பாண்டவர்கள் பிதாமகர் பீஷ்மரிடமும், ஆசார்யர் துரோணரிடமும், சல்லியனிடமும் ஆசி பெற்று வந்தபின், தங்கள் சேனையை, பாம்பு மண்டலமிடுவது போல வளைவாக நிறுத்தி அரவவியூகம் வகுத்து நிறுத்தினார்கள். துச்சாதனன் கெளரவர் சேனை முன்னணியில் நின்றான். அதே போலப் பாண்டவர் சேனை முன்னணியில் பீமசேனன் நின்றான். போர்க்களத்துக்குரிய தெய்வமாகிய துர்க்கையை இருதிறத்தாரும் வணங்கிய பின் தருமபுத்திரரும், துரியோதனனும் போர் செய்யும்படி கைச் சைகைகளால் உத்தரவிட்டனர். அதனால் இருசேனை களும் எதிர் எதிரே சென்று எதிராளி சேனையைத் தாக்கலாயின. இரண்டு கடல்கள் உடைந்து ஒன்றோடொன்று கலந்தது போல இரு சேனைகளும் கலந்து போரிடலாயின; நெடிய கடல்; கார்மேகம் ஆகிய இவற்றின் ஒலி கீழ்ப்படவும், மூன்றுலகத்தவரின் காதுகள் செவிடு படவும் விற்களின் நாணொலியோடு, பேரிகைகள்,முரசங்கள், சங்குகள் முதலாயின எவ்விடத்தும் முழங்கின.
தேருடன் தேரும், யானையுடன் யானையும், குதிரையுடன் குதிரையும், காலாளுடன் காலாளும், மன்னர்களுடன் மன்னர் களும், வீரர்களுடன் வீரர்களும், மோதிப் போரிட்டனர். வில் வீரர்களோடு வில் வீரர்கள், வேல் வீரர்களோடு வேல் வீரர்கள், வாள் வீரர்களோடு வாள் வீரர்கள். கதை வீரர்களோடு கதை வீரர்கள், என ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு போரிட்டனர். பகைவர்களை அழிக்க வல்ல ஆயுதங்களைக் கொண்டு பகைவரோடு போரிட்டனர்.
பகைவர்களை வாளினால் வெட்டியவர் சிலர்; போரில் கடுமையாகப் போரிட்டு, போர்க்காயங்கள் பட்டு வலிமை இழந்தவர் சிலர்; பாசறையை நோக்கி ஓடியவர் சிலர்; அம்புகள் தைத்துத் துடித்தவர் சிலர்; வீரப்போரிட்டு வீரச் சொர்க்கம் அடைந் தவர் பலர்;
சிலர் சிரமிழந்தனர்; சிலர் ஆயுதத்தோடு கூடிய கைகளை இழந்தனர்; கால், தொடை, மார்பு, போன்றவற்றை இழந் தவர் சிலர்; ஆயுதம் ஏதுமின்றி நிராயுத பாணியாய் நின்றவர் சிலர்; ஒரு வீரன் பகைவீரன் தலையை வெட்டி வீழ்த்தி னான். தலை அறுந்த அந்த பகைவீரன், வெட்டுண்ட தன் தலையை எடுத்து அறுத்தவன் தலை மீது வீச, அவன் தலை அறுந்து வீழ்ந்தது.
கொடிய போர் புரிந்த பீமசேனன்
இவ்வண்ணம் இருதிறத்துச் சேனை களும் கடும்போர் புரிகையில்; அர்ச்சுனன் பீஷ்மரை எதிர்த்துப் போர் புரிய அப்பொழுது அர்ச்சுனன் பீஷ்மருடைய சேனைகளை அழித்ததோடு, அவரது பனைக் கொடியையும், உடல் கவசத் தையும், கிரீடத்தையும் பிளந்து தள்ளினான். அதன்பின் அபிமன்யு பீஷ்மருடன் கடும் போரிட்டு அவரது தேரில் கட்டிய நான்கு குதிரைகளையும் சாய்த்தான். அதனால் அவர் அவ்விடத்தைவிட்டு நீங்கினார். பீஷ்மருக்குத் துணையாக வந்த துரியோ தனனின் தம்பிமார்களும், சகுனிமாமனும்; சல்லியனும், புறங்காட்டி ஓடும்படி பீம சேனன் கொடிய போரினைப் புரிந்தான்.
பீமனிடம் புறங்காட்டிய சல்லியன் உத்தர குமாரனோடு கடும் போரிட்டான். உத்தரகுமாரனும் கடும்போர் புரிந்து சல்லியனது தேரினையும், வில்லினையும் அழித்தான். பின்னர் சல்லியன், மார்பில் எறிந்த வேலினால் விராடனின் இளஞ் சிங்கம் உத்தர குமாரன் போர்க்களத்தில் வீர சொர்க்கம் அடைந்தான். அதனைக் கண்ட பீமசேனன் மிக்க கோபங்கொண்டு தன் கதாயுதம் கொண்டு பகைவர் படைகளைப் பெருநாசம் செய்தான். தன்னோடு போர் புரிய வந்த துரியோதனனது தேரினையும், அவன் கையில் பிடித்த வில்லையும் அழித்து அவனைப் புறங்காட்டி ஓடச் செய்தான்.
துரியோதனன் தம்பியரைப் புறமுதுகிட்டோடச் செய்த சிவேதன்
பின்னர் துரியோதனன் மைத்துனன் மார்கள் பீமனை நெருங்கிவந்து போரிட் டனர். அவர்கள் அப்பீமன் கதையினால் அடியுண்டு மாண்டு போனார்கள். அப்பொழுது விராட மன்னனின் மூத்த மைந்தன், பாண்டவர் படைத் தலைவன் சிவேதன் என்பவன் உத்தரகுமாரனைக் கொன்ற சல்லியன் மீது கொடிய அம்பு களை ஏவிக் கடும் போரினைச் செய்தான். அதனை துரியோதனன் அறிந்து தனது தம்பியர் அறுவரைச் சல்லியனுக்குத் துணையாக அனுப்ப அவர்களையும் சிவேதன் புறமுதுகிட்டோடச் செய்தான்.
அதனைக் கண்டு துரியோதனன் சிவேதனை எதிர்த்துப் போரிட பீஷ்மரை அனுப்பினான். பீஷ்மரும், சிவேதனும் வில்லெடுத்து, அம்புகள் பலவிடுத்துக் கடுமையாகப் போர் புரிந்தனர். போரின் நடுவில் பீஷ்மரது வில்லை சிவேதன் அறுக்க, பீஷ்மர் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அச்சிவேதனது கொடிச் சீலையை அறுத்தார். பீஷ்மர் அவனுடன் கடுமையாகப் போரிட்டு இளைக்கவே துரியோதனன் தன் தம்பியர் ஐவரைப் போரிட அனுப்பினான். அவர்களும் சிவேதனோடு போரிட்டுத் தோற்றனர். மற்றைய அரசர்களும் சிவேதனை எதிர்த் துப் போரிட முடியாது தோற்றோடினர். சிவேதனது வில்லாற்றலைக் கண்டு தேவர்களே வியந்தனர்.
வில்லாற்றலில் சிறந்தவனாய்ச் சிவே தன் இருப்பதைக் கண்டு பீஷ்மர், “சிவேதா? உனக்கு விற்பயிற்சி தவிர வேறு எவற் றிலும் பயிற்சி கிடையாதோ” என்று வஞ்சனையாகக் கேட்டார். வில்லாற்றலில் சிறந்த அந்தச் சிவேதன் பீஷ்மர் கூறியதைக் கேட்டுக் கோபித்து, “எனக்கு வாளினால் போரிடவும் தெரியும் ” என்று கூறி வாட்போர் செய்யலானான். அதன் மூலம் பீஷ்மரது வலையில் மாட்டிக் கொண்டான். உடனே பீஷ்மர் அம்பினை விடுத்து அச்சிவேதன் வலக்கையை வெட்டி வீழ்த்தி னார். அப்பொழுது அவன் வில்லெடுக்காது இடக்கையினால் வாளெடுத்துப் போரிட லானான். பீஷ்மர் மற்றோர் அம்பு ஏவி அவன் இடக்கையை வீழ்த்தியதோடு, மற்றோர் அம்பினை விட்டு அவனைக் கொன்றார். இவ்வாறு முதல் நாட்போரிலே விராடனது திருக்குமாரர்களான சிவேத னும், உத்தானும் மாண்டார்கள்.
மகிழ்ச்சியடைந்த கௌரவர்கள்
அதனால் பாண்டவர்கள் பெருந்துன்பத்தில் மூழ்கினர். ஆனால் கௌரவர்களோ மகிழ்ச்சிக் கடலில் மிதந்தனர். போர்க்களத்தில் ஆங்காங்கே பிணங்கள் குவிந்திருந்தன. இரத்த ஆறு ஓடியது; பேய்கள் தங்கட்கு உணவு கிடைத்ததென்று கூத்தாடின. இறந்த போன இருமைந்தர்களைக் குறித்து விராட மன்னன் பெருந் துக்கம் அடைந்தான். பெரிது பெரிது புத்திர சோகம் பெ பெரிதல்லவா! அதிலும் இரண்டு மகன்களைப் பறிகொடுத்த அவ்விராட மன்னன் சோகம் பெரியதுதான்! விராட மன்னனுக்குக் கண்ணபிரான் தேறுதல் கூறினார். பின்னர் அனைவரும் தங்கள் தங்கள் பாசறை சேர்ந்தனர். முதல் நாள்போரில் விராட மன்னன் மைந்தர்கள் சிவேதன் உத்தரன் மாண்டது பாண்ட வர்கள் பக்கம் ஏற்பட்ட ஒரு பெரிய அதிர்ச்சியாகும். கண்ணபிரான், “சாத்யகி, விராடன், துருபதன், திட்டத்துய்மன், சிகண்டி போன்ற பெருவீரர்கள் இருக்கும் போது பயம் தேவை இல்லை” என்று கூறிப் பாண்டவர்களைத் தேற்றினார்.
மகாபாரதம் – 44 முதல் நாள் போர்ச் சருக்கம்… கொடிய போர் புரிந்த பீமசேனன் Asha Aanmigam