பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலியோடு சிற்றஞ்சிறு காலையில் துயி லெழுந்து, புனித நீராடி, ஆதவனைப் போற்றி வணங்கினர். அந்தச் சூரியனது ஒளியும் மங்கலாகும்படி தங்களது அழகிய சுயரூபத்தை இயமன் அருளாலே பெற் றார்கள். (முன்னர் யமனது அருளாலே வேற்றுருவு கொண்டது போலவே இப் பொழுதும் அவன் அருளாலே நிஜ வடிவு பெற்றனர் என்க.) அதன்பின் தன் தமையனார் தரும புத்திரர் நெற்றியில் இருந்த வடு எப்படி யாரால் வந்தது எனக்கேட்க, திரௌபதி நடந்ததை எடுத்துக் கூறினாள். உடனே இந்தக் காரியத்தைச் செய்த விராடனைத் தண்டிக்க வேண்டும் என பீமனும் அர்ச்சுனனும் கோபித்து எழ, தருமபுத்திரர், “அன்புத் தம்பியரே! கோபிக்க வேண்டாம். பொறுமை கடலினும் பெரிது; நம்மை ஓர் ஆண்டு எந்தவிதக் குறைவுமில்லாமல் காப்பாற்றியவன் அந்த விராட மன்னன் தான். அதுமட்டுமல்லாமல் நான் யார் என்பது அறியாது செய்த ய்த சிறு பிழை; ஆகலின் அவன் மீதுள்ள கோபத்தை விட்டொழிக” என்று கூற, அவர்கள் கோபந்தணிந்தனர். அதன்பின் அனைவரும் நேராக வன்னிமரம் அருகே சென்றனர். உரிய மந்திரங்களைக் கூறித் தத்தம் ஆயுதங் களை எடுத்துக் கொண்டனர்.
பாண்டவர்கள் ஐவரும் ஐந்து இந்திரர்கள் போல, வருகைதர, விராடன் அவர்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்து, தன் மகனோடு வணங்கினான். நான் அறியாமல் தருமபுத்திரருக்குச் செய்த பிழையைப் பொறுத்தருளுமாறு கேட்டுக் கொண்டான். தருமபுத்திரர், விராட மன்னனைத் தழுவிக் கொண்டு, “எங்கள் அன்பிற்குகந்த மன்னனே! உன் மீது சிறிதளவும் கோபமில்லை. உன்னைக் காட்டிலும் சிறந்த உறவினர் எங்களுக்கு யார் இருக்கின்றார்கள்? அஞ்ஞாதவாச காலத்தில் நாங்கள் எந்தவிதக் குறையும் இல்லாமல் இங்கு இருந்தோம். அதுமட்டு மல்லாமல், நாளை நடக்கும் போரில் நீங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் ” என்றார். அதனைக் கேட்ட விராட மன்னன்,”பெரியவரே! உங்களுக்கு எந்தக் காலத்திலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்று உறுதி கூறினான்.
உத்தரை என் மாணவி
அடுத்து உத்தரன்,”பாண்டவப் பெரியோர்களே! உங்களுக்கு எந்த உதவி செய்தாலும் அது எங்களுக்கே நன்மையாக விளையும். இனி நாங்கள் உங்கள் ஏவல்படி நடப்போம். அர்ச்சுனரே! போர்க்களத்தில் நான் அறியாது அஞ்சிக் கூறியனவற்றை யெல்லாம் பொறுத்தருளவேண்டும் தங்க ளுக்கு ஒரு பரிசு தர எண்ணியுள்ளேன். வில்லாற்றலில் சிறந்த தங்களுக்கு என் தங்கை உத்தரையைத் திருமணம் செய்து கொடுக்க நினைத்துள்ளேன். தாங்கள் அதனை விருப்பத்தோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினான்.
உடனே அர்ச்சுனன், “உத்தரா! நீ என் மீது வைத்துள்ள அன்பினை அறிந்து நான் பெரிதும் இறும்பூதடைகின்றேன். ஆனால் உத்தரை எனக்கு மனைவியாவது பொருத்த மன்று; உத்தரை என்னிடத்தில் நாட்டியம் பயின்றவள். ஆதலின் அவள் என் மாணவி. அவள் எனக்கு அன்புடைய மகள் போன்றவள். எனவே அது பொருந்தாது. வேண்டுமென்றால் நீங்கள் அனைவரும் விரும்பினால் என் மகனும், சுபத்திரையின் மகனுமாகிய அபிமன்யுவிற்கு உத்தரையை மணமுடிக்கலாம். அது நன்கு பொருத்த மாக இருக்கும் ” என்றான். அர்ச்சுனனு டைய இந்தக் கருத்தை, விராட மன்னனும், உத்தரனும், பிறபாண்டவர்களும், திரௌபதியும் மற்றுமுள்ள உறவினர்களும் மனமகிழ்ந்து ஏற்றனர். உடனே அரசன் விராடன் எல்லா நாட்டு அரசர்களுக்கும், தூதர்கள் மூலமும், மணவோலை மூலமும் உத்தரை – அபிமன்யு திருமணச் செய்தியை அறிவித்தான். மணச் செய்தி கிடைத்த வுடனே எல்லா நாட்டு அரசர்களும் நால்வகைப் படைகளுடன், விராட நகர் வந்து சேர்ந்தனர்.
அபிமன்யு – உத்தரை திருமணம்
துவாரகையிலிருந்து, கார்முகில் வண்ண னாகிய கண்ணபிரானும், சங்க நிறவண்ண னாகிய பல பலராமனும், தம்பி சாத்தகி யோடும், தங்கை சுபத்திரையோடும். மணமகன் அபிமன்யுவோடும் நால்வகைப் படைகளுடன் சுற்றம் சூழ விராட நகர் வந்து சேர்ந்தனர். விராடனுடைய முதல் மனைவியின் மகனான சுவேதன் விராட நகர்க்கு வந்தான். விராட மன்னனும் உத்தரனும் அனைவரையும் எதிர்கொண்டு வரவேற்று, அவரவர்க்கேற்றபடி உபசாரம் செய்தனர். பின்னர் கண்ணபிரான் தமையன் பலராமனோடும்; தங்கை சுபத்திரை யோடும். பாஞ்சாலியோடும் அபிமன்யு வின் திருமணத்தைப் பற்றிக் கலந்து பேசினான். பாண்டவர்களுடன் கலந் தாலோசித்து அபிமன்யு -உத்தரை திருமணத்தைச் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்தனர். அபிமன்யுவும் தன் தந்தையர் ஐவரையும், தன் பெரிய அன்னை பாஞ்சாலியையும் வணங்கி, அவர்களின் மனமுவந்த ஆசியைப் பெற்றான்.
சுவேதன் என்பவன் விராட மன்னனின் முதல் மனைவியான சுரதை என்பவளின் மகன்; அவன் தேவலோகத்திற்குச் சென்ற பொழுது வசுக்கள் அவன்மீது கோபங் கொண்டு மயிலென்னும் பறவையாகும் படி சபித்தனர். அவன் மயிலாகித் தன் தந்தை விராடனிடம் வந்தான். அவன் தன் மைந்தன் என்று அறியாது அவனைத் துரத்திவிட்டான். சென்ற ற மயிலானது கடுமையான தவம் செய்து, சிவபெருமான் அருளால் சாபவிமோசனம் பெற்றது அதோடு அப்பெருமானிடமிருந்து அழி யாத கவசத்தையும், தெய்விக ஆயுதங்களை யும் பெற்றது. பின்னர் நிஜவடிவத்தோடு துவாரகை சென்று கப்பம் தராத யாதவர் களைத் தோற்கடித்து, அவர்களை யமனுலகம் அனுப்பி, கண்ணபிரானுக்கு அரிய உதவி செய்தான்.
இதனை அறியாத விராட மன்னன் சுவேதனைக் கண்டவுடன், “சுவேதா! இத்தனை நாட்கள் எங்கே போயிருந் தாய்?” என்று கேட்டான். அருகே இருந்த கண்ணபிரான், அவனைப் பற்றிய எல்லா விவரங்களையும் கூறினார். சுவேதன் தன் மகன் என்பதை அறிந்து விராட மன்னன் அவனைத் தழுவிக் கொண்டு ஆனந்த சாகரத்தில் மூழ்கினான்.
அதன்பின் பாஞ்சாலநாட்டு மன்னன் துருபதன் தன் மகன் திட்டத்துய்மனோடும், திரௌபதியோடும்; அவள் மைந்தர்கள் உபபாண்டவர்கள் ஐவரோடும் விராட நகர் வந்தான். அவனை வணங்கிப் பாண்ட வர்கள் வரவேற்றார்கள். மற்றவர்களைத் தழுவிக் கொண்டு வரவேற்றனர். கௌரவர் களால் பாண்டவர்கள் பதின்மூன்றாண்டு காலம் பட்ட சொல்லொணாக் கஷ்டங் களை நினைவு கூர்ந்து வருந்தினார். பின்னர் அவர்களிடம், “நானும் என் மகனும் உங்களுக்கு என்றும் துணையாக இருப்போம்” என்று உறுதிமொழி கூறினார். அதன்பின் பாண்டவர்களுக்குத் துணையாக இருந்த தௌமிய முனிவன் உத்கச தீரத்திலிருந்து மணச் செய்தி கேட்டு விராட நகர் வந்தான். திருமணத்திற்குரிய நல்ல நாளினைக் குறித்துக் கொடுத்தான். அதன்பின் விராட நகரத்துக்கு அருகிலுள்ள உபப்பிலாவியம் என்ற நகருக்குப் பாண்ட வர்கள் சென்று அங்கு தங்கியிருக்கலாயினர்.
தௌமியன் குறித்துக் கொடுத்த சுப யோக சுபதினத்தில் பரந்தாமன் சுண்ண பிரான் முன்னிலையில் தௌமியர் முத லான முனிவர் பெருமக்கள் வேத மந்திரங் களை முழங்கவும், இன்னிசை வாத்தி யங்கள் இயம்பவும் வேண்டிய சுபத்திற் குரிய கிரியைகளைச் செய்து இரதியைப் போன்ற தன் மகள் உத்தரையை வில்லுக்கு விசயன் எனப்போற்றப்படும் அர்ச்சுனனின் தீரமகன் அபிமன்யுவிற்கு விற்கு விராட மன்னன் நீர்த்தாரை வார்த்துக் கொடுத்து, அக்னி சாட்சியாகக் கன்னிகாதானத் திருமணம் செய்து கொடுத்தான். திருமணம் இனிது முடிந்தது. விராடன் தன் மகளுக்குக் கொடுக்க வேண்டிய வரிசைப் சைப் பொருள் களைக் குறைவறக் கொடுத்தான். அவ ரவர்கள் தங்கள் தங்கள் இருப்பிடம் சேர்ந் தனர். பாண்டவர்களும் மணத் தம்பதி யருடன் பாஞ்சால நாட்டு மன்னனோடும்; விராட மன்னனோடும் உபப்பிலாவியம் சென்று தங்கியிருந்தனர்.
மகாபாரதம் – 37 பாண்டவர்கள் வெளிப்பாட்டுச் சருக்கம்… அபிமன்யு – உத்தரை திருமணம் Asha Aanmigam