துர்வாசச் சருக்கம்
மார்கண்டேய மகரிஷி பாண்டவர்களிடம் விடை பெற்றுச் சென்றபின், பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் வெப்பம் பொருந்திய காம்யகக் காட்டிடத்து வாழ்ந்து வந்தனர்.
பிதாமகர் கூறியபடியே துரியோதனன் வைஷ்ணவ யாகத்தைச் செய்து முடித்தான். “இது என்ன பெரிய யாகம் ? தர்மபுத்திரர் செய்வித்த ராஜசூயத்தில் பதினாறில் ஒரு பங்கு கூட இல்லை” என்று நகர மக்கள் கூறினர். ஆனால் கர்ணன் முதலான நண் பர்கள், “இந்த யாகம் மிகச்சிறப்புடைய தாக இருந்தது. யயாதி,மாந்தாதா, பரதன் முதலான உன் முன்னோர்கள் செய்த யாகத்தைப் போன்றே சிறப்புடைய தாயிருந்தது ” என்று கூறி துரியோதனனைப் புகழ்ந்தனர். அந்த புகழ் மொழிகளைக் கேட்டுத் துரியோதனன் பெருமகிழ்வு கொண்டான்.
அந்த சமயத்தில் கர்ணன் எழுந்து, “நண்பரே! பாண்டவர்கள் யுத்தத்தில் நிச்சயம் தோற்கடிக்கப்படுவார்கள். கொல்லவும் படுவார்கள். அப்பொழுது மிகச் சிறப்போடு ராஜசூய யாகம் நீ செய்வாய். அர்ச்சுனனை போரில் நான் வதம் செய்வேன். அதுவரையில் என் கால்களைத் தண்ணீர் விட்டு அலம்ப மாட்டேன். எவன் என்னை யாசித்தாலும் இல்லையென்று சொல்ல மாட்டேன்” என்று சபதம் செய்தான்.
திருதராட்டிரர் புதல்வர்கள் மகா ரதனான கர்ணனுடைய சபதத்தைக் கேட்டதும் பாண்டவர்களுடைய வாழ்வு முடிந்தது என்று நிச்சயம் செய்து கொண்டார்கள். அதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்து பேராரவாரம் செய்தார்கள். நூறு பேர் அல்லவா? அது எங்கணும் ஒலித்தது.
இவர்கள் இவ்வாறு இருக்க ஒரு நாள் அடங்காத கோபங்கொள்ளும் தன்மை வாய்ந்த துருவாச முனிவர், முனிவர்கள் பலரோடு பாண்டவர்கள் ஆசிரமத்துக்கு வந்தார். பாண்டவர்கள் அம்முனிவரை எதிர் கொண்டு சென்று வரவேற்று வணங்கி உபசார வார்த்தைகள் பல சொல்லி, ஆசனங்களிலிருத்திப் பலவாறு போற்றினர். துருவாச முனிவரும், உடன் வந்த முனிவர்களும் ஆசி மொழிகளைப் பகர்ந்து வாழ்த்தினர்.
அதன்பின் பாண்டவர்கள் துருவாசரை வணங்கி, “முனிவர் பெருமக்களே! அமுதுண்ண எழுந்தருளுங்கள்” என வேண்டினர். முனிவர் பெருமக்களோ, “அன்பர்காள்! பாண்டவர்களே! உச்சிப்போது கழிந்து விட்டது. ஆதலின் மீண்டும் நீராட வேண்டும். புனித நீராடிய பின்னர்தான் அமுதுண்ண வேண்டும். ஆதலின் முதலில் நாங்கள் நீராடச் செல்கிறோம்” என்று கூறிப் புனித நீராடு வதற்குச் சென்று விட்டனர்.
அவர்கள் சென்றபின், பாஞ்சாலி, தர்மபுத்திரரிடம், “அன்பரே! சீடர் குழாத்தோடு சென்ற துருவாச முனிவர் நீராடி விரைவில் வந்து விடுவார். அவர்களுக்கு உணவு கொடுக்க எதுவும் இல்லையே! என்ன செய்வது வருத்தத்தோடு கூறினாள். என்று
அட்சய பாத்திரம்
வனவாச ஆரம்ப காலத்தில் சூரிய பகவான் தர்மபுத்திரருக்கு அட்சய பாத்திரம் ஒன்று கொடுத்து உதவினான். அந்த அட்சய பாத்திரம் ஒரு நாளைக்கு ஒருமுறை உச்சிப் போதுக்கு முன் எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் அவர்கள் விரும்பிய உணவினை அளிக்க வல்லது. உணவு உண்டபின் வந்தால் ஒன்றும் கிடைக்காது. அன்று அதிதியரோடு பாண்டவர்கள் உச்சிப்போதுக்கு முன் உண்டு விட்டனர். பாஞ்சாலியும் உண்டு விட்டாள். பாஞ்சாலி அதனைத் தூய்மை செய்து மறுநாளைக்கு பயன்பட வேண்டுமென்று எடுத்து வைத்து விட்டாள். இதனை அறியாது உச்சிப்போதுக்குப்பின், பாண்ட வர்கள் உண்ட பின் துர்வாசர் தம் சீட முனிவர்களோடு விருந்தினர்களாக வந்தார். இதனால்தான் பாஞ்சாலி மனக்கலக்கம் கொண்டாள்.
கண்ணபிரானை அழைத்தனர்
பாஞ்சாலி கூறியதைக் கேட்டுத் தர்ம புத்திரரும் மனம் சோர்ந்தார். பின்னர் தம்பியர்களுடன் ஆலோசித்தார். ‘எல்லோரும் தெய்வமே துணை’ என எண்ணி, துவாராகபுரி வாசனை – கண்ண பிரானை -ஆபத் பாந்தவனை அவன் திருவடிகளை மனத்தால் நினைத்து போற்றி னர். அன்று கௌரவர் சபையில் வீரம் செறிந்த பாண்டவர்கள் செயலற்று இருக்க, பிதாமகர் பீஷ்மர், ஆசாரியர் துரோணர், போன்றோர் வாய் மூடி தலை கவிழ்ந்து நிற்க, துரியோதனாதியர் கொக்கரித்து ஆர்ப்பாட்டம் செய்ய, உடல் சோர, உள்ளம் தளர இரு கைகளையும் நெகிழ விட்டு, அவனைத் தவிர வேறு ஒன்றையும் நினையாது “கோவிந்தா! கோவிந்தா! அனாதரட்சகா! ஆபத் பாந்தவா” என்று அரற்றிய இந்தத் பாஞ்சாலிக்குச் சேலை களை வரிசை வரிசையாகத் துச்சாதனன் கைசோர்ந்து மெய்சோர்ந்து கீழே விழும் அளவும் தந்து அந்த பத்தினித் தெய்வத் தைக் காத்தவர் இன்று பாண்டவர்கள் அதே நிலையில் அகப்பட்டிருக்கும்போது வரா மல் இருப்பாரா? உடனே, அக்கணமே பரந்தாமன் கண்ணபிரான் அவர்கள், முன்தோன்றினார்.
பாண்டவர்களும், பாஞ்சாலியும் கண்ண பிரானை வணங்கி வரவேற்றனர். வந்தவுடன் கண்ணபிரான், பாஞ்சாலியை அழைத்து “தங்கையே! பசிக்கின்றது என்றார். அதனைக் கேட்டு பாஞ்சாலி செய்வது அறியாது விழித்து நின்றாள். வீட்டிலே உணவு இல்லை என்பதை அவள் முகக்குறிப்பாலே உணர்ந்த கண்ணபிரான், ”பாஞ்சாலி! நீங்கள் நாள்தோறும் பயன்படுத்தும் அட்சய பாத்திரத்தைக் கொண்டு வா” என்றார். பாஞ்சாலி மறுபேச்சு சொல்லாமல் அந்த அட்சய பாத்திரத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள். அப்பாத்திரத்தில் ஒரே ஒரு சோற்றுப் பருக்கையும், ஒரு சிறிய அளவு கீரையும் இருக்கக்கண்டார். அந்த ஒரு பருக்கை சோற்றைக் கீரையோடு கலந்து பரந்தாமன் தன் செம்பவளவாய் திறந்து மகிழ்ச்சியோடு உண்டார். சிந்தை குளிர்ந்தார். என்ன ஆச்சரியம்! நீராடி வந்த துருவாச முனிவரும், அவர்தம் சீடகோடி களும் பாற்கடலினின்று தோன்றிய தேவா மிர்தத்தை உண்டவர்போலச் சிந்தை குளிர்ந்து பசியாறினர். “தாமரைக் கண்ண னாகிய ஸ்ரீகிருஷ்ண பகவானால் பெரிய இடரினின்று நீங்கினோம்” என்று பாண்ட வர்களும், பாஞ்சாலியும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து எம்பெருமான் பேரருளை வியந்து வணங்கி போற்றினர்.
கண்ணபிரான் திருவருளால் எல்லாம் நலமாய் முடிந்தது
அதன்பின், துர்வாச முனிவர் சீடகோடி களோடு வந்து தர்மபுத்திரரைப் பார்த்து, ”தர்மபுத்திரரே! நேற்று துரியோதனன் அரண்மனையில் அறுசுவையோடு விருந்துண்டோம். அப்பொழுது துரியோ தனன், பாண்டவர்களின் ஆசிரமத்திற்கு உச்சிப்போது கழித்து விருந்துண்டு அவர்களை ஆசீர்வதித்து வாருங்கள்” என்று கூறினான். “உச்சிப்போதுக்குப் பின் வந்தால் அட்சய பாத்திரத்திலிருந்து உணவு படைக்க முடியாது. அதனால் கோபங் கொண்டு உங்களைச் சபித்து விடுவேன்’ என்ற அவனின் உள்நோக்கம் எனக்கு அப்போது விளங்கவில்லை. இப்போது தான் எனக்குப் புரிந்தது. துரியோதனனு டைய உள்நோக்கம் அறியாது உங்களைச் சங்கடத்தில் மாட்டி விட்டேன். கண்ண பிரான் திருவருளால் எல்லாம் நலமாய் முடிந்தது” என்று கூறிய துருவாசர் மேலும், ‘தர்ம நந்தனா! ஒரு நல்ல வரத்தைக் கேட்டு பெறுவாயாக” என்று கூறினார். பெருந் தகைமையும் சாதுரியமும் கொண்ட தர்ம புத்திரர், “முனிவர் பெருமானே! துரியோ தனாதியர் வஞ்சனைத் தேன் கலந்த நாசகார வார்த்தைகளை நம்பி இனி யாருக்கும் துன்பம் செய்யாதீர்கள். சாபமும் கொடுக் காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார். துருவாச முனிவரும் இனி துரியோதனனி டம் ஜாக்கிரதையாக இருப்ப தாகக் கூறி, அனைவரையும் வாழ்த்தித் தன் சீடகோடி களுடன் தன்னிடத்துக்குச் சென்றார். கண்ணபிரானும் பாண்டவர்கள் வனத்தில் தங்கியிருக்க, துவாரகை போய் சேர்ந்தார்.
கர்ணனது கவசகுண்டலங் கவர்ந்த சருக்கம்
கர்ணன் பிறந்த பொழுதே அவனுடம் புடன் பிறந்தவை உறுதியான கவசமும் பொன்மயமான குண்டலங்களுமாகும். இவற்றை அவன் தரித்திருக்கின்ற காரணத் தினால் அவன் யாராலும் வெல்ல முடியாதவனாக இருந்தான். இதனைத் துவாரக வாசனான கண்ணபிரான் நன்கு அறிந்திருந்தார். அதனால் அவற்றை எப்படியாவது அவனிடமிருந்து கவர்ந்து விடவேண்டுமென்று முடிவு செய்தார்.
தன் மைந்தன் அர்ச்சுனனுக்கு நன்மை செய்ய இந்திரன் நிச்சயம் முன் வருவான் என்று எண்ணிய கண்ணபிரான், இந்திர னைத் தன்னிடம் வரும்படி மனத்தால் நினைத்தார். நினைத்த மாத்திரத்திலேயே இந்திரனும் கண்ணபிரான் முன் வந்து நின்றான். அப்பொழுது கண்ணபிரான். “தேவராஜனே! கலைஞர்க்கும், மறை நூலவர்க்கும். கடவுளர்க்கும். மானிடர்க் கும், எளியவர்க்கும், செல்வர்க்கும், இல்லறத்தார்க்கும். துறந்தார்க்கும் மன்னர்க்கும், மற்றுமுள்ள யார்க்கும் எப்பொழுதும் எது கேட்டாலும் வாரி வழங்கக்கூடிய தான வீரன் கர்ணன் என்பதை நீ நீ அ அறிவாய் ; அதனால் அவன் உடம்பில் தரித்துள்ள உறுதியான கவசத்தை யும் காதுகளில் அணிந்துள்ள பொன்மய மான குண்டலங்களையும் கர்ணன் தானம் செய்ய, நீ பெற்று வருவாயானால், நிகழும் பாரதப் போரில் காண்டீபத்தை ஏந்திய நின்மகன் அர்ச்சுனன் ச்சுனன் பிழைப்பான். இதனை உணர்ந்து அதற்கேற்ப செய்க என்று கூறி அக்கண்ணபிரான் துவாரகை சென்றார்.
உடனே இந்திரன் கிழவேதியன் வடிவந் தாங்கி, வந்தவர் அனைவரும் அமைதி யுறும்படி தானங்களை வழங்கிய பகலின் முற்பொழுது கழிந்தபின், அங்கதேச அதிபதியாகிய கர்ணன் அரண்மனையை அடைந்தான். இந்திரன், கர்ணனை நெருங் குதற்கு முன்னமேயே சூரிய பகவான் பிராமண வடிவந்தாங்கி, கர்ணனைப் பார்த்து,”அங்கதேசத்து அதிபதியே! தான வீரனே! உன்னுடன் பிறந்த கவச குண்டலங் களைத் தேவராஜன் இந்திரன் உன்னிடம் வந்து யாசிப்பான். கொடுத்து உதவினால் போர்க்களத்தில் அர்ச்சுனனிடம் மாண்டு போவாய். ஆதலின் அவற்றைக் கொடுக் காதே” என்றான். அதனைக் கேட்ட சூரிய மகள் கர்ணன், “தேவராஜனே! கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்” என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள் போலும்! அதிலும், “தன்னை அண்டினவர்க்கு அவரவர் வேண்டியவற்றை வேண்டிய படியே கொடுக்கின்ற கற்பக விருட்சத் தையும், காமதேனுவையும் பெற்றிருக் கின்ற தேவராசன் இந்திரனே என்பால் வந்து அவன் விரும்பியவற்றை யாசித்துப் பெறுவானாயின் அதனைவிட வேறு சிறந்த பாக்கியம் எனக்கு ஏது? அது நான் செய்த பேறே ஆகும்”என்றான்.
தெய்விகத் தன்மை கொண்ட வேல்
கர்ணன் கூறியதைக் கேட்ட சூரியன், “மகனே? நின்பால் உள்ள பாசத்தினால் கூறினேன். நான் செல்வதை ஏற்றுக் கொள்ளாமல் இந்திரனுக்குக் கவச குண்டலங்களை தானம் செய்யும் பொழுது அவனிடமிருந்து தெய்விகத் தன்மை வாய்ந்த வேல் ஒன்றினைப் பெற்றுக் கொள்க.அவனே கொடுப்பான். அது உனக்குப் போரில் பயன்படும்” என்று கூறி அப்பகலவன் மறைந்தான்.
சூரியன் சென்றபின், கிழ அந்தண வடிவந்தாங்கி, அரண்மனை அடைந்த இந்திரன் கர்ணன் முன் நின்றான். சூரிய மைந்தனான கர்ணன் எதிர் கொண்டு வரவேற்று, வணங்கி, இருக்கையிட்டு வேத முறைப்படி வழிபாடு செய்து, பின் “அந்தணரே! முன் செய்த நல்வினையால் தாங்கள் இங்கு வந்துள்ளீர்கள். என்னிடத் தில் வரக்காரணம் யாது ?”எனக் கேட்டான். அதற்கு கிழ அந்தணனாகிய இந்திரன், ”ஐயனே! வேண்டியவர்க்கு வேண்டியாங்கு வாரி வழங்கும் வள்ளல் இந்நிலவுலகில் நீ ஒருவனே என்று அறிந்து நெடுந்தூரத்திலிருந்து வந்துள்ளேன். உன்னுடைய கவச குண்டலங்களைப் பெற விரும்புகின்றேன்” என்றான்.
இந்திரன் கேட்ட அந்தக்கணமே, கர்ணன், தன் உடம்பாயிற்றே என்று சிறிதளவும் எண்ணாமல் தன் உடம்பைச் சிதைத்து அவன் விரும்பிய கவசத்தையும் குண்டலங்களையும் தானமாகக் கொடுத் தான். அங்க தேசாதிபதியின் உதார குணத்தைக் கண்டு விண்ணவர்கள் வியந்து பாராட்டி, மலர் மாரி பொழிந்தனர். இந்திரனும் தன் சுய உருவைக்காட்டி, “கர்ணா! உன் புகழ் மூவுலகிலும் கார் உள்ளளவும், கடல் உள்ளளவும், நீர் உள்ளளவும், நிலம் உள்ளளவும் என்றும் நிலைத்து நிற்கும் ” என்று வாழ்த்தி. மனமகிழ்ச்சியோடு உயர்ந்த வேற்படை ஒன்றினைக் கொடுத்துச் சென்றான். (இந்த வேல் தான் பாரதப் போரில் பதிநான்காம் நாள் கடோத்கஜனைக் கர்ணன் கொல்ல உதவியது).
சுவச குண்டலங்களைக் கர்ணன் அறுத்து தானம் செய்த பொழுது பாண்டவர்களின் வலப்பக்கம் துடித்தது. “அதனால் நன்மை விளையும் ” என்று காட்டகத்து இருந்த அப்பாண்டவர்கள் மகிழ்ந்தனர். அதே சமயத்தில் துரியோதனாதியருக்கு இடப் பக்கம் துடித்தது. அதனால் ஏதோ தீங்கு நேரப்போகின்றது என்று அவர்கள் அச்சம் கொண்டார்கள்.
மகாபாரதம் – 33 வனவாச ஆரம்ப காலத்தில் சூரிய பகவான் தர்மபுத்திரருக்கு அட்சய பாத்திரம்