பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாதவாசமும் வெற்றி கரமாகப் பாண்டவர்கள் முடித்தபின் விராட மன்னனுக்குச் சொந்தமான உபப்பி லாவியத்தில் அவனுடைய சிறப்புமிக்க விருந்தினராகத் தங்கியிருந்தனர். அவ்விட மிருந்து மற் மற்ற சுற்றத்தினர்களுக்கெல்லாம் உபப்பிலாவியம் வரும்படி தூது அனுப்பி னார்கள். பின்னர் பாண்டவர்களும், கண்ணனும், பலராமனும், சாத்தகியும் துருபதனும், விராடமன்னனும் அமர்ந்து சூதில் இழந்த அரச செல்வங்களைப் பெறுவது எவ்வாறு என்று ஆலோசிக்கலாயினர்.
முதலில் கண்ணபெருமான், அனை வரையும், “தருமபுத்திரர் சூதாட்டத்தில் வஞ்சனையாக ஜெயிக்கப்பட்டார். அத னால் பாண்டவர்களின் அரச செல்வங்கள் அபகரிக்கப்பட்டதும். பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஓர் ஆண்டு அஞ்ஞாதவாசமும் ஏற்று, அவர்கள் நினைத் தற்கும் அரிய பெருந்துன்பங்களைப் பெற்றதும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். எனவே கெளரவர்களுக்கும், பாண்டவர் களுக்கும் எது தருமத்துக்கு இசைவாக இருக்கின்றதோ அதனை உடனே செயற்படுத்துங்கள். தருமபுத்திரர் அதர்மத்துடன் உலகமே பெறினும் அதனை விரும்ப மாட்டார். இப்பொழுது கௌரவர்களின் நெறிகெட்ட பேராசையையும் தரும புத்திரரின் தருமநெறியையும் எண்ணித் தகுந்த ஆலோசனை சொல்லுங்கள். துரியோதனனின் எண்ணம் என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. சாதுரிய அறி வுடைய ஒருவனை, அஸ்தினாபுரத்திற்குத் தூதாக அனுப்பி, அத்துரியோதனனுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி, அவனைச் சமாதானம் செய்து தரும புத்திரருக்குப் பாதி நாட்டு உரிமை வரும் படியாகச் செய்ய வேண்டும்” என்று தன் ஆலோசனையாகக் கூறினார்.
பலராமன் பேச்சு
அதனைக் கேட்டு பலராமன், “அன்பர் களே! இது காறும் கண்ணபிரான் கூறிய உரை தருமமும் ராஜ நீதியும் கொண்டது. அது தருமபுத்திரருக்கும் துரியோதன னுக்கும் பொருந்தியதே. பாண்டவர்கள் இழந்த பாதி ராஜ்யத்தை அடைய விரும்பு கிறார்கள். சமாதானமாகப் போனால் இருவரும் பயனடைவார்கள். அதற்கு யாராவது துரியோதனனிடம் தூது போக வேண்டும். அதற்குச் சாதாரணமானவன் போகமுடியாது.
“திறமையுடையவன்தான் செல்ல வேண்டும். போகும் தூதன் முதலில் பிதாமகர் பீஷ்மர் முதலானோரை அணுகி, தருமபுத்திரன் வேண்டுகோளைப் பணிவுடன் கூற வேண்டும். அவர்களிடம் ஆலோசனை யும் செய்ய வேண்டும். என்ன நேர்ந்தாலும் கோபம் வரக்கூடாது. அன்று தருமபுத்திரன் தான் பிடிவாதமாகச் சூதாடித் தோற்றான். சகுனி சூதாட்டத்தில் நன்றாகப் பயிற்சி யுடையவன் என்று தெரிந்தும் அவனுடன் சூதாடப் போனது பெருந்தவறு.இதனால் போகின்றவன் யுத்தப் பிரியனாக இருக்கக் கூடாது.எப்படியாவது சமாதானம் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணமுடைய வன்தான் செல்ல வேண்டும். பலன் குறைவாயிருந்தாலும் சமாதானம் தான் வேண்டும். குருவம்சத்தவர்களுள் யுத்தம் வரக்கூடாது என்பதே என் விருப்பம். அதற்குத் துரியோதனனை அனுசரித்துத் தான் போகவேண்டும்; இன்சொல்லால் தான் உரிய பங்கைப் பெறவேண்டும். யுத்தத்தினால் எந்தப் பயனும் உண்டாகாது. அது அநீதியான செயல்” என்று கெளரவர் களிடம் ஏறக்குறைய சரணாகதி அடைய வேண்டும் என்ற பொருளில் தான் ஆலோசனை கூறினான். இவன் ஏன் இத்தகைய ஆலோசனையைக் கூறினான் எனில் துரியோதனன் பலராமனிடம் கதைப் பயிற்சியை விசேஷமாகக் கற்றுக் கொண்டவன். அதனால் பலராமனுக்குத் துரியோதனன் மேல் எப்பொழுதும் விருப்பம் உண்டு. இந்தக் குரு – சிஷ்ய உறவினால்தான் இந்த அரிய சரணாகதி யோசனை அவன் உள்ளத்திலிருந்து எழுந்தது.
பலராமனின் பேச்சு சகிக்கவில்லை
அடுத்து சாத்தகி எழுந்தான். அவன் யதுகுலத்தரசர்களுள் வசுதேவனுக்கு உடன் பிறந்த முறையாகிய சத்யகனது புதல்வன். பலராமர்- கிருஷ்ணரைவிட இளையவன். கண்ணபிரானிடம் மிகுந்த அன்பு கொண் டவன். அர்ச்சுனனிடம் வில் வித்தையைக் கற்றறிந்தவன்; அதனால் பாண்டவர்களி டம் தனிப்பட்ட அன்பு கொண்டவன். இத் தகைய பின்னணி கொண்ட அச்சாத்தகி, “பெரியோர்களே! பெரியவராகிய பலராம ரின் பேச்சு சகிக்கவில்லை. அவர் மனத்திற்குத் தக்கபடிதான் பேசியுள்ளார். சரணாகதியைத்தான் அவர் குறிப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். அது அவசிய மில்லை. ஒரே மரத்தில் நல்ல பழுத்த பழங்களையுடைய கிளைகளும், பழமில்லாத கிளைகளும் இருப்பது போலவே சமுதாயத்தில் வலிமையுள்ள வர்களும், வலிமையற்ற மனிதர்களும் இருக்கின்றனர். அந்த வலிமையற்ற மனிதர் வகையைச் சேர்ந்தவர் அவர் (பலராமர்). தருமபுத்திரரிடமும் குற்றம் காண்பவர் அவர். இந்தச் சான்றோர்கள் சபையில் வலிமையுள்ளவர்களும், பயமற்றவர்களும் தான் இருக்க முடியும். இங்கு பலராமர் பேசியது துரியோதனனுக்குப் பயந்தவர்கள் பேசும் பேச்சே! ஆதலின் அவர் எப்படிப் பட்டவர் என்பதை நாம் அறியலாம். மேலும் இங்கு கண்ணபிரான் பேசியது தருமத்தைச் சார்ந்தது. பலராமன் பேசிய பேச்சு அதர்மத்திற்குத் துணை போகும் பேச்சு; கெளரவர்கள், சூதாடத் தெரியாத வரை அதில் விருப்பமில்லாதவரை -தருமபுத்திரரை வலிந்து அழைத்து சூதாடச் செய்து அவரைத் தோற்கடித்தனர். இதுதான் உண்மை. இது நியாயமா? பலராமர் கூறியது போல தருமபுத்திரரே விரும்பிச் சூதாடச்செல்லவில்லை. மேலும் பாண்ட வர்கள் தங்களுக்கு விதித்த நிபந்தனையை வணங்கி ஏற்று அதனை வெற்றிகரமாகவும் முடித்துள்ளார்கள். அவ்வாறு இருக்க அவர்கள் ஏன் தலைவணங்கிக் கேட்க வேண்டும்? பலராமர் சொல்வதில் அர்த்தமே இல்லை.
நம்மை எவனால் வெல்ல முடியும்
”பன்னிரண்டு ஆண்டு வனவாசத்தையும் ஓர் ஆண்டு அஞ்ஞாதவாசத்தையும் பாண்ட வர்கள் குறைவற முடித்திருக்கும் போது அதனை முடிக்கவில்லை. மீண்டும் காட்டிற்குப் போ” என்று அந்தக் கெளர வர்கள் கூறுவது இந்தப் பலராமருக்கு அதர்மமாகத் தெரியவில்லையா? தரும் புத்திரர் யார் காலிலும் விழுந்து நாட்டைப் பெறவேண்டிய அவசியமில்லை. தருமம் பிறர் காலில் விழுவது நமக்குத் தான் அவமானம் உலகம் அதனை ஏற்காது. காண்டீபத்தை ஏந்திய அர்ச்சுனன், வலிமை யில் தன்னிகரற்று விளங்கும் பீமன் சுதர்சனத் திருச்சக்கரத்தை ஏந்திய எங்கள் பெருமாள் கண்ணபிரான், இயமனுக்கு ஒப்பான நகுல சகாதேவர்கள், சேனை பலம் மிக்க விராடமன்னன், திட்டத் துய்மன் என்னும் சிங்கத்தைப் பெற்றி ருக்கும் துருபதமன்னன், புலிகளுக்குப் பிறந்த உபபாண்டவர்கள் முதலானோர் நம்மிடம் இருக்கும்போது நம்மை எவ னால் வெல்ல முடியும்? வரும் யுத்தத்தில் இவர்கள் கௌரவர்களை இயமபுரிக்கு நிச்சயம் அனுப்புவார்கள். அந்த யுத்தத் தைத் தடுக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் கௌரவர்கள் தான் தருமபுத்திரர் காலில் விழ வேண்டும். இனி துரியோ தனன் யுத்தத்தை விரும்பினால் யுத்தம் தான். அதற்குத் தயாராவோம்.காலதாமதம் செய்யக்கூடாது. தருமபுத்திரர் எப்படியும் ராஜ்யத்தை மீண்டும் பெறவேண்டும் என்று ஆவேசமாகப் பேசினான்.
கௌரவர்களிடம் தூது
சாத்தகி ஆவேசமாகப் பேசியபின் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் எழுந்து, “நண்பர்களே! சாத்தகி சொல்வது தான் சரி; அதனால் அவர் கூறியவற்றை ஏற்றுக் கொள்கிறேன். வெறும் வார்த்தை களால் துரியோதனன் வழிக்கு வரமாட் டான். ஆதலின் யுத்த முயற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். கால தாமத மின்றி செய்ய போக்கும் தூதர்களை அனுப்ப வேண்டும். சல்லியன், திருஷ்ட கேது, ஜயத்சேனன், கேகயன் போன்ற பல்வேறு அரசர்களுக்குத் தூது அனுப்ப வேண்டும். அதே நேரத்தில் பொருத்தமான வரைத் தூதாக அனுப்ப வேண்டும். என்றாலும் என்னுடைய அரண்மனைப் புல வரும், சிறந்த வேதியருமான உலூக முனி வரைக் கெளரவர்களிடம் தூது அனுப்ப லாம். அவரிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லி அனுப்பலாம். பிதாமகர் பீஷ்மர், துரோணர், துரியோதனன், விதுரர் முதலானவரிடம் என்னென்ன எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதையும் அவரிடம் சொல்லியனுப்பலாம்” என்று கூறினார்.
துருபதனின் யோசனையைக் கண்ண பிரான் ஏற்றார். “நீர் சொல்வதுதான் சரி. நல்ல யோசனையும் கூட, இதுவே செய்யத் தக்கது. இதுவே அரச நீதி, கௌரவர்கள், பாண்டவர்கள் ஆகிய இருவருக்கும் வேண்டப்பட்ட அறிவிற் சிறந்த ஒருவரைத் தான் தூது அனுப்ப வேண்டும். உத்தரையின் திருமணத்திற்காக வந்த நாங்கள் திரும்பிச் செல்லவேண்டும். துருபதரே! நீர் அறிவிலும் வயதிலும் பெரியவர்; அரசர் களுள் சிறந்தவர்; துரோணரும், கிருபரும் உம்முடைய பால்ய நண்பர்கள். ஆகலின் நீர் அனுப்பும் தூதருக்குச் சொல்ல வேண்டி யதைச் சொல்லி அனுப்புங்கள். இதில் துரியோதனன் வழிக்கு வராவிட்டால் பின்னர் எடுக்க வேண்டிய முயற்சிகளை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கூறினார். மந்திராலோசனைக்குப் பின்னர் கண்ணபிரானும், பலராமனும் துவாரகை திரும்பினார்கள்.
விராட மன்னனும், துருபதராஜனும், தருமபுத்திரரும், மற்ற மன்னவர்களும் யுத்தத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் சிறந்த முறையில் செய்து வந்தார்கள். தூதர்களை எல்லா நாடுகளுக்கும் அனுப்பி நடந்த, நடக்கப்போகும் செய்திகளைத் தெளிவுபடுத்தினார்கள். அதனால் பாண்ட வரிடத்தில் நட்பு கொண்ட அரசர்கள் தங்கள் சேனைகளைத் திரட்டலானார்கள்.
அதே சமயத்தில் துரியோதனனும் சும்மா இருக்கவில்லை. யுத்தத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யலானான். தங்களிடம் நட்பு கொண்ட அரசர்களிடம் படைகளைத் திரட்டச் சொன்னான்.
பரதகண்டம் முழுவதும் யுத்த மேகம் பரவலாயிற்று.
வஞ்சிக்கப்பட்ட பாண்டவர்கள்
பாண்டவர்களிடம் கூறியபடி, துருபதன் தன் புரோகிதர் உலூக முனிவரை அழைத்து, ”அறிஞர்களுள் சிறந்த அறிஞரே! துரியோதனனிடம் பாண்டவர்கள் பொருட்டு, தாங்கள் தூது செல்லுதல் வேண்டும். அந்த அரவக் கொடியோன் துரியோதனன் தீக்குணங்களும் இந்த முரசக் கொடியோன் தருமனின் நற்குணங்களும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். கண்ணி லான் திருதராட்டிரருக்குத் தெரிந்தே பாண்டவர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள். விதுரர் அவரிடம் நியாயங்கள் பல சொல்லியும் கேட்கவில்லை. அந்தக் கண்ணிலான் தன் மகன் சென்ற வழியே தான் செல்கிறார். ஆனாலும் நீர் அந்தத் திருதராஷ்டிரரிடம் சென்று தருமநெறிகளை யும்,நீதிகளையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
“அங்கு விதுரர் நமக்குச் சாதகமாகத்தான் இருப்பார். பீஷ்மர், துரோணர், கிருபர் போன்றவர்களிடத்துப் பேதம் உண்டாக லாம். அது நமக்கு நல்லதே. அமைச்சர் களில் நிர்வாகிகளில் கூட கருத்து வேறுபாடு எழலாம். அவர்களை ஒன்று படுத்த அவர்கட்குக் காலதாமதம் ஆகும். அதுவும் நமக்கு நல்லதே. அந்த நேரத்தில் இங்கு யுத்த முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். நீர் அஸ்தினாபுரத்தில் சமாதான முயற்சி செய்கின்ற நாட்களில் அவர்களுடைய யுத்த முயற்சி தளர்ந்த நிலையில் இருக்கும். அதுவும் நமக்குச் சாதகமானதே. இப்படி சமாதானம் பேசுவதால் நமக்கு நல்ல பலன்கள் உண்டாகும். சமாதானம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் நமக்கு நல்லதே. துரியோதனன் சமாதானத்திற்கு இசைவான் என்று நான் எதிர்பார்க்க வில்லை. அவன் ஒருவேளை விரும்பினாலும் கர்ணனும், துச்சாதனன், சகுனியும் அவன் மனத்தைக் கெடுத்து வைப்பார்கள். எனவே நீ தூதனாகப் போவது நமக்கு நன்மையே. எனவே நீ போய் வெற்றியுடன் திரும்புக” என்று கூறினார். கண்ணபிரான் கூறிய படியே தருமபுத்திரர். உலூக முனிவரைத் துரியோதனனிடத்துத் தூது அனுப்பினார்.
எதிரிகளிடத்தில் பிளவு
சமாதானம் பேசுவது என்பது உண்மை யாகச் சமாதானம் பேசுவது, அச்சமாதானத்திற்கு வேண்டியதைச் செய்வது என்பது ஒரு வகை. மற்றொரு வகை போருக்குத் தயாராக இருந்து, அதற்கு வேண்டிய ஆயத்தங்களையும் தளரவிடாமல் செய்து கொண்டே, எதிராளிகளிடம் சமாதானப் பேச்சு பேசுவது இத்தகைய சமாதானப் பேச்சு தொடர்ந்தால் எதிரிகளிடத்தில் பிளவு உண்டாகும். அது மட்டுமல்லாது படை திரட்டலில் எதிரிகளிடத்தில் தொய்வு ஏற்படும். இதன் மூலம் எதிரிகளை வெற்றி கொள்ளலாம்.
இப்படிப்பட்ட போர்த்தந்திரம் இக் காலத்தில் மட்டுமன்று பழையகாலத்தி லிருந்தது என்பதைத் துருபதன் பேச்சி லிருந்து அறியலாம்.
பார்த்தசாரதி
கெளரவர்களும் பாண்டவர்களும் தங்க ளுக்குத் துணையாக அரசர்களையும் படைகளையும் சேர்த்துக் கொண்டிருந்தனர். அதனால் எங்கணும் யுத்த மேகம் பரவலாயிற்று. இந்த நிலையில் பீஷ்மர், துரோணர் ஆலோசனைப்படி, துரியோ தனன் கண்ணபிரானைத் தனக்குப் படைத் துணையாக வரும்படி நேரில் அழைத் தற்குப் புண்ணிய பூமியாகிய துவாரகை நகர் நோக்கிப் புறப்பட்டான். வணங்கா 1414 மன்னனாகிய துரியோதனன் தன்னைப் படைத்துணைக்கு அழைக்க வேண்டிவருதலை அறிந்த கண்ணபிரான் வாயிற்காவலனை அழைத்து, “அர்ச்சுனன், துரியோதனன் ஆகிய இருவரும் என்னைப் படைத்துணைக்கு அழைக்கவருவர். அப்படி வந்தால் அவர்களைத் தடையின்றி உள்ளே அனுப்புக” என்று கூறி அரண் மனைக்குள் சென்றுவிட்டார்.
கண்ணபிரான் எண்ணியபடியே துரியோ தனன் தன் தேரின்மீது ஏறி துவாரகையின் அரண்மனை வாயிலுக்குச் சென்றான். அவன் கண்ணனை அழைக்க வருகின்றதை அந்த அரண்மனைக் கொடிகள் விரும்ப வில்லையாம். அந்தக் கொடிகளாகிய கைகள் ‘இங்கு வராதே’ என்று கூறுவன போலக் காற்றினால் அசைந்தாடின
என்கிறார் வில்லிபுத்தூர் ஆழ்வார். அப்பாடலைப் பாருங்கள் :-
“ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை
எழிலிவண்ணன் பாண்டவர் தங்கட் கல்லால் படைத்துணை ஆகமாட்டான் மீண்டுபோகு என்றென்று அந்த
வியன்மதில் குடுமி தோறும்
காண்தகு பதாகை ஆடை கைகளால்
தடுப்பப் போன்ற”(பிடிக்காதவர்களுக்குக் கறுப்புக்கொடி காட்டி ‘திரும்பிப்போ’ என்று சொல்லு கின்ற இக்கால வழக்கம், வில்லிபுத்தூரார் காலத்திலும் இருந்தது போலும்!)
ஆணவம் கொண்ட துரியோதனன்
வாயிற்காவலர்கள் கண்ணன் கூறியபடி எந்தவிதத் தடங்கலும் செய்யாமல் இருக்க, துரியோதனன் தன் சேனையை வெளியில் நிறுத்தி விட்டுத் தான் மட்டும் பரந்தாமன் படுத்திருந்த அறைக்குள் சென்றான். அங்கு அறிதுயில் கொண்டிருந்த கண்ணனை உண்மையாகவே உறங்கிக் கொண்டிருக் கின்றான் என்று துரியோதனன் எண்ணி னான். அதனால் அளவிறந்த ந்த ஆணவம் கொண்ட அவ்வணங்காமுடி மன்னன் உறங்குபவரை எழுப்புவது நாகரிகமன்று என்று கருதி அப்பெருமான் தலைப் பகுதியில் இருந்த ஓர் ஆசனத்தில் கம்பீர மாக அமர்ந்தான். கால்மாட்டுப் பகுதி யிலும் ஓர் ஆசனம் இருந்தது. அங்கே உட்காருவது தனது கெளரவத்திற்குக் குறைவு என்று எண்ணியே தலைப்பகுதியில் இருந்த ஆசனத்தில் அமர்ந்தான்.
அதன்பின் அர்ச்சுனன் அங்கு வந்தான். அவன் கண்ணபிரானிடத்தில் அளவு கடந்த பக்தியுடையவனாதலால், எம்பெருமான் திருவடிகளைத் தொட்டு வணங்கி, அவரின் புனிதத் திருவடியருகே ஆசனத்தில் அமர்ந்தான். இருவரும் கண்களால் நலம் விசாரித்துக் கொண்டு எம்பெருமான் எழுந் தருளுகைக்காகக் காத்திருந்தனர்.
அத்தை மைந்தனாகிய அர்ச்சுனனின் அன்பையும், பக்தியையும் அதேபோல அரவக்கொடியோனின் கபட எண்ணத் தையும் எம்பெருமான் நன்கு அறிந்தவனாகி, அர்ச்சுனன் வரவினை எதிர்பார்த்துப் பொய்த்துயில் புரிந்து கொண்டிருந்தார். அர்ச்சுனன் வந்து திருவடியருகே அமர்ந்து விட்டான் என்பதை அறிந்ததும் கண்ண பிரான் எழுந்து முதலில் அர்ச்சுனனைப் பார்த்தார். மகிழ்ச்சியோடு நலம் விசாரித் தான். அதன்பின் அர்ச்சுனன் துரியோதனன் வந்திருப்பதைச் சுட்டிக் காட்டினான். உடனே கண்ணபிரான் திரும்பி அவனைக் கண்டு மகிழ்வோடு இன்சொற்கள் பல கூறி வரவேற்றார். எல்லாம் அறிந்த அப்பெரு மான் ஒன்றுமே தெரியாதது போல, ”அரசர்க்கரசே ! அர்ச்சுனரே! இருவரும் இங்கு வந்ததற்குரிய காரணம் யாது? என்று எல்லாம் அறிந்த அண்ணல் ஒன்றுமே அறியாதது போலக் கேட்டார்.
அப்பொழுது துரியோதனன், “கண்ணா நடக்கவிருக்கும் போருக்குத் துணையாக உங்களை அழைக்க வந்திருக்கின்றேன். அர்ச்சுனன் உங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்குக்குறைவில்லாமல் நான் தங்க ளிடம் அன்பு வைத்திருக்கின்றேன். அதே போல உறவு முறையும் சமமானதே. அதுமட்டுமல்லாது அர்ச்சுனனுக்கு முன் நான்தான் வந்தேன். முன்னால் வந்த என்னைத் தான் நீங்கள் ஆதரிக்கவேண்டும். ஜனார்த்தனரே! போரில் எங்களை ஆதரிப்பது மட்டுமல்லாமல், வழி காட்டக் கூடியவராகவும் இருக்க வேண்டும். அறநெறிப்படி செய்யுங்கள்” என்றான்.
பாண்டவர்க்குச் சகாயம் ஆன கண்ணன்
அரவக்கொடியோன் சொன்னதைக் கேட்ட அரவணை அமர்ந்தபிரான், ”துரியோதனா! நீ முதலில் வந்தாய் என்பது உண்மையே. அதே போல முதலில் நான் பார்த்தது இந்தக் குந்தி மகனை என்பதும் உண்மையே. அதாவது நீ முந்தி வந்தவன். இவன் முந்திப்பார்க்கப்பட்டவன். இந்த விஷயத்தில் இருவரும் சரி சமமாக இருக் கின்றீர்கள். ஆகையால் நான் இருவ ருக்குமே சகாயம் செய்ய வேண்டும். முந்திப்பார்க்கப்பட்டவன் என்பது மட்டும் அன்று, உபப்பலாவியவனத்தில் தரும ரிடம் பாண்டவர்க்குத் துணையாக இருப் பேன் என்று உறுதி வேறு தந்துள்ளேன். அதனால் பாண்டவர்களுக்குத்தான் நான் முறைப்படி சகாயம் செய்யவேண்டும்” என்று பற்றறத்துணிந்து சொல்லி கண்ண பிரான் பாண்டவர் சகாயன் ஆனார். அதன் பின் அப்பெருமான், “நான் இரண்டு யோசனைகளை உங்கள் முன் வைக்கி றேன். அவற்றில் எது வேண்டுமோ அதனை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். வயதில் சிறியவன் அர்ச்சுனன்; அதனால் தன் விருப்பத்தைத் தெரிவிக்க அவனுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அவன் கேட்பதைத் தவிர்த்து மற்றொன்றை எடுத்துக் கொள்ளவேண்டும்” என்று கூறினான். அதற்கு இருவருமே ஒப்புக் கொண்டனர். பின்னர் அப்பெருமான்;
இரண்டில் எது வேண்டும்
முதலாவது: போர் செய்வதில் எனக்குச் சமமானவர்களும், மகாவீரர்களுமான என் குலத்தவர்கள் நாராயணர்கள் (பதினாயிரம் கோபிகாஸ்தீரிகளிடம் பிறந்தவர்கள்) இருக்கின்றார்கள். அவர்கள் ஓர் அக்குரோணி சேனை அளவு உள்ளார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்தால் யாராலும் வெல்ல முடியாது. அவர்கள் ஒரு பக்கம்.
இரண்டாவது :”இன்னொரு பக்கத்தில் ஆயுதம் எடுக்காதவனாகவும்; போர் புரியா தவனாகவும் நான் மட்டும் இருப்பேன்” என்று கூறிய அவர் அர்ச்சுனனைப் பார்த்து, “அர்ச்சுனா! உனக்குத்தான் முதல் வாய்ப்பு, இந்த இரண்டில் எது வேண்டும் சொல்” என்று கேட்டான்.
அர்ச்சுனன் சற்றும் தாமதமின்றி, “மாதவா! கோவிந்தா! தாமோதரா! ஸ்ரீதரா! மதுசூதனா! தாங்கள் என் தேரின் முன் பக்கத்தில் பார்த்தசாரதி – யாய் எழுந்தருளி, போர் போர் செய்வதற்கு உரிய குதிரைகளைச் செலுத்தி அத்தேரினை ஓட்டினால் போதும், ஐயனே! இந்நிலவுலகத்திலுள்ள அரசர்கள் மட்டுமின்றி, மற்றைய உலகங் களிலுள்ள விஞ்சையர்கள், இயக்கர்கள் கந்தர்வர்கள், தேவர்கள் என எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் என் கையிலுள்ள காண்டீபத்தை வளைத்து, அவர்களது தலைகளைத் துணிப்பேன். நீர் மட்டும் என் பக்கத்தில் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை” என்று கூறி ஸ்ரீ கண்ணபிரானின் பேராதரவைப் பெற்றான்.
அர்ச்சுனன் இவ்வாறு கூறியதைக் கேட்ட வுடன், “ஆயுதம் ஏந்தாத கண்ணனைப் பெற்ற இவன் ஓர் ஏமாளி” என நினைத்து, “லட்சக் கணக்கில் பெருஞ்சேனையைப் பெற்றுவிட்டேன்” என்று எண்ணி மகிழ்ச்சி கொண்டவனாக நேராகப் பலராமரிடம் சென்றான். பீமனுக்குச் சமமான பலசாலி யான பலராமன் துரியோதனன் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டு, “துரியோதனா! உத்தரை திருமணம் முடிந்த பின் உபப்பிலாவியத்தில் நான் பாண்டவர் களிடத்தில் கூறியவற்றையெல்லாம் அறிந்திருப்பாய் என எண்ணுகின்றேன். உன் சார்பாக நான் நிறையப் பேசி இருக்கி றேன். அதோடு கண்ணபிரானிடமும் பல முறை சொல்லியிருக்கின்றேன். ஆனால் என் பேச்சைக் கண்ணபிரான் கேட்டுக் கொள்ள மறுக்கிறான். நான் என்ன செய்ய முடியும்?. எனக்குக் கௌரவர்களும் பாண்டவர்களும் ஒன்றுதான். என்றாலும் கண்ணன் இல்லாத இடத்தில் நான் இருக்க முடியாது. அதனால் உனக்கு உதவி செய்ய முடியவில்லை. அதே போல பார்த்த னுக்கும் நான் உதவி செய்யமாட்டேன். சந்திர வம்சத்தில் பிறந்துள்ளாய். ஆகையினால் க்ஷத்திரிய தருமத்திற்கு ஏற்ற முறையில் நடந்து கொள்க” என்று கூறினாள். அதன்பின் துரியோதனன், “அர்ச்சுனன் நன்றாக ஏமாந்து விட்டான். துவாரகையின் பெருஞ்சேனையை நான் அடைந்துவிட்டேன். பலராமனுடைய ஆசியும் எனக்குள்ளது. கண்ணபிரானும் ஆயுதம் எடுக்காது. போர் செய்யாத நிலையில், படை எதுவும் இல்லாத தனி ஒருவனாய் பாண்டவர் பக்கம் சேர்ந் துள்ளார். எப்படி பார்த்தாலும் நான் பெரு வெற்றி பெற்றுள்ளேன்” என்று எண்ணி மகிழ்ந்தவாறு அஸ்தினாபுரம் போய்ச் சேர்ந்தான்.
அவன் அஸ்தினாபுரம் போனபின் கண்ணபிரான் அர்ச்சுனனைப் பார்த்து, “தனஞ்செயா! கிருதவன்மா தலைமையில் உள்ள ஓர் அக்குரோணி அளவுள்ள சேனையை வேண்டாம் என்று உதறிவிட்டு என்னை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்தாய். அதிலும் நான் உங்களோடு சேர்ந்து யுத்தம் செய்யப் போவதில்லை. போரிடாது உங்களுக்கு நான் எவ்வாறு உதவ முடியும்?” என்று கேட்டார்.
“கண்ணா! மணிவண்ணா! கார்மேக வண்ணா! போரிட்டுத்தான் எனக்கு உதவி செய்ய வேண்டுமென்பதில்லை. உங்கள் ஆலோசனைகள், போரை நடத்துவதற்கான செயற்பாடுகளே எங்களுடைய வெற் றிக்குப் பெரிதும் உதவும். நீங்கள் தனி யாகவே இருந்து எல்லாவற்றையும் வகுத்து நடத்தும் சக்தி தங்கள்பால் உள்ளது. நானும் உங்கள் ஆசியினால் தனி ஒருவனாக இருந்து இந்தக் கெளரவரை வெல்வேன். நீங்கள் ஆயுதம் எடுக்காமல் தேரை ஓட்டினால் போதும். நிச்சயம் வெற்றி பெறுவேன். நீங்கள் இந்தப் பார்த்தனுக்குச் சாரதியாக விளங்கி, எக்காலத்தும் இனி வருபவர்கள், தங்களைப் ‘பார்த்தசாரதி’ எனப் பக்தியோடு அழைத்து, வழிபட வேண்டும் என்பது என் ஆசை. அதை இன்று நிறைவேற்றினீர்கள்” என்றான்.
எல்லாவற்றையும் கேட்ட வாசுதேவன், சிரித்துக் கொண்டே “அர்ச்சுனா! நீ போரில் வெற்றி பெற்றுப் புகழுடன் திகழ்வாய் ” என்று கூறி ஆசீர்வதித்தார்.
ஏமாற்றப்பட்டான் சல்லியன்
நகுல சகாதேவரின் தாயார் மாத்ரி தேவியின் உடன்பிறந்தவன் மத்திர தேசாதி பதியான சல்லியன் என்பவன் ஆவான். இவன் பெருவீரன். பீமனைப் போன்று மிகுந்த வலிமையுள்ளவன். தேரோட்டு தலில் வல்லவன். பாண்டவர்கள் உபப் பிலாவியத்தில் போருக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் என்பதை அறிந்து அப்பாண்டவர்களுக்கு உதவவேண்டுமென்பதற்காக ஒரு பெருஞ் சேனையைத் திரட்டிக் கொண்டு உபப்பிலா வியம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். உடன் வந்த சேனை மிகப் பெரியது. அந்தச் சேனை 1½ யோசனை தூரம் நின்றிருந்தது. ஒரு யோசனை என்பது, தற்காலத்தில் 14 கிலோ மீட்டருக்குச் சமமாகும். அந்தச் சேனை அங்கங்கே தங்கி இளைப்பாறிச் சென்று கொண்டிருந்தது.
துரியோதனனின் கட்டளை
பெருஞ்சேனையைத் திரட்டிக்கொண்டு பாண்டவர்பக்கம் உதவுவதற்காகச் சல்லியன் சென்று கொண்டிருக்கிறான் என்பதை அறிந்த துரியோதனன், அந்தப் பெரும் படைக்கு எல்லாவிதச் விதச் சௌகரியங்களும் செய்து கொடுக்குமாறு தன் ஏவலர்களுக்குக் கட்டளையிட்டான். அதனால் அந்தச் சேனை செல்லுகின்ற இடங்களில் எல்லாம் நல்ல உணவு, வசதியான தங்குமிடம், குடிநீர் வசதி போன்றவை ஏவலர்களால் நன்கு அமைக்கப்பட்டிருந்தன. தன. போகும் வழியில் எல்லாம் எந்தவிதக் குறைவும் இல்லாமல் உபசாரம் நடந்து கொண்டி ருந்தது. சல்லியன் பாண்டவர்கள்தான் இத்தனை உபசாரம் செய்கிறார்கள் என எண்ணி மகிழ்ந்து, அவர்களுக்கு நல்ல பரிசுகள் கொடுத்து நன்றி தெரிவிக்க வேண்மென்று எண்ணினான். ஏவலர் களிடம், “உங்களுக்குப் பரிசு கொடுக்கப் போகிறேன் . உங்கள் அரசரின் அனுமதி யைப் பெற்றுவாருங்கள்” என்று சொல்லி அனுப்பினான். அவர்களும் துரியோதன னிடம் சல்லியன் கூறியதைக் கூறினார்கள். உடனே துரியோதனன் அவன் முன் சென்று வணங்கி நின்றான். “இவ்வளவு உபசாரங் களும் நீயா செய்தாய்?” எனச் சல்லியன் திகைத்து, ஆச்சரியமடைந்து, ”நான் உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்” என்றான்.
“தான் பாண்டவர்களுக்குச் சகாயம் செய்யப்போவதாகத் தெரிந்ததும், துரியோதனன் பெருந்தன்மையுடன் க்ஷத்திரிய முறைப்படி தம் சேனைக்கு உபசாரம் செய்தான்” என்று முதலில் சல்லியன் எண்ணினான். அவன் எண்ணியதற்கு மாறாக, அவன், ”போரில் எனக்குத் துணையாக இருக்கவேண்டும். இந்தக் கைம்மாறு தான் வேண்டுகிறேன்” என்றான் துரியோ தனன். அதனைக் கேட்டுச் சல்லியன் திகைத்தான், தடுமாறினான். அந்த நிலை யில் துரியோதனன் மேலும், “மன்னரே! உமக்குப் பாண்டவர்கள் எந்த அளவு நட்போ அந்த அளவு நானும் உங்களிடம் நட்பு கொண்டுள்ளேன். எனவே நீர் போரில் எனக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று மீண்டும் கேட்க லானான். செய்வது அறியாது திகைத்து நின்ற சல்லியன் ஒரு வேளை உணவை உண்ட செஞ்சோற்றுக் கடனுக்காக, அவ னுக்குத் துணையாக இருப்பதாக ஒத்துக் கொண்டான். அதன்மூலம் தன் அன்புக்குப் பாத்திரமான பாண்டவர்களைக் கைவிட் டான். “பாத்திரமறிந்து பிச்சையிடு” என்றாற்போல தருபவர் பாத்திரமறிந்து தான் பிச்சையும் பெற வேண்டும்.இல்லை யென்றால் ஏமாந்த சல்லியன் கதிதான்.
ஏமாற்றப்பட்ட சல்லியன்
பின்னர், சல்லியன் தருமபுத்திரனைப் பார்க்க வேண்டுமென்று கருதி, “துரியோதனா ! உனக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். அது மாறாது. தருமபுத்திரரைப் பார்த்துவிட்டுத் திரும்புகிறேன் ” எனச் சொல்லிப் பாண்டவர்கள் இருப்பிடமாகிய உபப்பிலாவியம் சென்றான். அங்கு அவனைப் பாண்டவர்கள் அன்போடு வரவேற்றார்கள். தகுந்த உபசரிப்பு செய் தார்கள். பின்னர் கெளரவர்கள் தங்களுக்குக் கொடுத்த கஷ்டங்களையெல்லாம் கூறினார் கள். இறுதியில், “எங்களுக்கு என்றும் துணையாக இருக்க வேண்டும்” என்று வேண்டினார்கள். சல்லியனுடைய நிலை பரிதாபகரமாக ஆகிவிட்டது. உண்மை யைச் சொல்லமுடியாமல் தவித்தான். பிறகு ஒருவாறு தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு. “தருமபுத்திரா! என் அன்புச் செல்வங்களே! நான் ஏமாற்றப்பட்டேன். அதனால் துரியோதனனுக்கு வாக்குக் கொடுக்கும்படியான சூழ்நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது. என் உள்ளம் உங்கள் பால் இருந்தும் உங்களுடன் சேரமுடி யாமல் தவிக்கிறேன். என்ன செய்வேன்? என்னை மன்னித்தருளுங்கள் என்று வேண்டிக் கொண்டு நடந்தவற்றையெல் லாம் எடுத்துக் கூறினான். “என்றாலும் என்னைக் கர்ணன் சாரதியாகப் பெற்று அர்ச்சுனனை எதிர்த்தால் கர்ணனின் தேஜஸ் பங்கப்பட்டுவிடும், அதனால் மைத்துனன் அர்ச்சுனன் காப்பாற்றப்படுவான். சூதாட் டத்தில் சிக்குவிக்கப்பட்டபின் திரௌ பதியும் நீங்களும் அடைந்த துயரங்கள் எல்லாம் இனி முடிந்தன. உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். உங்களுக்கு என் ஆசீர்வாதங்கள். என் பிழையைப் பொறுத் தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினான்.
“இந்திரன் ஒரு முறை பிரகஸ்பதி தன்னுடைய அரசவைக்கு வந்தபோது, எழுந்திருந்து, ஆசனம் அளித்தல், முகமன்கூறல் முதலிய உபசாரங்கள் செய்யாமல் வாளா இருந்துவிட்டான். இதனைக் கண்டு வருந் திய பிரகஸ்பதி. “இஃது செல்வச் செருக் கால் ஏற்பட்டது” என்று எண்ணிப் பேசாமல் தம் இல்லத்துக்குப் போய்விட்டார். தேவகுரு இல்லாமல் சபை சோபிக்க வில்லை. தான் செய்த குற்றத்தை உணர்ந்த இந்திரன், பிரகஸ்பதியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க எண்ணினான். ஆனால் பிரகஸ்பதி யாரும் கண்டுபிடிக்க முடியாத படி மறைந்து போனார். எவ்வளவு முயற்சி செய்து குருவானவர் கிடைக்கவில்லை.
பலம் குறைந்த இந்திரன்
ஆசார்யனை இழந்ததனால், இந்திரனுடைய பலம் குறைந்தது. அசுரர்களின் பலம் அதிகரிக்கலாயிற்று. எனவே அசுரர்கள் தேவர்களைத் தாக்க ஆரம்பித்தனர்.
இதனைக் கண்டு வருந்திய நான்முகன், “தேவர்களே! இந்திரனுடைய செல்வச் செருக்கினால் பிரகஸ்பதியை இழந்தீர்கள். இப்பொழுது துவஷ்டாவின் (விசுவகன்மா) குமாரனும் சிறந்த தபஸ்வியுமான விசுவரூபனை வணங்கி, ஆசார்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் சரிவர நடைபெறும்” என்று கூறி அருளினார்.
தேவர்கள் இதனைக் கேட்டுப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். நான்முகன் கூறிய வாறே விசுவரூபனை ஆசார்யனாகக் கொள்ள முடிவு செய்தார்கள். தேவர்கள் விசுவரூபனிடம் சென்று, “நீர் வயதில் குறைந்தவனாயிருந்தாலும் எல்லா வேதங் களையும் அறிந்தவனாய் இருக்கின்றாய். ஆகையால் நீர் எங்களுக்கு நல்ல ஒரு புரோகிதராக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். விசுவரூபனும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றான். சிறந்த தபஸ்வி யுமாய், பரிசுத்தவானுமாய் விளங்கிய அந்த விசுவரூபனின் வருகையால் இந்திராதி தேவர்கள் அசுரர்களிடமிருந்து காப்பாற்றப் பட்டார்கள்.
விசுவரூபனைக் கொன்ற இந்திரன்
விசுவரூபன், விசுவகன்மா துவஷ்டா வின் மைந்தனாக இருந்தாலும், அவனுடைய தாய் தேவர்களுக்கு விரோதமாக உள்ள தைத்தியர் குலத்தைச் சேர்ந்தவள். ஆகையால் அந்த விசுவரூபன் அசுரர் களிடம் நேசமாயிருப்பான் என்ற தவறான எண்ணம் எழுந்தது. அது வளாவம் செய்யலாயிற்று; அதனால் இந்திரன் விசுவரூப னைக் கொன்றுவிட முடிவு செய்தான். அதன் முதற்படியாக தேவஸ்திரீகளை அனுப்பி, அவனுடைய பிரம்மச்சரிய நிலையைக் களங்கப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் விசுவரூபன் அதற்கு இடம் தரவில்லை. தன் பிரம்மச்சரியத்தை உறுதிபடக் காத்தான். அதனால் இந்திரன் தன் வச்சிராயுதத்தால், விசுவரூபனைக் கொன்றுவிட்டான். இத்தகைய தீராத பாபத்தைச் செய்ததனால்தான் பூமியில் ஒரு பகுதி ஒன்றுக்கும் உதவாத உவர் நிலப் பகுதியாயிற்று.
தன் மகன் காரணமில்லாமல் அக்கிரமமாக இந்திரனால் கொல்லப்பட்டதனால் துவஷ்டாவுக்கு இந்திரன் மேல் பெருங் கோபம் உண்டாயிற்று. அதனால் தன் பகையை, வளர்த்துக்கொள்வதற்காகத் துவஷ்டா ஒரு பெரிய வேள்வித் தீயை வளர்த்தாள். அதிலிருந்து விருத்திராசுரன் என்ற அசுரன் தோன்றினான். துவஷ்டா அவனிடம், “விருத்திராசூரா! நலமே அடைக. என் மகனை அக்கிரமமாகக் கொன்ற இந்திரனைக் கொல்வாயாக” என்று இந்திரனைக் எதிர்க்க விருத்திராசூரனை அனுப்பினாள்.
அதன் பயனாக இந்திரனுக்கும் விருத்திராசூரனுக்கும் பெரும்போர் ஏற்பட்டது. அதில் விருத்திராசூரனுடைய கையே மேலோங்கி நின்றது. இந்திரன் தோல்வி அடைவான் என்று அஞ்சிய தேவர்கள், திருமாலிடம் சரண் அடைந்தார்கள். திருமால் அவர்களை நோக்கி, “அஞ்ச வேண்டாம். இந்திரனுடைய வஜ்ஜிராயு தத்தில் நான் பிரவேசிப்பேன். அதனால் இந்திரன் வெற்றி அடைவான்” என்றார்.
வலிமையுடையவர்கள் எவ்வாறு ஒன்றாக இருக்க முடியும்
இதன் காரணமாகத் தேவர்களும் ரிஷிகளும் தைரியம் அடைந்தனர். அதன் பின் முனிவர்கள் விருத்திராசூரனிடம் சென்றார்கள். “இந்திரனும், தாங்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் ” என வேண்டினார்கள். அதனைக் கேட்டு விருத்திராசூரன் அவர்களை வணங்கி, “முனிவர்களே! என்னை மன்னிக்க வேண்டும். இந்திரனும் நானும் எப்படி நட்பாக இருக்க முடியும்! இரண்டு வலிமை யுடையவர்கள் எவ்வாறு ஒன்றாக இருக்க முடியும்!” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “இருவரும் நல்லவர்கள்; அதனால் உங்கள் நட்பு உறுதியாக இருக்கும்” என்றார்கள். விருத்திராசூரன் முனிவர்கள் கூற்றை ஏற்றுக்கொண்டான்.
யுத்தத்தை நிறுத்துகிறேன். இந்திரனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் எனக்கு ஒருவரம் தரவேண்டும், உலர்ந்த ஆயுதத்தினாலாவது. ஈரமான ஆயுதத்தினாலாவது, கல்லினாலாவது, மரத்தினா லாவது, உலோகத்தினாலாவது எனக்கு இந்திரனால் மரணம் நேரக் கூடாது” என்று இரணியன் வரம் கேட்டது போலக் கேட்டான், அவ்வாறே அம்முனிவர்கள் வரம் தந்தார்கள்.
விருத்திராசூரன் எண்ணியபடியே பகை கொண்டிருந்த இந்திரன் அவ்விருத்திரா சூரனைக் கால்லத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் மாலையில் கடற்கரையில் விருத்திராசூரன் இந்திரனைச் சந்தித்தான். அது பகலும் இல்லை; இரவும் இல்லை. பெரும்போர் இருவருக்கும் நடந்தது. விருத்திராசூரன் இந்திரனைப் பார்த்து.”ஹே அதமனே! ஏன் வீணாக என்னிடம் போராடிக் கொண்டிருக் கின்றாய். ஹரியின் வலிமை பிரயோகிக்கப் பட்டிருக்கும் உன்னுடைய வச்சிராயுதத் தைக் கொண்டு என்னைக் கொல்லலாம். நான் நற்கதி அடைவேன்” என்று கூறித் திருமாலைத் தோத்திரம் செய்தான்.
மறைந்து வாழ்ந்த இந்திரன்
அப்பொழுது இந்திரன் விருத்திராசூரனின் வலக்கையை வெட்டி வீழ்த்தினான். அதனைக்கண்டு விருத்திராசூரன் அஞ்சாது தன் இடக்கையால் ஓர் இரும்பு உலக்கையை இந்திரன் மீது எறிந்தான். பின்னர் இடக்கையையும் வெட்டினான். இரண்டு கைகளையும் இழந்த விருத்திரா சூரன் மிகுந்த கோபத்தோடு இந்திரனை விழுங்கினான். அதனால் தேவர்கள் அலறினர். ஆனால் இந்திரன் சாகவில்லை. விருத்திராசூரனுடைய வயிற்றைக் கிழித் துக் கொண்டு வெளியே வந்தான். பக்கத்தி லிருந்த கடற்கரை நுரையில், வச்சிராயுதத் தைப் பிரவேசிக்கச்செய்து, அந்த நுரையை விருத்திராசூரன் மேல் தெளித்தான். அப் போது திருமால் அந்த நுரையில் பாய்ந்து புகுந்தார். அதனால் விருத்திராசூரன் மாண் டான். தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விருத்திராசூரனைக் கொன்றதன் காரணமாக இந்திரனைப் பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.இதனால் அவன் ஒளியிழந்து கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்து வாழ்ந்து வரலானான்.
இந்திரன் இல்லாததால் தேவர்கள் பெரிதும் அல்லற்பட்டார்கள்; அதனால் நல்லொழுக்கமும் வீரமும் பொருந்திய நகுஷ மன்னனிடம் சென்று, “நீர் திருமுடி சூடி தேவேந்திரனாக விளங்க வேண்டும்” என்று அத்தேவர்கள் வேண்டிக் கொண் டார்கள். முதலில் அவையடக்கத் தன்மை யால் தன்னால் இயலாது என்றான். பின்னர் அனைவரும் வற்புறுத்திக் கூறவே, நகுஷன் திருமுடி சூடி தேவேந்திரன் ஆனான். பழைய இந்திரனை இந்திர பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
“முதலில் நகுஷன் நன்றாகத்தான் அனைவரிடமும் நடந்து கொண்டான். அனைவராலும் மதிக்கப்பட்டான். நாட்கள் ஆக ஆக செல்வச் செருக்கு, அதிகாரச் செருக்கு அதிகமாயின. மேலும் நகுஷன் மனத்தை ஒரு வழியில் அடக்காது கண்ட படி அலையவிட்டான். அதன் உச்சகட்ட மாக இந்திரன் மனைவி சசி மீதே மோகங் கொண்டான். காமம் தலைக்கேறியதனால் இந்திராணியைத் தன்னிடம் அனுப்பும்படி தேவர்களிடம் கூறினான். இதனை அறிந்த இந்திராணி, பிரகஸ்பதியிடம் முறை யிட்டாள். பிரகஸ்பதி அவளுக்கு அபயம் அளித்து, சசிதேவி பயப்பட வேண்டாம், நீ இங்கேயே இரு. இந்திரன் விரைவில் வந்துவிடுவான்” என்று ஆறுதல் கூறினார்.
தேவர்கள் மீது கோபம் கொண்ட நகுஷன்
சசிதேவி தன்னுடைய விருப்பத்திற்கு இணங்கவில்லை என்பதையும், பிரகஸ்பதியிடம் சரண்புகுந்து அவர் இல்லத்தில் இருக்கின்றாள் என்பதையும் நகுஷன் அறிந்து தேவர்கள் மீது கோபம் கொண் டான். தேவர்கள் அவனுடைய கோபத் தைக் கண்டு அஞ்சினார்கள்.
அப்பொழுது அவர்கள் நகுஷனிடம், “தேவராஜனே! கோபித்துக் கொள்ளாதீர்.
நீர் கோபம் கொண்டால் உலகம் துன்புறும். சசிதேவி பிறருடைய மனைவி, அவளை விரும்பாது தருமத்தைக் காப்பாற்றுங்கள். என்று கூறினார்கள். காம மயக்கம் கொண்ட நகுஷன், அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை. மாறாக அவன், “தேவர் களே! இந்திரன் அகலிகையைத் தீண்டிய காலத்தில் உங்கள் தருமம் எங்கே போயிற்று? அச்செயலை ஏன் தடுக்க வில்லை? என்னை மாத்திரம் இப்போது ஏன் தடுக்கிறீர்கள்? தவத்திலிருந்த விசுவரூபனைக் கொன்றபோது உங்கள் தரும நெறிகள் எங்கே போயின? அப்பொழுது அதனை ஏன் நீங்கள் தடுக்க வில்லை. விருத்திராசூரனை வஞ்சித்துக் கொன்றவனை ஏன் ஆதரிக்கிறீர்கள்? அதனால் நான் சசிதேவியை அடைவதே அவளுக்கு நலம். எனவே அவளை என்னிடம் அனுப்புவதே நல்லது” என்று விதண்டாவாதம் செய்தான்.
தேவர்கள் நகுஷனுடைய கோபத்திற்கு அஞ்சி, பிரகஸ்பதியிடம் சென்று நகுஷனின் விருப்பத்திற்கேற்ப சசிதேவியை இணங்க வைக்க வேண்டும் என்று வேண் டினார்கள். சசிதேவி அதனைக் கேட்டு நடுங்கினாள். பின்னர் பிரகஸ்பதியிடம் சென்று தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டினாள். பிரகஸ்பதி அவளைத்தேற்றி “சசிதேவி அஞ்சாதே! உன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டேன். சரணடைந்தவர் களைச் சத்துருவிடம் காட்டிக் கொடுக் கின்றவன் அழிந்து போவான். பூமியில், அவன் நட்ட விதையும் முளைக்காது; நகுஷனுக்கு அழிவுக்காலம் நெருங்கி விட்டது. போதாத காலத்தால் உண்டான சங்கடமானது நற்காலம் வந்தால் நீங்கி விடும் ” என்று கூற, சசிதேவி தைரிய மடைந்தாள். உடனே சென்றாள். நகுஷனிடம்
இந்திரனை தேடிய சசிதேவி
சசிதேவியைக் கண்ட நகுஷன் மகிழ்ச்சி அடைந்தான். அவள் அவனிடம் நயமாக, “தேவராஜனே! உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன். இருந்தாலும் ஒரு விண்ணப்பம் இந்திரன் இருக்கின்றானா? இல்லையா? மாண்டானா? இருந்தால் அவன் இருப் பிடம் எங்கே? இவற்றை நான் விசாரித்துத் தேடிப்பார்த்தும் அவன் கிடைக்காமல் போனால் உன்னை அடைகிறேன். அப்போது பாவம் என்னைப் பற்றாது. என்று கூறினாள். நகுஷன் சசிதேவி கூறியதை ஏற்றுக்கொண்டு. “சசிதேவி! இந்திரனைத் தேடிவிட்டு வந்துவிடு, வாக்குத் தவறக்கூடாது ” என்று கூறி அனுப்பினான். அதன்பின் சசிதேவி பிரகஸ் பதியின் இல்லத்திற்குச் சென்றாள்.
இந்திரன் ஆராதிக்கட்டும்
அதற்குள் தேவர்கள் திருமாலிடம் சென்று, நகுஷனைப் பற்றிச் சொல்லி, ‘ஐயனே! மெய்யனே? வைகுந்தவாசனே! பாற்கடல்வண்ணனே! விருத்திராசூரனை அழித்த வீர்யம் உம்முடையது. அதனால் இந்திரன் பிரம்மஹத்தி தோஷம் அடைந்து உலகத்தாரின் பழிக்கு அஞ்சி மறைந்து கிடக்கிறான். அவனுக்கு அருள் செய்யும் ” என்று கூறி முறையிட்டார்கள். அதற்கு எம்பெருமான், “என்னை இந்திரன் நாள் தோறும் விடாமல் ஆராதிக்கட்டும். அதனால் அவன் பரிசுத்தனாவான். நகுஷனும் நாசமடைவான்” என்றார்.
இந்திராணி கற்புக் கடவுளை வேண்டிக் கொண்டு அவர் அருளால் இந்திரன் இருப் பிடத்தை அடைந்தாள். அவன் மானசரோ வரத்தில் ஒரு தாமரைச்செடியின் தண்டி னுள் உள்ள ஒரு நூலில் தன் தேகத்தை அணு அளவாகச் செய்துகொண்டு எப்போது தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்?” என்று துயரத்தோடு வாழ்ந்து வந்தான். ‘தன் கணவனின் துயர நிலை யைப் பார்த்திருந்த சசிதேவி தாங்கொணாத் துயரம் கொண்டு, பொறுக்க முடியாமல் அழலானாள். தனக்குண்டான கஷ்டங்களை யெல்லாம் அவனிடம் தெரியப்படுத் தினாள்.
இந்திரன் அவளுக்கு வேண்டிய தைரியம் சொல்லி, ‘பாவம் செய்யத் துணிந்த நகுஷனுக்கு விநாச காலம் நெருங்கிவிட்டது. நீ தகுஷனிடம் தனியாகச் சென்று அவனுடைய விருப்பத் துக்கு இணங்குவதாக நடித்து, முனிவர்கள் அவனுடைய பல்லக்கைத் தூக்கிவர அதில் அவன் அமர்ந்து உன்னுடைய இருப்பிடத் துக்கு வரும்படியாகக் கூறு. அப்பொழுது அவன் செருக்கோடு நடந்து கொள்கின்ற தன்மையாலே முனிவர்களால் அவன் அழிவான்” என்று கூறினான். அச்சசி தேவியும் இந்திரன் சொன்னபடியே நகுஷனிடம் சென்றாள். அவளைக் கண்டதும் நகுஷன் வெகுவாக மகிழ்ச்சி அடைந்தான். அப்பொழுது சசிதேவி அவனை நோக்கி, “தேவராஜனே! என்னுடைய ஒரு வேண்டுகோளை நிறை வேற்ற வேண்டும். செய்வீர்களா?” என்று கேட் டாள். உடனே செய்வதாக நகுஷன் ஒப்புக்கொண்டான். “மகாவிஷ்ணுவிற்கும், சிவபெருமானுக்கும், நான்முகனுக்கும், இந்திராதி தேவர்களுக்கும், அசுரர்களுக்கு மில்லாத ஒரு பல்லக்கினை அமைத்துக் கொண்டு அதில் ஏறி அமர்ந்து பெருமிதத் தோடு என்னிடம் வர வேண்டும், என்னுடைய அரண்மனையில் தேவராஜனாகிய தங்களை நான் வரவேற்க வேண்டும். செய்வீராக” என்று கூறினாள்.
மூன்றுலகங்களும் நடுங்கின
அதனைக் கேட்டு நகுஷன் சிரித்துக் கொண்டு, “அழகியே! உன் யோசனை எனக்கு நன்றாகப் பிடித்திருக்கின்றது. நான் யாரைப் பார்க்கின்றேனோ அவருடைய வலிமை எனக்கு வந்துவிடும். எனவே என்னைச் சப்தரிஷிகள் பல்லக்கில் வைத்து சுமந்து கொண்டு நின்பால் வருவது பொருத்தமே. நீ சொன்னவாறே செய்கி றேன்” என்று கூறி அவளை அனுப்பி விட்டான். அவளும் தன் இருப்பிடம் சென் றாள். அதன்பின் செருக்குடன் சப்தரிஷி களை அழைத்து, தான் ஏறி அமர்ந்திருக்கும் பல்லக்கினைச் சுமந்துகொண்டு சசிதேவி யின் இருப்பிடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டான். அதனைக் கேட்டு மூன் றுலகங்களும் நடு நடுங்கின. நகுஷனைச் சபித்தன.
இவனுக்கு விநாசகாலம் வந்து விட்டது எனக் கருதிக் கொண்டு சப்தரிஷிகள் அவன் அமர்ந்திருந்த பல்லக்கினைச் சுமந்து கொண்டு, சசிதேவியின் இல்லத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பல்லக் கினைச் சிறந்த தபஸ்விகளான சப்தரிஷிகள் சுமந்து செல்ல, செல்ல, நகுஷனின் பாவத் தின் வேகம் அதிகரித்துக் கொண்டே வந்தது. அப்பொழுது சசிதேவியின் அழகிய தோற்றத்தை மனத்தில் கொண்டு சீக்கிரம் அவள் இருப்பிடத்திற்குச் செல்லவேண்டுமென்று ஆசைப்பட்டான். அதனால் ஆத்திரப்பட்டான். ‘ஆத்திரக்கார னுக்குப் புத்திமட்டு’ என்று சொல்வார்கள். அதன்படியே அவன் பல்லக்குச் சுமந்து சென்ற முனிவர்களை வேகமாகச் செல்லும் படி அடிக்கடி ஆணையிட்டுக் கொண்டிருந் தான். அதனால் அவனுடைய கர்வம் இன்னும் அதிகரித்துக் கொண்டே வந்தது.
பல்லக்கினைச் சுமந்து சென்ற சப்த ரிஷிகள் ஒருவர், தழற்புரைச் சுடர்க் கடவுளாகிய சிவபெருமான் தந்த பெருமை மிக்க தமிழை உலகிற்குத் தந்தருளிய அகத்திய மாமுனிவரே ஆவார். அவர் குறு முனிவர். பல்லக்கினைச் சுமக்க முடியாது சுமந்துவந்தார் “கேடுவரும் பின்னே மதிகெட்டுவிடும் முன்னே” என்பார்கள். அதன்படியே அந்த நகுஷன் அறிவுகெட்டு அந்தத் தவமுனிவரைக் காலால் உதைத்து ஸர்ப்ப, ஸர்ப்ப’ என்று அதட்டினான். (ஸர்ப்ப என்ற சொல் வேகமாக நடக்க வேண்டும் என்று கூறுவதற்குரிய ஒலிக் குறிப்புச் சொல்.) அகத்தியரை ஆணவங் கொண்டு உதைத்ததும். அவனுடைய பாவமும் ஆணவமும் எல்லை மீறியது. அதனால் பொதிய மலைவாழ்ந்த குறுமுனி, “கீழ்மகனே/ ஆணவம் பிடித்த உனக்குச் சொர்க்கத்தில் இடமில்லை. நீ கீழே வீழ்வாய். ‘ஸர்ப்ப ஸர்ப்ப என்று கூறி அதட்டியதால் ஒரு பெரிய மலைப் பாம்பாக மாறி பூமியில் விழுந்து உருண்டு கொண்டு கிடப்பாய்” என்று சபித்தார்.
அந்தக் கணமே நகுஷன் மலைப் பாம்பாக மாறி மண்ணில் விழுந்தாள்.
இவன் சாபவிமோசனத்திற்காகப் பல்லாண்டுகள் காத்துக் கிடந்தான். (இவன்தான் வனவாசத்தில் தருமரைப் பல கேள்விகள் கேட்டு, பின்னர் அவரிடமிருந்து அதற் குரிய விடைகளைப் பெற்றபின், அகத்தியர் அருளிய சாபவிமோசனத்தால் மலைப் பாம்பாகக் கிடந்த இவன் நகுஷனாக மாறி புனர்ஜன்மம் பெற்றான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்றுக் குறிப்பு ஆரண்ய பர்வத்தில் தருமன் ஞானவான்’ என்ற தலைப்பில் அங்கு சொல்லப்பட்டுள்ளது).
“இந்திரன் மறுபடியும் தேவராஜன் பதவியில் அமர்ந்து, புதுவாழ்வு பெற்றான். சசி தேவியும் துன்பம் நீங்கினாள்” என்று கூறிய சல்லியன், “இந்திரன் தன் மனைவி யுடன் பட்ட கஷ்டங்களையும், அவன் புரிந்த அஞ்ஞாதவாஸத்தையும் கேட்ட பிறகு நின் சகோதரர்களுடனும், பாஞ்சாலியுடனும், பட்ட கஷ்டங்கள் பெரிதெனத் தோன்றாது ” என்று தரும புத்திரருக்கு ஆறுதல் கூறினான்.
இந்திரவிஜயம்
சல்லியன் மறுபடியும், “தருமபுத்திரரே இந்திரன் விருத்திராசூரனைக் கொன்று நாட்டைப் பெற்றது போல. நீயும் உன் நாட்டைப் பெறந்தான் போகின்றாய். ஆண வத்தால் நகுஷன் தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டு அழிந்தது போல ஆணவமிக்க வஞ்சனைக் குணமுடைய துரியோதனாதியர் கூட்டம் அழியத்தான் போகின்றது. நீண்டகாலம் நீ நின் தம்பியருடனும், திரௌபதியுடனும் ஆட்சி செய்யப் போகின்றாய். இந்த நகுஷ சரித்திரம் வேதத்துக்கு நிகரானது. படை களைத் திரட்டுகின்ற காலத்தில் மன்னன். ‘இந்திர விஜயம்’ என்று இந்தச் சரிதத்தைக் கேட்க வேண்டும். அது நல்லது. அதனால் தான் இப்பொழுது உனக்கு இந்தச் சரித்தி ரத்தைக் கூறினேன். தருமபுத்திரரே! இன்னும் சொல்கின்றேன் கேளுங்கள். சான்றோர்களால் புகழப்படுபவன் நன்கு வளர்ச்சி அடைவான். துரியோதனாதியர்களின் ஆணவப்போக்காலும், அவர்கள் செய்த பெருந்தவறுகளாலும், பீமார்ச் சுனர்களின் பராக்கிரமத்தாலும் டித்திரி யர்களே இவ்லாத நிலைமை ஏற்படப் போகின்றது. ‘இந்திரவிஜயம்’ என்ற இந்தச் சரிதத்தை சிரத்தையுடன் படிப்பவன் பாவங்களற்ற அரசன் ஆவான். அவனுக்குப் பகைவர் பயம் என்பதே கிடையாது. புத்திரப் பேற்றுக்கும் குறைவு கிடையாது. எந்தவித ஆபத்தும் ஏற்படாது. நீண்ட ஆயுளைப் பெறுவான். எங்கும் எதிலும் அவனுக்கு எளிதில் வெற்றி உண்டாகும்” என்று கூறிப் பாண்டவர்களை மனமார ஆசீர்வதித்தான்.
சல்லியனிடம் மனமார்ந்த ஆசீர்வாதத் தைப் பெற்ற பின்னர் தருமபுத்திரர், “மாதுவரே! நீர் கர்ணனுக்காகத் தேரோட்டப் போகின்றீர். உங்களைத்தான் அவன் தேர்ந் தெடுப்பான். இதில் சந்தேகமேயில்லை. அப்பொழுது எழுது அடுகார்க்களத்தித்து சுன்னை மிக போர்க்களத்தில், அர்ச் கர்ணனுக்குத் தளர்ச்சியையும், மனக்கசப்பையும் ஏற்படுத்த வேண்டும்”என்றார்.
அதனைக் கேட்ட சல்லியன், “தரும புத்திரரே நீர் கேட்டுக்கொண்டபடியே செய்கிறேன். வேறு என்ன செய்யலாமோ அவற்றையெல்லாம் உங்களுக்காகக் கட்டா யம் செய்கின்றேன்” என்று கூறிய பின். பாண்டவர்களுக்குதவ முடியவில்லையே என்ற வேதனை மனத்தில் அழுத்த துரியோதனன் இருப்பிடத்திற்குச் சென்றான்.
உலூகன் தூது
பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனால் தூதுவனாக அனுப்பப்பட்ட உலூக முனிவன், அஸ்தினாபுரம் சென்று, துரியோ தனன் அவைக்களத்தை அடைந்தான். தூதனாகச் சென்ற அம்முனிவள் சத்திய விரதனாகிய தர்மரின் வணக்கத்தை முதலில் அனைவர்க்கும் அறிவித்தான். பின்னர் துரியோதனன் தன்னை வணங்கி, வரவேற்றபின், அங்கு போடப்பட்டிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தான்.
அப்பொழுது பிதாமகர் பீஷ்மர் எழுந்து. “நான்மறையாளரே! தாங்கள் இங்கு எழுந் தருளியதற்குரிய காரணம் யாது? அருள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அப்பொழுது உலூக முனிவன் எழுந்து, “அவைப் பெரியோர்களே, வணக்கம், தருமம் அழியாதது. அது உங்களுக்குத் தெரியாததன்று. திருதராட்டிரரும், பாண்டு வும் குருவம்சத்தில் பிறந்த விசித்திர வீரியனின் இருகண்கள் போன்ற இரு புதல்வர்கள், அவ்வாறு இருக்க, திருதராட்டிரர் புதல்வர்கள் மட்டும் அரச போகத்தைப் பெற்று சுகமாயிருக்க, பாண்டு புத்திரர்கள் அதனைப் பெறாமல் வனவாசமும், அஞ்ஞாதவாசமும் செய்து அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது நியாயமே இல்லை. சாதாரண அறிவுடையவர்கள் கூட ‘இதனை நியாயம்’ என்று சொல்லமாட்டார்கள்.
ஒப்பந்தப்படி நாட்டைக் கொடுங்கள்
‘இப்பொழுது குருவம்சத்தில் தோன்றிய பாண்டவர்கள் தாங்கள் பட்ட துன்பங்களையெல்லாம் மறந்து சமாதான மாகப் போக விரும்புகிறார்கள். கிறார்கள். யுத்தம் பெரு நாசத்தைதான் உண்டாக்கும். குருவம்சத்தையே அழித்துவிடும். அதனால் அவர்கள் யுத்தத்தை அறவே வெறுக் கிறார்கள். ஆனால் அவர்கள் ‘கோழைகள்’ அல்லர். ஆதலின் தர்ம நெறிப்படி முன்செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு ஏற்ப பாண்டவர்களுக்கு உரிய நாட்டைக் கொடுத்து விடுங்கள். இதில் தாமதம் கூடாது” என்று கூறினான்.
அதனைக் கேட்டு, அறிவும், ஆற்றலும், பெருமையும்,மனவுறுதியும் கொண்ட பிதாமகர் பீஷ்மர், “தெய்வத்தின் திருவரு ளால் பாண்டவர்கள் வனவாசத்தையும், அஞ்ஞாதவாசத்தையும் வெற்றிகரமாக முடித்து வந்திருக்கின்றார்கள். அவர்கள் பல அரசர்களின் உதவியைப் பெற்று வலிமை கொண்டவர்களாக இருந்த போதிலும் போர் புரிவதில் மனம் செல்ல வில்லை. சமாதானத்தையே விரும்பு கிறார்கள். இது நல்ல சமிக்ஞையே. எனவே அவர்களுக்கு உரிய நாட்டைக் கொடுத்து விடுவதே நல்லது”என்றார்.
பீஷ்மர் பேசிக்கொண்டிருக்கும்போதே. கர்ணன் கோபங்கொண்டவனாய், இடை மறித்து வந்த தூதரைப், “புரோகிதரே! நீர் சொல்லுவதில் என்ன புதுமை இருக் கின்றது? அரைத்த மாவையேதான் இப்பொழுதும் அரைக்கின்றீர். சூதாட்டத்தில் இழந்த அரச செல்வத்தைத் தருமபுத்திரர் எவ்வாறு திருப்பிக் கேட்க லாம்? தருமபுத்திரர் தனக்கு விதித்த நிபந்தனைகளைச் சரியாக நிறைவேற்றி விட்டுப் பின்னர் எதையேனும் யாசகமாகப் பெற்றுப் போகட்டும். மச்ச தேசத்து மன்னன், பாஞ்சாலதேசத்து மன்னன் போன்றவர்கள் பலத்தை நம்பியல்லவோ இப்பொழுது நாட்டைக் கேட்கிறார்? முதலில் பயமுறுத்தித் துரியோதன னிடமிருந்து எதையும் பெறமுடியாது என்பதைப் பாண்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நிபந்தனைகளைச் சரியாக நிறைவேற்றத் தவறியபடியால் அவர்கள் மீண்டும் காட்டிற்குத்தான் செல்ல வேண்டும் ” என்று கூறினான்.
பின்னர் விதுரர் எழுந்து, “துரியோதனா! உலூகமுனிவன் கூறியவண்ணம் உரிய நாட்டைப் பாண்டவர்களுக்குக் கொடுக்காமல், பொறாமை மட்டும் உள்ளத்தில் கொண்டு, குறுக்கு வழி களையே காட்டுகின்ற சகுனி போன்றவர் களின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடப்பா யாயின் இலக்குமி நம்மை விட்டு நீங்கு வாள். சேனைகளும் அழிய போரிலும் தோற்றுப் போவோம்” என்று அறிவுரை கூறினார்.
எரிச்சலடைந்த துரியோதனன்
அதன்பின் துரோணர் எழுந்து, “அரவக்கொடி வேந்தனே! விதுரர் கூறிய உண்மையான வார்த்தைகளைக் கேட் காமல், போரிட எண்ணினால் அது ஒரு குற்றமாகும். அர்ச்சுனன் தொடர்ச்சியாக விடுங்கணையில் அழிந்துபோவோம்” என்று எச்சரித்தார். இவற்றையெல்லாம் கேட்ட துரியோதனன் எரிச்சலடைந்து, போரில் அதனைப் பார்க்கலாம் என்றான்.
பீஷ்மர் மீண்டும் எழுந்து, “திருதராட்டிர மன்னா! உன் மைந்தர்களாகிய பாண்டவர்கள் குறித்த பதின்மூன்றாண்டுகளைக் கடந்தே வந்துள்ளனர். அதனால் அவர் கட்கு உரிய நாட்டைக் கொடுக்காமல் கொடிய போருக்கு ஆயத்தமாகின், அர்ச் சுனனுக்கு ஈடாக இருப்பவர் இங்கு யார் உளர்? ஒருவருமிலர்” என் என்றார்.
கோபம் கொண்ட கர்ணன்
இதனைக் கேட்டவுடன் கோபங் கொண்டு கர்ணன், “மிதிலையினின்று கல்யாணராமனாய், அயோத்தி ராமன் அயோத்திக்குத் திரும்புகையில் அவனிடம் தன் வலிமையெல்லாம் தோற்ற, பரசுராம னாகிய உன் ஆசார்யனை வெற்றி கொண் டது தவிர வேறு என்ன சாதனை செய் துள்ளாய்! எங்களையெல்லாம் இகழ்ந்து பேச வந்துவிட்டாய்” என்று காட்டமாகக் கேட்டான்.
அதனால் கோபங்கொண்ட பிதாமகர் பீஷ்மர், “தேரோட்டி மகனே! நானாவது நிர்ப்பந்தத்தின் காரணமாக என் ஆசார்ய னைத் தோற்கடிக்க வேண்டியதாயிற்று.நீ எந்தக் காலத்தில், நீ எதிரியாகக் கருதுகின்ற அர்ச்சுனனைத் தோற்கடித்தாய்? பாஞ்சாலியின் சுயம்வரத்தின் போதும், இந்திர சேனன் தலைமையில் வந்த கந்தருவர் துரியோதனனைத் தேர்க்காலில் கட்டிய போதும்,விராட நகரில் ஆநிரைகளைக் கவரச் சென்றபோதும் அர்ச்சுனனிடம் உன் ஆண்மை பின்னிட்டுச் சிதைந்து போனது எனக்குத் தெரியாதா? சிறுவன் உத்தரன் தேரோட்டி வந்தபோது அந்த அர்ச்சுனனை உன்னால் வெற்றி கொள்ள முடியவில்லை. வைகுந்தவாசனே, கண்ணனே, பார்த்த சாரதியாக விளங்கித் தேரோட்டு கின்ற காலத்தா, நீ அவனை வெற்றி கொள்ளப் போகிறாய்? இன்னமுமா அர்ச்சுனனை வெல்லப் போகிறேன் என்று கனவு காண்கிறாய்? அது உன்னால் ஒருக்காலும் முடியாது” என்று இகழ்ந்து கூறினார்.
கர்ணன் சொன்னதையெல்லாம் மனத் தில் உட்கொண்ட துரியோதனன் தூதனாக வந்த உலூக முனிவரைப் பார்த்து, “முனிவரே! சூதாடியோ, வேறு எந்தவழி யிலோ கவர்ந்து கொண்ட நாடு எங்களு டையதே. இதில் எந்தவிதச் சந்தேகமு மில்லை. இவ்வளவு நாள் அவர்கள் வசித்திருந்த காடு அவர்களுக்கே, எனவே மீண்டும் காட்டிற்கே சென்று வாழலாம் என்று கூறிப் பெரியவர்களின் வார்த்தைகளை நிராகரித்தான்.
துரியோதனன் முடிவைக்கேட்ட திருத ராட்டிரர் கோபித்து, மைந்தனை அதட்டி, பின்னர் தூதரைப் பார்த்து, ”முனிவரே! நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மையே.போர் நடக்குமாயின் என் பிள்ளைகள் நிச்சயம் மடிவர். ஆதலின் புனிதரான பாண்டவர்களோடு நட்பாக வாழ வேண்டுமென்று எண்ணுகிறேன். நாட்டின் நன்மையைக் கருதியும், கெளரவர் பாண்டவர்களின் நலனைக் கருதியும் அறிவில் சிறந்தவரான சஞ்சயனைப் பாண்டவரிடம் தூதாக அனுப்பத் தீர்மானித் துள்ளேன்.இதனைத் தருமபுத்திரரிடம் சொல்லும் ”என்று இனிமையாகக் கூறினார். பின்னர் திருதராட்டிரர் உலூக முனிவர், தூதராக வந்ததனால் வேண்டிய ஆடைகளையும் பரிசுப் பொருள்களையும் கொடுத்து, விடையும் தந்து அனுப்பினார். அங்கிருந்தவர், “திருதராட்டிரர் சொன்ன யோசனையே தக்கது” என்றனர்.
உலூக முனிவனும் உபப்பிலாவியம் வந்து பாண்டவர்கள் ஐவரும் இருக்கு மிடத்திற்கு எழுந்தருளி, துரியோதனாதியர் சொன்ன செய்திகளையும், இறுதியில் திருதராட்டிரர் சொன்ன முடிவையும் கூறினார். அம்முனிவர் கூறியவற்றைக் கேட்ட பாண்டவர்கள், திருதராட்டிரர் கருத்தினை அறிய, சஞ்சயன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
மகாபாரதம் – 38 உலூக மாமுனி தூதுச் சருக்கம்… தருமபுத்திரர் சூதாட்டத்தில் வஞ்சனை Asha Aanmigam