பீமன் துரியோதனன் தலையைத் தன் காலால் உதைத்ததைக் கண்ட பலராமர் பீமன் மீது பெரிதும் கோபங்கொண்டார். உடனே, அவர், “பீமா! என்ன காரியம் செய்தாய்? நாபிக்குக் கீழே அடித்து வீழ்த்துவது தர்மமன்று; இத்தகைய செயலை நான் இதுவரை கண்டதில்லை. போர்ச் சாஸ்திரங்களை மீறி நாபிக்குக் கீழே அடித்தாய், அதுவல்லாது பலமுறை அவன் தலையை எட்டி எட்டி எட்டி உதைக்கிறாய். இது அக்கிரமம் ” என்று கூறிக் கலப்பையால் பீமனை அடிக்கப் போனார். இதனைக் கண்டதும் வசுதேவர். அண்ணன் பலராமனின் கையை அன்புடன் பற்றிக்கொண்டு அவரின் கோபத்தைத் தணிக்கும் வகையில், “அண்ணா! பாண்ட வர்கள் நம்முடைய உறவினர்கள்; நம் முடைய அத்தைப் பிள்ளைகள்; அவர்கள் கௌரவர்களால் பெரிதும் துன்புறுத்தப் பட்டார்கள்; கெளரவர்களைக் கொல்வ தாகச் சபதம் எடுத்தார்கள். சபதத்தை நிறைவேற்றிக் கொள்வது அரச தர்மமே. “துரியோதனனின் இரண்டு தொடை களையும் பிளப்பேன்’ என்று முன்னரே பீமன் சபதம் செய்ததை நிறைவேற்றிக் கொண்டான்.
அதோடு, “உன் தொடைகளை பீமன் பிளப்பான்” என்று மைத்ரேய மகரிஷி சபித்துள்ளார். (மைத்ரேய மகரிஷி சாபம் பற்றி ஆரணிய பருவத்தில் சொல்லப்பட்டுள்ளது) அந்தச் சாபம் தற்போது நிறைவேறியுள்ளது. எனவே பீமனின் செயலில் குற்றமில்லை. நீர் கோபிக்கவேண்டாம்” என்று சமாதானம் கூறினார். எது தர்மம்? அதற்குப் பலராமர், “கண்ணா! நீ உன் விருப்பத்தையே தர்மமாக என்னிடம் கூறினாய். பீமசேனன் தர்மத்திற்கு விரோத மாக நடந்து கொண்டான் என்பதுதான் உண்மை” என்று கூறி, வாசுதேவர் கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
அதற்குக் கண்ணபிராள், “அண்ணா! தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். வஞ்சனையால் காரியங்களைச் சாதித்து வெற்றிகளைக் குவித்த துரியோதனனை, அதே வஞ்சனையால் வெற்றி பெறுவது தவறானதன்று என்பது என் எண்ணம் எனவே பீமன் புரிந்த போரில் அதர்மம் இல்லை. அபிமன்யுவின் வில்லைப் பின்புறமிருந்து அறுத்துத் தனியே நின்ற அந்தப் பெருவிரனை – இளமைந்தனை வாரிசை துரோணர் அர்ச்சுனனின் வா முதலாகப் பலர் ஒன்று சேர்ந்து கொன்றனர். இது எந்தத் தர்மத்தில் அடங்கும்? அண்ணா சொல்லுங்கள்.
“துரியோதனன் வஞ்சனையையே மூலதனமாகக் கொண்டு வளர்ந்தவன். தீயபுத்தியுள்ளவன்; அத்தகையவனைக் கொன்றதில் அதர்மம் ஏதுமில்லை. அத் துடன் அவன் மேலெழும்பி அதிவேகத் துடன் பீமனைக் கொல்ல வந்த போதுதான் தொடையில் அடிபட்டுக் கீழே வீழ்ந்தான். ஆகையினால் பீமன் தொடையின் கீழ் அடித்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறிப் பலராமனைச் சாந்தப் படுத்தினார். இவ்வளவு கூறியும் பலராமர் கண்ண பிரான் கூறியவற்றை ஏற்றுக்கொள்ள வில்லை. அவர், “கண்ணா! பீமன், துரியோ தனனை அதர்ம வழியில் கொன்றான் என்ற கெட்ட பெயர் அவனுக்கும். அதன் காரணமாகத் துரியோதனனுக்கு நல்ல பெயரும் பூமியில் ஏற்படப் போகின்றது” என்று கூறி, அடங்காத கோபத்துடன், தன் தேரில் ஏறிக்கொண்டு துவாரகைக்குச் சென்றுவிட்டார். பாண்டவர்கள் வருத்தம் பலராமரின் இந்த ஒருதலைபட்சமான பேச்சால் பாண்டவர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். பின்னர் கண்ணபிரான். தருமபுத்திரரைப் பார்த்து, “தருமபுத்திரரே! பீமன் அதர்மமான ஒரு செயலைச் செய்து விட்டான். துரியோதனன் தலையை அவன் உதைத்திருக்கக்கூடாது. அதனைத் தடுத் திருக்க வேண்டும்” என்றார்.
உடனே தருமபுத்திரர், “வாசுதேவா! பீமன் செய்தது எனக்கும் பிடிக்கவில்லை. குருகுலம் அழிவதில் மனமகிழ்ச்சி சிறிதள வும் கிடையாது. வஞ்சகமான முறையில் வெற்றி கொள்ளப்பட்டோம். கேவலமான வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டோம். பன்னிரெண்டு ஆண்டுகள் காட்டிற்கு அனுப்பப்பட்டோம். ஓராண்டு மறைவாக வாழ்ந்தோம். அதனால் பீமன் மனதில் ஆத்திரம் ஏற்பட்டது. அதன் காரணமாக அந்தக் காரியத்தை எதையும் நினைக்காமல் செய்துவிட்டான். நடந்தது நடந்துவிட்டது. அதற்கு நாம் இனி என்ன செய்ய முடியும்?” என்றார். பின்னர் தருமபுத்திரர் பீமனை நோக்கி, “பீமா! கண்ணபிரான் எண்ணப்படி எல்லாம் நடந்துவிட்டது. உன்னுடைய சபதம் நிறைவேறிவிட்டது. நீ இப்பொழுது வெற்றி வீரனாக விளங்குகிறாய். வாழ்க” என்று கூறினார்.
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மற்றைய பாண்ட வர்களும், பாஞ்சாலர்களும் மகிழ்ந்தார்கள்; ஆரவாரக் குரல் எழுப்பினார்கள்; பெரு முழக்கம் செய்தார்கள்; ஆடினார்கள்; பாடினார்கள்; அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! கண்ணபிரான் அப்பொழுது, “அரசர் களே கொடிய துரியோதனன் கொல்லப் பட்டான்.
இத்துரியோதனன் சிறிதும் வெட்கமில்லாதவன். சிறிதும் நாணமின்றி நெருப்பில் பிறந்த திரௌபதியைத் தன் தொடையில் அமரச் சொன்னவன்; பேராசை மிக்கவன்; சகுனி, துச்சாதனன் போன்ற தீயவர்களை நண்பர்களாகக் கொண்டவன்; இவன் பொருட்டு நல்லவர் களான பிதாமகர் பீஷ்மர், ஆசார்யர் துரோணர் போன்றோர் மாண்டார்கள். அவர்கள் கூறிய அறிவுரைகளைக் கேட் டிருந்தால் இவன் இந்தக் கீழ் நிலையை அடைந்திருக்கமாட்டான். தனக்குத்தானே குழி தோண்டிக் கொண்டு அதிலே விழுந்து தவிப்பவன் இவன்” என்று கூறினார்.