கந்தர்ப்பகிரி காட்டில் தர்மர் முதலா னோர் தங்கியிருந்த காலத்து, முனிவர்கள் பலர் தர்மபுத்திரரிடம் வந்து, ”அரசே! யானை முதலான கொடிய மிருகங்களினால் நாங்கள் பெரிதும் துயருறுகின்றோம். எங்களை அவற்றிடமிருந்து காப்பாற்றுங் கள்” என்று வேண்டி நின்றனர். தர்ம புத்திரர் அதனைச் செவி மடுத்து, பீமனி டம், “இந்த முனிவர்களின் துயரினைக் களைய புறப்படுவாய்” என்று கூறி அவனைக் காட்டிற்குச் செல்லும்படி விடை தந்தார். பீமனும் காட்டிலுள்ள கொடிய மிருகங்களை வேட்டையாடச் சென்றான்.
அப்பொழுது சடாசூரன் என்ற வலிமை வாய்ந்த அரக்கன் ஒருவன், அந்தண வடிவில் வந்து திரௌபதியைக் கவர்ந்து தூக்கி வானத்து வழியே செல்லலாயினன். திரௌபதியின் அலறலைக் கேட்டு, மாத்ரிதேவி புத்திரர்களான நகுல சகா தேவர்கள் விரைந்து சென்று அந்த அரக்கனுடன் கடுமையாக போரிட்டுத் தடுக்கலாயினர்.
சடாசூரனுடன் போர்
அதே சமயத்தில், விலங்கினங்களை யெல்லாம் வேட்டையாடி, அபயம் வேண்டி வந்த முனிவரது துயரினை யெல்லாம் போக்கி பீமன் திரும்பி வந்து கொண்டிருந்த நேரத்தில் சடாசூரன் திரௌ பதியை கவர்ந்து சென்றதையும், திரௌபதி கதறியதையும், அதனைக் கேட்டு நகுல சகா தேவர்கள் விரைந்து சென்று அந்த அரக்க னோடு போரிட்டு மேலே செல்லவிடாது தடுத்து கொண்டிருப்பதையும் அறிந்து அவ்விடத்துக்கு விரைவாகச் சென்றான். சடாசூரனைக் கண்டு இடிபோல முழங்கி, அதட்டிக் கோபித்து, பருத்த ஓர் ஆச்சா மரத்தை பிடுங்கி அந்த சடாசூரன் மேல் எறிந்தான். அதனால் சடாசூரன் திரௌ பதியை விட்டு விட்டு ஒரு பெரிய மலை யைப் பெயர்த்து பீமன் மேல் எறிந்தான்.
அதனை பீமன் தன் கதையினால் அடித்து நொறுக்கித் தள்ளினான். பின்னர் பீமன் சடாசூரன் மேல் பாய்ந்து அவனைப் பூமியின் மேல் தள்ளி தன் கால்களால் மிதித்துத் துவைத்தான். அவனுடைய இரு கோரைப் பற்கள் உதிர்ந்து கீழே விழும்படி குத்தி ஆர்ப்பரித்தான். கோபம் அடங்காத அரக்கனோ பீமனை எதிர்த்துப் போரிட்டு, அவன் மார்பினில் நையப் புடைத்தான். பின்னர் இருவரும் கடுமையாகவும் ஆக்ரோஷமாகவும் மல்யுத்தம் செய்யலா யினர். மிக உக்கிரமாக மல்யுத்தம் செய்து கொண்டிருந்த காலத்தில், பீமன் பொங்கி எழுந்தான். அவனை அடித்துக் குத்தித் துவம்சம் செய்தான். பின்னர் தன் இரு கைகளால் எலும்பு பொடிபட பிசைந்து உருண்டையாக்கி வானத்திலே பந்தென எறிந்தான். அந்த அரக்கன் பூமி நடுங்கிக் குலுங்கும்படி கீழே விழுந்து இறந் தொழிந்தான்.
ஒன்பது ஆண்டுகள் கழிந்தன
சடாசூரனைக் கொன்று வெற்றி பெற்று இரு தம்பியர்களுடனும் திரெளபதி யுடனும் பீமன் திரும்பி வந்து,தமையனார் தர்மபுத்திரர் திருவடிகளில் விழுந்து வணங்கி நடந்தவற்றைக் றைக் கூறினான். அதனைக் கேட்ட தர்மபுத்திரர் மிக்க மகிழ்ச்சி அடைந்து அவனைத் தழுவிக் கொண்டார். அங்கிருந்து தர்மபுத்திரர் தம்பியரோடும் திரௌபதியோடும் குரு சிஷ்ய கிரமத்தை உலகுக்குணர்த்த எம்பெரு மான் நாராயணராயும் நரனாயும் அவ தரித்து, அந்நரனுக்குத்தானே ஆசாரியனாக இருந்து (நாராயணர்) ஒப்பற்ற திரு மந்திரத்தை உபதேசித்து அருளிய பத்ரிகா ஆசிரமத்தை அடைந்தார்.
அங்கு திருமாலின் அம்சமாக விளங்கிய அஷ்ட கோண மாமுனிவர் இவர்களை எதிர் கொண்டழைத்து, தம்முடன் பல நாட்கள் தங்கியிருக்கச் செய்தார். அஷ்ட கோணல்களை உடம்பிலே பெற்றிருக் கின்ற ன்ற காரணத்தால் இவர் அஷ்ட கோண முனிவர் எனப்பட்டார். ஒவ்வொரு பிரம்மகற்பத்துக்கும் ஒவ்வோர் உறுப்பினுடைய கோணல் நிமிரும் படியான நெடிய ஆயுளைப் பெற்றிருந்தார். இந்த அஷ்ட கோண மகரிஷியின் ஆசிரமத்தில் வரையறுக்கப்பட்ட பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமும் என்ற இவற்றில் ஒன்பது ஆண்டுகளைக் கழித்தனர்.
இந்த அஷ்ட கோண முனிவர் ஆசிரமத் தின்கண் தங்கியிருக்கின்ற காலத்தில் திரௌபதி முனிவர்களின் பத்தினிமார் களோடு சேர்ந்து பெருகி வருகின்ற புதுப் புனல் ஆற்று வெள்ளத்தில் நீராடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது பொன் போன்ற அழகிய தாமரை மலர் ஒன்று அந்த ஆற்று வெள்ளத்தில் மிதந்து இவளருகே வந்தது. திரெளபதி மகிழ்ச்சியுடன் அதனை எடுத்து கொண்டு பீமனிடத்து வந்தாள். “இந்த பொற்றாமரை மலர் போன்று வேறோர் அழகிய மலரைக் கொணர்ந்து கொடுப்பீர்களாக” என்று வேண்டிக் கொண்டாள். உடனே பீமன், “இந்த தாமரை மலர் போன்ற வேறொரு மலரை நான் கொணர்ந்து கொடுக்கவில்லை யென்றால் கெளரவர் சபையில் கூறிய சபதத்தை நிறைவேற்றாதவனாகி விடுவேன் ” என்று மீண்டும் சபதம் செய்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மலர் வந்த நதிக்கரை வழியே எதிர்முகமாக போயினான்.
படைத்தலைவன் சாலேந்திரன்
வாயு வேகமாகச் சென்ற வாயு புத்திரன் பீமன் பலகாத தூரம் நடந்து சென்று முதலில் இயற்கை அழகு வாய்ந்த இரத்தினகிரி என்னும் ம மலையினை அடைந்தான். அங்கிருந்து குபேரனின் அழகாபுரிக்குச் சென்றான். அந்நகரின் நாற்றிசை வாயில்களுள் மேற்குத் திசை வாயிலுக்குச் சென்று தன் வருகையைத் தெரிவிப்பது போல வெள்ளிய சங்கை எடுத்து ஊதினான்.
அந்த சங்கின் ஒலியைக் கேட்டவுடன் அந்த அழகாபுரி நகரத்து மக்கள், தம் சேனைகளோடு அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களில் விஞ்சையன் ஒருவன் – உடனே ஓடி, குபேரனின் படைத்தலைவனாகிய மணிமாலனிடம் சென்று வணங்கி, ”படைத்தலைவரே! முன்னம் கணக்கற்ற பேரைக்கொன்று. வென்று, மந்தாரை மலர்களை கொண்டு சென்ற அந்த மானிடனே இப்போதும் நகரின் மேற்குத்திக்கு வாயிலின் கண் வந்துள்ளான் என்றான். அந்த மணிமாலனோ யாரிடத்தும் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக எண்ணாயிரம் வீரர்கள் கொண்ட நால்வகைக் சேனை களை, பீமனை எதிர்த்துப் போரிட ஏவினான். அணி தேர்,யானை, புரவி, ஆட்படையோடு எண்ணாயிரவர் அனற் பொறி பறக்கக் கோபித்து, ‘சத்தருகாநிதி” என்னும் தெய்விக கதாயுதத்தை ஏந்திய பீமனைச் சூழ்ந்து வளைத்தார்கள்.
பீமன் கோபத்தோடு வலிமை மிக்க வில்லை வளைத்து. கூரிய முனைகளை யுடைய அம்புகளை, தன்னை எதிர்த்துவந்த சேனைகள் மீது செலுத்தி, அவற்றை நாசமாக்கலானான். இதைக் கண்டு வெகுண்ட ஜாலங்களில் சிறந்து விளங்கு ஜாலேந்திரன் என்னும் படைத்தலைவன், பீமனை நோக்கி, “பீமனே! எங்களை எதிர்க்கின்ற நீ யார்? உண்மையை உடனே உரைக்கவும்” என்று கோபத்துடன் கேட்டான்.
அதற்கு பீமன், “படைத்தலைவனே! முன்பு ஒரு முறை இந்த அழகாபுரிக்கு வந்து வலிமை மிக்க இங்குள்ள கொடிய அரக்கர்களைக் கொன்றொழித்து, பொன் போன்ற மந்தார மலரைக் கொண்டு சென்றவன் நான். என் பெயர் பீமன் என்பதை நீங்கள் தெரிந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். இப்பொழுது பொன்மய மான தாமரை மலர் எனக்கு வேண்டும். அதனைக் கொடுத்தால் உங்கள் யாரையும் கொல்ல மாட்டேன். மலருடன் சென்று விடுவேன். மலர் கொடுக்க மறுத்தால் உங்கள் அனைவரையும் கொன்றொழிப் பேன்” என்று சிங்கநாதம் செய்தான்.
அதனைக் கேட்ட படைத்தலைவன் சாலேந்திரன், “அற்ப மானிடனே! தெய்வத் தன்மை பொருந்திய உயர்ந்த ஒரு மலருக் காக சாதாரண மனிதனாகிய நீ இங்கு வரலாமா? அதன் மீதுள்ள ஆசையை விட்டு விடு; மலருக்காக இனியும் இங்கு இருந்தால் உன் உயிரை எடுப்பேன்” என்று இடி முழக்கம் போல உரத்த குரலில் பேசி, தன் படைகளோடு சென்று பீமனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.
தன்னைப் பிடிக்க வந்த அந்த எண்ணாயிரம் வீரர்களையும் தன் பாணப் பிரயோகத்தால் அழித்தான். போரிட வந்த வித்யாதரர் கூட்டத்தையும், வலிமை மிக்க சாரணர் என்ற தேவசாதியாரையும், வெற்றி பொருந்திய தன் கதாயுதத்தைக் கொண்டு அழித்து நாசமாக்கினான். அதற்குப் பின்னும் அரக்கர்களும் இயக்கர்களும் நால்வகைப் படைகளோடு கடலென பீமனைச் சூழ்ந்து கொண்டு பல்வேறு விதமான கொடிய ஆயுதங்களை அவன் மீதெறிந்தனர். அவை அனைத்தையும் தம் கதையினால் அழித்து அவர்களையும் ஓட ஓட விரட்டியடித்தான்.
மாயப்போர் செய்த மணிமாலன்
தோற்றோடிய சிலர் குபேரனது படைத்தலைவனாகிய மணிமாலனிடம் சென்று அவனைத் தொழுது பீமன் செய் கின்ற அழிவினை எடுத்து கூறினர். அதனைக் கேட்ட அந்த மணிமாலன் மிகுந்த கோபத்துடன் ஒரு யானையின் மேல் ஏறிக்கொண்டு போர்க்களம் சென்று பீமனுடன் உக்கிரமாகப் போரிட்டான். அவன் ஆயுதங்கள் எல்லாம் பீமனால் அழிந்து போகவே ஒரு பெரிய மரத்தைப் பிடுங்கி அடித்து நொறுக்கினான். மேலும் அவன், அனலை கக்குகின்ற அம்புகள் பற்பலவற்றை பீமன் மேல் அடுத்தடுத்து ஏவினான். பீமன் அவற்றையெல்லாம் எளிதில் அழித்தான். அதன் பின் பீமன் கோபத்துடன் தன்னிரு கைகளால் மணிமாலனுடைய பரந்த மார்பினைத் தாக்கினான். அதனால் சோர்வடைந்த மணிமாலன், “இவனுடன் நேராக நின்று போர் செய்து ஜெயிக்க முடியாது” என எண்ணி நெருப்பு மழையென அம்புகளைச் சிந்தி, விண்ணிலே மறைந்து மாயப்போர் செய்யலானான். உடனே பீமன் வைஷ்ணா வஸ்திரத்தை விடுத்து அவன் செய்த மாயைகளையெல்லாம் சூரியன் இருளை அழித்தொழிப்பது போல ஓடச் செய்து அழித்தொழித்தான். அதனால் சினந்த மணிமாலன் முத்தலை சூலத்தை பீமன் மேல் ஏவினான். பீமன் அதனை எளிதில் அழித் தொழித்து விட்டு, அவன் பூமியில் விழும்படி பிரம்மாத்திரத்தை எடுத்து முறையாக மந்திரம் ஓதி, வழிபட்டுப் பிரயோகம் செய்தான். பீமன் விட்ட பிரம்மாத்திரம் மணிமாலன் மார்பினைத் துளைத்து ஊடுருவி அப்பால் செல்ல, அவன் கீழே விழுந்து இறந்தொழிந்தான். தங்கள் படைத்தலைவன் இறந்தொழிந் தான் என்பதை அறிந்தவுடன் மணிமால னுடன் வந்த சேனைகளெல்லாம் நிலை குலைந்து தடுமாறிப் புறங்காட்டி ஓடி அழகாபுரி போய் மறைந்து கொண்டன.
அஷ்டகோண மகரிஷியின் ஆசிரமத் திலிருந்த தர்மபுத்திரர், பீமனைக் காணாமையால் மனம் வருந்தினார். பின்னர் திரெளபதி மூலம் பொற்றாமரை மலர் கொண்டு வருவதற்காக மீண்டும் அழகாபுரி சென்றுள்ளான் என்பதை அறிந்து மிக்க துயரம் அடைந்தார். அப்பொழுது தர்மபுத்திரரை நோக்கி, உரோமச முனிவர், “யுதிஷ்டிரரே! வருந்த வேண்டாம். இதுநாள் வரையில் பீமன் அழகாபுரியில் வெற்றி பெற்று கொண்டிருக் கின்றான். ஆனால் இனி குபேரனால் அவனுக்குத் தொல்லை ஏற்படலாம்; அந்த தொல்லை வருவதற்கு முன் அந்த பீமனது இனிய மகன் கடோத்கஜனை இங்கு வரும்படி செய்யுங்கள். அவன் மூலம் பீமன் இருக்கு மிடம் செல்லலாம்” என்று கூறினார். உரோமச முனிவர் ஆலோசனை படி தர்மபுத்திரர் கடோத்கஜனை வரும்படி நினைத்தார். நினைத்த மாத்திரத்தில் கடோத்கஜன் அவர் முன்னே வந்து அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான். அவனிடம் தர்மபுத்திரர், “உன் தந்தை பீமன் இருக்குமிடத்திற்கு இப்பொழுதே நாம் செல்ல வேண்டும்” என்றார். உடனே கடோத்கஜன் பேய்கள் பூட்டிய தனது தேரில் தர்மபுத்திரர் முதலிய அனைவரையும் ஏற்றிக்கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் அழகாபுரியில் விமன் இருக்கு மிடத்தை அடைந்தான்.
பீமனைக் கண்ட தர்மர், பீமா! திரௌபதியின் வார்த்தையைக் கேட்டு முன் ஒருமுறை எங்களிடம் சொல்லா மலேயே மந்தார மலர் கொணர்வதற்காக இங்கு வந்து இயக்கர்களைக் கொன்றாய். இப்போதும் அவள் பேச்சை மட்டும் கேட்டுக்கொண்டு எங்களிடம் சொல்லா மலேயே பொற்றாமரை மலர் கொண்டு வருவதற்காக இங்கு மணிமாலன் முதலான பலபேரைக் கொன்றிட்டாய். இத்தகைய தகாத செயலைச் செய்யலாமா? உனக்கு அறிவு இப்படியா போகும்” என்று கடுமையாக நிந்தித்தார். பீமன் தன் தவறை உணர்ந்து வாய்மூடி மௌனியாக இருந்து, பின்னர் தன்னைப் பொறுத்துக் கொள்ளு மாறு வேண்டிக் கொண்டான்.
இந்தச் சமயத்தில் மணிமாலன் கொல்லப்பட்டதைக் குபேரனிடம் உயிர் பிழைத்தவர்கள் சொல்ல, சிவபெரு மானுக்கு உயிர் நண்பனாகிய அக்குபேரன், ”ஓர் அற்ப மானிடன் என் நண்பன் மணிமாலனைக் கொன்று விட்டானே? தனியாக வந்துள்ள அவன் என் நண்பனை மட்டுமன்று; அவனுடைய சேனைகளை யும் அழித்திருக்கின்றான். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். எனவே படை வீரர்களே! அந்த மானிடனை எங்கும் போகவிடாது வளைத்துக் கொள்ளுங்கள். பின் அவனைப் பிடித்து வாருங்கள்” என கட்டளையிட்டு நரனையே வாகனமாக வுடைய அக்குபேரன் சீறி எழுந்து தன் படையுடன் போருக்குப் புறப்படலானான்.
மகன் அறிவுரை
தன் தந்தை சீறி எழுவதைக் கண்டு மகன் உருத்திரசேனன். அஞ்சி, தந்தையைப் பணிந்து, ”தந்தையே! இந்திரர்கள் ஐந்துபேர் இந்திர சேனையை மணந்து கொள்வதற்காகவும், பூமி பாரத்தைத் தீர்ப்பதற்காகவும், பஞ்சபாண்டவர்களாக இங்கு பிறந்துள்ளனர். அந்த ஐந்து இந்திரர்களில் ஒருவனான வாயுவின் புதல்வன் தான் இங்கு வந்துள்ளான். அவன் நாடு பிடிக்க வரவில்லை. ஆகையால் அவனிடம் போரிட வேண்டிய அவசியம் இல்லை. அவன் விரும்பிய பொற்றாமரை மலரைக் கொடுத்தனுப்பினால் அவன் போய் விடுவான்” என்று கூறினான்.
தன் படைவீரர்கள் பலரைக் கொன்று விட்டதனால், பீமன் மேல் உள்ள கோபம் தணியாமல், உருத்திரசேனன் சொன்னதை யும் ஏற்காமல், “பீமனைக் கொல்லத்தான் போகிறேன்” என்று கூறி தன் புஷ்பக விமானத்தினில் ஏறினான்.
அதற்குள் அங்குவந்த தர்மபுத்திரர் கோபம் கொண்டுள்ள குபேரனைக் கண்டு, “அழகாபுரி மன்னரே! இருநிதி செல்வரே!” சிறியவன் பீமன் மேல் கோபம் கொள்ள வேண்டாம். “சிறியவர் செய்த சிறு பிழை யெல்லாம் பெரியோர் பொறுத்துக் கொள்ளுதல் இயல்பு, ஆகலின் பீமன் செய்த குற்றத்தைப் தப் பொறுத்துக் கொள் ளுங்கள்” என்று வேண்டிக் கொண்டார். குபேரனும் கோபத்தை விட்டு, தர்ம புத்திரரை உடன் அழைத்துக் கொண்டு அழகாபுரிக்குப் போனான். தன் அரண் மனையைப் போய்ச் சேர்ந்தவுடன் குபேரன், தர்மபுத்திரர் முதலானோர்க்கு இனிய விருந்தளித்து. உபசரித்து, நல்லாடைகள், மிகுதியான செல்வங்கள் முதலானவற்றைக் கொடுத்தான்.
அதன்பின் குபேரன் தர்மபுத்திரரிடம், “தர்மபுத்திரரே! நேற்று தேவேந்திரனுடைய சபையில் உன் தம்பி அர்ச்சுனனைக் கண்டேன். அவனுடைய பெருமைகளை யெல்லாம் பிறர் புகழ்ந்து சொல்லக்கேட்டு அறிந்து கொண்டேன். நாளைய தினம் தன் தந்தை இந்திரனோடு உன்பால் நலமுடன் வந்து சேருவான். மீண்டும் உனக்குரிய நாட்டைக் கைப்பற்றி மன்னனாகி நெடிது காலம் ஆட்சி புரிவாய். வருந்தாதே” என்று கூறினான். பின்னர் பீமனிடம் திரெளபதி விரும்பிய பொன்மயமான தாமரை மலரை கொடுத்தான். பீமனும் அதனை மகிழ் வுடன் பெற்றுக்கொண்டான் வந்திருந்த முனிவர்கள் எல்லோருக்கும் கும் சோட உபசாரங்கள் செய்து, அவர்களின் ஆசீர்வாதங்களைம் பெற்றுக்கொண்டான். அதன் பின்னர் அனைவருக்கும் விடை கொடுத்து அனுப்பினான்.
கடோத்கஜன் அதன்பின் பேய்கள் பூட்டிய தன் தேரில் தர்மபுத்திரர் முதலான வரை ஏற்றிக்கொண்டு முன்னே அவர்கள் வசித்திருந்த நந்திசேன முனிவரது ஆசிரமத் தில் கொண்டுபோய் விட்டான். தர்மபுத் திரர் கடோத்கஜனைத் தழுவிக் கொண்டு, “உன் தந்தையாகிய எங்கள் உயிரினைத் தகுந்த நேரத்தில் வந்து காப்பாற்றினாய்” என்று இனிய வார்த்தைகள் பல கூறி, முத்துச்சரங்களையும், அணிகலன்களை யும், மாலைகளையும் கொடுத்து விடையும் தந்து அக்கடோத்கஜனை அனுப்பிவைத்தார். அவனும் தர்மபுத்திரர் முதலான வரைத் தொழுது, அங்கிருந்து தன்னுடைய இடும்பவனத்திற்குப் போய் சேர்ந்தான்.