துப் பல அம்புகளைச் செலுத்தினார். அப்பொழுது பல அரசர் களை வென்றும் கொன்றும் வருகின்ற பீமன் சல்லியனை நெருங்கி வந்தான். இருவரும் நெருங்கிப் போர் புரியலாயினர். அவர்கள் செய்த யுத்தத்தின் கடுமையை யாரால் சொல்ல முடியும்?