தெற்குத்திக்கில் படையெடுத்து ஆதிரைகளைக் கவர்ந்த திரிகர்த்தராயனின் படைகளை விராட மன்னன், பாண்ட வர்கள் நால்வர் (அர்ச்சுனன் தவிர) உதவி யுடன் தோற்கடித்து, பசுக்களை மீட்ட தோடு அத்திரிகர்த்தராயனையும் சிறை பிடித்தான். கங்கபட்டரின் வேண்டு கோளுக்கிணங்க அவனை விடுதலை செய் தான். அவனும் தன் சேனைகளுடன் வெட்கத்தோடு தன்னிருப்பிடம் போய்ச் சேர்ந்தான். விராட மன்னன், அடுத்து துரியோதனன் படைகள் வருமோ என்ற எண்ணத்துடன். அரண்மனை திரும்பாது பாசறையிலேயே தங்கியிருந்தான்.
திரிகர்த்தராஜன் தோல்வியுற்றான் என்ப தைக் கேட்டுத் துரியோதனன் தலைமையில் பெரும்படைவந்து விராட நகரின் வடக்குப் பக்கத்தில் முற்றுகையிட்டு, செந்நெல் வயல்களை அழித்ததோடு பசுக்களைக் கவர்ந்து செல்லலாயிற்று. உடனே இடையர்கள் விரைவாக அரண்மனை சென்று, ”இளவரசே! மன்னன் விராடன் தென்புறத்தில் ஆநிரைகளை மீட்கச் சென்ற சமயம் பார்த்து. கௌரவர்படைகள் வட புறத்தில் அழிவு செய்கின்றன. ஆகையால், நீங்கள் தலைமையேற்று இருக்கின்ற சேனையை அழைத்துக் கொண்டு போரிட் டுப் பசுக்களை மீட்க வேண்டும் என்று விராடன் மகன் உத்தரனை வேண்டிக் கொண்டனர். அதனைக் கேட்டுச் சுதேஷ்ணை, தன்மகன் வயதில் சிறியவன். அவனால் பெரும்படையை எதிர்த்துப் போரிடமுடியாது என அஞ்சி, அரண்மனை மகளிரை அழைத்து அவர்கள் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்து, “விராடன் வரும்வரை நகரத்தைக் காப்பாற்றுங்கள்” என்று உத்தரவிட்டாள். இதனை அறிந்த உத்தரன், “நான் ஆண்பிள்ளை இருக்கும் போது பெண்கள் போருக்குப் போக லாமா? நல்ல தேர்ப்பாகன் வாய்த்திடின், பகைவர் கூட்டங்களைப் போரிட்டு அழித்து, நம் பசுக்களை மீட்டு வருவேன்” என்று ஜம்பமாகக் கூறினான். அவன் கூறிய வார்த்தையை விரதசாரிணி என்னும் பாஞ்சாலி கேட்டு, பிருகந்நளையிடம் சென்று, பசுக்கூட்டங்களை மீட்பதற்கு உத்தரனுக்கு உதவி செய்யுமாறு சொல்ல அவளும் (அர்ச்சுனன்) சம்மதித்தாள். அதன்பின் உத்தரகுமாரனிடம் வந்து, “இளவரசே! நம்முடைய அரண்மனையில் இருக்கும் பிருகந்நளை என்னும் பேடிக்குச் சமமாகத் தேரோட்டுகின்றவர்கள் யாருமில்லை. ஆகவே அவளை அழைத்துக் கொண்டு செல்லுங்கள்” என்று கூறினாள்.
பேடி என்று கேவலமாக நினைக்காதீர்கள்
பேடியின் துணைகொண்டு வெற்றி பெற்றால் ஆண்பிள்ளையாகிய எனக்குப் பெருமையில்லை என்று கூறி உத்தர குமாரன் பிருகந்நளையைத் தேர்ப்பாகனாக வைத்துக் கொள்ளச் சம்மதிக்கவில்லை. ஆனாலும் விரதசாரிணி விடவில்லை. உத்தரகுமாரனிடம், ”இளவரசே! பிருகந்நளையைப் பேடி என்று கேவல மாக நினைக்காதீர்கள். காண்டவ வனத் தகனத்தின்போது அர்ச்சுனனுக்குத் தேரைச் செலுத்தி, வெற்றியைத் தேடிக் கொடுத்தாள். ஆதலால் அவளை அழைத்துக் செல்லுங்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றி உண்டாகும்” எனக் கூறினாள்.
நிறைய ஆடைகளை எடுத்து வருகிறோம்
உடனே அரண்மனை மகளிர் பேடியை அழைத்துவர, பேடியாகிய அர்ச்சுனன் உத்தரனுக்குத் தேரோட்டச் சம்மதித்தான். அதனால் உத்தரகுமாரன் மனையகம் புகுந்து போர்க்கோலம் பூண்டு, தன் தாய் சுதேஷ்ணையை வணங்கினாள். “பகைவர் களை வென்று நம் பசுக்களை மீட்டு வருக” என்று ஆசி கூறி, வழி அனுப்பி னாள் தங்கை உத்தரை ஆலஞ்சுற்றித் திருஷ்டிக்கழித்து, பின் விளையாட்டுச் சிறுமி ஆதலின், உத்தரனைப் பார்த்து, அண்ணா! பாண்டவர்களை வென்று என் பாவைகளுக்கு உடுத்தும்படி நல்ல ஆடைகளைக் கொண்டு வாருங்கள் ” என்றாள். உத்தரன் அமைதியாக இருக்க. பிருகந்தளை, “நிறைய ஆடைகளை எடுத்து வருகின்றோம்” என்று கூறினாள்.
உடனே உத்தரன், மகளிர் வாழ்த்துக் கூற, பிருகந்நளையாகிய பேடி, நான்கு குதிரைகள் பூட்டிய தேரினைச் செலுத்த போர்க்களம் சென்றான். அங்கு துரியோ தனன் படைகள் எங்கணும் பரந்து இருக்கக் கண்டு, நடு நடுங்கினான். கை கால்கள் உதறல் எடுத்தன. அதனைப் பார்த்த பிருகந் நளை,”இளவரசே! பயப்பட வேண்டாம். போரில் இறந்தால் வீர சொர்க்கம் அடைய லாம். வெற்றி பெற்றால் புகழோடு நல்ல வாழ்வையும் பெறலாம். பசுக்களை மீட்காது சென்றால் கௌரவர்கள் நம்மைப் பார்த்து இகழ்வர். ஆதலின் தைரியமாகப் போர்க்களத்திற்கு வருக” என்றாள்.
அப்பொழுது உத்தரன், ‘ஏ பேடி, தீ எனக்குத் துணையாக மாட்டாய். உனக்கு அம்பு விடத்தெரியாது. நான் தனியாளாய்த் தான் எதிர்நின்று போரிடவேண்டும். பகைவர் படையோ மிகப் பெரியது. அது மட்டுமல்லாமல், வணங்காமுடி மன்னன் துரியோதனன் என்ன; ஆசார்யர் துரோணர் என்ன; பிதாமகர் பீஷ்மர் என்ன; கிருபாசாரியர் என்ன; கர்ணன் என்ன; பெரிய பெரிய ஜாம்பவான்களெல்லாம் ஒன்று கூடி போருக்கு வந்தால் சிறியவனாகிய என்னால் எப்படி அவர்களை எதிர்த்துப் போரிட முடியும் ” வெற்றியை எப்படி பெறமுடியும்? “வினைவலியும், தன் வலியும், மாற்றான் வலியும், இருவர்க்கும் துணையாக வருகின்றவர் வலிமையையும் ஆராய்ந்து பார்த்து, தன் வலிமைமிக்கிருந் தால்தான் போரிட வேண்டும்” என்று பெரியோர்கள் சொல்லியிருக்கின்றார்கள். நான் காண்டீபம் ஏந்திய அர்ச்சுனனா? இவர்களையெல்லாம் எதிர்த்து முறியடிக்க, அதனால், “தோற்றோம் என்று பழி வந்தாலும், மச்ச தேசத்தைப் பாழாக்கி, ஆநிரைகளைக் கவர்ந்து சென்றாலும் பரவாயில்லை. பிருகந்நளையே! தேரை திருப்பி ஓட்டு”என்றான்.
உன் உயிர் போனால் என் உயிரையும் இழப்பேன்
அதனைக் கேட்டுப் பிருகந்நளை, ”இளவரசே! போரிடப் பயந்து திரும்பி னால் பகைவர்கள் நகைப்பர். நீங்கள் கூறிய சபதம் பொய்க்கும். உங்களை வாழ்த்தி அனுப்பிய மகளிர் இகழ்வர்; அரச குலப் புகழ் பொன்றும். உலகு பழி தூற்றும், அஞ்ச வேண்டா; நான் தேர் செலுத்தினால் பகைவர் திசை தடுமாறிப் பின்னிடுவர்; ஓரம்பாலேயே பசுக்களை மீட்டு வெற்றி பெறலாம். நிலை தடுமாறாதீர்; நான் போரில் புறமுதுகிட மாட்டேன். ஒரு கால் உன் உயிர்போனால் என் உயிரையும் இழப்பேன். ஆதலின் உங்களுக்கு எந்தவித அச்சமும் தேவையில்லை “என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினான்.
அதனைக் கேட்டு உத்தரன், “ஏ பேடி! இந்தப் பகைவர்களை எளிதில் வென்று விடலாம்” என்று கற்பனை செய்து தேர்ச்சாரதியாய் வந்துவிட்டாய். எதிரே நிற்கின்ற படைகள் யாருடைய படைகள்? எத்தகைய படைகள் என்று எண்ணிப் பார்த்தாயா? நன்றாகப் பயிற்சி பெற்ற கெளரவப்படைகள் அல்லவா! அவற்றை நீ நினைக்கின்ற னக்கின்ற மாதிரி ம எளிதில் வெல்ல முடியாது, நான் உன்னை நம்பி உன்னுடன் வருவேன், ஆனால் நான் பிழைப்பது எது? நீ சாரதியாக வரவில்லை. எனக்கு இயம் னாகத்தான் வந்துள்ளாய்” என்று பலவாறு புலம்பினான் கௌரவர் படைகளைப் பார்த்து அஞ்சிய அவன், வில்லையும் அம்புகளையும் தேரின் மீது போட்டுவிட்டு தேரினின்று இறங்கி ஓடலானான். அர்ச்சுனன் தேர்க்குதிரைகளைக் கட்டி விட்டு அவன் பின்னால் ஓடி, கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வந்தான்.
அப்பொழுது உத்தரன் பேடியைப் பார்த்து, “பிருகந்தளை என்னை நகருக்குக் கொண்டு போனால் என் தாய்க்கு உயிரளித் தவள் ஆவாய்.உனக்கு, யானை,தேர். குதிரைகளோடு ஊர்களையும் பரிசளிக்கின் றேன். என்னை விட்டுவிடு” என்றான். பேடி அவனைப் பார்த்து, “அனுபவமற்ற சிறுவனே! என்னைப் பேடி என்று எண்ணாதே; என் வார்த்தைகளைக் கேள். பகைவர்களைப் புறமுதுகிட்டோடச் செய்யவும்,விராட நகரத்தார் உன்னை வெற்றி வீரன் என மகிழ்வோடு எதிர் கொண்டு வரவேற்கவும், உன் தாய் தந்தையர் உன்னை ஆனந்தத்தோடு அரவணைத்துக் கொள்ளவும், போரினைச் செய்து பசுக் கூட்டங்களை மீட்கவும் என்னால் முடியும், அவசியமின்றி மனத் தளர்ச்சி அடையாதே. உனக்குப் போர் செய்ய பயமாயிருந்தால் நான் போர் செய்கிறேன். நீ தேர் ஓட்டு” என்று கூற. உத்தரன் தேர் ஓட்ட ஒப்புக் கொண்டான்.
கௌரவப் படையினர் சிரித்தனர்
வன்னிமர மார்க்கத்தில் கௌரவர் சற்றுத் தூரத்தில் நிற்கக்கண்டு உத்தரன் அஞ்சி தேரைவிட்டு இறங்கி ஓடலானான். உடனே அர்ச்சுனன் ஓடிச் சென்று அவனைப் பிடித்துக் கொண்டு வந்த தேரில் அமர்த்தினான். அதனைக் கண்டு கௌரவப் படையினர் இகழ்ந்து சிரித்தனர். ஆனால் அருகிலிருந்த துரோணர், பீஷ்மர் ஆகிய இருவரும் உத்தரன் ஓடுவதையும் அவனைப் பற்றிக் கொணர்ந்து அர்ச்சுனன் தேரில் அமர்த்தியதையும் பார்த்தனர். இவர்கள் யாராயிருக்கக்கூடும் எனச் சற்றுச் சிந்தித்தனர். அப்பொழுது திரிகர்த்த ராசனுக்கு எதிராக விராட மன்னனுக்கு உதவியாக நான்கு பேர் போரிட்டது ஞாபகம் வந்தது. அந்த நான்கு பேர் தருமன், பீமன், நகுலன், சகாதேவனாக இருக்கக்கூடும். என அனுமானித்தார்கள். அதனால் இங்கு உத்தரனைப் பிடித்து வந்து தேரில் அமர்த்திய பேடி நிச்சயம் அர்ச்சுனன்தான் எனவும், அவனால் பிடிக்கப்பட்ட சிறுவன் உத்தரனாயிருக்க லாம் எனவும் எண்ணினர். அவர்கள் அவ்வாறு எண்ணியவுடன் அங்கு கெளரவர்சேனை வந்தது. அப்பொழுது பல துன்னிமித்தங்கள் தோன்றலாயின. வானம் இடித்தது; எட்டுத் திக்குகளும், நடுங்கின; நட்சத்திரங்கள் பகலில் உதிர்ந்தன; மேகம் இரத்தமழை பொழிந்தது. மலர் மாலை களில் மணத்திற்குப் பதிலாகப் புகை நாற்றம் வீசியது. காகம், பூனை, பேய் போன்றவை எதிரிட்டன; இவ்வாறு பல தீமித்தங்கள் தோன்றின.
இவற்றைக் கண்ட துரோணர் படைவீரர் களை நோக்கி, “துன்னிமித்தங்கள் தோன்றி யுள்ளன. அவை தீயனவற்றை விளைத்தே தீரும். அர்ச்சுனன் தனியனாய் நம்மீது வில்லெடுத்துப் போரிட வருகின்றான். என்றாலும் உயிரே போனாலும் பசுக் களைத் திருப்பிக் கொடுத்தல் நேர்மையா காது. போர்க்கு அஞ்சுகிறவர்கள், நால் வகைப் படைகளின் நடுவில் பசுக்களை நிறுத்திக் கொண்டு அவற்றைப் பாதுகாத்தி ருங்கள்; பகைவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.
மிகுதியான பசி கொண்ட சிங்கம்
அதன்பின் பிதாமகர் பீஷ்மர், துரியோ தனனிடம், “மன்னா! அர்ச்சுனன் பன்னி ரண்டு வருட வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமும் குறைவறக் கழித்து விட்டு மறுநாள் நம்முடன் போரிட வந்துள் ளான்” என்றார். றார். அதனைக் கேட்டு ஆசார்யர்,துரோணர், ‘அப்படியா!’ என்று வியப்புடன் கூறி, “மிகுதியான பசி கொண்ட சிங்கம் ஒன்று பானைகள் மீது பாய்வது போல அர்ச்சுனன் தம்முடைய படைகளுக்கெதிராகப் போரிட வந்துள் னாள். அவனை வெல்லக் கூடியவர் யார் இருக்கின்றார்கள்” என்று உள்ள மகிழ்ச்சி யுடன் கூறினார்.
மீண்டும் காட்டுக்கு அனுப்பி விடலாம்
அதனால் கோபமடைந்த கர்ணன், “ஆசானாகிய கிய உணக்குச் உனக்குச் சிறப்புச் செய்து தன்னுடன் துரியோதனன் வைத்திருப்பது பகைவரின் ஆண்மையை வியந்து பேசி நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வ தற்கா?” என்று குத்தலாகக் கேட்டான். அப்பொழுது அரவக் கொடியோன் துரியோ தனன் கர்ணனைப் பார்த்து, “தண்பா! குருவை ஒன்றும் சொல்லாதே: இவன் அர்ச்சுனனாயிருப்பின் அஞ்ஞாதவாசம் ஓர் ஆண்டு முடியவில்லை என்று கூறி அந்த அர்ச்சுனனோடு எஞ்சிய பாண்டவர் களையும் காட்டிற்கு மீண்டும் அனுப்பி விடலாம் அர்ச்சுனன் இவன் இல்லை யென்றால் நம் கையால் மாண்டுவிடப் போகின்றான். அதனால் வீணாக ஏன் பேசிக் கொண்டிருக்கின்றாய்” என்று கூறினான்.
உத்தர குமாரன் தேரோட்ட, அத்தேரில் சென்ற அர்ச்சுனன் வன்னிமரத்தின் அருகில் சென்று.”இம்மரப்பொந்தில் ஐந்து பேருடைய ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் வில்லை மட்டும் எடுத்துவா”என்று கூறினான். அவன் சொற்படி உத்தர குமாரன் மரத்தின் அருகே சென்றான். மரப்பொந்தில் உள்ள ஆயுத மூட்டையை எடுக்கப் போனான் ஆனால் அம் மூட்டை பாம்பாக மாறிச் சீறியது. அதைக் கண்ட உத்தரன் நடுநடுங்கிப் பயந்துபோய், அர்ச்சுனனிடம் கூறினான் ஆயுத மூட்டைப் பொதியை மந்திரித்து. மரப்பொந்தில் அன்று பாண்டவர்கள் வைத்துவிட்டுச் சென்றனர் ஆதலின் அவர்கள் அல்லாது வேறு யார் எடுக்க முனைந்தாலும் அது பாம்பாகச் சிறும் என்பது அர்ச்சுனனுக்குத் தெரியுமாத லின் அவன் அஞ்சவும் இல்லை; வியப்படையவும் இல்லை. அப்பொழுது உத்தர னிடம் அர்ச்சுனன், “பாண்டவர்கள் பன்னி ரண்டு ஆண்டுகள் வனவாசம்; ஓர் ஆண்டு அஞ்ஞாதவாசம் செய்து முடிக்கும் மூட்டையை இங்கு வைத்திருக்கின்றார்கள். அவர்கள் எங்கிருக் கிறார்களோ? என்ன ஆனார்களோ தெரிய வில்லை” என்று கூறினான். அதனைக் கேட்டு உத்தரன், “பேடி/ தருமத்திலும் பொறுமையிலும் உயர்ந்து விளங்கும் பாண்டவருக்கே இந்தத் துன்பம் வருமா யின் தருமம் என்பது எங்கே இருக்கும்? என்று கூறி வருத்தமடைந்தான். வரையில் ஆயுத
கெடு நேற்றோடு முடிந்தது
அப்பொழுது அர்ச்சுனன் உத்தரனிடம், “இளவரசே! பாண்டவர்களும் திரௌ பதியும் ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசத்தை உங்கள் அரண்மனையில்தான் கழித்தனர்” என்று கூற, வியப்புடன் உத்தரன் அவனைப் பார்த்து, “அப்படியென்றால் எங்கள் அரண்மனையில் தா இப்பொழுது இருக்கின்றார்களா?” என்று கேட்டான் ஆச்சரியப்படாதே! உத்தரா! உங்கள் அரண்மனையில் அரசருக்குத் துணையாக இருக்கும் கங்கபட்டர்தான் தருமபுத்திரர்; மடப்பள்ளியில் சமையல் வேலைசெய்யவும் பலாயனன்தான் பீமன், குதிரைகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும் தாமக்கிரந்திதான் மாத்ரிதேவி புதல்வன் நகுலன். பசுக்களைக் காத்துவருபவன்தான் தரணிபாலன் என்று அழைக்கக்கூடிய சகா தேவன்; விரதசாரிணி என்ற பெயரால் அரசிக்குத் தோழியாக விளங்கும் வண்ண மகள்தாள் கிரெளபதி; ஊர்வசியின் சாபத்தைப் பெற்று பிருகந்தளை என்ற பெயரில் பேடியாய் திரிபவள்தான் உன் எதிரில் நிற்கும் அர்ச்சுனன். ன். எங்கட்கு ஓர் ஆண்டு என விதிக்கப்பட்ட கெடு நேற்றோடு முடிந்துவிட்டது.
அதனையடுத்து “இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்வதற்காக அர்ச்சுனனுக்கு உரிய வேறு பத்துப் பெயர்கள் கூறுக என்று உத்தரன் கேட்டலும் அர்ச்சுனன் கூறுவானாயினான்.
(1) பற்குநன்:- பங்குனி உத்தர நாளில் பிறந்தவன் ஆதலின் இப்பெயர் வந்தது.
(2) கிரீடி – தேவேந்திரனால் முடி சூட்டப் பெற்றவன் ஆதலால் இப்பெயர் வந்தது.
(3) சுவேதவாகனன் – வெண்ணிறமான பாயும் குதிரைகளைப் பெற்றிருந்ததனால் இப்பெயர் வந்தது.
(4) வீபற்சு – எதிர்த்துப் போரிட்டவர் யாரும் புறமுதுகிட்டோடுதலின் இப்பெயர் வந்தது.
(5) சவ்விய சாசி -இருகைகளிலும் வில்லேந்திப் போரிடுகின்ற ஆற்றலுடை யவன் ஆதலின் இப்பெயர் வந்தது.
(6) விசயன் – அரிய பெரிய போர்களில் எல்லாம் வெற்றியே இப்பெயர் வந்தது. பெறுதலின்
(7) பார்த்தன் -என்னைப் பெற்றவள் குந்தி; அவளுடைய இயற்பெயர் பிரதை என்பதாம். பிரதையின் மகனாதலின் பார்த்தன் என்ற பெயர் வந்தது.
(8) தனஞ்செயன் பல அரசர்களை வென்று அவர்களின் அரிய செல்வங்களைத் திறையாக இராச சூய யாகத்தின்போது கொணர்ந்தமையால் இப்பெயர் வந்தது. வெற்றியையே பொருளாக உடையவன் என்றும் கூறலாம்.
(9) சிட்டினன் – எங்களை இகழ்ந்தவரின் (கர்ணன்) தலையைத் துண்டிப்பேன் எனச் சபதம் செய்ததனால் இப்பெயர் வந்தது.
(10) அர்ச்சுனன் – மரகதம் போலப் பச்சை நிறமுடைய மேனியைப் பெற்றி ந்தது. (கார்த்த ருத்தலின் இப்பெயர் வந்தது. வீரியார்ச்சுனனும் மரகதம் போன்ற மேனி நிறமுடையவனாதலின் இப்பெயர் பெற் றான் என்பர்.)
(11) கிருட்டினன் காண்டவ வனத்தை எரித்ததனால் தேவர்கள் வழங்கிய சிறப்புப் பெயர்.
(12) காண்டீபன் காண்டீபவில்லை ஏந்தியதனால் வந்த பெயர்.
உத்தரகுமாரா! இன்னும் சொல்கிறேன் கேள் “சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் செய்து பெறற்கரிய பாசுப தாஸ்திரம் பெற்றேன்; மேலும் இந்திரன் தேவதத்தன் என்னும் உயர் சங்கையும், அக்கினிதேவன் எடுக்க எடுக்க அம்புகள் குறையாத இரண்டு அம்புறாத் தூணி களையும் காண்டீப வில்லையும் கொடுத் தருளினார். அதற்கு மேல் இந்திரனுக்குத் தொல்லை கொடுத்து வந்த நிவாதகவச கால கேகயர்களை முற்றிலுமாக அழித் துள்ளேன். இவ்வளவு வீரச் செயல்களைச் செய்த என்னை நம்பாது ஓடுகின்றாயே. ஓட வேண்டாம். தைரியமாக இரு; வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். இந்தத் துரியோதனாதியரை இமைப் பொழுதில் புறங்காட்டி ஓடும்படி செய்து, அவர்கள் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டு வருவேன். வெற்றிக் கனியைப் பறிப் போம். தேரின் மேல் அமர்ந்து தேரை ஒட்டு” என்று கூறியவற்றைக் கேட்ட உத்தரன் மிக்க மகிழ்ச்சி அடைந்து “தான் அறியாமல் கூறிய சிறுமையான வார்த்தை களை மன்னித்து அருள் புரிவாயாக” என வேண்டி வணங்கினான்.
”தன்னுடை ஆற்றல் உணரார் இடை, தன்னைப் புகழ்தலும் தகும் புலவோர்க்கு” என்று முன்னோர் சொல்லியபடி அர்ச்சுனன் உத்தரனிடம் தன்னைப் பற்றிப் புகழ்ந்து கூறவேண்டியதாயிற்று. மற்றபடி தற்பெரு மைக்காகக் கூறியது அன்று என இங்குக் கொள்ள வேண்டும்.
தங்கள் கட்டளைப்படி செலுத்துவேன்
தான் அறியாது கூறிய சிறுமை வார்த்தை களைப் பொறுத்தருள வேண்டும் என வணங்கி வேண்டிக்கொண்ட உத்தரனை அர்ச்சுனன் தழுவிக்கொண்டான். அதனால் மகிழ்ச்சி அடைந்த உத்தரன். “அர்ச்சுனரே! தங்களுடைய பெரிய தடந்தேரினை எவ் வாறு செலுத்துவது என்று இதுகாறும் இ தயங்கியிருந்தேன். இனி எந்தவித அச்சமும் இல்லாமல் தேரை, தங்கள் கட்டளைப்படி செலுத்துவேன்” என்று கூறினான்.
அதன்பின் அர்ச்சுனன் உத்தரனை வன்னி மாத்தின் அருகே தேரைச் செலுத்துமாறு கூற. அவனும் தேரினை வன்னிமரத்தின் அருகே கொண்டு நிறுத்திலான், பின் அர்ச்சு என், உத்தரனை வன்னிமரத்தின் மூட்டை பிலிருந்த தன் வில்லையும், அம்பும் புட்டிலையும். தேவநத்தம் என்னும் சங்கினையும் “நாம் வெற்றி பெறும்படி எடுத்து வருவாயாக” என்று கூற. உத்தரனும் மரத்தின் அருகே அதற்குரிய மந்திரத்தை முழுமனதுடன் ஓதி, எந்தவித இடையூறும் இல்லாமல் அர்ச்சுனன் கேட்ட வில்லையும், இரண்டு அம்புறாத் தூணிகளையும் தேவதத்தன் அவனும் சங்கினையும் கொண்டு வந்து கொடுத்தான்.
உத்தான் தேர் ஓட்டுதற்குத் தயார் ஆனான் குறித்த ஓர் ஆண்டு நிறை வுற்றதால் ஊர்வசி கொடுத்த சாபம் நீங்கி, பேடியுருவத்திலிருந்த அர்ச்சுனன் வீரமும் அழகும் ஒருங்கே பெற்ற சுயவடிவத்தோடு அர்ச்சுனனாகிப் பொலிந்து நின்றான். இதனைக் கண்ட இந்திரன் பொற்றொடி யும், காதணி குண்டலங்களையும், பிற அணிகலன்களையும் கொடுத்து வாழ்த்திச் சென்றான்.
கௌரவ சேனை அஞ்சி நடுங்கியது
அர்ச்சுனன் தேரின் மேல் ஏறிச் செம் மாந்து அமர, உத்தரன் தேரைச் செலுத்த தேர். போர்க்களம் சென்றது. அங்கு தன் போர்க்கள வருகையை அறிவிப்பான் வேண்டி தன் காண்டீபவில்லின் நாணொலி யைக் கம்பீரமாக எழுப்பினான். தேவ தத்தன் என்னும் சங்கினையும் தன்னுடைய பவளம் போன்ற வாயில் வைத்து ஊதி னான். அதனால் அப்பொழுது கடல் வற்றி யது; நட்சத்திரங்கள் உதிர்ந்தன; கௌரவ சேனை அஞ்சி நடுங்கியது; உத்தரனும் சோர்ந்து மயங்கித் தேரில் சாய்ந்தான். அதனைக் கண்டு அர்ச்சுனன், மயங்கிச் சோர்ந்து வீழ்த்த உத்தரனை மெல்ல எழுப்பி, சோர்வு நீக்கி, சொல்ல வேண்டிய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்துத் தைரியமூட்டினான். அதன்பின் உத்தரன் தைரியமாகத் தேரை ஓட்டலானான்.
அதுமக்கொடியுடைய அர்ச்சுனன், நாணொலி எழுப்பி, தேவதத்தன் சங்கினை ஊதி, சுயவடிவில் போர்க்களத்தில் வந்து நின்றதும். வேதக் கொடியையுடைய ஆசார்யர் துரோணர், அர்ச்சுனன் வந்து நின்றதைப் பார்த்து அரவக் கொடியோன் துரியோதனனிடம், “அரசே! பதிநான்கு உலகங்களும் எதிர்த்து நின்றாலும், தான் ஒருவனாகவே நின்று, போர் புரிந்து வெற்றிபெறும் திறனுடைய அர்ச்சுனன் வந்துவிட்டான். இனி அவனை எதிர்த்துப் போரிட யாரால் முடியும்? அதனால் அவனுடன் போரிடாது நாம் அத்தினாபுரம் திரும்பிப் போதலே உத்தமம். தோற்றோம் என்ற பழிச்சொல்லாவது பெறாமல் இருக்கலாம். ஏற்பட்டுள்ள தீச்சகுனங்களின் காரணமாகத் தோல்விதான் ஏற்படப் போகிறது. என்றாலும் நாங்கள் கூறுவன வற்றை நீ கேட்கப் போவதில்லை. அதனால் நீ போரிடாமல் பசுக் கூட்டங் களை ஒட்டிக் கொண்டு அஸ்தினாபுரம் போய்ச் சேர். நாங்கள் பின்னால் அர்ச்சுவ னுடன் போரிட்டு வருகிறோம் என்று கூறினார்.
பகைவர்களைப் புகழ்ந்து பேசாதீர்கள்
துரியோதனன் அப்பொழுது, “ஆசார் யரோ நாம் விராட நாட்டு ஆதிரைகளைக் கவர வந்ததே, பாண்டவர்களை வெளிப் படுத்துவதற்காகத்தான். அங்ஙனம் இருக்க என்னை ஏன் போகச் சொல்கின்றீர்? எதிர்ப்பவன் அர்ச்சுனளேயானால் நமக்கு நன்மையே. நாம் குறித்த ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசத்திற்குள் அவன் வெளிவந்து விட்டான். அவன் வெளிவந்தான் என்றால் பாண்டவர்கள் அனைவரும் வெளிவந்து விட்டார்கள் என்று அர்த்தம். ஆதலின் அவர்களை மீண்டும் காட்டுக்கு அனுப்ப நம்முடைய தந்தை திருதராட்டிரர் இருக்கின்றார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். அர்ச்சுனன் ஒருவனே நம் எல்லோரையும் வெல்வான் என்றால் நாம் ஏன் அனைவரும் ஒன்று சேர்ந்து அவனை வெல்ல முடியாது? தன்னம்பிக்கையற்ற பேச்சு பேசுகின்றீர்கள். நீங்கள் வில் வித்தை கற்பிப்பவருக்குரியவரேயன்றி போர்க் குரியர் அல்லர், பகைவர்களை இங்கு புகழ்ந்து பேசாதீர்கள்” என்று கூறினான்.
நீ அர்ச்சுனனை ஒரு முறையாவது வெற்றி கொண்டது உண்டா?
துரியோதனன் தன் தந்தையை இகழ்ந்து கூறியவற்றையெல்லாம் அசுவத்தாமன் கேட்டான். மிகுந்த கோபங் கொண்டான். “துரியோதனா! நீ அர்ச்சுனனை வென்றவன் போல ஆசார்யன் என்றும் பாராமல் என் தந்தையை இகழ்ந்து பேசுகிறாய். நீ அர்ச்சு னனை ஒரு முறையாவது வெற்றி கொண் டது உண்டா? வீணாகத் தற்பெருமை அடித்துக் கொள்ளாதே..
“போர்க்களத்தில் போர் செய்தல் என்ப தும், ஆதிரை கவர்தல் என்பதும் கட்டை களை உருட்டிச் சூதாடுதல் போன்றது என எண்ணிவிட்டாய், அதனால்தான் ஏதோதோ உளறுகின்றாய். தீதிமித்தங்கள் வேறு தோன்றியுள்ளன. உன் நன்மைக்காகத் தான் என் தந்தை அவ்வாறு கூறினார். துரோணர் ஆகிய என் தந்தையாரையும் எதிர்த்துத் தோற்றதில்லை. உன்னால்தான் அவர் தோல்வியைத் தழுவிக்கொள்ளப் போகிறார்.
“அன்று யாருடைய வார்த்தைகளைக் கேட்டுத் தருமபுத்திரரோடு சூதாடினாய்? யாரைக் கேட்டுப் பாஞ்சாலன் பெற்ற கன்னி பாஞ்சாலியைச் சபையில் வைத்து அவமானப்படுத்தினாய்? அதற்குரிய பலனைத்தான் இன்று அனுபவிக்கின்றாய். இனியும் அனுபவிப்பாய். நிந்தனை வார்த்தைகளையே கூறிக் கொண்டிருக்கும் உன்னிடம் மானமுள்ளவர்கள் யாரும் பொருந்தியிருக்கமாட்டார்கள். ஆனால் இந்த துரோணர் உன்னைப் புறக்கணிக்க மாட்டார். செஞ்சோற்றுக் கடனையே பெரிதாகக் கருதுபவர். ஆதலின் நீயே போரிட்டு நீயே வெற்றி பெறுக” என்று சூடாகக் கூறினான்.
கர்ணன் செருக்குடையவன்; தற் பெருமைமிக்கவன், ஆதலால் அசுவத்தாமா வின் பேச்சைக் கேட்டு, அக்கர்ணன், ஆநிரைகளைக் கவர்தலுக்காக வந்த வர்கள் இப்பொழுது அர்ச்சுனன் பெருமை யைப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அவனுடைய பெருமைகளைக் கூற இங்கு ஏன் அவர்கள் வர வேண்டும்? அரண்மனை யிலேயே புகழ்ந்து பேசிக்கொண்டிருக்க லாமே. நான் ஓர் இமைப்பொழுதில் அந்த அர்ச்சுனன் தேர், தேர்ப்பாகன், தேரில் பூட்டிய குதிரைகள், காண்டீ என்னும் அவன் வில் முதலான அனைத்தையும் கழித்து அவனையும் கொன்றொழித்து விண்ணுலகிற்கு அனுப்புவேன்.
அர்ச்சுனனைக் கொல்லுவேன்
“நீங்கள் உங்கள் இரு கண்களால் பார்க்கத்தான் போகிறீர்கள். வில்லாற்றலில் நான் அர்ச்சுன விட விஞ்சியவன். அதனால் நான் அவனைக் கொல்லுவேன் என்று வஞ்சினம் செய்தபடி இன்றைய நாளிலேயே தீர்த்து வைப்பேன். தனி ஒருவன் ஒரு வில்லினைக் கொண்டு ஒரு தேரினைக் கொண்டு போர் செய்ய, அவனைக் கண்டு போர்க்களத்தில் பல மன்னர்கள் புறங்காட்டி ஓடுவர் என்பது எவ்வளவு அறியாமை! நீங்கள் கூறுகின்றவகையே மிக நன்றாக உள்ளது” என்று இகழ்ந்து பேசினான்.
கர்ணன் கூறிய நிந்தனை மொழிகளைக் கேட்ட கிருபாசாரியார், கோபித்து, கர்ணனே/ ஒரு செயலை முடிக்க சாம. தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகள் உள்ளன. அவற்றில் நான்காவதாகிய தண்டத்தைத் தவிர மற்றைய மூன்றைப் பற்றி நீ அறியாய். அந்த நான்கு உபாயங் களையும் அறிந்தவர்கள் சொல்வதையும் கேளாய்: இடம், காலம், பகை, வலிமை ஆகியன அறிந்து தனக்குச் சாதகமாயிருப் பின் பகை மேற்செல்லலாம் என்பதையும் அறியாய், தகுந்த காலத்தோடு உரிய இடத்தில் ஒரு செயலைச் செய்யின் உலகமெல்லாம் அவன் கையகத்தது என்ற சாதாரண நிலையையும் அறியாய். பெரியோர் சொல்லுகின்ற நல்லுரைகளை யும் கேளாய்; எடுத்தேன். கவிழ்த்தேன் என்றுதான் உனக்குப் பேசத் தெரியும்.
தேர் ஒன்று, வில் ஒன்று மட்டும் கொண்டு தனியொருவனாய் நின்று அர்ச்சுனன் எப்படையையும் வெல்லுவான் என்று நான் கூறியதை இகழ்ந்தீர்களே! இதுவரையில் உங்களில் யார் அந்த அர்ச்சுனனை வென்றுள்ளீர்கள் சொல் பார்க்கலாம்; திரௌபதி சுயம்வரத்தில் அவனோடு போட்டியிட்டீர்கள். நன்றாக மூக்குடைந்து திரும்பினீர்கள். சித்திர சேனன் துரியோதனனைத் தேர்க்காலில் கட்டியபோது, அவனை விடுவித்தவர்கள் யார்? நீயா மீட்டாய். இல்லையே? அர்ச் சுனன் தானே. இவை மட்டுமா? வலிமை மிக்க நிவாதகவசகால கேகயர்களை வென்று இந்திரனுக்கு வாழ்வு கொடுத் தவன் யார்? அர்ச்சுனன் தானே! சுபத்திரை திருமணத்தின்போது யாதவவீரர்களை யெல்லாம் வென்றதும் அந்த அர்ச்சுனன் தானே! உன்னையும் தனியொருவனாக வென்றுள்ளான். மற்றவர்களையும் தனி யொருவனாக வென்றுள்ளான். சிவபெரு மான் தலையிலே துணிந்து தன் வில்லால் அடித்தவனாகிய அந்த அர்ச்சுனனுக்கு எதிராக யார் சென்றாலும் அவர்கள் தோல் வியைத்தான் தழுவுவார்கள். நண்பனாக இருப்பவனுக்கு நல்ல பயனுள்ளவற்றை உபதேசம் செய்ய வேண்டுமே தவிர, ஆணவமான, பயனற்ற வார்த்தைகளைப் பேசி அவனையும் கெடுக்கக்கூடாது” என்று கூறினார்.
நரகம்தான் கிடைக்கும்
கிருபாச்சாரியார் கூறியதைக் கேட்ட கர்ணன் மிகுந்த ஆத்திரத்துடன், “கிருபாச் சாரியரே! துரியோதனன் கொடுத்த உணவையுண்டு, போர்க்களத்தில் அவ னுக்கு எதிரான பாண்டவர்களின் பராக் கிரமத்தைப் புகழ்கின்ற உங்களுக்கு நல்ல பேறு கிட்டுமா? நரகம்தான் கிடைக்கும். அர்ச்சுனனிடத்து உள்ளன்பு இருப்பின் அவனிடம் போய்ச் சேருங்கள். இல்லை பரம் போய்ச் யென்றால் அஸ்தினாபுரம் சேருங்கள்.
“பாம்புக்குப் பகை கருடன்; நெருப் புக்குப் பகை நீர்; பஞ்சுக்குப் பகை தெருப்பு: தாமரைக்குப் பகை பனி, யானைக்குப் பகை சிங்கம்; மானுக்குப் பகை புலி மன்மதனுக்குப் பகை சிவ பெருமான், என வழங்குதல் போல எனக்குப்பகை அர்ச்சுனன். அவனைப் போர்க்களத்தில் வென்று, கொன்று கண்ட துண்டம் செய்வேன் ” என்று ஆரவாரத் தோடு பேசினான்.
பின் விளைவு அறியாது செய்தால் எதிர்விளைவு ஏற்படுத்தும்
கர்ணன் கூறிய ஆவேசமொழிகளை யெல்லாம் கேட்ட பிதாமகர் பீஷ்மர் ஆசார்யர்கள் துரோணர், கிருபர் ஆகியவர் களும், அஸ்வத்தாமனும் கூறிய நன்மொழி கள் பயனுடையவையாகும். ஆனால் கர்ணன் கூறியவை சபைக்குதவாதன; அதுமட்டுமல்லாது ஒரு செயலை இடம், காலம், முதலானவற்றை நன்கு ஆராய்ந்து, இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆராய்ந்து அதனை அவன் கண் விடல் வேண்டும். இதுதான் செயலாற்று வோனுக்கு அழகு உன்னைப் போன்று பின் விளைவுகளை அறியாது செய்ப வனிடத்தில் ஒப்படைத்தால் செயல் நிறைவேறாதது மட்டுமன்று. எதிர்விளைவு களை ஏற்படுத்தும்.
மேலும் துரோணர், கிருபாசாரியார். அஸ்வத்தாமன் போன்ற அறிவில் சிறந்த வர்களை, இந்தத் தேரோட்டிமகன் கர்ணன், “நீங்கள் திரும்பி ஊர் செல்லுங்கள் என்று எதிர்வாதம் செய்தல் எந்தவகையில் நியாயம்? அவர்கள் சிவன், பிரமன் விஷ்ணு போன்றவராவர்.
(குறிப்பு :- நாராயணன், தரனுக்குப்
பத்ரிகாசிரமத்தில் குருவாய் இருந்தமைப் பற்றித் துரோணரை விஷ்ணுவிற்கு ஒப்பிட்டார் சிவபெருமான் அருளால் தோன்றியவன் அஸ்வத்தாமன் ஆகையால் அவனைச் சிவபெருமானுக்கு ஒப்பிட்டார். கிருபாசாரியார் கோதமன் மகளாய் அந்தணர் ஆக விளங்குதலின் ‘பிரம்மன் என்றார் என்க) ஆகலின் அவர்கள் மூவரும் வழிபடுவதற்கு உரியவர்களாவார்கள்.
அத்தகையோரைச் சொல்லத் தகாத சொற் களால் வைதல் நியாயமா?” என்று துரியோ தனனைப் பார்த்துக் கோபித்துக் கேட்டார். பின்னர் பீஷ்மர், அம் மூவரையும் கை கூப்பி வணங்கி,”ஐயன்மீர்! அற்பர்கள் பொறுக்க முடியாத வார்த்தைகளைச் சொல்லி வைதாலும், மேலோர்களாகிய நீங்கள் தயவு செய்து பொறுத்துக் கொள் ளுதல் வேண்டும். இவர்கள் சொன்ன இழிவான சொற்களை மறந்து இவர்கள் பால் கருணை காட்டவேண்டும். துரியோ தனனுக்குச் சிறுநோல்வி ஏற்பட்டாலும் அத்த இழிவு அவர்களைச் சேராது. பெரியோர்களாகிய நம்மைத்தான் சேரும். அறிவில் சிறந்த ஞானவான்களாகிய உங்க விடம் இனி தான் என்ன கூற உள்ளது” என்று பணிவோடு கூறினார்.
பிதாமகரே மன்னிப்பு கோரியதைக் கண்டதும், துரியோதனனும், கர்ணனும் தங்களுடைய தவற்றினையுணர்த்து, பொறுத்தருளுமாறு வேண்டி, குருமார் களாகிய அப்பெரியோர் களின் பாதங்களில் விழுந்து வணங்கினார்கள், அவர்களும் அவர்களை மன்னித்து ஆசி கூறினார்கள்.
அர்ச்சுனனை வெல்பவர் நம்மில் யாருமில்லை
அப்பொழுது துரோணர் உடன் இருந்த வர்களை நோக்கி, “துரியோதனன், பாண்ட வர்களுக்கு விதிக்கப்பட்ட பதின்மூன் றாண்டு காலம் முடிவதற்கு முன்னே அர்ச்சுனன் வெளிவந்துவிட்டான் என்கி றான். இதுபற்றி உங்கள் கருத்து என்ன” என்று கேட்டார். அதற்குப் பிதாமகர் பீஷ்மர், “பாண்டவர்களுக்கு விதித்த பதின் மூன்று ஆண்டு கெடு நேற்றையதினமே முடிந்துவிட்டதால்தான் அர்ச்சுனன் வெளி வந்துவிட்டான். இனி அவனை வெல்பவர் நம்மில் யாரும் இல்லை, பாண்டவர் களுடன் நட்பு ஏற்படுமாயின் நல்லது” என்றார். துரியோதனன் அதனைக் கேட்டு ”பாண்டவர்களுக்கு விதித்த பதின்மூன் றாண்டுகள் இன்னும் முடியவில்லை. அதற்குள் அர்ச்சுனன் வெளிவந்துவிட்டான். ஆதலின் மீண்டும் காட்டிற்குச் செல்லுதலே முறை எப்படியிருந்தாலும் எந்த ஓர் ஊரையும் நான் கொடுக்க மாட்டேன். போரிட்டு வென்று பெற்றுக் கொள் எட்டும்” என்றான்.
இந்திராதி தேவர்கள் வானத்தில் கூடினர்
“இது பற்றியெல்லாம் பேசுதற்கு இது நேரமில்லை” என்று கூறிய துரோணர் துரியோதனனை நோக்கி, “அரசர்க்கரசே! கவர்ந்த பசுக்களோடு, நம் சேனையுள் பாதியை அழைத்துக் கொண்டு நீர் முன்னே அஸ்தினாபுரம் செல்வாய். மீதி பாதி சேனையை வைத்துக் கொண்டு அர்ச்சுன னோடு போரிட்டு, அவனை வென்று விடுவோம் ” என்றார். அதனைப் பீஷ்மர் முதலானோர் ஏற்றனர். அதன்படியே பாதி சேனையுடன் பசுக்களையும் துரியோ தனனையும் முன்னே அஸ்தினாபுரத்திற்கு அனுப்பினர். பின்னர் வடக்குத் திக்கில் கிருபாசாரியாரும், தெற்குத் திக்கில் அஸ்வத்தாமனும் தூசிப் படையின் பின்னால் கர்ணனும், இடையிடையே விகர்ணன், சோமதத்தன் முதலானவர்களும் தின்று காக்க, பீஷ்மரும், துரோணரும் சேனையின் மத்தியில் நின்றனர். இந்தப் பெரும்போரைப் பார்க்கும் பொருட்டு இந்திராதி தேவர்கள் வானத்திலே நின்று பார்க்கக் கூடினர்.
உத்தரள் செலுத்திவருகின்ற தேரி லிருந்து அர்ச்சுனன் துரியோதனன் பசுக்க ளோடு முன்னே சேனையுடன் போவதைப் பார்த்தான். அவனை முன்னே அனுப்பி விட்டு, பிதாமகர்,துரோணர், கிருபர். கர்ணன் முதலானவர்கள் தன்னுடன் போரிடக் காத்து நிற்பதைக் கண்டான்.
உடனே அர்ச்சுனன் முதன்முதலாக இரண்டு இரண்டு அம்புகளைப் பீஷ்மர், துரோணர், கிருபர் பாதங்களில் பாதங்களில் செலுத்தி, அவர்களின் ஆசீர்வாதத்தினைக் கோரி னான். அவர்கள் மூவரையும் தன் தேரின் மூலமாக வலம் வந்தான். அவர்களும் அர்ச்சுனனை நெஞ்சால் வாழ்த்தினர். அர்ச் சுனன் காண்டீபத்தை எடுத்து வளைத்து நாணொலியைப் பூமியே அதிரும்படி செய்து, அம்புகளைச் சரமாரியாக விட்டு துரியோதனனுடன் சென்ற சேவைகளைச் சிதறடித்தான். பின்னர் பசுக்களை விராட நகர்க்குத் திருப்பினாள். ஆநிரைகளை மீட்டபின் அர்ச்சுனன் உத்தரவிடம் தேரைத் துரியோதனன் மேல் செலுத்தும் சலுத்தும் படி கூறினான். அவனும் காற்று வேகம். மனோவேகம் எல்லாம் பிள்னிடும்படி தேரை விரைவாகச் செலுத்தினான் இதனைக் கண்டு பீஷ்மர், துரோணர், லனே அஸ்வத்தாமன் முதலானோர் அர்ச்சுனனை நெருங்கலாயினர்.
துரியோதனன் அருகில் சென்ற அர்ச் சுனன், அவனை நோக்கி, ‘துரியோதனா! ஏன் அச்சத்தோடு புறமுதுகு காட்டி ஓடுகின் றாய்? ஆண்மையை நிலைநாட்டி அரசு புரிந்த அஸ்தினாபுரத்திற்கு, மானமும் வீரமும் இல்லாதவர்போல உயிர்மேல் கொண்டு ஏன் டு ஏன் முன்னே ஓடுகின் றாய்? உயிர் மேல் ஆசை கொண்டு அஸ்தினாபுரத்துக்குள் நுழைந்தால் உன்னைக் “கோழை’ என்று பெண்களும் இகழ்வார்களே! இது உனக்குத் தேவை தானா? ஆசை
பீமன் சபதம் செய்து காத்திருக்கின்றான்
”உன்னையும் உன் தம்பிமார்களையும் ஒரே அம்பினால் என்னால் இப்பொழுதே கொல்ல முடியும். ஆனால் நான் கொல்ல மாட்டேன். உங்கள் நூற்றுவரையும் கொல்வதற்கு எங்கள் பீமன் சபதம் செய்து காத்திருக்கின்றான். அவனுக்கு இடையூ றாக இருக்கமாட்டேன்.
”உன்னை நான் கொல்லாததற்கு இன் னொரு காரணமும் உள்ளது. தனுர் வேதம் போன்ற நூல்கள், அந்தணர், முதியவர். இளம் பிள்ளைகள், இரவலர்கள், மகளிர், சான்றோர்கள், ஐம்பெருங்குரவர், தூதர்கள், போருக்குப் பயந்து ஓடுகின்றவர்கள். முதலானவர்களைக் ளக் கொல்லுதல் கூடாது என்று கூறுகின்றன. நீ பயந்து பயந்து ஓடுகின்றாய், ஆதலின் உன்னைக் கொல்ல மாட்டேன். அதனால் கோபத்துடனும், வீரத்துடனும் போரிடு, அப்பொழுது உன்னுடன் நான் போரிடுகின்றேன்” என்றான்.
அர்ச்சுனன் கோபத்துடன் இவ்வாறு துரியோதனனைப் பார்த்துக் கூறிக் கொண் டிருக்கும்போது, கர்ணன், பீஷ்மர். துரோணர், கிருபர், சகுனி, தம்பிமார் முதலானோர் துரியோதனன் அருகே வந்தனர். அப்பொழுது கர்ணன் அர்ச்சுன னிடம் . “அர்ச்சுனா! உண்னைக் கொல்ல நான் காத்துக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு முன்னாலே சென்று கொண்டிருந்த துரியோதனனிடம் ஏன் போர்ச் செய்யச் சென்றாய், என்னிடமல்லவோ போர் புரிய வந்திருக்கவேண்டும்?” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் நால்வகைப் படைகளும் அர்ச்சுனனை முற்றுகை யிட்டனர்
ஆனால் அர்ச்சுனன் அசராது, அலுங்காது அம்புகள் சிலவிட்டு சில வீரர்களைக் கொன்றான்; பல வீரர்களைப் புற முதுகிட்டோடச் செய்தான். அதன்பின் கர்ணன் மீது நெருப்பைப் போன்றும், இடி போன்றும் அம்புகளை அபரிமிதமாகச் செலுத்தினான், அக்கர்ணனும் அர்ச்சுனன் மீது அம்புகளைச் செலுத்தி, அவன் செலுத்திய அம்புகளை அழித்தான். இவ்வாறு ஒருவர் மேல் ஒருவர் அம்பு விட்டுக்கொண்டும். ஒருவர் விடுகின்ற அம்புகளை மற்றவர் அழித்துக்கொண்டும் சமமாகப் போர் செய்தனர்.
கர்ணன் வெட்கத்தோடு நின்றான்
அந்நிலையில், அர்ச்சுனன், “கர்ணா!’ இதுவரை சமமாகப் போர் செய்தேன். இனி என் போர்த் திறனைப் பார்” என்று கூறி. அம்புகளைச் செலுத்தி அவன் தேரை அழித் தான். அவன் விடுத்த தண்டத்தையும், கதையையும் சுக்கு நூறாக்கினான். கர்ணன் மற்றொரு தேரின்மேல் ஏறிக் கடும்போர் செய்யலானான். அந்தத் தேரையும் அர்ச்சுனன் அழித்து, அவன் எளிய அம்பு களையும் சுக்கு நூறாக்கினான். இறுதியில் கர்ணன் வில்லையும், தேரையும், தேர்ச் குதிரைகளையும் இழந்து உடம்பெல்லாம் புண்ணாக இரத்தம் பெருகிவழிய நிலமாகிய தேரின் மீது வெட்கத்தோடு நின்றான்.
குருதி பெருக உள்ளம் ஒடுங்கி, உடல் ஒடுங்கி, நாணி நின்ற கர்ணனை, அஸ்வத் தாமன் பார்த்து, “கர்ணா! என் தந்தை துரோணரைப் பார்த்து நீர் அஸ்தினாபுரம் போய்விடும். நான் ஒருவளே அர்ச்சுனனை வென்று விடுவேன் என்றாயே! என்னா யிற்று. உன்னால் முடிந்ததா? உள் கையில் பிடித்திருந்த வில் எங்கே? தேர் எங்கே? தேர்க் குதிரைகள் எங்கே? தேர்ப்பாகன் எங்கே? பொன்முடி எங்கே? போரிட உன்னுடன் வந்த சேனை எங்கே? பகைவரை அழித்து, துரியோதனனுக்கு ஆட்சியை அளிப்பேன் என்றாய். அந்த வார்த்தை என்னாயிற்று? நீர் மேல் எழுத்துத்தானா? எல்லாம் வறட்டுக் கூச்சல் தானா?” என்று கேட்க கேட்க, அவன் வெட்கமுற்று நாணி, தலைகுனிந்து பிணக் குவியல்களிடையே மறைந்து போனான்.
நிச்சயம் துரியோதனாதியரைக் கொல்வேன்
அதன்பின் பீஷ்மர் முதலியோர் தன்னை எதிர்த்து போரிட முன்வர, அர்ச்சுனன் அதனைக் கண்டு உத்தரனை அவர்கள் இருக்குமிடம் நோக்கி, தேரைச் செலுத்து மாறு கூறினான். முதலில் துரோணர் தேர் தன்னை எதிர்த்துத் தன் அருகே வரவும். அர்ச்சுனன் முதலில் அவரை வணங்கி “ஆசார்யரே! தங்கள் ஆசியினால் பதின் மூன்றாண்டுகள் வனவாசமும், அஞ்ஞாத வாசமும் வெற்றிகரமாகக் கழித்து வந்துள் ளோம். அடியேனுக்கு, “இந்த அர்ச்சுன னுக்கு ஒப்பாவார் யார்? என்று பிறர் கூறும்படி கற்றுக் கொடுத்த தங்களையும், அஸ்வத்தாமாவையும், கிருபாசாரியரை யும். என் பிதாமகர் பீஷ்மரையும் கொல்வது பாவம். மனம் வரவில்லை. ஆனால் நிச்சயம் அந்தத் துரியோதனாதி யரைக் கொல்வேன்” என்றான்.
அப்பொழுது துரோணர், “அர்ச்சுனா! எங்களுக்கு உன்னோடு போரிட மன மில்லை; செஞ்சோற்றுக் கடனுக்காக நாங்கள் போரிட வேண்டியுள்ளது. மற்றவர் களிடம் எப்படி உக்கிரமாகப் போர் தொடுப்பாயோ, அதில் சிறிதளவும் குறை யாது என்னுடன் போர் தொடுப்பாயாக” என்று கூறி பல அம்புகளை எடுத்து அர்ச்சுனன் மீது விடலானார். அர்ச்சுனனும் பல அம்புகளை தன் குருவின்மீது ஏவி னான். ஒருவர் விடுகின்ற அம்புகளை மற்றவர் அழித்தனர். இவ்வாறு உக்கிர மாகப் போர் நடத்தினர். இறுதியில் துரோணர் தேர், குதிரைகள், தேர்ப்பாகன், வேதக்கொடி, கைப்பிடித்தவில், உடன் வந்த சேனைகள் முதலியன அனைத் தையும் இழந்து போர்முனையிலிருந்து நீங்கிச் சென்றார். பல
அம்புகளை மந்திரித்து ஏவினான்
அடுத்து வந்த அஸ்வத்தாமன் அர்ச்சுனன் மீது ஆயிரம் அம்புகளும், குதிரைகள் மீது நூறு அம்புகளும், தேர்ப்பாகனாக இருந்த உத்தரன் மேல் இருநூறு அம்புகளும் உரியமுறையில் மந்திரித்து ஏவினான். அவற்றையெல்லாம் அர்ச்சுனன் அழித்து, பாசுபதாஸ்திரத்தைச் செலுத்த அவன் உயிர் தப்பிச் சென்றான்.
அடுத்து கிருபாச்சாரியார் முருகப் பெருமான் போல அர்ச்சுனன் மீது பாய்ந் தார். இருவரும் கடுமையாகப் போரிட்ட னர். ஒருவர் விட்ட அம்புகளை மற்றவர் அழித்தனர். இருவரும் ஏவுகின்ற அம்புகளி னால் எட்டுத் திக்குகளும் செவிடாயின; மின்னலொடு இடியையும் கக்கின. சுழல் காற்று வீசியது. இறுதியில் அர்ச்சுனனு டைய வில்லாற்றலால் தேரும் இழந்து. தேர்ப்பாகனையும் இழந்து,குதிரைகள், கொடிகள் காடிகள் சிதைய முதலாசார்ய ராகிய கிருபாசாரியார் நொந்து போனார். இறுதி யில் அஸ்வத்தாமன் தேரில் ஏறி அங்கிருந்து அகன்றார். அவர்களுக்கு பின் மாமன் சகுனி, துச்சாதனன், அவன் தம்பியர். சயத்திரதன் முதலானோர் அர்ச்சுனன் ஒரு வில்லுக்கு ஆற்றாராகி, தேர் இழந்து, குதிரைகள் இழந்து, கொடி இழந்து, முடி இழந்து, மானமும் இழந்து, பெருமையும் இழந்து, நிமிர்ந்த நன்னடையும் இழந்து. நேர் கொண்ட பார்வையும் இழந்து அவமானப்பட்டுப் போனார்கள்.
துச்சாதனன் கூட்டத்தார் நிலைகுலைந்து சென்றபின் பிதாமகர் பீஷ்மர் அர்ச்சுனனை எதிர்த்துப் போர் புரியலானார். முதலில் அர்ச்சுனன் அவர் விட்ட அம்பை மட்டும் அல்லாது அவருடைய வில்லையும் பயனற்றதாக்கிவிட்டான். அதன்பின் வேறொருவில் வாங்கி, அம்பினைச் செலுத்த அதனையும் னயும் பயனற்றதாக்கி விட்டாள். பிள்னர் இருவர் தேர்களும் பம்பரம் எனச்சுழல, விடுகின்ற அம்புகள் செந்தீயைக் கக்கிக்கொண்டு’ எங்கணும் பரப்ப அவற்றினைக் கண்டு இயமனும் அஞ்ச இருவரும் கடும்போர் புரிந்தார்கள். இறுதியில் கங்காபுத்திரன் பீஷ்மரின் வரிசிலை வில் குந்தி புத்திரனால் துணிக்கப் பட்டது. உடல் சோர்ந்து, பீஷ்மர் தேரின் மீது சாய்தலைப் பார்த்து, அர்ச்சுனன் தேரினை வேறு பக்கம் ஓட்டச் செய்து அவரின் இளைப்பைப் போக்கினான். ஆக, துரியோதனன் முதலான அனைவரையும் அர்ச்சுனன் தன் ஒரு காண்டீப வில்லைக் கொண்டு நிலை குலைய ஓடச் செய்து பெருவெற்றி பெற்றான்.
அர்ச்சுனன் மீது மீண்டும் போர்
அப்பொழுது அர்ச்சுனன், துரியோதன னைப் பார்த்து, “அரசர்க்கரசனே! போர் செய்வது சூதாடுதல் போன்றது அன்று. சூதாட்டத்தில் ஏமாற்றுதல், போலப் போர்க்களத்தில் ஏமாற்ற முடியாது. நன்றாகவே புறங்காட்ட புறங்காட்டி ஒடுகின்றாய்” என்று இகழ்ந்து கூறினான். அர்ச்சுனன் கூறிய வார்த்தைகளைக் கேட்டுத் துரியோ தன்னுக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே ஆவேசம் கொண்டு தன் நால்வகைப் படை யுடன் அர்ச்சுனன் மீது மீண்டும் போர் தொடுக்கலானான். அவன் சேனைகள் பார்த்தனைச் சூழ்ந்து கொண்டன; படை கள் விடுகின்ற ஆயுதங்களையும் துரியோத வன் விடுகிற அம்பினையும் தன் அம்புகளி னால் ஒரு சேர அழித்தான். இயமனும் அஞ்சும்படி இருவரும் ஆக்ரோஷத்துடன் கடும்போர் புரிந்தனர். வசையையே புகழாகப் பெற்ற துரியோதனனின் படை வீரர்கள் அர்ச்சுனன் அஸ்திரங்கட்கு ஆற்றாதவராகிச் சோர்வுற்றனர். அர்ச்சுனன் அவர்கள் மேல் தோல்வி என்பதே இல்லாத மோகனாஸ்திரத்தை எடுத்து விடுத்தான். அதனால் பீஷ்மர் தவிர மற்ற அனைவரும் மூர்ச்சை அடைத்தனர், பீஷ்மர் தவிர மற்ற துரியோதனன் முதலாகவுள்ள அனைவரில் தலையாடைகளையும் பறித்து வரும்படி உத்தரனிடம் கூற,உத்தரனும் அவ்வாறே அத்தலையாடைகளையெல்லாம் பறித்து வந்தான், மூர்ச்சையினின்று நீங்கி எழுந்த துரியோதனாதியர் வெட்கித் தலைகுனிந்து தங்கள் நகரத்திற்குத் திரும்பலாயினர்.
பொற்கிரீடத்தைக் கீழே தள்ளியது
வெட்கித் தலைகுளிந்து நின்ற வணங்கா முடி மன்னனாகிய துரியோதனனைப் பார்த்து,அர்ச்சுனன், “துரியோதன மன்னா பிறரை நன்றாக ஏமாற்றிச் சூதாட்டம் ஆடுவாய். அவையில் அபலைப் பெண்களின் அணி துகிலை உரிப்பாய்; வாய்ப் பேச்சினை அவர்களிடம் காட்டுவாய். அவர்களிடம் வெட்கமில்லா மல், மானமில்லாமல் உன் தொடையையும் காட்டுவாய். ஆனால் போர்க்களத்தில் வீரம் காட்டமாட்டாய். பீஷ்மர் முதலான வீரர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் போர் தொடுக்காமல், உன் கால்கள் உன் பிடரியில் அடிக்க பின் வாங்கி ஏன் ஓடுகின்றாய் ? இதனைக் காட்டிலும் உயிர் துறக்கலாமே. மான முள்ளவர்கள் தான் அதனைச் செய்வார்கள். இரு, இரு, உன்னுடைய உயிரைப் பறிக்க இயமன் போல. பீமன் காத்திருக்கின்றான். இந்தா இன்னொன்றையும் இழந்து அரண் மனை போய்ச் சேர்” என்று கூறி ஓர் அம்பினை விடுத்தான். அது அவன் தலையில் இருந்த பொற் கிரீடத்தைக் கீழே தள்ளியது. கண்ணிலான் மகள், உடல் சோர.உள்ளம்சோர அவமானத்துடன் வெறுந்தலையுடனும், எஞ்சிய சேனை களுடனும் பீஷ்மர் முதலானரோடும் உறங்குகின்ற நேரத்தில் திருடன் போவு யாரும் கவனிக்காத வண்ணம் அஸ்தினா புரம் போய்ச் சேர்ந்தான். போர்க்களத்தில் வீழ்ந்த வீரர்களைக் கழுகுகளும், காக்கை களும், நாய்களும், நரிகளும், பேய்களும் தங்களுக்குப் பெருவிருந்தே கிடைத்தது என்று அர்ச்சுனனை வாழ்த்தி ஆரவாரித்து மகிழ்ந்து உண்ணலாயின.
தேவர்கள் மலர் மாரி பொழிய, அர்ச் சுனன் தேவதத்தன் என்னும் சங்கினை வெற்றிக்கு அறிகுறியாக ஊதினான் உத்தர னும் அர்ச்சுனன் சொன்னபடி வன்னிமரம் நோக்கித் தேரினை ஒட்டிச் சென்றான். அங்கு தான் எடுத்த ஆயுதங்களையெல்லாம் வன்னி மரப்பொந்தில் வைத்தான். தன் அதுமக்கொடியை நீக்கி தேரில் விராடனின் சிங்கக் கொடியை ஏற்றினாள். மீண்டும் பேடிவடிவம் கொண்டான். உத்த ரனை எஜமானனாக்கித் தான் தேர் ஓட்டிக் கொண்டு விராட நகர் சென்று அங்கு ஒரு சோலையில் உத்தரகுமாரளோடு அந்த அர்ச்சுனன் தங்கினான்.
தெற்குத் திசையில் பாண்டவர்கள் உதவியுடன் பெருவெற்றிபெற்று, பசுக் களை மீட்டு வந்த விராட மன்னன். போர்த்திறனில்லாத தன் இளங்குமரன் உத்தரன். போருக்குச் சென்றுள்ளான் என்பதைக் கேட்டு மனம் நொந்து தரையில் சாய்ந்தான். அப்பொழுது கங்கபட்டர் அங்குவந்து அவன் மூர்ச்சை தெளிவித்து, ”அரசே! பேடியாகிய பிருகத்தனை தேரோட்டிச் சென்றதனால் உத்தர குமாரன் பெருவெற்றி பெற்றுத் திரும்புவான். பயப்பட வேண்டாம்” என ஆறுதல் கூறினார்.
விராட மன்னன் மகிழ்ச்சி அடைந்தான்
அதே நேரத்தில் அர்ச்சுனன் தூதர்கள், விராட மன்னனை வணங்கி, “மன்னா/வடதிசை சென்ற உன் மகன் உத்தரன் பெருவெற்றிபெற்று, பசுக்களை மீட்டு, பிருகந்நளையோடு சோலையில் தங்கியுள் ளான்” என்றார்கள். அதனைக் கேட்டு விராட மன்னன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, நகரை அலங்கரிக்க உத்தர விட்டான். அர்ச்சுனன் வருவதற்குள் விராட மன்னன் கங்கபட்டரோடு பொழுது போக் காகச் சூதாடலானான். அந்த ஆட்டத்தில் கங்கபட்டர் வெற்றிபெற்றார். அதைப் பார்த்த விராடமன்னன், “கங்கபட்டரே! என்மகன் போர்க்களத்தில் ஜெயித்தது போல நீர் இந்த ஆட்டத்தில் ஜெயித்து விட்டீர்” என்று கூறினான். அதனைக் கேட்ட கங்கபட்டர், “மன்னரே! உங்கள் மகன் உத்தரன். எங்கே கௌரவர் படை களை ஜெயித்தான். பிருகந்தளை அன்றோ ஜெயித்தாள்” என்று உண்மையைக்கூற, விராடமன்னன் கோபங்கொண்டு, கையிலி ருந்த சூதாடு கருவியை, சுங்கபட்டரின் நெற்றியைப் பார்த்து வீசினான். அது நன்றாகப்பட்டு, அதனால் இரத்தம் நெற்றியினின்று பெருகலாயிற்று. அந்த இரத்தம் தரையில் வீழ்ந்தால் விராடன் வம்சமே அழிந்துவிடும் என அஞ்சி, விரதசாரிணி (திரௌபதி) அலைகுலைய ஓடி வந்து, கீழே சிந்தவொட்டாமல் துடைத்து விட்டாள்; விராட மன்னனும் தன் செயலுக்கு வருந்தினான்.
தகாத செயலைப் பொறுத்துக் கொள்ளுங்கள்
அதன்பின் விராடமன்னன் உட்பட அனைவரும் உத்தரனை எதிர்கொண்டு அழைத்து வரவேற்றனர். மன்னன் தன் மகனை மகிழ்ச்சியினால் தழுவிக் கொண் டான். அப்பொழுது உத்தரன் கங்கபட்டர் நெற்றியில் வடு ஒன்று இருக்கக் கண்டு, பதறிப் போய் ‘நடந்தது என்ன?’ என்று அறிந்து கொண்டபின், கங்கபட்டரை வணங்கி, “ஐயா பெரியவரே! என் தந்தை ஆத்திரத்தினால் செய்த இந்தத் தகாத செயலைப் பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கோபம் இந்த நாடு தாங்காது” என்று கூறி வேண்டிக்கொண்டு, தந்தையின் பின்னாலேயே அரண்மனை புகுந்து தாயை வணங்கினான். அவளுடைய மனங்கனிந்த ஆசீர்வாதத்தைப் பெற்றான். தான் போர்க் களத்திலிருந்து கொண்டுவந்த பட்டாடைகளை உத்தரைக்குக் கொடுத்து, பொம்மைகளுக்குக் கட்டி அலங்கரிக்கச் சொன்னான்.
அதன்பின் தன் தாய் தந்தையரிடம். “அம்மா, அப்பா! உண்மையில் போர்க் களத்தில் கெளரவர் சேனையை நான் வெற்றி பெறவில்லை. நான் தேர் மட்டும் தான் செலுத்தினேன். போரிட்டுப் பெரு வெற்றி பெற்றவன் ‘வில்லுக்கோர் விசயன்” எனப் போற்றப்படும் அர்ச்சுனன்தான். அதுமட்டுமல்லாது ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசத்தைப் பாண்டவர்கள் நம் அரண் மனையிலே நம் கண்முன்னால்தான் கழித்தார்கள். உங்களுக்குத் துணையாக இருக்கும் கங்கபட்டர் தான் நேர்மையின் சின்னமாக விளங்கும் தருமபுத்திரர். நம் மடப்பள்ளியில் சமையல்காரனாகப் பணியாற்றிய பலாயனன்தான் வலிமை மிக்க பீமன்; குதிரை லாயத்தில் இருந்து கொண்டு குதிரைகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்த தாமக்கிரந்திதான் மாத்ரி தேவியின் மைந்தன் நகுலன். பசுக் கொட்டிலில் இருந்துகொண்டு பசுக்களை நன்கு பாதுகாத்துக் கொண்டிருந்த தந்திரி பாலன்தான் யாவர்க்கும் இளையவனான சகாதேவன். அம்மாவிற்கு அருந்துணை யாக அரும்பணியாற்றிய விரதசாரிணி என்ற வண்ணமகள் தான் யாகாக்னியில் தோன்றிய பாஞ்சாலன் பெற்ற பாஞ்சாலி ஆவாள். நேற்றைய தினத்தோடு அவர்களுக்கு விடுக்கப்பட்ட பதின்மூன்றாண்டு காலம் முடிந்துவிட்டது. நாளைய தினம் சுயவடிவத்தில் இங்கு வருவர்என்று கூறினான்.
பாண்டவர்கள் நிஜவுருவில் வெளிப்பட்டார்கள்
உத்தரன் கூறியதைக் கேட்ட விராட மன்னன் மனம் நடுங்கி, பெருஞ்சோர்வு அடைந்தான். அதன்பின் ஓர் ஆண்டு கங்கபட்டரோடு தான் இருந்தது தனக்கு கிடைத்தற்கரிய நற்பேறு என மகிழ்ச்சி யுற்றான். பாண்டவர்கள் நிஜவுருவில் வெளிப்படப்போகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தவன் போலக் காலையில் தன் ஆயிரம் பொற்கதிர்களை வீசிக் கொண்டு ஆதவன் உதயகிரியினின்று செம்மாந்து எழுந்தான்.
மகாபாரதம் – 36 உத்தர நீரைமீட்சிச் சருக்கம்.. உன் உயிர் போனால் என் உயிரையும் இழப்பேன்