சாவித்திரி கதைச் சருக்கம்
முன் ஒரு காலத்தில் வடநாட்டில் உள்ள மத்ர தேசத்தினை அசுவபதி என்னும் மன்னன் ஆட்சி புரித்தான். அவனுடைய மனைவியின் பெயர் மாலலி என்பதாகும். அவ்வரசன் பொறுமை, தன்னடக்கம் போன்ற நற்பண்புகளைப் பெற்றிருந்தான். குடிமக்களை நன்கு பாதுகாத்தான். அறச்செயல்கள் பல புரிந்தான்.
இத்தம்பதியினர்க்கு நீண்ட காலமாக பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தது. அதனால் அந்த அசுவபதி மன்னன் தன் ஐம்புலன்களை அடக்கி, கடுமையான தியமனத்தை மேற்கொண்டு சாவித்திரி தேவியைக் குறித்துப் பதினெட்டு ஆண்டுகள் கடுமையான தவம் செய்தான். அப்பொழுது சாவித்திரி தேவி தோன்றி “மேன்மையான குணங்களையுடைய ஒரு பெண் பிறப்பாள்” என்றாள். உடனே அசுவபதி, ‘ஆண்மகவைக் கொடுப்பாயாக என வேண்ட, அச்சாவித்திரிதேவி, “அஞ்ச வேண்டா பிறக்கும் உன் மகளால் உனக்குப் புதல்வர்கள் வர்கள் பிறப்பார்கள்” என்று கூறி மறைந்தாள்.
சாவித்திரி தேவியின் அருளால் மாலவி கருத்தரித்தாள். உரிய காலத்தில் ஓர் அழகான பெண் மகவு பிறந்தது. சாவித்திரி தேவியின் அருளால் பிறந்த பெண்ணிற்குச் சான்றோர்கள் ‘சாவித்திரி’ என்று பெயரிட் டனர். இலக்குமியே உருவெடுத்தாற் போன்று வளர்ந்த அப்பெண் அழகும் பொலிவும் அறிவும் பணிவும் கொண்ட பண்புகளையுடைய நங்கையாக வளர்ந்தாள். திருமணம் செய்தற்குரிய பருவம் அந்நங்கைக்கு வந்ததும் பெற்றோர் திருமணம் செய்ய தகுதியான வரனைத் தேடலாயினர்.
சத்தியவான்
ஒருநாள் நாரத முனிவர் வந்து, அசுவபதி யிடம், ‘சாவித்திரி யாரைத் தேர்ந்தெடுத்துச் சொல்கின்றாளோ அவனுக்கு நீங்கள் மணம் செய்விய்யுங்கள் என்று சொல்லிச் சென்றார். அதன்படியே சாவித்திரியின் விருப்பத்தை அறிய, “மகளே! நீ யாரை மணக்கப் போகின்றாய்!” என்று கேட்டார். அதற்குச் சாவித்திரி, “சாளுவ தேசத்து மன்னனாகிய த்யுமத்ஸேனன் என்பவனின் தவச் செல்வன், மன்மதன் போன்ற அழகுடையவன்; சத்தியவான் என்ற பெயருடையவன் ஒருவன் உள்ளான். அவனுக்கு என்னை மணம் செய்து கொடுங்கள்” என்று கூறினாள். உடனே அசுவபதி, தன் மகள் கூறியதைப்பற்றி நாரதரிடம் கூறினாள். அதற்கு நாரதர், ‘மன்னரே! அந்த த்யுமத்ஸேனன் ஒரு குருடன். மேலும் பகை மன்னரால் நாட்டை இழந்து, தன் மனைவியோடு காட்டிலே தவம் செய்கின்றான். அவன் மகன் தான் சத்தியவான் என்பவன். அவன் சூரியனை ஒத்த ஒளியும், பிருகஸ்பதியை யொத்த அறிவும், இந்திரனைப் போன்ற வன்மையும், நிலத்தைப் போன்ற பொறுமையும் வாய்ந்தவன். தாய் தந்தையரிடத்தில் மிக்க பணிவுள்ளவன். பிறரிடம் அன்பு காட்டுபவன். வள்ளல் தன்மை மிக்கவன்; உண்மையே பேசுபவன்; பெருந்தன்மையுடையவன். பல தற்குணங்களைப் பெற்றுச் சான்றோனாகத் திகழக்கூடியவன். இத்தகைய ஏற்றமிகு பண்புகளைப் பெற்ற அவன் இன்னும் ஓர் ஆண்டுதான் உயிர் வாழ்வான் ” என்று கூறினார்.
‘சத்தியவான் இன்னும் ஓர் ஆண்டுதான் உயிரோடு இருப்பாள்” என நாரதர் கூறியதைக் கேட்ட அசுவபதி, திடுக்கிட்டு மனம் கலங்கி, “மகளே’ சத்தியவானைத் தவிர வேறு யாரையாவது மணந்து கொள்க. அதுதான் நல்லது” என்று கூறி னார். அதற்குச் சாவித்திரி “சத்தியா வானைத் தவிர வேறு வாரையும் மனத் தாலும் நினையேன்; அவளே என் கண வன் ” என்று உறுதிபடக் கூறி விட்டாள். சிந்தை கலங்கிய அகவபதியிடம் நாரதர் உமையம்மையைக் குறித்து காரடையான் நோன்பினை மேற்கொள்ளுதலாலும், தனது கற்பின் திண்மையாலும், நின்மகள் தன் கணவருக்கு நீண்ட ஆயுளை வாங்கிக் கொடுப்பாள். கலக்கம் கொள்ளாது அந்தச் சத்தியவானுக்கே நின் மகளை மணம் செய்து கொடுப்பாயாக” எனக் கூறிச் சென்றார். (காரடையான் நோன்பு என்பது மாசியும், பங்குனியும் கூடும் நாளில் தம் கணவரின் தீர்க்காயுளைக் குறித்துக் காரடையை உணவாக கொண்டு பார்வதி யைக் குறித்து மகளிர் கைக்கொள்ளும் விரதம் ஆகும்).
சத்தியவான்-சாவித்திரி திருமணம்
நாரதர் கூறியதை ஏற்று, அசுவபதி, தன் மனைவி மாலவியோடும், தன் மகள் சாவித்திரியோடும் சாளுவ தேசத்து மன்னன் த்யுமத்ஸேனன் தவம் செய்கின்ற காட்டினை அடைந்தார். அங்கு குருடனாக வாழ்ந்த த்யுமத்ஸேனன் ஒப்புதல் பெற்றுத் தன் மகள் சாவித்திரியை அசுவபதி மன்னன், சத்தியவானுக்குத் தாரை வார்த்து கொடுத்துத் திருமணம் செய்து வைத்தார். தகுந்த சீர் வரிசைகள் பல செய்தார். தன் மகளை அவர் மாமனார் மாமியாராகிய த்யுமத்ஸேனன்- சைப்யை தம்பதியரிடம் விட்டு விட்டுத் தன் மனைவியுடன் தேரேறி தன் ஊர் புகுந்தார்.
சாவித்திரி புக்ககத்தில் தன் மாமி, மாமனார்க்கும், கணவர்க்கும் குறிப்பறிந்து அவரவர் கருத்தின்படி பணிவிடைகள் செய்து வந்தாள். சத்தியவானுக்கு ஆயுள் இன்னும் நான்கே தினங்கள் இருத்தலை அறிந்த சாவித்திரி முதல் மூன்று நாட்கள் பார்வதியைக் குறித்து முறைப்படி காரடையான் நோன்பு எடுத்து உபவாசம் இருந்தாள். ள். நான்காம் நாளன்று கண வனைப் பிரிதல் கூடாது என்று எண்ணிய அவள், அவனுடனேயே யே காட்டிற்குச் சென்றாள். அவள் கணவன் காட்டில் முளைத்துள்ள தர்ப்பைப்புல், சமித்து, காய்கனிகள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து, தன் மனைவி சாவித்திரியிடம், ”சாவித்திரி! என் கால்கள் நடக்க முடியாதபடி சோர் வடைந்துள்ளன. கைகள் நடுங்குகின்றன. கண்கள் சுழலுகின்றன. இதற்குக் காரணம் யாது?” என்று கேட்டான். கேட்ட அவன் பதிலை எதிர்பாராது மிகுந்த தளர்ச்சி யினால் அவள் தொடையில் படுத்தான்.
ஆயுட்காலம் இன்றோடு முடிந்தது
அப்போது முத்தலை சூலத்தையும் பாசக் கயிற்றையும் ஏந்தி, அங்கு வந்த இயமன் தன் கணவன் சத்தியவான் உயிரைக் கவர்ந்து செல்லுதலைச் சாவித்திரி கண்டாள். உடனே அவள், அந்த இயமனின் இரு பாதங்களிலும் வணங்கி ”ஐயா! நீங்கள் யார்? என் அன்பிற்குரிய கணவரின் உயிரை எடுத்துப் போகின்றீரே இது நியாயமா? தர்மமா?” என்று கேட்டாள். ள், அதனைக் கேட்டு இயமன் சிரித்து,’பெண்ணே! நான் அட்டதிக்கு பாலகர்களில் ஒருவன். தெற்குத் திசைக்கு அதிபதி; இயமன் என்பவன். உன் கணவனின் ஆயுட்காலம் இன்றோடு முடிந்து விட்டது. அதனால் அவனுயிரை கொண்டு செல்கின்றேன். யாருமே காண முடியாத என் வடிவை நீ உன் கற்பின் திண்மையால் பார்க்க முடிந்தது; நல்லது; பெண்ணே? உலகத்தில் இறக்காதவர் யார் இருக்கின்றார்கள்? உறங்குவது போன்றது இறப்பு. உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு. ஆதலின் இறப்பும் பிறப்பும் உலக இயல்பாகும். எனவே நீ உன் இருப் பிடத்திற்குச் செல்வாயாக ” என்று கூறினான்.
ஆனால் சாவித்திரி திரும்பிச் செல்லாது இயமனைப் பின் தொடர்ந்தாள். தொடர்ந்து சென்ற அவள் இயமனிடம், “என் கணவரைப் பிரிய மாட்டேன். அவருடன் வருவேன்” என்று உறுதியாகக் கூறினாள். அதனைக் கேட்ட இயமன் ”சாவித்திரி! உன் ஆயுள் இன்னும் முடிய வில்லை. அதனால் உன்னை அழைத்துப் போக முடியாது. தன் கணவனோடு யமலோகத்துக்கு வர விரும்பும் பெண்கள் உலகில் யாராவது இருக்கின்றார்களா? இல்லையே. எனவே உன் கணவனை உன்னுடன் அனுப்ப முடியாது. உன்னை யும் அவனுடன் அழைத்துச் செல்ல முடியாது. வேண்டுமானால் கணவனு யிரைத் தவிர வேறு எதையாவது கேள் தருகிறேன்” என்றான். அதற்குச் சாவித்திரி, “என் மாமனார் த்யுமத்ஸேனன் உடல் மெலிந்து கண்ணில்லாமல் வருந்துகிறார். உம்முடைய அருளால் அவர் கண்ணும் வலிமையும் பெற அருள் புரிதல் வேண் டும் என்று கேட்க. இயமன் அதனைக் கொடுத்து, மேற் செல்ல முனைந்தான். சாவித்திரி அப்போதும் அவனை விடாது பின் சென்றாள். அதனைக் கண்டு இயமன், “பெண்ணே! நீ களைப்படைந்துள்ளாய். எனவே திரும்பிச் சென்றுவிடு. கணவனல் லாத வேறு வரத்தைக் கொடுக்கிறேன். பெற்றுக்கொண்டு சென்று விடு” என்றான். அதனைக் கேட்ட சாவித்திரி “நாங்கள் பகைவரிடம் இழந்த நாட்டை மீண்டும் எங்களுக்குக் கிடைக்க அருள்புரிய வேண்டும்” என்றாள். ‘அவ்வாறே ஆகுக’ என்று கூறி இயமன் செல்லலானான்.
இயமன் மகிழ்ந்தான்
சாவித்திரி விடாது அவன் பின் தொடர்ந்து, “கூற்றுவனே! உம்மால் உலகத்தவர் அவரவர் வினைகளுக்கு ஒத்தவாறு அடக்கியாளப்படுகின்றனர்.
வேண்டுமென்றே நீர் எவரையும் கொண்டு செல்வதில்லை. அதனால் தான் நீர் இயமன் என்று பேர் பெறுகின்றீர். மனம், உடல், சொல் ஆகிய முக்கரணங்களாலும் சான்றோர் எவ்வுயிர்க்கும் தீங்கிழையார்; அருளும் கொடையும் அவர்களுடைய அறநெறிகள் என்று இனிமையாக பேசினாள். அவளுடைய இனிமையான வார்த்தைகளைக் கேட்ட இயமன் மகிழ்ந்து சத்தியவானைத் தவிர வேறோர் வரம் கேள் மூன்றாம் முறையும் தருகிறேன். பின்னர் நின் இருப்பிடத்திற்குச் சென்றுவிடு என்றான். அதனை கேட்ட சாவித்திரி, ”ஐயனே! என் தந்தைக்கு புதல்வர் இல்லை. நூறு பிள்ளைகள் கொடு” என்று கேட்டாள். அவ்வாறே ஆகுக, நெடுந்தூரம் வந்து விட்டாய் திரும்பிவிடு என்றான். ஆனால் சாவித்திரி விடவில்லை. பின்னேயே சென்று “சுவாமி! நீர் சூரியனுடைய புதல்வன் ஆவீர். சூரியன் எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒளியைத் தருகின்றது. அதுபோல நீரும் ஆயுட் காலம் முடிந்திட்டால் இளையவர் என்றோ, குழந்தை என்றோ, முதியவர் என்றோ பார்ப்பதில்லை. வலியவர்- மெலியவர் என்றும் பார்ப்பதில்லை. அவருடைய உயிரை எடுத்துச் சென்று விடுகின்றீர். அதனால்தான் உன்னை அறத்தலைவன் (தர்மராஜன்) என்கின்றனர். என்று மேலும் பல இனிய மொழிகளைக் கூறினாள்.
நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும்
சாவித்திரியின் நயமான உரைகளைக் கேட்டு இயமன் மகிழ்ச்சியடைந்து, சாவித் திரி, மிக மிக இனிமையாகப் பேசுகின் றாய். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். “உன் கணவன் உயிரைத்தவிர வேறு ஒன்றைக் கேள் .நான்காவது வரமாகத் தருகிறேன். பெற்றுக்கொண்டு திரும்பி விடு ” என்றான். அதற்கு அவள் ”அண்ணலே! எங்களுக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்று கேட்டாள். இயமனும் ”அவ்வாறே ஆகுக. நெடுந் தூரம் வந்து விட்டாய் திரும்பி விடு” என்று கூறினான்.
கேட்டார்ப் பிணிக்கும் தகைய வாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் ” (சொல்வன்மை -3) என்ற குறளுக்கு சாவித்திரி அன்றே இலக்கியமாய்த் திகழ்ந் தாள். அதனால் அவள் இயமனைப் பின் தொடர்ந்தாள். அவனிடம், “பெருமானே/நல்லோர் எப்பொழுதும் அறநெறியில் நிற்பர். அவர்கள் மனம் ஊச ஊசலாடுவ தில்லை. நல்லோர் நட்பு நற்பயனை அளிக்கத் தவறாது. நல்லோரைக் கண்டு நல்லோர் நடுங்க மாட்டார். நல்லோர் அருள் வீண் போகாது. நல்லோராகிய உம்மை நம்பி நீண்ட தூரம் வந்து விட்டேன். என்னை வெறுங்கையுடன் அனுப்பமாட்டீர்கள்” என்றாள். அதனைக் கேட்டு இயமன் மிக்க மகிழ்ச்சியடைந்து, ”சாவித்திரியே! பிறரைக் கவர்கின்ற முறையில் இனிமையாகப் பேசுகின்றாய். எனக்கு உன்பால் இப்பொழுது மரி யாதையே ஏற்பட்டுள்ளது இன்னுமொரு வரம் கேள் கொடுக்கின்றேன்” என்றான். சாவித்திரி அதனை கேட்டு. “எம் பெருமானே! எங்களுக்கு பிள்ளைப்பேறு அருளினீர். மிக்க மகிழ்ச்சி. ஆனால் கணவனில்லாமல் அப்பயனை பெற முடியாது. பிள்ளைப்பேறு வரத்தையும் கொடுத்து, கணவன் உயிரையும் பறித்துப் போதல் முறையன்று. பிள்ளைப்பேறு அருளிய உங்கள் வார்த்தை உண்மை யாகவே விளங்கட்டும்” என்று கூறினாள்.
வெல்லும் சொல் இன்மை அறிந்து பேசிய சாவித்திரி மேல் இயமனுக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் உண்டா யின. அதனால் இயமன் தன் பாசக்கயிறு பிணைப்பிலிருந்து சத்தியவானை விடுவித்து, “தம்பதிகளாக நீங்கள் நானூறு ஆண்டுகள் வாழ்வீர். உனக்கு பிறக்கும் பிள்ளைகள் நூற்றுவரும் ‘சாவித்திரர் என்று உன் பெயரால் வழங்கப்பட்டு நல்லரசராக விளங்குவர். என்று மனமாரக் கூறி விடைபெற்றுக் கொண்டான். அக்கணமே மறைந்தான்.
கனவு கண்டேன்
சாவித்திரி ஒருகணப்போதில் தன் கணவன் உடல் இருக்குமிடத்திற்கு வந்தாள். அவள் வந்தவுடன், அவனும் உறங்கி விழிப்பவன் போல உயிர் பிழைத்து எழுந்ததைக் கண்டு வியந்தாள். உயிர் பெற்றெழுந்த சத்தியவான், தன் மனைவியை நோக்கி. “சாவித்திரியே! யாரோ ஒருவன் என்மென்மையான தளர்ந்த கைகளைக் கட்டி விட்டுப் போய் விட்டான். அதன்பின் ஒரு பெண் வந்து என் கைக்கட்டை அவிழ்த்து என்னை மீட்டாள்” என்று ஒரு கனவு கண்டேன். அது உண்மையாக நடந்ததைப் போன்றுள்ளது. என்று கூறினான், அதனைக் கேட்டு, சாவித்திரி நடந்தன அனைத்தையும் கூறிய தோடு, இயமனிடம் ஐந்து வரங்களைப் பரிசையாக பெற்றதையும் கூறினாள். இருவரும் மனம் நெகிழ்ந்து இறைவனைப் போற்றி வணங்கினர். பின்னர் சாவித்திரி, தன் கணவனை அழைத்துக் கொண்டு புக்ககம் புகுந்தாள். மாமனாராகிய த்யுமத் ஸேனன் கண்பார்வை பெற்றிருத்தலைக் கண்டு வியந்து பெருமகிழ்வு கொண்டாள்.
அங்கு வந்திருந்த கௌதமர், பரத்வாசர், ஆபஸ்தமர் போன்ற முனிவர்களும், மாமனாரும், மாமியாரும் நேரம் பொறுத்து வந்ததற்குரிய காரணம் யாது என கேட்ட னர். நடந்தன அனைத்தையும் தொகுத்துக் கூறினாள். கேட்ட அவர்கள் சாவித்திரியை மனமாரப் பாராட்டி, சத்தியவான் சாவித்திரி தம்பதியினர் நீண்ட காலம் எல்லா நலன்களையும் பெற்று வாழுமாறு வாழ்த்தினர்.
மாலவர்
அதே நேரத்தில் வலிமையால் நாட்டை கைப்பற்றிய பகை மன்னன் இறந்து போனான் என்று கூறி, அந்த சாளுவ தேசத்து மக்கள் மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்டி கொண்டனர். த்யுமத்சேனனும் மக்களின் விருப்பத்தை ஏற்று தன் மனைவியோடும். தன் மகனோடும், தன் மருமகள் சாவித்திரியோடும் முனிவர்களோடும் தவமிருந்த காட்டினை விட்டு நீங்கி சாளுவதேசத்தை அடைந்து ஆட்சிப் பொறுப்பை மக்கள் மகிழ்ந்து போற்றும் வண்ணம் ஆண்டு வரலானான். சாவித்திரி யின் தந்தை அசுவபதிக்கு இயமன் கொடுத்த வரத்தின்படி சாவித்திரி தம்பியராக நூறு பிள்ளைகள் ‘மாலவர்’ எனக் கூறும்படி பிறந்தனர். அதே போல சாவித்திரிக்கும் ‘சாவித்திரர்’எனப் போற்றும்படி நூறு பிள்ளைகள் பிறந்தனர்.
ஆக, அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ லாயினர்.
இவ்வாறு கற்பில் சிறந்த பதிவிரதையான சாவித்திரியின் வரலாற்றைச் சொல்லிய மார்கண்டேயர், தர்மரிடம் அந்த சாவித்திரியைப் போன்றவள் திரெளபதி ஆவாள். தர்மராசனே! எல்லா நலன்களை யும் பெறுவாய். கவலற்க” என்று கூறி ஆசீர்வதித்து, சிரஞ்சீவியான அந்த முனிவர் பாண்டவர்களிடம் விடை பெற்றுச் சென்றார்.
மகாபாரதம் – 32 சாவித்திரியின் நயமான உரைகளைக் கேட்டு இயமன் மகிழ்ச்சி | Asha Aanmigam