இரேணுகாதேவி திர
ஒரு நாள் இரேணுகாதேவி தன் கணவரின் நித்திய பூஜைக்காக நீராடவும் தண்ணீர் எடுத்து வரவுமாக கங்கைக்குச் சென்றாள். நீராடும் பொழுது வானத்திலே சென்று கொண்டிருந்த சித்திரதன் என்ற கந்தர்வனின் நிழல் வடிவம் கங்கை நீரில் பிரதிபலிப்பதைக் கண்டு மனத்தில் ஒரு கண நேரம் அவன் அழகில் மயங்கினாள். நீராடி வெளிவந்த அவள் தீர்த்தம் பிடிக்க செய்கின்ற மண்குடம் உருவாகவே இல்லை. அதாவது கங்கை மணலைப் பிடித்து குடமாக்கி அதில் தண்ணீரைப் பிடித்து வருவது அவள் வழக்கம். அன்று பல முறை முயன்று பார்த்தும் மணலில் குடமே உருவாகவில்லை. அதனால் அவள் மனம் நொந்து அறிவழிந்து ஆசிரமம் வந்தாள்.
ஜமதக்னி முனிவர் தம் மனைவி கந்தர்வனின் நிழல் வடிவத்தைக் கண்டு ஒரு கண நேரம் ஆசை கொண்டதனால் மானசீகமாகக் கற்பிழந்து போய் விட்டாள் என்பதை தம் ஞானக் கண்ணால் உணர்ந்தார். உடனே தம் முதல் மூன்று மைந்தர்களை அழைத்து, தங்கள் தாயை வெட்டி வீழ்த்தும்படி கூறினார். தவறு செய்தாலும் தாயில் சிறந்ததொரு கோயிலுமில்லை என்ற பழமொழியைப் பின்பற்றி, தன் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்து மறுத் விட்டனர். அதனால் முனிவர் கோபம் கொண்டு அவர்களை வேடர்களாகும்படி சபித்தார். அவர்களும் வேடர்களாகிச் சென்றனர். பின்னர் கடைசி மைந்தன் பரசுராமனை அழைத்துத் தன் தாயினைக் கொல்லும்படி கூற, அவர், ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை மட்டும் நினைவில் கொண்டு தன் கோடரியால் தன் தாயை வெட்டி வீழ்த்தினார். பின்னர் ஜமதக்னி முனிவர் பரசுராமனை அழைத்து, “மைந்தா! என் கட்டளையின் நன்மை தீமைகளை ஆராயாது அப்படியே நிறைவேற்றினாய்; மிக்க மகிழ்ச்சி, அதனால் உனக்கு வேண்டிய வரங்களைக் கேள் ” என்றார்.
அதனைக் கேட்ட பரசுராமர், “தந்தையே! என்னைப் பெற்ற தாய் இரேணுகாதேவி இழந்த உயிரையும் கற்பையும் மீண்டும் பெற வேண்டும், என் தமையன்மார் மூவரும் தாம் பெற்ற சாபத்திலிருந்து விடுதலை பெற்று, பின் தவத்தை மேற்கொண்டு சிறந்த தவ சிரேட்டர்களாக விளங்க வேண்டும். தாயை வெட்டிக் கொன்றதால் ஏற்பட்ட மிகப்பெரிய பாவம் என்னிடமிருந்து நீங்க வேண்டும். அதோடு நான் நெடிய தவம் செய்ய நீண்ட ஆயுளைத் தருதல் வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். ஜமதக்னி முனிவரும் மனமகிழ்ச்சியோடு, “நீ கேட்டுக்கொண்டபடியே ஆகுக” என்று கூறி அருள் புரிந்தார். தந்தையிடமிருந்து நீண்ட ஆயுளைப் பெற்றதால் பரசுராமர், அஸ்வத்தாமா, மாபலி, வியாசர், அனுமன், வீடணன், கிருபர் ஆகியவர்களோடு சேர்ந்து ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர் ஆனார்.
காமதேனுவைக் கவர்ந்து செல்லுதல்
பரசுராமர் காலத்தில் கார்த்த வீரியார்ச் சுனன் என்ற மன்னன் மாகிஷ்மதி பட்டணத்திலிருந்து நாட்டை ஆண்டு வந்தான். இவன் கிருதவீரியன் என்பவனின் குமாரன். தென்னிலங்கை வேந்தனாகிய இராவணனை வென்று ‘இராவணஜித் ‘ என்ற சிறப்புப் பெயரை பெற்றவன். இவன் தத்தாத்ரேய முனிவரின் அனுக் கிரகத்தினால் ஆயிரந் தோள்கள் உடைமை, போரில் வெற்றி, பூமியை முறைப்படி காத்தல், பகைவர்களால் அவமானப் படாமை, சகல லோகங்களாலும் போற்றப் படும் மகா புருஷன் ஒருவனால் மரணம் முதலிய வரங்களைப் பெற்றிருந்தான். தத்தாத்ரேயன் என்பவன் அத்திரி மாமுனிவ ருக்கு, அனசூயையிடத்து பிறந்தவன். இவனை விஷ்ணுவின் அம்சம் என்பர்.
ஒரு நாள் கார்த்த வீரியார்ச்சுனன் தன் சேனையுடன் காட்டிற்குச் சென்று வேட்டையாடி, பரசுராமன் தந்தை ஜமதக்னி முனிவர் ஆசிரமத்திற்கு வந்தான். அங்கு அம்முனிவர் பெருமான் தன்னிடத் திருந்த தெய்விகப் பசுவான காமதேனு வைக் கொண்டு, அம்மன்னனுக்கும் அவன் சேனைக்கும் பெரு விருந்தளித்து உபசரித் தார். அந்த அந்த காமதேனுவைக் கண்டதும் கார்த்த வீரியார்ச்சுனனுக்கு அதன்மேல் ஆசை ஏற்பட்டு, அம்முனிவர் பெருமான் அனுமதியில்லாமல் அப்பசுவைப் பலாத் காரமாக கவர்ந்து கொண்டு சென்றான். இதனைக் கேட்டு பரசுராமர் மிக்க கோபம் அடைந்தார். அதனால் அந்த கார்த்த வீரியார்ச்சுனனோடு கடுமையான முறை யில் போர் செய்து, அவனது பதினொரு அக்குரோணி சேனையைத் தோற்றோடச் செய்தது மல்லாமல் அம்மன்னனது ஆயிரந் தோள்களையும், அவனது தலையையும் தனது மழுவாயுதத்தால் வெட்டி வீழ்த்தி அவனைக் கொன்றார்.
ஜமதக்னியை கொல்லுதல்
இதனை அறிந்த கார்த்த வீரியார்ச்சுன னின் குமாரர்கள் மிக்க கோபங்கொண்டு, பரசுராமன் இல்லாத சமயம் பார்த்து, ஜமதக்னியின் ஆசிரமத்துள் அத்துமீறி உள்ளே சென்று அப்பரசுராமனின் தந்தை ஜமதக்னி முனிவரின் தலையை வெட்டி வீழ்த்திக் கொன்று பழிக்குப்பழி வாங்கி னார்கள். பின்பு வந்த பரசுராமன் ஆற்றொணாப் பெருங்கோபம் கொண்டு அந்த வீரியார்ச்சுனன் குமாரர்களையும், அவர்களுக்குத் து துணையாக வந்த அரசர்களையும் தன் மழுவாயுதத்தினால் வெட்டிக் கொன்றான். மேலும் தன் கணவன் ஜமதக்னி முனிவரின் தலையை துணித்ததை அறிந்து அவர் மனைவி இரேணுகாதேவி இருபத்தோருமுறை மார்பில் அடித்துக் கொண்டு புலம்பினாள். அதே போல பரசுராமனும் க்ஷத்திரிய மன்னர்களை இருபத்தொரு தலைமுறை தன் மழுவாளினால் கொன்றிட்டு, அந்த க்ஷத்திரியர்கள் குலத்தையே நாசம் செய்தான். அதன்பின் தான் செய்த சபதப்படி தான் கொன்ற அரசர்களது இரத்த வெள்ளத்தால் ‘ஸயமந்தபஞ்சகமென்று’ ஐந்து தடாகங்களை ஏற்படுத்தி அவற்றில் தன் தந்தைக்குத் தர்ப்பணம் முதலான வற்றைச் செய்து முடித்தான்.
பரசுராமன் பூமி
அதன்பின் பரசுராமன் நான் வென்ற உலகம் முழுவதையும் காசிப முனிவ னுக்கு. இருபத்தொரு தலைமுறை கடித்திரி யர்களைக் கொன்ற மாபெரும் பாவம் தொலையத் தானமாகக் கொடுத்திட்டான். பின்னொரு காலத்தில் அக்காசிய முனிவன், பரசுராமனைக் கர்வ பங்கம் செய்யும் பொருட்டு ‘எனக்குத் தானம் செய்த இடத்தில் நீ தவம் செய்தல் தகுமோ” என்று இகழ்ச்சியாகக் கேட்டான். அதனால் பரசுராமன் உடனே மேற்கு நோக்கி சென்று, வருணன் அனுமதியுடன் சைய மலையினின்று தன் கோடரிப்படையை கடலை நோக்கிச் வீசி எறிந்தான். அது, விழுந்த இடத்தைத் தாண்டிக் கடலில் சென்று, நீளம் அதிகமாயும், அகலம் குறைவாயுமுள்ள ஒரு செழிப்பான பிரதேசத்தை அக்கடலில் உருவாக்கிக் கொடுத்தது. அந்த பிரதேசத்திற்குச் சென்று பரசுராமன் தவம் புரியலானான். அவ்வாறு மழு ஆயுதத்தால் கடல் ஒதுக்கப் பரசுராமனுக்கென்று தந்த இடம்தான் தற்போதைய ‘கேரளம்’ ஆகும். இன்னும் அதனைப் ‘பரசுராமன் பூமி’ என்பர்.
இவ்வாறு பரசுராமன் கதையை உரோமச முனிவர் சொல்ல அதனைக் டுதர் கேட்டு தர்மபுத்திரர் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் பரசுராமர் அங்கு வந்தார். தர்மபுத்திரர் அவரை வணங்கி அவரின் ஆசி பெற்று, அவரின் அருளுக்கு பாத்திர ரானார்.
அதன்பின் தர்மபுத்திரர் அப்பரசுராம ரிடம் விடை பெற்று, கோதாவரி நதியை அடைந்து அதன் நீர்த்துறையில் நீராடினார். அப்பொழுது துவாரகாபுரி வாசனான கண்ணபிரான் அங்கு வந்தார். அவரை வணங்கி, அளவளாவி மகிழ்ந்த பிறகு அவரை மீண்டும் துவாரகாபுரிக்கு அனுப்பினார். அதன் பின் தன் தம்பிய ரோடும் பாஞ்சலியோடும், மாதவர் களோடும் நர்மதையாற்றுக்குச் சென்று அந்நதியில் புனித நீராடினார். பின்னர் நன்றாகப் பூசணை செய்தார். அந்ததிக்கரை யில் ஓர் அழகான சோலை இருக்கக்கண்டு, “இப்பொழில் யாருடையது? விளம்பு வீராக” என்று கேட்க, “இச்சோலை குற்றமற்ற சியவனன் சோலை” என்று கூற அவனுடைய கதையைக் கூறுங்கள் என்று கேட்ட, உரோமச முனிவர் சியவனன் வரலாற்றைக் கூறலானார்.
சியவனன் கதை
சையாதி (சர்யாதி) என்ற மன்னவன், மனைவியர் சூழக் காட்டி லுள்ள ஒரு மடுவில் நீராடினான். அப்பொழுது இந்த மன்னனது ஒரே புதல்வி சுகன்யை என்ற பெயருடையவள், தன் தோழியரோடு அக்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தாள். ஒரு
அக்காட்டில் சியவனன் (சவுளகன்) என்னும் முனிவன் ஒரே இடத்தில் கம்பம் போல அசையாது கணக்கிட முடியாத பல யுகாந்த காலங்கள் தவம் செய்து கொண்டி ருந்தான். நீண்டகாலம் அசைவற்று இருந்து தவம் செய்ததனால், அவனைச் சுற்றிப் புற்றானது உயரமாக வளர்ந்து அவனை மூடிக்கொண்டது. அதனால் ஒளி பொருந்திய அவனது கண்கள் மட்டும் புற்றில் இருந்த துவாரத்தின் மூலம் வெளியே தெரிந்து கொண்டிருந்தன.
அவ்வழியே சென்று கொண்டிருந்த சுகன்யா, தவம் செய்து கொண்டிருந்த முனிவனைச் சுற்றி வளர்ந்த பெரிய புற்றினைக் கண்டாள். அப்புற்றின் துவாரத்திலிருந்து அம்முனிவனது கண்கள் ஒளியை வீசிக்கொண்டு இருப்பதை அந்நங்கை பார்த்தாள். இளமைத்துள்ள லாலும் அறி மயக்கத்தாலும் அம்முனிவன் கண்களை விளையாட்டாக குத்தினாள். அப்பெண் தன் விளையாட்டுத் தனத்தால் முனிவருக்குச் செய்த தீங்கின் காரணமாக அவள் தந்தை சர்யாதியின் சேனைகளுக்கெல்லாம் கண் தெரியாமல் போயிற்று. அதனால் அச்சேனைகள் காட்டில் தடுமாறலாயின. இத்தகைய துன்பம் தன் சேனைகளுக்கு நேர்ந்ததற் சூரிய காரணம் யாது என மன்னவன் கேட்க, தோழியர், “சுகள்யைதான் புற்றினுள் தவம் செய்து கொண்டிருக்கும் முனிவரின் கண்களை முள்ளால் குத்தி விட்டாள். அதனால் இவ்வாறு நேர்த்திருக் றனர். கலாம்” என்றனர்.
சுகன்யா
உடனே மன்னன் அந்த பெரிய புற்றினை அகற்றி விட்டு உள்ளே தவம் செய்து கொண்டிருந்த முனிவனை வணங்கி, “முனிவர் பெருமானே! என் மகள் செய்த பிழையைப் பொறுத்தருள்க” என்று வேண்டிக் கொண்டான். பின்னர் தன் மகள் சுகன்யாவை அச் சர்யாதி மன்னவன் அச்சியவன முனிவருக்கே திருமணமும் செய்து கொடுத்தான். அதனால் அந்த முனிவன் சர்யாதி மன்னன் சேனைகளுக் கெல்லாம் கண் பார்வை தெரியும்படி அருள் புரிந்தான். அதனால் அம்மன்னவன் மகிழ்ச்சியோடு தன் சேனைகளுடன் தன் ஊர் போய் சேர்ந்தான்.
எழில் பொங்கும் அந்த சுகன்யை தன் கணவனாகிய சியவனுக்கு மிகுந்த விருப்பத்தோடு உரிய பணிவிடைகள் எல்லாம் செய்து அவனுடன் இன்பத்தோடு வாழ்ந்து வந்தாள். ஒருநாள் அக்காட்டிடத்து விண்ணுலக மருத்துவர்களாகிய அசுவினி தேவர் என்ற இருவரும் வந்து சுகன்யாவைக் கண்டனர். அவளுடைய அழகில் மயங்கிய அவர்கள், ”பெண்ணே நீ யார்! நீ யாருடைய மகள்? யாருடைய மனைவி” என்பன போன்ற கேள்விகளைக் கேட்டார்கள். அதற்குச் சுகன்யை, “நான் சர்யாதி மன்னன் மகள்; என் கணவர் சியவனன் என்னும் மாமுனிவர், நான் அவருடன் இணைந்து வாழ்ந்து வருகின் றேன்” என்று கூறினாள்.
அதற்கு அந்த அசுவினி தேவர்கள், “எழில் வாய்ந்த பெண்ணே! நீயோ அழகு ததும்பும் இளமை வாய்ந்த பெண்; உன் கணவரோ வயது முதிர்ந்தவர். வயது முதிர்ந்த உன் முனிவர் கணவனால் உனக்கு முழுமையான இன்பத்தைத் தர முடியுமா? ஆகலின் இளமையோடும் அழகோடும் இருக்கும் எங்களை மணம் செய்து கொள்ளலாமே. அது பொருத்தமாயிருக்கும் அல்லவா!” என்றனர்.
அதற்கு அவள், “என் கணவர் எப்படி யிருந்தாலும் அவர்தான் என் கணவர். அவர் என்னிடம் அன்பாகவே இருக்கின்றார். நானும் அவரிடத்தில் அன்பாகவே இருக் கின்றேன். ஆக நாங்கள் மன ஒற்றுமை யுடன் வாழ்ந்து வருகின்றோம். எனவே உங்களை நான் மணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று கூறி மறுத்து விட்டாள். அசுவினி தேவர் கூறியவற்றைத் தன் கணவரிடம் அப்படியே சொல்ல, அம்முனி வர் பெருமானோ, “நீ விருப்பப்பட்டால் அவர்களையே மணந்து கொள்ளலாமே” என்றார். அப்பொழுதும் அந்தப்பெண், “இந்த பிறவிக்கு நீங்கள்தான் எண் கணவர், வேறு ஒருவரை மனத்தாலும் நினைக்க மாட்டேன்” என்று திட்டவட்டமாகக் கூறி விட்டாள்.
சயவனையே தேர்ந்தெடுத்த சுகன்யா
இதனைக் கேட்டு அசுவினி தேவர்கள், அம்முனிவரைக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு ஒரு தெய்வத் தன்மை வாய்ந்த பொய்கையில் அம்முனிவரோடு அவ்விருவரும் மூழ்கி எழுந்தார்கள். கரையேறும் பொழுது அம்மூவருமே இளமையுற அழகும் ழகும் பெற்றதோடு, ஒரே வித வடிவத்தையும் பெற்றிருந்தார்கள். ஒரே வடிவில் இருந்த அம்மூவரும் ஒன்று சேர்ந்து வந்து சுகன்யாவிடம் “அழகிய நங்கையே! எங்கள் மூவருள் ஒருவனைக் கணவனாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வாய்” என்றனர். கற்புடைய நங்கையாதலால் சுகன்யா தனக்குரிய கணவனாக எந்தவிதத் தடுமாற்றமும் இல்லாது ச்யவனையே தேர்ந்தெடுத்தாள்.
அசுவினி தேவர்கள் செய்த செயலினால் தான் இளமையும் பொலிவுமுடையவனாக ஆனதை கண்டு ச்யவன முனிவர் பெரு மகிழ்ச்சி அடைந்தார். அதனால் அந்த சீயவன முனிவர் தன் மாமனாராகிய சர்யாதி மன்னனை ஒரு யாகத்தை செய்யச் செய்து, அதிலிருந்து எடுத்த அவிஸான ஸோம பானத்தை அசுவினி தேவர்க்குக் கொடுக்க முனைந்தார். (அவிஸ் என்பது யாகம் செய்யும் பொழுது தேவர்கட்கு மந்திரப்பூர்வமாக இடும் உணவு ஆகும். சோமபானம் என்பது ஸோம விதையைப் பிழிந்து யாகத்தில் அவிஸாக கொடுக்கப் படுவதாகும்) தனக்கு கொடுக்க வேண்டிய அவிஸமாகிய அந்த ஸோம பானத்தை அசுவினி தேவர்களுக்கு ச்யவன முனிவர் கொடுக்க முனைந்ததைக் கண்டு கோபங் கொண்டு இந்திரன், சயவனன் பால் வந்து. ”சயவனனே/ தேவராஜனாகிய என்னை போன்ற உயர்ந்தவர்களுக்குக் கொடுக்கப் படும் அவிஸாகிய இந்த ஸோம பானத் தைத் தேவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் இந்த வேலைக்கார அஸ்வினி தேவர்களுக் குக் கொடுக்கலாமா? கொடுக்கவே கூடாது” என்று தடுத்தான். ஆனால் ச்யவன முனிவர் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை.
ச்யவன முனிவரின் சாபம்
அதனால் இந்திரன் சயவன முனிவரைக் கொல்வதற்கு தன் வச்சிராயுதத்தை எடுத்தான். ன். உடனே தவசிரேட்டராகிய அந்த ச்யவன முனிவர். “வச்சிராயுதம் எடுத்த உன் கையானது மேலும் அசையாது கம்பம் போல நிற்கட்டும்” என்று சாபமிட்டார். அதோடு அவ்விந்திரனைக் கொல்லப்பூதம் ஒன்றை ஏவினார். பூதம் தன்னைக் கொல்ல நெருங்கி வருதலை கண்டு இந்திரன் அஞ்சி, ‘அம்முனிவரைப் பணிந்து, “பெருந் தவசிரேட்டரே! என்னை மன்னித்து கொள்ளுங்கள். சோமரஸ பானத்தை அசுவினி தேவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று சொன்ன நான் இனி ஒவ்வொரு யாகத்திலும் அவர்களுக்கு நானே கொடுப்பேன். நான் உயிர் பெற அருள்புரிவாயாக ” என்று கூறி வேண்டி னான். ச்யவன முனிவரும் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று அவனுக்கு அருள் புரிந்தார். அவனுடைய அசைவற்று இருந்த கையையும் பழைய நிலையில் இருக்கும் படி செய்தார். பின்னர் அந்த யாகத்தை இனிது முடித்தார்.
அத்தகைய உயர்ந்த தவமுனிவர் ச்யவனர் தவம் புரிந்த இடமாகும், இஃது என்று உரோமச முனிவர் சொல்ல, தர்மர் அவரைப் போற்றி வணங்கினார். பின்னர் அங்கிருந்து தர்மபுத்திரர் முதலானோர் சூரியனால் தரப்பட்ட யமுனை நதியில் மூழ்கி நீராடி மகிழ்ந்து இருந்தனர். இதனால் யமுனா நதியை சூரியனின் புதல்வி என்பர்.
அங்கிருந்த ஒரு சோலையைக் கண்டு அது யாது? என்று தர்மபுத்திரர் கேட்க உரோமச முனிவர் அதனுடைய வரலாற்றைச் சொல்ல தொடங்கினார்.
மாந்தாதா கதை
யுவநாச்வன் (ஆசுவன்) என்னும் ஓர் அரசன் இக்ஷு வாகு வம்சத்தில் பிறந்து சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தான். அவன் ஸீத்யும் நனுடைய குமாரன். ஆயிரம் அசுவமேத மத யாகங்களைச் செய்த வன். அதற்கு மேலும் பல யாகங்களைச் செய்தும் அவனுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. அதனால் தவத்தில் சிறந்த பிருகு முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். அம்முனிவரிடம் தன் குறையைக் கூறித் தனக்குப் பிள்ளைப்பேறு அருளும்படி பிரார்த்தித்தான். அவரும் கருணையோடு உடன்பட்டு அக்னி மூட்டி செய்ய வேண்டியதோர் புத்திர காமேட்டி யாகத்தை ஏழு நாட்கள் செய்தார். அதன் பயனாக அந்த யாகாக்னியிலிருந்து புனித நீர் வெளிப்பட்டது. அந்த நீரை யெல்லாம் ஒரு தூய்மையான குடத்தில் சேமித்து ஓரிடத்தில் வைத்திருந்தார்.
நள்ளிரவில் ஒரு நாள் மன்னவர் யுவநாச்வன் தாகத்தால் முனிவர் வைத்திருந்த கலச நீரைப் பருகி விட்டார். அதனை அறிந்தார் பிருகு முனிவர். உடனே அம்மன்னனை நோக்கி, “புனித யாக கலச நீரைப் பருகி விட்டாய். அதனால் நீ நூறு வருடங்கள் கர்ப்பத்தை தாங்கியிருந்து உன் உடம்பின் ஒரு பக்கத்திலிருந்து ஓர் ஆண் குழந்தை பிறக்கும். அப்போது நீ மரண மடைவாய்” என்றார்.
மாந்தாதா
மன்னன் தன் மரணத்தைப் பற்றி கவலைப்படாது, தனக்குப் பிள்ளை பாக்கியம் நிச்சயம் உண்டு என்பதை அறிந்து மகிழ்ந்தான். முனிவர் சொன்னது போல மன்னன் கருவினை நூறாண்டுகள் தாங்கியிருந்தான். நூறாண்டுகள் கழிந்த பின்னர், அவன் இடுப்பை பிளந்து கொண்டு ஆண் மகன் ஒருவன் ன் பிறந்தான். ஆண் கன் பிறக்கவே அம்மன்னன் மகிழ்ச்சியுடன் இறந்திட்டான்.
இக்குழந்தைக்குத் தாயும் தந்தையும் இல்லாமையினால் தேவ மகளிர் பால் கொடுத்து வளர்த்தனர். இவனுக்கு, ‘மாந்தாதா’ என்று பெயர் வைத்தனர். ‘மாந்தாதா’ என்பதற்குத் தெய்விக வில்லையும் அம்பையும் பிளக்க முடியாத கவசத்தையும் உடையவன் என்பது பொருளாகும்.
இவன் கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகத்தைத் தன் ஒரு குடைக்கீழ் ஆண்டான். தர்மத்தால் மூன்றுலகங்களை யும் பெற்றான். இவன் மனைவி சசிபிந்து என்பவள் ஆவாள். இவள் புரு குற்சன், அம்பரீஷன், முசுகுந்தன் என்ற மூன்று புத்திரர்களையும், ஐம்பது புதல்வியரையும் பெற்றெடுத்தாள். இந்த ஐம்பது பெண் களையும் சௌபரி என்னும் முனிவர் மணம் புரிந்தான்.
பன்னிரண்டு ஆண்டு காலம் மழை பொழியாமல் போனபொழுது பயிர்கள் செழித்து வளர்வதற்காக இவன் தவம் செய்து மழையைப் பொழிவித்தான். இவன் அந்தணர்களுக்கு பத்து லட்சம் கோடி பசுக்கள் தானமாகக் கொடுத்தான். இவனுடைய ஆட்சி மிகச் சிறப்புடைய நாய் நீதி நெறி தவறுதல் இல்லாததாய் உயர்ந்து விளங்கியது. இவனுடைய நாட்டில் ஒரே நீர்த்துறையில் வலிமை மிக்க புலியும், அதனை கண்டு அஞ்சுகின்ற மானும் நண்பர்களாய் நீர் குடித்தன என்றால் இவன் ஆட்சிச் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமோ?
இத்தகைய சிறப்பு மிக்க நடுநிலை தவறாது ஆட்சி புரிந்த மாந்தாதா என்னும் மன்னன் வேள்வி செய்த இடமாகும். இது என்று உரோமச முனிவர் கூற, அந்த இடத்தை தர்மபுத்திரர் முதலானோர் வணங்கி எழுந்தனர். அதன்பின் தொன்மையும், சிறப்பும் வாய்ந்த இப்பத் பூமியில் பாய்கின்ற புண்ணிய நதிகளாகிய கங்கை,யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளில் (அந்தர்யாமியாய் பூமிக்கடியில் பாய்ந்து கொண்டிருக்கும்) புண்ணிய நதியாகிய சரஸ்வதி நதியில் நீராடினார்கள். அங்கிருந்து அவர்கள் மேலும் தங்கள் தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தனர்.
சோமகன் கதை
தீர்த்தயாத்திரை செய்து கொண்டு வரும் தர்மபுத்திரர் முதலானோர் புனித நதியாகிய சரஸ்வதியில் நீராடி அங்கிருந்து தீர்த்த யாத்திரையைத் தொடங்கி மேலே செல்லலாயினர். அப்பொழுது அவர்கள் எதிரில் தோன்றிய ஓர் அழகிய சோலை யைப் பார்த்து “இச்சோலை யாருடையது? எனக்குக் கூறுவீராக” என்று தர்மபுத்திரர் கேட்க, உரோமசமுனிவர் வரலாற்றைக் கூறலானார். அதன்
இந்நில உலகத்தை சோமகன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு மனைவியர் நூறுபேர். அந்த நூறு பேரில் மூத்த மனைவிக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அந்த மகனின் பெயர் ‘ஐந்து’ என்பதாம். அவன் ஒரு நோயாளி. தன் ஒரு மைந்தனும் நோயாளியாயிருப்பதைக் கண்டு மன் மன்னன் பெரிதும் கவலை கொண்டான். அதனால் தன் மனைவியர் நூறு பேருக்கும் புதல்வர்கள் பிறக்க வேண்டுமென்று எண்ணம் கொண்டு, அதற்காகத் தன் குலத்துக்கு யாகம் முதலிய டங்குகளை செய்து வைக்கும் அரசவைப் புரோகிதனை நாடினான். அந்த அரசவைப் புரோகிதன், அரசனிடம், “மன்னா! உங்களுடைய ஒரே மகனைக் கொன்று அந்த மாமிசத்தை கொண்டு ஒரு யாகம் செய்து அதிலிருந்து வரும் அவிர்ப் பாகத்தை தேவர்களுக்குக் கொடுத்தால் தங்களுக்கு நூறு பிள்ளைகள் பிறப்பார்கள். மேலும் பலி கொடுக்கப்பட்ட மூத்த மகன் ஐந்துவும் அவனுடைய தாயினிடத் திலேயே நோயற்ற திடகாத்திரமுடைய மகனாகப் பிறப்பான், அவனை அறிதற்கு அவனுடைய இடவிலாவில் பொன்னிற மான மச்சம் இருப்பதே துணை செய்யும்” என்று கூறினான்.
சோமகன் கொடுத்த பலி
புரோகிதர் சொன்னபடியே சோமகன் ஒரு பெரிய யாகத்தைத் தன் மைந்தனைப் பலியாகக் கொடுத்துச் செய்தான். அந்த யாகத்தினின்று தோன்றிய அமிர்தத்தைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி, அதனை அரசன் மனைவியர்க்கு பகிர்ந்து கொடுத்தான். அவர்களும் அதனை விருப்பத்தோடு பருகினர். அதன் காரணமாக அரசன் மனைவியர் நூறு பேரும் ஆண் குழந்தை களை பெற்றார்கள். பிள்ளைகளைப் பெற்ற மகிழ்ச்சியிலே சோமகன் இந்நில உலகினை சில காலம் அரசாண்டு உயிர் நீத்தான்.
விண்ணுலகு செல்லும் அம்மன்னன் ஒரு நாள் இயமனது நகரை அடைந்தான். அங்கு, தனக்கு குழந்தைகள் பிறப்பதற்காக யாகம் செய்த புரோகிதர் கொடிய நரகத்தில் இருப்பதைக் கண்டான். உடனே அம்மன்னன் அப்புரோகிதரை அணுகி, “புரோகிதரே! நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்? இந்தக் கொடிய நரகத்தில் ஏன் இருக்கின்றீர்கள்” என்று கேட்டான். அதற்கு அந்தப் புரோகிதர் அழுது கொண்டே, உன்னுடைய மைந்தனைப் பலி கொடுத்து உனக்கு நூறு பிள்ளைகள் பிறப்பதற்கு வழி செய்தேன் அல்லவா? அந்த மைந்தனைக் கொன்றதனால் இந்த நரகம் எனக்கு கிடைத்தது. மன்னனே! இதினின்று என்னை மீட்பாயாக” என்று வேண்டினான்.
உடனே அம்மன்னன் இயமனிடம் சென்று,”பெருமானே! எங்கள் புரோகிதர் செய்த பாவத்தை நான் செய்த நல்வினை யால் நீக்கி, அவரைச் சொர்க்கத்தில் சேர்ப்பாயாக” என்று கூறி வேண்டினான். இயமனும் அவ்வாறே செய்வதாகக கூறியதோடு நல்வினை மிகுதியாக செய்த நீ, நின் மகனைப் பலி இடுவதற்குக் காரணமாயிருந்ததனால் இன்று நரகத்தில் கால் மிதிக்க நேர்ந்தது” என்று கூறினான். பின்னர் அப்புரோகிதனும், அம்மன்னனும் சொர்க்கம் சேர்ந்தனர். அன்று அம்மன்னன் யாகம் செய்த இடம் இதுவேயாகும் என்று உரோமச முனிவர் தர்மபுத்திரரிடம் கூறினார்.
தீர்த்த நீராடல்
அதன் பின் உரோமசமுனிவர் நான்முகன் யாகம் செய்த இடத்தைச் சுட்டிக்காட்டி, “இங்குள்ள தீர்த்தத்தில் நீராடின் மேலுல கம், புவலோகம், சுவலோகம், மகலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம் என்னும் மேலுலகங்கள் ஏழினையும் உனக்குக் காட்டும் ” என்று கூறினார். உடனே தர்மபுத்திரர் தன் தம்பியரோடும், திரௌபதியோடும், உடன் வந்த மற்றவர் களோடும் அத்தீர்த்தத்தில் நீராடினார். அப்பொழுது தேவலோகத்தில் இந்திரனோடு, தன் தம்பி அர்ச்சுனன் ஒரே ஆசனத்தில் சரிசமமாக வீற்றிருப்பதைப் பார்த்துப் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார். அதன் பின் அவர்கள் சரஸ்வதி நதியிலுள்ள பல்வேறு நீர்த்துறைகளில் நீராடி வடக்கு நோக்கிச் செல்லலாயினர்.
அதன்பின் சந்திர வம்சத்தை சேர்ந்த நகுஷகுமாரனான யயாதி, பல வடிவங் களுள்ள அக்னி வைக்கும் மேடைகளால் சமைத்த யாக பூமியில் பல யாக காரியங்கள் செய்த பூமியையும், தசரதன் யாகம் செய்த நடுவிடமாகிய குருஷேத்திரம் போன்ற தலங்களையும் தரிசித்தனர். அதற்குப்பின் தர்மபுத்திரர், உரோமச முனிவரால் கார்மேக மேனியர்களாகிய நர நாராயணர் கள் தவம் செய்த இடமாகிய பத்ரிகா ஆசிரமம் அருகே இருக்கின்றது என்பதை அறிந்து அங்கு சென்று அத்தலத்தைத் தரிசித்தனர்.
பத்ரிகாசிரமம்
வைணவ நூற்றெட்டுத் திவ்விய தேசங் களில் வடநாட்டின் வடக்கிலே இமய மலையைச் சார்ந்து இருக்கும் ஒப்பற்ற திவ்யதேசம் பத்ரிகா ஆசிரமம் ஆகும். இதனை இப்பொழுது, ‘பத்ரிநாத்’ என்பர். இத்தலம் இப்பொழுது உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது. இந்தத் திவ்யதேசம் இமயமலைச் சாரலில் 23210 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள பெருமாள் பத்ரி நாராயணர். வீற்றிருந்த திருக்கோலம் தாயார்- அரவிந்த வல்லி- தீர்த்தம் – தப்த குண்டம் எப்பொழுதும் வெந்நீர் ஊற்று சுரக்கக்கூடிய தீர்த்தமாகும். குருசிஷ்ய கிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும் விளக்கும் பொருட்டு, எம்பெருமானாகிய நாராயணன் நரனுக்கு ஒப்பற்ற திருமந்திரப் பொருளை உபதேசித்த தலைச் சிறந்த தலம். அந்த நர நாராயணர்கள் தாம் துவாபர யுகத்தில் கண்ணபிரானாகவும் (நாராயணன்) அர்ச்சுனனாகவும் (நரன்) அவதரித்தனர். விசாலபுரி என்ற வேறு பெயரும் இத்தலத்திற்கு உண்டு. இத்தலத்தைப் பெரியாழ்வார் ஒரு பாசுரத் திலும் திருமங்கை யாழ்வார் இருபத்தொரு பாசுரங்களிலும் மங்களாசானம் செய்துள் ளார்கள். மேலும் இத்தலம் பாண்டவர் களின் ஜன்ம பூமியாகவும் இருந்து வந்துள்ளது. அதோடு பாண்டவர்களின் தந்தையார் பாண்டு மகாராஜா இங்கு தவம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.
இத்தகைய சிறப்புக்களையுடைய தலத் தில்தான் தர்மபுத்திரர் தன் தம்பியருடன் தப்த குண்டத்தில் நீராடி பத்ரி நாராயணப் பெருமாளை தரிசித்தார். அதன் பின் நான் முகனின் ஐந்து யோசனை விஸ்தாரமுள்ள யாக குண்டத்தைத் தரிசித்து, அங்கிருந்து அலைகள் வீசுகின்ற சிந்துவின் குளிர்ந்த தீர்த்தத்தில் நீராடினார்கள்.
அதன்பின் அங்குள்ள அழகு மிக்க சோலையைக் கண்டு தர்மபுத்திரர் உரோமச முனிவரை வணங்கி, இச்சோலையை வகைப்படுத்திக் கூறுவீர் என அது சிபிச் சக்கரவர்த்தி வாழ்ந்த இடம் என்று கூறி அந்த சிபி சக்கரவர்த்தியின் வரலாற்றைக் கூறலானார்.
சிபிச் சக்கரவர்த்தியின் கதை
பிறர் நலத்துக்காகத் தன் உயிரையே மகிழ்ச்சியுடன் வழங்கும் உயர் பண்புமிக்க சிபி என்றொரு மன்னன் உசீநர தேசத்துக்கு அதிபதியாக இருந்து அந்நாட்டை ஆண்டு வந்தான். அவன் உசீநரனின் மூத்த புதல்வன் ஆவான். இவன் யமுனைக்கு இருபக்கங்களிலுமுள்ள ஜலை, உபஜலை என்கிற நதிகள் ஒன்று சேரும் இடத்தில் யாகம் செய்து இந்திரனைக் காட்டிலும் மேன்மையான பதவியை அடைந்தான். அவன் எப்பொழுதும் எவர்க்கும் இல்லை என்று சொல்லாது வாரி வழங்குகின்ற உயர் பண்புடையவனாக விளங்கினான்.
இவனுடைய இத்தகைய கைம்மாறு கருதாத கொடைக் குணத்தை மேலும் உலகிற்குப் பரவச் செய்யும் பொருட்டு, அக்னி தேவன் புறாவாகவும், இந்திரன் வேடனாகவும் வடிவெடுத்தனர். பின்னர், அப்புறாவைக் கொல்ல அதனைத் துரத்தி கொண்டு வேடன் அதன் பின் தொடர்ந் தான். (சில நூல்கள் வேடனுக்குப் பதிலாக பருந்து புறாவைத் துரத்திச் சென்றதாக கூறுகின்றன).வேடனுக்கு அஞ்சிய புறாவானது அக்காலத்தில் ஆண்டு கொண் டிருந்த சிபிச் சக்கரவர்த்தியிடம் அடைக் கலம் புகுந்து தன்னை வேடனிடமிருந்து காக்குமாறு வேண்டியது.
மன்னனை சோதித்த இந்திரன்
தயை குணம் மிக்க சிபிச் சக்கரவர்த்தி அந்தப் புறாவை நோக்கி, “அஞ்ச வேண் டாம். உன்னைக் காப்பாற்றுகின்றேன்” என்று கூறி அப்புறாவிற்கு அடைக்கலம் தந்தான். ஆண்மையும் தீரமும் உடைய வேடனாக வந்த தேவேந்திரன் சிபியினிடம் வேகமாகச் சென்று. ”மன்னர்க்கு மன்னனே! என்னுடைய அம்புக்கு இலக்காக இருந்த புறா என்னிடமிருந்து தப்பி தங்களிடம் அடைக்கலமாகப் புகுந்துள்ளது. அந்த புறா எனக்கு உரிமையானது. அதனை என்னிடம் கொடுத்து விட வேண்டும்” என்றான். அதற்குச் சிபிச் சக்கரவர்த்தி, “வேடனே! அடைக்கலமாக வந்த புறாவை உன்னிடம் கொடுப்பது என்பது இயலாத காரியம் அது அறநெறிக்கு மாறானது. வேறு ஏதாவது கேள். தருகின்றேன்” என்று கூறினான்.
அதனைக் கேட்டு வேடனாக வந்துள்ள இந்திரன் மன்னனைச் சோதிப்பான் வேண்டி, ‘உனக்குப் புறாவை கொடுக்க மனமில்லையென்றால் அந்த புறாவின் எடைக்கு ஈடாக உன் உடல் தசையை அரிந்து கொடுக்க முடியுமா? அவ்வாறு கொடுத்தால் அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். புறாவினைக் கேட்காது விட்டு விடுகின்றேன்” என்று கூறினான்.
இந்திரனின் மகிழ்ச்சி
அவன் கருத்தைச் சிபிச் சக்கரவர்த்தி சற்றும் தாமதிக்காது ஏற்றார். உடனே அவர் ஒரு சரியான எடை காட்டும் துலாக் கோலைக் கொண்டு வரச் செய்தார். ஒரு தட்டில் சரணடைந்த புறாவை வைத்தார். மற்றொரு தட்டில், தன்னுடைய உடலில் இருந்த குருதியானது கொப்பளித்து பீறிட்டெழத் தசையை அரிந்து வைத்தார். தட்டுகள் சமமாகவில்லை. பலமுறை தசையை அரிந்து, அரிந்து தட்டில் வைத்தார். ஆனால் அரிந்த தசை இருக்கும் தட்டு மேலேயும் புறா அமர்ந்திருக்கும் தட்டு கீழேயுமாகவே இருந்தது. மேலும் மேலும் அரிந்து தன் தசையை வைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் தட்டுகள் தன்னிலையிலிருந்து விளங்கின. மாறாமலே
தன்னுடைய வாக்கினைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியில் இருந்த சிபிச் சக்கரவர்த்தி இறுதியில் தானே துலாக் கோலில் ஏறி அமர்ந்தார். என்ன ஆச்சரியம்! இரண்டு தட்டுகளும் சமநிலையில் நின்றன. சிபிச் சக்கரவர்த்தி உடனே வேடனிடம், தன்னையே ஒப்படைத்துக் கொண்டு புறாவை விட்டு விடும்படி கோரினார்.
இல்லாது வெற்றி கண்ட சிபிச் சக்கரவர்த்தியைப் புறாவாக வந்த அக்னிதேவனும், வேடனாக வந்த இந்திரனும் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர். தங்களுடைய பழைய வடிவினை எடுத்துக்கொண்டனர். புறாவாக வந்தது அக்னி தேவன் என்றும், வேடனாக வந்தது இந்திரன் என்றும் சிபிச் சக்கரவர்த்தி அறிந்து கொண்டு பெரு மகிழ்ச்சியுற்றார். அவர்கள் இருவரும் சிபிச் சக்கரவர்த்தியின் கைம்மாறு கருதாத கொடைச் சிறப்பை யும், அடைக்கலமாக வந்த பொருளைக் காப்பதற்காக தன் உயிரையே கொடுக்க வந்த தியாக மனப்பான்மையையும் பெரிதும் பாராட்டினர். அவர் வேண்டிய வரங்களையெல்லாம் தந்ததோடு அவருடைய திருமேனி முன்பு போலவே நல்ல பாங்காக இருக்கும்படி அருள் புரிந்து மறைந்து போயினர்.
சிபிச் சக்கரவர்த்தியின் நான்கு பிள்ளைகள்
இத்தகைய உதார குணமுடைய சிபிச் சக்கரவர்த்திக்கு விருஷ தர்ப்பன், கவீரன், கேகயன்,மந்திரன் என்று நான்கு புத்திரர்கள் இருந்தார்கள்.
இந்த சிபியின் வரலாற்றை “தன்னகம் புக்க குறு நடைப்புறவின் தபுதி கண்டு அஞ்சிச் சீரை புக்கோன்” என்று புற நானூறும் (46), “புள்ளுறு புன் கண் தீர்த்தோன் அன்றியும்” (வழக்காடுகாதை- சிலப்பதிகாரம் ). ”பிறந்த நாள் தொடங்கி யாரும் துலைபுக்க பெரியோன் பெற்றி மறந்த நாளுண்டோ” வீடணன் அடைக்கலப்படலம் 110). கம்ப ராமாயணமும் எடுத்துக்காட்டுகின்றன.
பெருமை மிக்க சிபிச் சக்கரவர்த்தியின் வரலாற்றைத் தர்மபுத்திரருக்கு உரோமச முனிவர் எடுத்துக் கூறியதோடு அவன் யாகம் செய்த இடத்தையும் காட்டினார்.
அஷ்ட வக்கிரன்
ஏசுபாதர் என்றும் உத்தாலகர் என்றும் அழைக்கப்படுகின்ற பெயர்களையுடைய முனிவர் ஒருவர் முற்காலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் சுஜாதை என்ற பெயரைக் கொண்ட தன் திருமகளை தன் சீடனாகிய கஹோளர் என்பவனுக்கு மணம் செய்து கொடுத்ததோடு அந்த சீடனுக்கு உயர்ந்த வேதங்களையெல்லாம் கற்றுக் கொடுத் தார் . அதனால் சுஹோளர் நாள்தோறும் வேதங்களை அத்தியனம் செய்து கொண்டு வந்தார்.
சுஜாதை
இந்த நிலையில் சுஜாதை கர்ப்ப முற்றாள். ஒருநாள் கஹோளர் வேதங்களை அத்தியனம் செய்து கொண்டிருக்கும் பொழுது, சுஜாதையின் கருவிலிருக்கும் குழந்தை, தன் தந்தையிடம், “தந்தையே! நீர் இரவும் பகலுமாக எங்களைப் போன்று கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைகளின் உறக்கம் கெடும்படியாக வேதங்களை அத்தியனம் செய்யலாமோ? என்று கேட்டது.இதனைக் கேட்ட அக்குழந்தை யின் தந்தை கஹோளருக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. அதனால் நல்ல அழகுடைய ஆண்மை மிக்க குழந்தையாக பிறக்க வேண்டுமென்று எண்ணும் தந்தையாருக்கு மாறாக அவர் பிறக்கப்போகும் குழந்தை யையே, “அழகான குழந்தையாக பிறக்காது எட்டு கோணல்களையுடையவனாக பிறப்பாயாக” என்று சபித்தார்.
ஆனால் அந்த கஹோளர் என்னும் முனிவர், குழந்தை பிறப்பதற்கு வேண்டிய செல்வத்தைப் பெறுவதற்காக மிதிலையை ஆண்டு வந்த ஜனகன் செய்கின்ற யாகத்திடல் அருகே சென்றார். (இந்த ஜனகன் சீதாப்பிராட்டியின் தந்தையல்லன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அங்கு வேதத்தில் வல்லவனாகிய வந்தி என்பவனோடு வாதம் புரிந்து தோற்று, அவனால் நீரில் மூழ்கும்படி செய்யப் பட்டார். அதனால் அவர் இறந்தார். உரிய காலத்தில் தன் கணவனால் சபிக்கப்பட்ட குழந்தையை கஹோனர் மனைவி சுஜாதை பெற்றெடுத்தாள். தந்தையின் சாபத்தின் படியே அது அட்ட கோணல்களுடன் பிறந்தது. அதனால் அக் குழந்தைக்கு அட்டவக்கிரன்’ என்ற பெயர் வந்தது. ‘வக்ரம்’ என்பதற்கு ‘கோணல்’ என்பது பொருளாகும். தன்னைப் பிரிந்து சென்ற கணவன் இன்னும் வரவில்லையே என்று வருந்திய கஜாதை த தன் குழந்தையுடன் தன்னைத் தன் கணவனுக்குக் கன்னிகா தானமாக திருமணம் செய்து கொடுத்த தன் தகப்பனராகிய உத்தாலகரையே வந்து அடைந்தான். அங்கு உத்தாலகர் மூலம் தன் கணவர் வந்தி என்பவனிடம் வாதத்தில் தோற்றுப் போனதால் நீரில் மூழ்கடிக்கப் பட்டதை அறிந்தாள். துயருற்றாள். ஆனால் தன் கணவனுக்கு நேர்ந்த கதியை உத்தாலகர் சொல்லியதன் பேரில் தன் குழந்தையிடம் கூறவில்லை. அக்குழந்தை உத்தாலகரையே தன் தகப்பனாக எண்ணி வளர்ந்தது. அங்கு, உத்தாலகர் பெற்ற பிள்ளையாகிய சுவேத கேது என்பவனை நண்பனாகக் கொண்டு அஷ்டவக்கிரன் வாழ்ந்து வந்தான். இருவரும் வேதங்களை நாள்தோறும் அத்தியயனம் செய்து கொண்டு வந்தனர்.
வேதங்களில் வல்ல அஷ்டவக்கிரன்
அஷ்டவக்கிரன் தன்னை யாரும் வெல்ல முடியாதபடி வேதங்களில் வல்லவனாக விளங்கினான். சனகனின் யாகத்திற்குச் சென்ற செய்தியையும் அங்கு வந்தியோடு வாதம் புரிந்து தோற்று நீரில் தன் தந்தை மூழ்கடிக்கப்பட்டதையும் ஒருநாள் தன் தாய் மூலம் அறிந்தான்.
உடனே அஷ்டவக்கிரன் சனகன் இடத்திற்குச் சென்றான். எட்டு திக்கிலுள்ள வர்களும் போற்றும்படியாக அந்த அட்ட வக்கிரன் வந்தியோடு வாதிட்டு அவனை வென்றான். பின்னர் வருணன் அருளால் நீரில் மூழ்கடிக்கப்பட்ட தன் தந்தையை மீண்டும் உயிர் பெறச் செய்தான். பின் தன் தாயினிடத்தில் தந்தையைச் சேர்த்து வைத்த செயற்கரிய ஒரு செயலைச் செய்தான்.
வந்தி வருணனுடைய புத்திரன் அதனால்தான் வாதில் வென்றவரை வந்தி நீரில் மூழ்கும்படி செய்தான். அதே வருணனுடைய அருளால் வந்தியை வென்ற அட்டவக்கிரன். நீரில் மூழ்கடிக்கப் பட்ட தன் தந்தை கஹோளரை மீட்டு வந்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதற்குபின் அட்டவக்கிரன் தன் நண்பன் சுவேத கேதுவோடு அடங்கல் இல்லாத தவத்தைச் செய்து மோட்சம் அடைந்தான். இத்தகைய தவத்தில் சிறந்த அட்டவக்கிரன் தவம் செய்த சோலை இது என்று கூறி உரோமச முனிவர் அச் அச்சோலையை தர்மபுத்திரருக்குக் காண்பித்தார்.
யவக்ரீதர்
அட்டவக்கிரர் ஆசிரமத்தை அடைந்த தர்மபுத்திரர் அதனைக் கண்டு மகிழ்ந்து தன் தந்தையின் இழுக்கினைப் போக்கிய அட்டவக்கிரனைப் போற்றி உரோமச முனிவரோடு மேலே நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு ஓர் ஆசிரமம் இருக்கக் கண்டு “இது யாருடைய ஆசிரமம்? அவருடைய வரலாறு என்ன?” என்று தர்மபுத்திரர் கேட்க உரோமச முனிவர் கூறலானார்.
தர்மபுத்திரரே! பரத்துவாசர் என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார். ந்தார். அவ அவருடைய மகன் பெயர் யவக்ரீதர் என்பதாம். அவர் நேர்வழி ஒழுகாது . கோணல் வழி ஒழுகுபவர். பொதுவாக, வேதங்களையோ அவற்றின் அங்கங்களையோ பிற வற்றையோ ஆசார்யராகிய குரு மூலம் தான் கற்க வேண்டும்.குரு மூலமாக அல்லாமல் தவத்தாலோ, நேரடியாகத் தானேயோ கற்றல் பயன்படாது என்பது முன்னோர் கொள்கை. ஆனால் இந்த யவக்ரீதரோ இந்தக் கொள்கைக்கு முரணாக குருவிடம் வேதங்களைக் கற்காது தவத் தாலேயே அறிந்து கொள்ள நிச்சயித்தார். அதன் காரணமாகத் தேவேந்திரனைக் குறித்துக் கடுந்தவம் செய்து, பின்னர் அவனை வழிபட்டு, அவனுடைய ஆசீர் வாதத்தால் அனைத்து வேதங்களையும் (குரு மூலமாக அல்லாது) கற்றறிந்தார். அதனால் அவர் மற்ற முனிவர்களை மதியாது செருக்குக் கொண்டு இருந்தார்.
இந்த பரத்வாஜ முனிவருக்கு, ‘ரைப்யர்’ என்ற ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு பராவசு, அர்வாவசு என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்களில் மூத்தவனாகிய பராவசு என்பவனின் மனைவி மேல் காம மோகம் கொண்டு யவக்ரீதர், தன் விருப்பத்திற்கு இணங்கும்படி அவளை அழைத்தார். அந்நங்கையோ, ‘நாளைக்கு வருகின்றேன்’ என்று சொல்லிவிட்டு, தன் மாமனாராகிய ரைப்ரயரிடத்தில் யவக் ரீதரின் தீய செயலை எடுத்துக் கூறினாள்.
யவக்ரீதரை கொல்ல கட்டளை
அதனால் அந்த அந்தண ரைப்ரயர் மிகுதியான கோபம் கொண்டு ஒரு சடையை பிடுங்கி, அதனை அக்னியில் இட்டு மந்திரம் கூறி ஓமம் செய்ய, அந்த ஓம குண்டத்திலிருந்து ஒரு பெண் ராக்ஷஸி தோன்றினாள்.மற்றொரு சடையை பிடுங்கி முன் மாதிரியே அக்னியில் இட்டு ஓமம் செய்ய அந்த ஓம குண்டத்திலிருந்து பயங்கரமான தோற்றமுடைய ராஷஸன் ஒருவன் தோன்றினான். இருவரையும் பார்த்து ரைப்ரயர், ‘யவக்ரீதரைக் கொல்லுங்கள்’ என்று கட்டளையிட்டார். அவ்விருவரும் ரைப்ரயரின் கட்டளைப்படி யவக்ரீதரை கொன்று மறைந்தனர். பின்னர் யவக்ரீதர் தந்தையார் பரத்துவாசரும் புத்திர சோகத்தால் தீக்குளித்து இறந்து போனார்.
ஒருமுறை ரைப்ரயர் தன்னுடைய சீடன் பிருஹத்யுமனன் என்னும் அரசனின் யாகத் திடத்துக்குச் சென்றார். அங்கு அந்த யாகத்திற்கு உதவியாக பராவசு, அர்வாவசு என்ற ரைப்ரயரின் பிள்ளைகள் உதவியாக இருந்தனர்.
அதன்பின் ஒருமுறை மூத்தவன் பராவசு தர்ப்பைப் புல்லுக்காக ஒரு காட்டினை அடைந்தான். தன் பிள்ளைகள் இருவரையும் காண்பதற்காக தந்தையார் ரைப்ரயர் காட்டிற்குச் சென்றார். தன் தகப்பனார் வருதலை புலிதான் வருகின்றது எனத் தவறாக எண்ணி, அஞ்சி, அப்பராவசு ஒரு தர்ப்பைப் புல்லை அம்பாக மந்திரித்து அனுப்பினான். அந்தத் தருப்பை அம்பு தந்தை ரைப்ரயரைக் கொன்றது. அதனால் தர்ப்பை அம்பை ஏவிய பராவசுவை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. தன் தமையனாரின் நிலையைக் கண்ட அர்வாவசு அந்த பிரம்மஹத்தி தோஷத் தைத் தான் ஏற்றுக் கொண்டு தன் தமையனாராகிய பராவசுவை யாகத்தை நிறைவேற்ற உதவி புரியும்படி அனுப்பினான்.
தம்பி அர்வாவசு, தன் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொள்ள பல புண்ணிய நதிகளில் நீராடினான். அதனால் அவன் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து நீங்கி, பிரஹத்யும்னனின் யாக சாலைக்கு வந்து சேர்ந்தான்.
சத்திய சந்தன் அர்வாவசு
அங்கு இருந்த தமையனாகிய பராவசு, தம்பி அர்வாவசு செய்த நன்றியை மறந்து, ”பிரம்மஹத்தி தோஷம் கொண்ட இவன் யாக சாலையிடத்து வருதல் தீமை பயக்கும். ஆதலின் இவனை நெருங்க விடக்கூடாது” என்றான். அதனைக் கேட்ட தம்பி அர்வாவசு, அங்குள்ள மு முனிவர் களைப் பார்த்து, “வனத்தில் தந்தையைப் புலி என எண்ணித் தர்ப்பை அம்பினால் கொன்றது இந்த பராவசுவே தான். நான் இல்லை. மாறாக தந்தையை இவன் கொன்றதனால் இவனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நான் ஏற்றுக் கொண்டு இவனைப் புனிதனாக்கினேன். பின்னர் நானும் புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றில் நீராடி என்மேல் ஏறிட்டிருந்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொண்டேன். உண்மை இவ்வாறு இருக்க, நான் செய்த நன்றியையெல்லாம் மறந்து இவன் நாள் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவன்’ என்கிறான்” என்று நடந்த உண்மை அனைத்தையும் கூறி விட்டான். உண்மையை அறிந்த அனைவரும் மகிழ்ச்சி யுற்றனர். அங்கு வந்திருந்த தேவர்கள் சத்திய சந்தனாகிய அர்வாவசுவிடம். ”உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். தருகிறோம்’ என்றார்கள். அதற்கு அர்வாவசு தன் தந்தையாகிய ரைப்ரயர், யவக்ரீதர், அவர் தந்தையார் பரத்துவாசர் ஆகிய மூவரும் உயிர் பெற்றெழ வேண்டும் என வேண்டினார். அவர்களும் அவ்வாறே வரம் தர அம்மூவரும் உயிர்பெற்று எழுந்தார்கள்.
உயிர் பெற்றெழுந்த யவக்ரீதர் தேவர்களை நோக்கி, “தேவர்களே! தவம். செய்து இந்திரனுடைய வர பலத்தால் வேதங்களைக் கற்று உயர்ந்து விளங்கும் என்னை ஒரு குருவினிடத்து சீடனாய் அமர்ந்து வேதங்களைக் கற்ற ரைப்ரயர் கொன்றது எவ்வாறு பொருந்தும்?”என்று கேட்டதற்கு, அத்தேவர்கள், ‘குருவால் உணரும் வியே தவத்தால் கற்ற கல்வியைவிட உயர்ந்தது; அதனால் தான் ரைப்ரயரால் உன்னைக் கொல்ல முடிந்தது” என்று பதில் கூறினார்கள். இதன் மூலம் ஆசார்யன் மூலம் கற்றல்தான் உயர்ந்தது என்பதை நாம் நன்கு உணரலாம்.
அதன்பின் யவக்ரீதர் செருக்கு நீங்கி, உயிர் பெற்றெழுந்த மற்றவரோடு நீண்ட காலம் தவம் செய்து மோட்சம் அடைந்தார். அத்தகைய அந்த யவக்ரீதர் தவம் செய்த இடம் இது என்று தர்மபுத்திரருக்கு உரோமச முனிவர் காட்டினார். இந்த யவக்ரீதர் கதையைக் கேட்ட தர்மபுத்திரர் பெருமகிழ்ச்சியடைந்தார்.
சந்திரகிரியை அடைதல்
அதன்பின்னர் தர்மபுத்திரன் முதலா னோர் பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, பல ஆசிரமங்களில் வாழும் பல்வேறு வகையான முனிவர்களைக் கண்டு வணங்கி, அவர்களின் நல் ஆசீர்வாதமும் பெற்றார்கள். அதன்பின் முத்தி தரும் கங்கை நதியில் தன் தம்பியரோடும். திரௌபதியோடும், அந்தணப் பெருமக்க ளோடும் நீராடி அங்கு செய்ய வேண்டிய கிரியைகளையும் செய்து, மகிழ்ச்சியோடு அங்கிருந்து சந்திர கிரியை அடைந்தார்.
சந்திரன் படியும் படியான அளவுக்கு மலை உயர்ந்து இருந்ததனால் அதற்குச் சந்திரகிரி என்ற பெயர் வந்தது. அத்தகைய உயரமான மலையை அடைந்த உரோமச முனிவர் அங்கு அர்ச்சுனன் பாசுபதம் பெற சிவபெருமானை குறித்துத் தவம் செய்த இடத்தைக் காட்டினார். அதற்குப் பின் தசாங்க முனிவரின் ஆசிரமத்தையும், மந்தர கிரியையும் காட்டி, பின் கந்தர்ப்பகிரியை, தர்மபுத்திராதியரோடு அடைந்தார்.
உரோமச முனிவர் கந்தர்ப்ப கிரியை வந்து அடைந்தவுடன், “தர்மபுத்திரரே! இந்த சுந்தர்ப்ப கிரிக்கு நூறு யோசனை தூரத்தில்தான் சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் கயிலையங்கிரி உள்ளது” என்று கூறினார். பின்னர் அங்கு புகழ் மிக்க விசாக நட்சத்திரத்துக்குரியவனான முருக பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயத் தையும் காட்டினார். முருக பெருமானை அனைவரும் வணங்கினார்கள். பின்னர் உரோமச முனிவர் தர்மபுத்திரரிடம், ”அரசே! இந்த கந்தர்ப்பகிரியில் நீங்கள் அனைவரும் ஒரு வருட காலம் தங்கியிருப் பீர்களாக” என்று கூற, அங்கேயே அந்த ஒரு வருட காலத்திற்குப் பாண்டவர்கள் தங்கலானார்கள்.