காம்யக வனத்திலிருந்து பாண்டவர் களும் (திரௌபதி) பாஞ்சாலியும், முனிவர் தெளமி யரும் புறப்பட்டு, அழகிய சரஸ்வதி நதி தீரத்தின் வழியாகத் துவைத வனத்திற்குச் செல்லலாயினர். அந்த வனத்தில் மா, பனை, இலுப்பை, கடம்பு, கோங்கு போன்ற மரங்கள் அடர்ந்து இருந்தன. குளங்களின் கரைகளில் மயில், நீர்க்கோழி போன்ற பறவைகள் காணப்பட்டன. யானை கூட்டங்கள் எங்கணும் இருந்தன. ஆக எங்கணும் பார்ப்பதற்கு இனிமையான சூழலாக விளங்கியது.
பாண்டவர்கள் அங்கு ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு வசிக்கலாயினர். உடன் வந்திருந்த அந்தணர்களும், முனிவர் களும், அந்த வனத்திலிருந்த அந்தணர்கள் முனிவர்களோடு சேர்ந்து கொண்டு எப்பொழுதும் தர்மபுத்திரருக்கு தர்மோப தேசம் செய்து கொண்டிருந்தனர். வேதங்களின் ஒலியானது எப்பொழுதும் அங்கு ஒலித்துக் கொண்டிருந்தது. பாண்டவர் களும் தங்கள் துயரை மறந்து மகிழ்ச்சி யுடன் நாட்களைக் கடத்தினர்.
தர்மரிடம் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்திய பாஞ்சாலி (திரௌபதி)
ஒருநாள் பாஞ்சாலி (திரௌபதி) தர்மபுத்திரரைப் பார்த்து “அன்பரே! தீய எண்ணம் கொண்ட துரியோதனாதியர் மகிழ்ச்சியுடன் எல்லாச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு வாழ்கின்றார். இடையூறாக இருந்த நம்மைக் காட்டிற்கு துரத்தி விட்டனர். மேலும் சான்றோர் நிறைந்த சபையில் உம்மைக் கொடிய வார்த்தைகளைக் கூறி அந்த துரியோதனன் நிந்தித்தான். அந்த துரியோதனன், உள்ளிட்ட நான்கு பாவிகள் தவிர மற்றவர் அனைவரும் நமக்கு நேர்ந்த கதியை கண்டு கலங்கியுள்ளனர். முன்னம் சந்தனம் பூசப்பட்ட நின் திருமேனி இன்று சேற்றிலும் சகதியிலும் படிந்து கிடக் கின்றது. இதைக்கண்டு என் மனம் தாங்க வில்லை. உம் தம்பியர்களோ பல துன்பங் களை அனுபவித்துக் கொண்டு வாழ்கிள் றார்கள். வலிமைமிக்க பீமனும் வில்லாற் றல்மிக்க அர்ச்சுனனும் உம்பொருட்டு எழு கின்ற கோபத்தை அடக்கி வாழ்கின்றனர். இவ்வளவு துன்பம் அனுபவித்தும் தர்ம புத்திரரே! உமக்கு ஏன் கோபம் வர வில்லை. கோபம் இல்லாத க்ஷத்திரியர்கள் உலகில் இல்லை; ஆனால் அதற்கு மாறுபட்டு நீர் இருக்கின்றீர்; கோபம் இல்லையென்றால் நம்மை எல்லோரும் அவமதிப்பார்கள். பொறுமை என்பது தேவைதான். அதனைத் தேவைப்பட்ட நேரத்தில்தான் கடைபிடிக்க வேண்டும். ாபம் கொள்ள வேண்டிய நேரத்தில் கோபம் கோபம் கொள்ள வேண்டும். மனமறிந்து குற்றம் செய்தால்,கோபங் கொண்டு அவனை தண்டித்துதான் தீர வேண்டும் என்று நீண்ட நேரம் மனக் கலக்கத்துடன் தன் உள்ளுணர்வுகளை வெளிக்காட்டினாள்.
பொறுமையின் சிறப்பு
அதனை அமைதியாகக் கேட்ட தர்மபுத்திரர், ”பெண்ணே தீயச் சக்தியாக விளங்கும் துரியோதனன் மேல் பெருத்த கோபம் கொண்டுள்ளாய். உன்னைப் போலவே நானும் நானும் கோபம் கொள்ள வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய். அதனால்தான் அக்கோபத்தை குறித்து சிறப்பித்துப் பேசுகின்றாய். தன்னைத்தான் துன்பங்கள் அடையாமல் இருக்க ஒருவன் நினைத்தானாயின் தன் மனத்துக்கண் முதலில் கோபம் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எழுகின்ற கோபத்தைத் தடுக்காவிட்டால் அச்சினம் அவனையே அழித்து பெருந்துன்பங்களைக் கொடுக்கும்” என்று பெரியோர்கள் பேசு கின்றனர். எனவே கோபத்தை அடக்கித் தான் வாழ வேண்டும். நீ ஒன்றைக் கவனிக்க வேண்டும். கோபத்தையே முற்றிலும் விட்டுவிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. காலம் கனியும் வரை கோபத்தை அடக்கி வாழ வேண்டும் என்றுதான் கூறுகின்றேன். ‘அறுவது சினம்’ அல்லவா! தகுந்த நேரத்தில் கோபத்தை அடக்கி வாழ்பவனிடம் செல்வம் சேரும். அடக்கி வாழாதவன் செல்வத்தை இழப்பாள். ஒருவனுடைய கெடுதலுக்குக் கோபமே காரணம். கோபமே கொடியது. தீமைகள் பல விளைவிக்கக் கூடியது. கோபம் கொண்டால் ஒரு செயலிலுள்ள நன்மை தீமைகளை அறிந்து கொள்ள முடி யாது. எல்லாக் கலகங்களுக்கும் கோபமே காரணம் என்பதை உணர்வாயாக.
“ஆனால் பொறுமையோ சிறப்புடைய ஒரு பண்பாகும் பொறுமை உடைய வனுக்கு அழிவற்ற நன்மைகள் கிடைக்கும். பொறுமையே வேதம், பொறுமையே பிரம்மம்; பொறுமையே தர்மம்; பொறுமையே புனித யாகம் பொறுமையே மாதவம். ஆகலின் அந்தப் பொறுமையையே நான் என்றும் கடைப்பிடித்து வாழ்வேன்” என்றார்.
இதனைக் கேட்ட பாஞ்சாலி (திரௌபதி) மீண்டும் தர்மபுத்திரரை பார்த்து, “அரசே! தர்மம், அஹிம்சை,பொறுமை, நேர்மை, கருணை என்ற இவற்றை மட்டும் கைக் கொண்டால் ஒருவன் சுகம் பெற முடியாது.நீரோ என்னை விட்டாலும் விடுவீர்! தம்பியர் களை விட்டாலும் விடுவீர்! நாட்டை விட்டாலும் விடுவீர். ஆனால் அஹிம்சை, தர்மம், பொறுமை போன்றவற்றை மட்டும் விட மாட்டீர். மனிதனை அவன் நிழல் தொடர்வது போல உம்மைத் தர்மம் தொடர்கிறது.அரசை எல்லாம் இழந்து வனவாசம் மேற்கொண்டபோதும் தர் மத்தை விடாது கடைபிடிக்கின்றீர். இத்தகைய தர்மாவானாகிய நீர் எவ்வாறு சூதாட்டம் என்னும் அழிதலில் நாட்டம் கொண்டீர்?” என்று கேட்டாள்.
எல்லாம் விதியின் செயல்
”எல்லாம் விதியின் செயல், நான் பெரும் போருக்கு காரணமாவேன்; என்னால் குலநாசம் ஏற்படும்’ என்று நம் குல முன்னோன் வியாசர் கூறியதால் “பிறர் சொன்னதை மறுக்கக் கூடாது” என்று சபதம் செய்தேன். எடுத்த சபதத்தைச் சீர் குலைக்க கூடாது என்ற காரணத்தால் இந்த சூதாட்டத்திற்கு ஒப்புக்கொள்ள நேரிட்டது. அதனால் இத்தகைய பெருந்துன்பத்திற்கு ஆட்பட நேரிட்டது. மேலும் நான் தர்மத்தை கடைப்பிடிப்பது எதிர்பார்த்தன்று. பலனை தர்மத்தினிடத்து நம்பிக்கை இல்லாதவனுக்கு வேறு எதிலும் நம்பிக்கை இருப்பதில்லை. நன்மையாகிய கரையை அடைபவனுக்கு தர்மமே ஓடம் போல் பயன்படுகின்றது. எனவே தர்மத்திற்கு எக்காலத்திலும் அழிவில்லை” என்று மறுமொழி கூறினார்.
அதற்குப்பின் பாஞ்சாலி (திரௌபதி) தர்ம புத்திரரைப் பார்த்து, ”அரசே! நான் தர்மத்தை எக்காரணம் கொண்டும் அவமதிக்கவுமில்லை; நிந்திக்கவும் இல்லை. இருப்பினும் நான் அடைந்த அவமானத்தினாலும், பெருந்துன்பங்களி னாலும் அவ்வாறு கூறி விட்டேன். என்றாலும் தர்மம்,தர்மம் என்று கூறி நீங்கள் சும்மா இருக்கக் கூடாது. செயலில் இறங்க வேண்டும். அப்பொழுதுதான் துன்பம் நம்மை நெருங்காது” என்றாள்.
அண்ணன் மீது கோபம் கொண்ட பீமன்
தர்மபுத்திரருக்கும், திரெளபதிக்கும் நடந்த பேச்சுகளையெல்லாம் பீமன் கேட்டுக் கொண்டிருந்தான். அதனால் பெரிதும் கோபம் அடைந்தான். கௌரவர் சபையிலேயே அவன் தன் அண்ணனைக் கோபித்தவன் அல்லவா? எனவே இப்பொழுது கோபம் கொண்டதில் வியப்பு இல்லை. அதனால் அவன், தர்மபுத்திரரை நோக்கி, “நீங்கள்தான் தர்மம், தர்மம் என்று பேசிக்கொண்டிருக் கின்றீர்கள். ஆனால் துரியோதனாதியர் தர்மத்தை காலில் மிதித்து அதர்ம வழியில் அல்லவா நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள்” உங்களுடைய கட்டளை யால் எங்களை அடக்கிக் கொண்டோம். அச்சபையில் பொறுமையைக் காத்தோம். எப்பொழுதும் நீங்கள் தர்மம்,தர்மம் என்று பேசியே நீரும் செயலில் இறங்காமல் எங்களையும் இறங்க விடாமல் செய்து வருகின்றீர்கள். எங்களுடைய வலிமையை அறிந்திருந்தும் அதனுடைய பயனைப் பெறவிடாமல் தடுக்கின்றீர்கள். க்ஷத்திரி யன் என்பவன் போரில் புரந்தார் கண் நீர் மல்க, விழுப்புண் பட்டு மாண்டுதான் வீர சொர்க்கத்தை அடைகின்றான். தவத்தால் அவன் அடைவதில்லை. இப்பொழுதும் வேளை தவறி விடவில்லை. எங்களுக்கு அனுமதி கொடுங்கள். துரியோதனாதியர் கூட்டத்தையே கொன்று நாட்டைக் கைப்பற்றி உங்கள் காலடியில் வைக்கின் றோம்” என்று ஆக்ரோஷத்தோடு பேசினான்.
அதனை கேட்ட தர்மபுத்திரர், “என் அன்புடைய தம்பி பீமா! என்னுடைய அஜாக்கிரதையினால் தான் உங்களுக்கு இத்தகைய பெருந்துன்பங்கள் உண்டானது என்கிறாய். அதனை நான் ஒப்புக் கொள்கிறேன் . சூதாட்டத்தில் பயிற்சி அற்ற என்னை சகுனி தன் மாய வலையில் சிக்க வைத்து வென்று விட்டான். இருப்பினும் நாடு நகர செல்வங்களைவிட தர்மமே எனக்கு மேலானது. எனவே உன் விருப்பத் திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன்” என்றார்.
இதனைக் கேட்டு பீமன், தர்ம புத்திரரைப் பார்த்து, “அண்ணா! ஏதோ ஒரு காலத்தில் ஓர் உறுதியை மேற்கொண்டு, அது பொருந்தாத காலத்திலும் அதனை உறுதியாக கடைப்பிடிக்கின்றீர். ஆயுள் குறைந்த மனிதன் எப்படி காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? ‘பதின்மூன்று ஆண்டுகள் வாழ்வோம்’ என்று எந்த உறுதியைக் கொண்டு நாம் உறுதி செய்ய முடியும்? நேற்று இருந்தவன் இன்று இல்லையாயினான் என்பது உலக நியதி. புகழில்லாதவன் பூமிக்குப் பாரமாகின்றான். வீரம் இல்லாதவன் குடும்பத்திற்கு மட்டுமன்று நாட்டிற்கும் பாரமாகின்றான் எனவே மரணத்திற்கு முந்தியே நாட்டை அடைய முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த தர்மங்களைப் பேசி பயனில்லை. மனிதன் வஞ்சனையைக் கொன்று நரகத்தை அடைந்தாலும் அந்த நரகமே அவனுக்கு சொர்க்கமாகும்.
போர் செய்ய உத்தரவு கேட்ட பீமன்
“நாங்களும் திரெளபதியும் உம்முடைய தர்மத்தால் கட்டுண்டு கிடக்கின்றோம். உண்மையில் நாங்கள் போரையே விரும்புகிறோம். என் அன்பு அண்ணா! உம் கைகள் பொன்னை வாரி வழங்கியவை; உமது புகழ் உலகம் முழுவதும் பரவி யுள்ளது. எனவே போரில் வஞ்சகப் பகைவரை கொன்று உரிய செல்வங்களை அனுபவியும். இன்னும் சொல்லப் போனால், உம்முடைய தர்மம் உண்மை யான வழியில் செல்லவில்லை. அதர்ம வழிக்கு துணைபோகின்றது. சுய நலப் பிண்டமான திருதராட்டிரர் புதல்வர்கள் செய்கின்ற கொடுமைகளை பொறுத்துக் கொள்ள செய்கின்றது. இது தேவையற்றது. இதுவரை நாம் காட்டில் பதின்மூன்று மாதங்கள் கழித்து விட்டோம். மாதத்தை ஆண்டாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்று அறிஞர்கள் சொல்லியிருக்கின்றார் கள். அதன்படி பார்த்தால் நாம் கழித்த பதின்மூன்று மாதங்களை, பதின்மூன்று ஆண்டுகளாக கணக்கிட்டுக் கொள்ளலாம். னவே இப்பொழுதே போரைத் தொடங்கலாம். உத்தரவு கொடுங்கள்’ என்று பீமன் உணர்ச்சி ததும்பக் கூறினான்.
தர்மரின் அறிவுரை
பீமன் சொன்னவற்றையெல்லாம் அமைதியாக பொறுமையுடன் கேட்ட தர்மபுத்திரர் சிறிது நேரம் சிந்தித்தார். பின்னர், “பீமா! அரச நீதிகளை அறிந்தவன் நீ.செயல்களை நன்கு சிந்தித்து, பலரைக் கலந்து ஆலோசித்து உரிய நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்பது நீ அறியாததல்ல. அப்பொழுதுதான் தெய்வத்தின் அனுகூலமும் கிட்டும். பிதாமகர் பீஷ்மர், ஆசாரியர் துரோணர், அவர் மகன் அஸ்வத்தாமா, பரசுராமரிடம் வில் பயிற்சி பெற்ற கர்ணன், பதினாயிரம் யானை பலம் கொண்ட துரியோதனன் போன்றவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். நல்ல அஸ்திரப் பயிற்சி பெற்ற வர்கள். போர்க்கலையில் வல்லவர்கள். அவர்களை சுலபமாக வென்றுவிட முடியாது. அதோடு துரியோதனனுக்கு உதவியாக பல நாட்டு மன்னர்கள் வரத் தயாராக உள்ளனர். நம்மை அனாவசியமாக வெறுக்கும் கர்ணன் நம்மை அழிப்ப திலேயே குறியாக உள்ளான். எனவே நாம் எதனையும் நன்கு சிந்தித்து ஆலோசிக் காமல் ஒரு சிறிய செயலையும் செய்ய முடியாது. அதில் இறங்குதலும் கூடாது” என்று நிதானமாகக் கூறினார். இவற்றை கேட்டபின் பீமன் வாய் திறவாது அடங்கிப் போனான்.
வியாசரின் வருகை
இவ்வாறு பேசி முடிக்கும்போது, வேதங்களை வகுத்தவரும், பரிமள கந்தியின் புதல்வருமான வேத வியாசர் அங்கு வந்தார். அவரைப் பாண்டவர்கள் எதிர் சென்று வரவேற்று, வணங்கி மகிழ்வுடன் உபசரித்தனர். அப்போது வேதவியாசர், தர்மபுத்திரரைப் பார்த்து, ”யுதிஷ்டிரா! நீ அளவு கடந்த பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய் என்பதை நான் அறிந்தேன். இதனால் துரியோதனாதியர் உன்னை அஞ்சுகின்ற கோழை என நினைத்து உன்னை எள்ளி நகையாடுவர். அது தேவையில்லாதது. பொறுமையை ஒரு காலம் வரை தான் அனுஷ்டிக்க வேண்டும். எல்லை மீறினால் பொங்கித் தான் எழ வேண்டும். அதனால் அளவுக்கு மீறிய பொறுமையை காட்டுதல் கூடாது” என்று கூறி தர்மபுத்திரரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று, அவரிடம் வியாசர்,
”யுதிஷ்டிரா! ‘பிரதிஸ்மிருதி’ என்னும் பெயரையுடைய மந்திரத்தை உனக்குச் சொல்லுகின்றேன். அதனை உன் தம்பி அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்; அதன் மூலம் அவன் உருத்திரன், வருணன், குபேரன், இயமன் போன்றோரை தரிசித்து சிறந்த தெய்வீக அஸ்திரங்களைப் பெறுவான். அதன் மூலம் பல செயற்கரிய காரியங்களைச் சாதிப்பான். இனி நீங்கள் இங்கு தங்க வேண்டாம். வேறு இடத்திற்கு சென்று விடுங்கள்” என்று கூறினார். பின்னர் வியாசர் தர்மபுத்திரருக்கு, ‘பிரதிஸ் மிருதி ‘என்னும் மந்திரத்தை முறைப்படி உபதேசித்து விட்டு, அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு அவ்விடத்திலி ருந்து சென்று விட்டார். வியாசர் அங்கு இனி இருக்கக்கூடாது என்று சொன்ன காரணத்தினால், தர்மபுத்திரர் தன் தம்பியரையும். பாஞ்சாலியும் (திரௌபதி), தௌமியரையும் அழைத்துக் கொண்டு சரஸ்வதி நதிக்கரையில் முன்னர் வசித்த காம்யக வனத்தை அடைந்து அங்கேயே தம்பியருடனும், (திரௌபதி) பாஞ்சாலியுடனும் தௌமியருடனும் வசித்து வந்தார்.
ஒருநாள் தர்மபுத்திரர் அர்ச்சுனனை தனியாக அழைத்து அவனிடம் ரகசியமாக, “அர்ச்சுனா! பிதாமகர் பீஷ்மர், ஆசார்யர் துரோணர்,தானவீரன் கர்ணன், அஸ்வத் தாமா முதலானவர்கள் தனுர் வேதத்தினை நன்கு கற்றவர்கள். பிரம்மாஸ்திரம் போன்ற தெய்வீக அஸ்திரங்களை செலுத்துதலில் வல்லவர்கள். அவர்கள் என்றும் துரியோ தனனுக்குத் துணையாக இருப்பார்கள். பெரும் படையும் அவர்களுக்கு துணையாக இருக்கின்றது. ஆதலின் அவர்களை வெற்றி கொள்ள நாம் பெற்றுள்ளதைவிட மேலான சக்தி நமக்குத் தேவைப்படுகின்றது. இன்று, வியாச மகரிஷி எனக்கு உபதேசித்த ‘பிரதிஸ்மிருதி ‘ என்ற பெயரையுடைய ஒப்பற்ற மந்திரத்தை உனக்கு உபதேசிக் கின்றேன். அதன் மூலம் எல்லா தேவர் களின் அருளையும் பெற நீ முயற்சிச் செய்ய லாம். சிந்தை அடக்கித் தவம் செய்ய வடக்கு நோக்கிச் செல்க. இந்திரனைச் சரண் அடைந்து, தேவையான அஸ்திரங் களைப் பெறுக; உனக்கு எல்லா நன்மை களும் உண்டாகும். இப்பொழுதே புறப் படுக” என்று கூறியதோடு ‘அந்த பிரதிஸ் மிருதி’ என்ற ஒப்பற்ற மந்திரத்தையும் முறைப்படி உபதேசித்தார். அர்ச்சுனனும் தெளிவாக அதனைக் கற்றுக்கொண்டான்.
மறுநாள் அர்ச்சுனன் கவசம் அணிந்து கொண்டான் விரல் உறைகளை மாட்டிக் கொண்டான். இரண்டு பெரிய அம்பறாத் தூணிகளையும் காண்டீப வில்லையும் எடுத்துக் கொண்டான். தமையனார் தர்ம புத்திரரையும், பீமனையும், தௌமியரை யும், அந்தணர்களையும் வணங்கி ஆசி பெற்றான். நகுல சகாதேவர்களிடமும், (திரௌபதி) பாஞ்சாலியிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டான். அப்பொழுது திரெளபதி “குந்தி அன்னை விரும்பிய மங்களங் கலெல்லாம் உங்களுக்குக் கிடைக்கட்டும்” என்று வாழ்த்தினாள். அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டபின், தர்மபுத்திரர் கூறியபடி வடக்கு நோக்கிச் செல்லலானான்.
அருந் தவசிகள் வாழும் உயரமான மலைகளையெல்லாம் நடந்து, கடந்து, புண்ணியப் பொலிவு பொருந்திய மலை களில் உயர்ந்து சிறந்து விளங்கும் இமய மலையை ஒரே நாளில் சென்றடைந்தான். அதன்பின் இரவும் பகலுமாக நடந்து கந்த மாதனத்தை அடைந்தான். அங்கிருந்து நடந்து ஏழாவது நாளில் ‘இந்திர கீல மலையைச் சேர்ந்தான். (இது தற்போது இந்திர நீலப்பருப்பதம்’ பதம்’ என்று என்று அழைக்கப் படுகின்ற மலையாக இருக்கலாம்).
அர்ச்சுனனின் தவம்
அமைதியான சூழல் அங்கு இருப்பதைக் கண்டு தவம் செய்வதற்கு இதுவே ஏற்ற இடம் என அர்ச்சுனன் தீர்மானித்தான். உடனே அவன் அங்கேயே இருகைகளை யும் உயரத் தூக்கிக் கூப்பிக் கொண்டு, ஆடாமல், அசையாமல் சிந்தையை அடக்கித் தவம் புரியலானான். அப்பொழுது ‘நில்’ என்று ஒரு குரல் எழுந்தது. உடனே தன் பார்வையை நான்கு பக்கங்களிலும் சுழற்றிப் பார்த்தான். இளைத்த பொன்னிற மேனியையும், சடை முடிகளையும் உடைய ஒரு முனிவர் நின்றிருப்பதைப் பார்த்தான். அவரும் அர்ச்சுனனைப் பார்த்தார்.
அதற்குப் பின் அம்முனிவர் அர்ச் சுனனை நோக்கி, “குழந்தாய்! நீ யார்? இந்த குழந வில், அம்பு, கவசம், அம்பறாத்தூணி போன்றவை தவம் செய்கின்ற உனக்குப் பயன்படா. கோபத்தையும், இன்பங் களையும் விட்ட தவசியருக்கு இந்த வீர தீர வேஷம் எதற்கு? இந்த ஆயுதங்களை யெல்லாம் கீழே வைத்துவிட்டு தவம் செய்” என்று கூறினார். அவர் கூறியதைப் போலவே மீண்டும் தவம் செய்யலானான். அதனைக் கண்டு அவர் சந்தோஷம் அடைந்து, “அர்ச்சுனா! நான் இந்திரன் உனக்கு உதவி செய்வதற்காக இந்தத் தவ வேடத்தில் வந்தேன். உனக்கு எல்லா கும், நீ விரும்பி நன்மைகளும் கிடைக்கும். நீ வந்தது நிச்சயம் நிறைவேறும். உனக்கு வேண்டிய வரம் யாது?” என்று கேட்டார்.
தன் எதிரில் நிற்பவர் தேவராசன் இந்திரன் என்று அறிந்தவுடன் அர்ச்சுனன் மிகுதியான மகிழ்ச்சியுடன் இரு கைகளை யும் கூப்பி வணங்கி, ‘பெருமானே! உம்மிடம் இருந்து மேலான அஸ்திரங்கள் எனக்கு வேண்டும். அதைப் பெறவே நான் வந்தேன்” என்றான். அர்ச்சுனன் கூறியதைக் கேட்டு இந்திரன் சிரித்துக் கொண்டே, “அர்ச்சுனா / மேலான கதியைப் பெறுவ தற்கு அல்லவா இங்கு வருகின்றவர்கள் தவம் செய்கின்றார்கள். நீயோ அஸ்திரங் களைக் கேட்கின்றாய். அதனால் உனக்கு என்ன பயன்? என்று கேட்டார். அதற்கு அர்ச்சுனன், “தேவராஜனே! நான் போகத் தையோ, மேலுலகங்களையோ, மோட் சத்தையோ விரும்பவில்லை. என்யும், (திரௌபதி) பாஞ்சாலியையும் சகோதரர்களையும், காட்டில் விட்டு வந்துள்ளேன். எனக்கு, பலமிக்க, என் எதிரிகளை அழிக்க உயர்ந்த ஆயுதங்கள் தான் வேண்டும். அவற்றைக் கொடுத்து அருள்வாயாக. எனக்கு நீ கொடுத்தாலும் இப்பொழுது மேலான உலகம் வேண்டாம்” என்றான். இந்திரன் அதனைக்கேட்டு, தான் நினைத்து வந்த காரியத்திலேயே கண்ணாயிருக்கின்ற அவன் திறமையைக் கண்டு மகிழ்ந்து, “தனஞ்சயா! முதலில் சிவபெருமானை குறித்து தவம் செய். அவரின் தரிசனம் கிடைத்தால் நல்ல பயன்களைப் பெறலாம். அவரிடமிருந்து எதிரிகளை அழிக்கக்கூடிய பாசுபதம் என்ற அஸ்திரத்தையும் பெறலாம். அதன்பின் எங்கள் சொர்க்கத் திற்கு வரலாம். அங்கு வந்தால் உனக்கு வேண்டிய அஸ்திரங்கள் பலவற்றைக் கொடுக்கின்றேன்” என்று கூறி மறைந்து போனார்.
சிவபெருமானை நோக்கி தவம்
இந்திரன் மறைந்தபின், அர்ச்சுனன் அதே இடத்தில் இருந்து கொண்டு சிவ பெருமானைக் குறித்துக் கடுந்தவம் செய்யலானான். பழுத்துப் பூமியில் விழுந்த இலைகளை மட்டும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை உண்டு, முதல் மாதம் முழுவதையும் கழித்தான். ஆறு நாட்களுக்கு ஒருமுறை ஒரு பழத்தை உண்டு அடுத்த இரண்டாவது மாதத்தைக் கழித்தான். பின்னர் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உணவு உண்டு மூன்றாவது மாதத்தைக் கழித்தான். நான்காம் மாதம் காற்றை மட்டும் உணவாகக் கொண்டு தவம் செய்தான். பின்னர் கால் கட்டை விரலை மட்டும் தரையில் ஊன்றிக் கொண்டு, இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு பிடிப்பற்றவனாகி நின்றபடி தவம் செய்தான். அவனுடைய தலை முடியானது சடா முடியாக மாறியது. தாடி வளர்ந்தது, உடல் இளைத்தது, வாய் ‘சிவாய நம! சிவாய நம’ என்று இடைவிடாது ஓதிக் கொண்டே இருந்தது.
இவனுடைய உக்கிரமான தவத்தைக் கண்டு மகரிஷிகள் சிவபெருமானிடம் சென்று.”கயிலாயவாசா! உமையொரு பாகா! அர்ச்சுனன் இமயமலைச் சாரலில் தங்களைக் குறித்துக் கடுந்தவம் புரிகின்றான். தவம் புரிவதற்குரிய காரணம் விளங்கவில்லை. அவனுடைய தவத்தின் உக்கிரம் எங்களைத் தகிக்கின்றது. ஆதலின் அவன் தொடர்ந்து தவம் இயற்றாவண்ணம் அவன் எண்ணத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும்” என வேண்டி நின்றனர். அதனை கேட்டு சிவபெருமான், “முனிவர் பெருமக்களே! அர்ச்சுனன் செய்கின்ற தவத்தைப் பற்றி நீங்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். அவன் எண்ணத்தை நான் அறிவேன். அவன் சொர்க்கம், செல்வம், ஆயுள் போன்றவற்றை விரும்பிச் செய்யவில்லை என்பது மட்டும் எனக்குத் தெரியும். நீங்கள் கவலையின்றி திரும்பிச் செல்லுங்கள். அவனுக்கு வேண்டியதை நான் செய்கிறேன்” என்று கூற, முனிவர் பெருமக்களும் மகிழ்ச்சியுடன் தத்தம் ஆசிரமங்களுக்குத் திரும்பினர்.
அதன்பின் அர்ச்சுனனைச் சோதிக்க வேண்டுமென்று எண்ணி சிவபெருமான் ஒரு வேடன் போன்று உருமாறினார். பார்வதி வேடுவச்சியாகவும், முருகன் அவர் இடுப்பிலுள்ள கைக்குழந்தை யாகவும் மாறச் செய்து அவர் பின்னே வந்தார். பூத கணங்கள் எல்லாம் வேடுவர்களாக மாறி அவரைப்பின் பற்றி சென்றனர். எல்லோரும் ஒன்று சேர்ந்து அர்ச்சுனன் தவம் செய்யும் இடத்தை அடைந்தனர்.
பன்றி உரு கொண்ட மூகாசூரன்
அதே நேரத்தில் மூகாசூரன் என்னும் கொடிய அரக்கன் பன்றியின் உருவத்தை எடுத்துக்கொண்டு, அர்ச்சுனனைக் கொல்வதற்குத் தயாராய் இருந்தான். அந்த மூகாசூரன் திதியின் மைந்தன் ஆவான். அவன் அர்ச்சுனனைக் கொல்லத் தயாராக இருக்கும் நேரத்தில், சிவபெருமான் வேடர் வடிவத்தில் வில், அம்பு ஏந்தி தன் கூட்டத்துடன் அங்கு வந்தார். மூகாசூரன் அர்ச்சுனன் மேல் பாயத் தயாராவதைக் கண்டார். அதே சமயத்தில் அர்ச்சுனன், தன் மேல் பன்றி உருவத்தில் இருந்த மூகாசூரன் காடே, அதிரும்படி கர்ஜனை செய்து கொண்டு பாய்ந்து வருவதைப் பார்த்து, தன் காண்டீபத்தை எடுத்து, அண்டமெல்லாம் அதிரும்படி நாணொலி செய்து பாயவரும் பன்றியின் மேல் அம்பினை விட்டான். அது பன்றியின் உடலில் நன்றாக பாய்ந்தது. அந்தக் கணத்திலேயே வேடுவனாக வந்த சிவபெருமானும் அந்த பன்றியின் மேல் அம்பு எய்தார். அர்ச்சுனன் அம்பு பாய்கின்ற அதே நேரத்தில் வேடுவன் அம்பும் அந்தப் பன்றியின் உடலினுள் பாய்ந்தது. இரட்டைக் குழல் துப்பாக்கியிலிருந்து ஒரே சமயத்தில் இரண்டு குண்டுகள் வெளிக் கிளம்பி செல்வதுபோல இருவருடைய அம்புகளும் ஒரே நேரத்தில் அப்பன்றியின் உடலில் பாய, அப்பன்றியானது கதறிக் கொண்டே உண்மை மூகாசூரன் வடிவெடுத்து கீழே விழுந்து இறந்து போயிற்று. அரக்கன் ஒருவன்தான் பன்றியாக மாறி தன்னைக் கொ கொல்ல வந்தி ருப்பதை அர்ச்சுனன் உணர்ந்து கொண் டான். பின்னர் அவன் சற்று தூரத்தில் வேடன் ஒருவர் வில்லேந்தி நிற்பதையும் அவர் பக்கத்தில் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு வேடுவச்சி, வேடர்கள் இருப்பதையும் கண்டான்.
அர்ச்சுனன் அவ்வேடனைப் பார்த்து, “வேடனே! நீ யார்? ஜனநடமாட்டம் இல்லாத இக்காட்டில் குழந்தையுடன் கூடிய பெண்ணுடன் நீ வரக்காரணம் யாது? நான் குறி வைத்து அடித்த பன்றியையே நீயும் அடிக்கக் காரணம் என்ன? சாதாரண வேட்டை முறையில் இருந்து நழுவி தவறான முறையில் நடந்து கொண்டாய். அதற்கு என்ன காரணம்?ஒருவர் குறி வைத்து அடிக்கின்ற பொருள் மீதே மற்றொருவர் குறிவைத்து அடிக்கக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?” என்று பலவாறு கேட்டான். அதனைக் கேட்டு அந்த வேடன், “வீரனே! இந்தக் காடு எங்களுக்கு உரியது. எங்கள் அனுமதியின்றி இங்கு ஏன் தவம் புரிகின்றாய்? அதை முதலில் சொல்லும்” என்று கேட்டான்.
சிவபெருமானை நோக்கி அம்பெய்த அர்ச்சுனன்
அதனைக் கேட்டு அர்ச்சுனன், “அக்கினியைப் போன்ற இந்தக் காண்டீபத்தை கையில் கொண்டு இக்காட்டில் சஞ்சரித்து வருகின்றேன். என்னைக் கொல்ல வந்த பன்றியை கொன்றேன்” என்றான். உடனே வேடன், “வீரனே! நான் எய்த அம்பால் தான் இந்தப் பன்றி மாண்டது. நீ இதனை மாற்றிப் பேசுகின்றாய். என் அம்பால் மாண்டதால் இந்த பன்றி எனக்கே உரியது. வீண் கர்வம் கொண்டவனாய் என்னை மிரட்ட வேண்டாம். உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன். மாறாகப் பேசுவாயானால் உன்னுடன் போரிடவும் தயங்க மாட்டேன். சக்தியிருந்தால் என்னுடன் போரிடு” என்று கூறினார்.
வேடனின் வார்த்தைகளைக் கேட்டு அர்ச்சுனன் சினம் கொண்டான். உடனே தன் காண்டீபத்தை எடுத்து, நாணேற்றி. அவ்வேடன் மேல் அம்புகளை எய்தான். சிவபெருமான் அவற்றையெல்லாம் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டார் .ஒரு முகூர்த்த நேரம் வந்த அம்புகளை ஏற்று அசைவற்று நின்றார். அனைத்து அம்புகளும் பயனற்றுக் கீழே விழுந்தன. இதனைக் கண்ட அர்ச்சுனன் மேலும் நூற்றுக்கணக்கான அம்புகளை வேடன் மேல் பிரயோகித்தான். அவற்றையெல் லாம் பெருமழையை ஏற்றுக்கொள்கின்ற பெரிய மலையைப்போல எல்லா வற்றையும் ஏற்றுக்கொண்டு பயனில் லாமல் போகும்படி செய்தார். தான் எய்த அம்புகளெல்லாம் பயனற்றுப் போதலைக் கண்டு அர்ச்சுனன் திகைத்தான். “எவ்வளவு அம்புகள் எய்தாலும் கலக்கம் இல்லாமல் இருக்கின்றானே? இவன் யார்? தேவனா? சித்தனா? சிவபெருமானா?’ என்று எண்ணிய அவன் மீண்டும் நூற்றுக் கணக்கான அம்புகளை ஏவினான். அவற்றையும் வேடன் பயனற்றதாக் கினான். பின்னர் தொடர்ந்து பாணங்களை ஏவினான். எல்லாவற்றையும் வேடன் தாங்கிக் கொண்டான். பாணங்கள் குறைய லாயிற்று, அர்ச்சுனன் அச்சம் கொண்டான். பாணங்கள் குறைவதற்குரிய காரணம் ஒன்றும் புரியவில்லை.
தெளிவு பெற்ற அர்ச்சுனன்
அம்புகள் குறைந்து விட்டன. ஆகை யினால் கோபத்துடன் இருந்த அர்ச்சுனன் வில்லின் நுனியால் வேடன் உருவந்தாங்கி வந்த சிவபெருமானை அடித்தான். சிவ பெருமாளாகிய அவ்வேடன் அர்ச்சுளன் அடித்ததை பொருட்படுத்தவில்லை. அதனால் அப்பெருமான் அவன் கையிலி ருந்த வில்லைப் பறித்துக் கொண்டார். காண்டீபத்தை இழந்த அர்ச்சுனன் ஒரு நாளும் பெறாத தோல்வி இந்தக் காட்டுவாசியினால் ஏற்பட்டதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். உடனே கத்தியை எடுத்தான். அக்கத்தியினால் சண்டை போடத் தொடங்கினான். வேடனுடைய தலையைப் பார்த்துக் கத்தியால் அடித்தான். ஆனால் அந்தக்கத்தி துண்டு துண்டாகப் போனது. பிறகு கற்களை எடுத்து சண்டை போட்டான். அதிலும் பயன்கிட்டவில்லை. பின்னர் முஷ்டியால் வேடனைக் குத்தித் தாக்கத் தொடங்கினான். அதிலும் தோல்வி அடைந்தான். பின் இருவரும் கடுமையாக மல்யுத்தம் செய்யலாயினர். வேடன் அர்ச்சுனனை மார்போடு மார்பாக இறுகக் கட்டிக்கொண்டு அவனால் ஒன்றும் செய்ய இயலாதபடி செய்தான்.
ஒன்றும் செய்ய முடியாதவனாகி திகைத்துப்போன அர்ச்சுனன், சிவபெருமானை மனத்தால் தியானித்தான். மண்ணாலான மேடை ஒன்று அமைத்து மலர்மாலை ஒன்றைக் கொண்டுவந்து பூசனை செய்தான். என்ன ஆச்சரியம்! அர்ச்சுனன் மேடையில் போடப்பட்ட மலர் மாலை வேடனின் கழுத்தில் தொங்கியது. அதனை அர்ச்சுனன் கண்டான்; தெளிவு பெற்றான்.
வேடனாக வந்தவன் சிவபெருமானே என்றும், தன்னுடன் இதுவரை போரிட்ட தும் அப்பெருமானே என்றும் தெளிந்தான். உடனே அப்பெருமானுடைய கால்களில் விழுந்து வணங்கி, ”ஐயனே! மெய்யனே! உமையொரு பாகனே! நீலகண்டனே! முக்கண்ணப்பா என் பொல்லா மாணிக் கமே ! மாலும் அயனும் கண்டறியாப் பெருமானே! உங்களை என் வில்லால் அடித்தேனே. கத்தியால் குத்தினேனே. ஐயா! என் பிழை பொறுக்க வேண்டும்” எனப் பலவாறு முறையிட்டு வேண்டி நின்றான்.
அர்ச்சுனனுக்குச் சிவபெருமான் அளித்த அஸ்திரங்கள்
அர்ச்சுனனின் செயலைக்கண்டு சிவ பெருமான் மனமகிழ்ச்சி அடைந்தார். சோர்வுடன் காணப்பட்ட அவனைப் பார்த்து “அர்ச்சுனா| வீரத்திலும் தைரியத் திலும் உனக்கு நிகரான க்ஷத்திரியன் உலகில் யாருமில்லை. தேவர்களாலும் உன்னை வெல்ல முடியாது, என்னுடைய அஸ்திரங்களை உனக்குத் தருகின்றேன்” என்றார்.இதனைக் கேட்டு அர்ச்சுனன் அப்பெ சிந்தை குளிர்ந்தது. அப்பெருமானைத் தன் கண் குளிரக்கண்டான். தலையால் அவர் பாதங்களை வணங்கினான். பின்னர் அவன், “எம்பெருமானே/ தேவதேவரே! உலக உயிர்களுக்கெல்லாம் தலைவரே! உம்மை நேரில் காணும் பேறு பெற்றேன். நாள் செய்த பாக்கியமே பாக்கியம். யாருக்கு இந்த ஒப்பற்ற பேறு கிட்டும்? என் தவம் பலித்தது. அடியேன் செய்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டு கின்றேன். அறிவின்மையாலும், ஆத்திரத் தாலும், ஆலோசிக்காமலும் உம்முடன் போர் தொடுத்து விட்டேன். தங்களை என் வில்லாலும் கத்தியாலும் தாக்கினேன். ரலும கத்தியாலும் ஐயா! என்னைப் பொறுத்தருள்க; முன்னே காஞ்சியில் கல்லால் (சாக்கிய நாயனார்) ஒருவன் உன்னை அடித்தான். பின் திருக்காளத்தியில் காலால் மற்றொருவன் (கண்ணப்ப நாயனார்) மிகித்தான். பின் சொல்லால் மதுரையில் ஒருவன் (தருமி) தாக்கினான். விண்ணுக்கும் மண்ணுக்கு மாக சோதியாய் நின்ற பெருமானே! அடியார்களிடம் அடி படுவது உனக்கு ஆனந்தமோ? ஆதி அந்தம் இல்லா அருட் பெருஞ் சோதியே! பாண்டியனின் மதுரையில் இருந்து தண்டமிழ் வளர்த்த பெருமானே! அடியேனாகிய அற்பனிடம் வில்லால் அடிபட்டாயே! அவர்களுக்கு அன்று அருள் புரிந்தது போல, எனக்கும் அருள் புரிவாயாக. உம்மையே சரண் அடைந்தேன் பெருமானே எனப் பலவாறு முறையிட்டு வேண்டி நின்றான்.
காண்டீபம் பெற்ற அர்ச்சுனன்
உடனே சிவபெருமான் அர்ச்சுனனின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, ”பொறுத்துக் கொண்டேன் அர்ச்சுனா! பொறுத்துக் கொண்டேன்” எனக் கூறி அவனை அன்போடு தழுவிக் கொண்டார். விடையூர்ந்த அப்பெருமான், பின்னர், அவனிடம், விசயனே! “நீ முற்பிறவியில் நாராயணரை சேர்ந்த நரனாக இருந்தாய். அப்பொழுது பத்ரிகா ஆசிரமத்தில் பதினாயிரம் ஆண்டுகள் அருந்தவம் செய்தாய். இந்த காண்டீபம் என்ற வில்லை தாங்கி, அன்று அசுரர்களை நீயும் கிருஷ்ண பகவானும் கொன்றீர்கள். எனவே இந்த காண்டீபம் உனக்கே சொந்தம். இதனை பெற்றுக் கொள்க. அத்துடன் உனக்கு தேவையான வரத்தைக் கேள் தருகின்றேன். மனிதர்களிலோ, தேவர்களிலோ உனக்கு நிகரானவர் யாருமில்லை” என்று கூறினார்.
அர்ச்சுனன் கேட்ட பாசுபதம்
எல்லாவற்றையும் கேட்டுக் கொண் டிருந்த அர்ச்சுனன் மகிழ்ச்சியுடையவனாய், ”பெருமானே! ‘பிரம்ம சிரஸ்’ என்ற பெயர் பெற்ற ‘பாசுபதம்’என்ற உயரிய அஸ்தி ரத்தைத் தாங்கள் எனக்கு வழங்க வேண்டும். பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற வீராதி வீரர்களை எதிர்த்து வெல்வதற்கு அந்த சிறப்புடைய உயர்ந்த அஸ்திரம் தேவைப்படுகின்றது. அதன் பொருட்டே தங்களைக் குறித்துத் தவம் செய்தேன்” என்று கூறினான்.
சிவபெருமான் அர்ச்சுனன் கூறியதைக் கேட்டு,” தனஞ்செயா! நீ விரும்பும் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை உனக்கு வழங்குகின்றேன். இதனை தாங்கும் வல்லமை உள்ளவர் மூன்றுலகங்களிலும் இல்லை அர்ச்சுனா! எனவே அவசரப்பட்டு பகைவர் மேல் இதனை தொடுத்து விடக் கூடாது. மேலும், இதனைத் செலுத்துதற் குரிய மந்திரத்தை உபதேசிக்கிறேன்” என்று கூறி அந்த அஸ்திரத்தை பிரயோகம் செய்யும் மந்திரத்தையும், பின்னர் அதனை திருப்பி அழைக்கும் மந்திரத்தையும் உபதேசித்து அருளினார். அவற்றை அர்ச் சுனன் கவனத்துடன் கற்றுத் தெளிந்தான். பின்னர் சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரத்தையும், அவர் பறித்துக் கொண்ட தன்னுடைய காண்டீபத்தையும் பெற்றுக் கொண்டான்.
சிவபெருமானால் தழுவப்பட்ட காரணத்தால், அர்ச்சுனன் உடலில் இருந்த தோஷங்கள் யாவும் நீங்கின. அது மட்டு மல்லாது வலிமையும் பொலிவு முடைய, ‘சொர்க்கத்தை அடைவாயாக’ என்று கூறி, ரிடபவாகனரூடராய், உமையொரு பாகனாய், பூத கணங்களுடன் அவனுக்குத் திவ்வியமான காட்சி தந்து மறைந்து அருளினார். சிவபெருமானைக் காணும் ஒப்பற்ற பேறு பெற்றதை குறித்து, அளவு கடந்த மகிழ்ச்சியை அர்ச்சுனன் அடைந் தான். அப்போது அங்கு இந்திரன், வருணன், குபேரன், இயமன் போன்ற தேவர்கள் வந்து அவனுக்கு ஆசி மொழி களையும் வேண்டிய அறிவுரைகளையும் வழங்கினார்கள்.
ஊர்வசி சாபம்
சிவபெருமானைத் தரிசித்ததோடு மட்டு மல்லாது, ‘பாசுபதம்’ என்னும் உயரிய அஸ்திரத்தையும் பெற்று அர்ச்சுனன் மகிழ்ச்சியோடு இருக்கும் காலத்து, விண்ணுலக வேந்தன் தேவேந்திரன் அவன்பால் வந்து மிகுந்த மகிழ்ச்சியோடு. “அர்ச்சுனா! இப்பொழுது தேவர்களுக்கு மேலான சக்தியைப் பெற்றிருக்கின்றாய். உன்னை இனி யாராலும் வெல்ல முடியாது. என்னுடைய அமராவதிப் பட்டினத்தில் சில காலம் என் விருந்தின னாக தங்கியிருக்க வேண்டும். என்னுடைய தேர்ப்பாகன் மாதலி என்பான் உன்னை சொர்க்க லோகத்திற்கு அழைத்துச் செல்ல நின்பால் வருவான். அவனுடன் தேரில் நீ வா! அங்கு நான் உனக்கு எல்லா அஸ்திரங் களையும் தருகின்றேன்” என்று கூறி மறைந்து போனார்.
அமராவதிப்பட்டினத்தில் அர்ச்சுனன்
இந்திரன் சொன்னபடியே மாதலி தேர் வந்தது. அர்ச்சுனன் புனித கங்கையில் நீராடி, புனிதமான இமயமலையை வணங்கி, பின் வந்து நின்ற இந்திரன் தேரில் ஏறிக்கொண்டான். கணப் பொழுதில் இந்திரனுடைய நகரமான அமராவதிப்பட்டினத்தை அடைந்தான். கற்பக மரங்கள் எங்கும் நிறைந்திருக்கும் அத்தேவலோகத்தில் வாழும் தேவர் களையும் அந்நகரத்தின் எழிலையும் கண்டு கொண்டே இந்திரனிடம் சென்று சேர்ந்தான். அரியாசனத்தில் அமர்ந்திருந்த ஆயிரங்கண்ணனாகிய இந்திரனைக் கண்டவுடன் வணங்கினான். இந்திரனும் அவனைத் தழுவிக்கொண்டார். அவனுக்கு வேண்டிய அஸ்திரங்களையெல்லாம் மகிழ்வுடன் கொடுத்தார்.
இந்திர லோகத்தில் அர்ச்சுனன் ஐந்து ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் தங்கியிருந்தான். ஒரு நாள் இந்திரன் சித்திரசேனன் என்ற கந்தருவனை அறிமுகப்படுத்தி, “அர்ச் சுனா! இந்த சித்திரசேனன் நடனத்திலும் இசையிலும் வல்லவன். இவனை நண்பனாகக் கொண்டு இசையையும் நடனத்தையும் கற்றுக்கொள்வாயாக ” அதனால் உனக்கு நன்மை ஏற்படும்” என்று கூறினார். இந்திரன் கூறியபடியே சித்திரசேனனிடம் அர்ச்சுனன் நடனம், இசை ஆகிய இரண்டையும் நன்கு கற்றுக் கொண்டான்.
ஒரு சமயம் இந்திர சபையில் தேவ லோகத்து நடன நங்கையான ஊர்வசி நடனமாடினாள். சித்திரசேனனிடம் நடனம் கற்றுக்கொண்டிருந்தவன் ஆன படியால்,நடனத்தை அந்நங்கை எவ்வாறு ஆடுகின்றாள் என்பதை அறிதற்காக கண்கொட்டாது பார்த்திருந்தான். நன்றாக ஆடும் பொழுது உற்சாகப்படுத்தி, ஊக்க மூட்டவும் செய்தான். இதனைக் கண்ட இந்திரன் ஊர்வசியை அர்ச்சுனன் விரும்பு வதாக தவறாக எண்ணி விட்டார். அதனால் அவர் சித்திரசேனனை அழைத்து, ஊர்வசியை அர்ச்சுனனிடம் அழைத்துச் செல்லுமாறு கூறினார். அவளும் சித்திர சேனனுடன் அர்ச்சுனன் இருப்பிடத்திற்குச் சென்றாள். ஊர்வசியும் அர்ச்சுனன் மேல் காதல் கொண்டிருந்தாள். ஆதலின், அவள் சித்திரசேனனை அனுப்பி விட்டு மன்மத பாணத்தால் உந்தப்பட்ட வளாய், தன்னை நன்றாக அலங்காரம் செய்து கொண்டு இரவு நேரத்தில் தனியாக அர்ச்சுனன் இருப்பிடத்திற்குச் அர்ச்சுனனிடம் சென்றாள். வாயில்காப்போர் ஊர்வசியின் வருகையைத் தெரிவித்தனர். இரவு நேரத்தில் மிகுதியான அலங்காரங் களுடன் ஊர்வசி தன்னை நாடி வந்திருப் பதை அர்ச்சுனன் அறிந்து வெட்கம் கொண்டான். அவளைப் பார்க்க கூசி கண்களை மூடிக் கொண்டான். எதிர்சென்று குருவை சீடன் வரவேற்பது போலத் தலைகுனிந்து, பணிவுடன் வரவேற்றான். பின்னர் அவளைப் பார்த்து, ”என் தாயே! தாங்கள் இரவு நேரத்தில் இங்கு வந்ததற் குரிய காரணம் யாது?” எனக் கேட்டான்.
ஊர்வசியின் விருப்பம்
அதற்கு ஊர்வசி, “அர்ச்சுனா! இந்திர னுடைய கட்டளைப்படி சித்திரசேனன் என்னை உன்னிடம் அனுப்பி வைத்தான். நான் இந்திர சபையில் நடனம் ஆடியபொழுது, நீ என்னை இமை கொட்டாமல் பார்த்திருந்தாய். இதனை இந்திரனும் பார்த்துள்ளார். எனவே இந்திரன் என்னை உம்மிடம் அனுப்பி வைத்துள்ளார். மேலும் நான் உன்னை விரும்புகிறேன். அதனால்தான் நான் உன்னிடம் வந்தேன்; என் விருப்பத்தை நிறைவேற்றுக” என்று கூறினாள்.
ஊர்வசி சொன்னதைக் கேட்டு அர்ச்சுனன் திடுக்கிட்டான். இதனை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் அவன், “அழகுடைய தேவதையே/ ஊர்வசியே! நீ என் குரு பத்தினி போன்றவள். அதுமட்டு மல்லாது சந்திரனது மைந்தனாகிய புதன் என்பவன் இளை என்பவளிடத்து பெற்ற புரூரவன் என்பான் எம்குல முன்னோன். அவன் உம்மை மணந்து கொண்டு ‘ஆயு’ என்னும் குமாரனைப் பெற்றான் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம். அதனால் நீங்கள் எங்கள் குரு குலத்துக்கு மாதா ஆகின்றீர். எனவே தங்களை நான் தாயாகத்
தான் ஏற்க முடியும். வேறு எவ்வகையாலும் நான் எண்ண முடியாது. மேலும், தாங்கள் நாட்டியம் ஆடியபொழுது கண்கொட்டாமல் உற்றுப் பார்த்ததற்குக் காரணம் நீங்கள் நினைத்த மாதிரி எண்ணத்தினால் அன்று. சித்திரசேனனிடம் நான் நாட்டியக்கலை பயின்றவன். நான் சுற்ற நாட்டியக் கலை மூலம் உங்கள் நாட்டியக் கலையின் தரத்தை அளவிட்டுப் பார்க்கத்தான் அவ்வாறு உற்றுப்பார்த்தேன். வேறு மாதிரியான எண்ணமே எண்ணமே எனக்குக் என கிடையாது. என்னை மன்னித்து விடுங்கள். எனவே வேறு வகையான எண்ணத்துடன் என்னை நெருங்க வேண்டாம்”என்று கண்டிப்பாகக் கூறி விட்டான்.
இதனைக் கேட்ட ஊர்வசி ஏமாற்ற மடைந்து, “வீரனே! என்னை குரு ஸ்தானத் திலோ, தாய் ஸ்தானத்திலோ வைத்து எண்ணுவது தகாது. நாங்கள் தேவதைகள். எங்களுக்கு இந்த உலகக் கட்டுப்பாடுகள் எல்லாம் கிடையாது. தவத்தால் சிறப் புடைய யாரும் என்னைச் சேரலாம். அதனால் குற்றம் ஒன்றும் ஏற்படாது.உறவு முறை என்பது எங்களுக்குக் கிடையாது. எனவே என்னை ஏற்றுக் கொள்” என்று வேண்டினாள்.
ஊர்வசியின் கோரிக்கையை ஏற்காத அர்ச்சுனன்
அவள் கூறியதை கேட்கச் சகியாத அர்ச்சுனன், “ஊர்வசியே! குந்தி அன்னை யும்,மாத்ரி தாயும், இங்குள்ள இந்திராணி யும் எனக்கு எவ்வாறு தாய் உறவு முறை யினரோ, அவ்வாறே நீயும் தாய் என்ற உறவு முறையினளே. மரியாதைக்குரிய தாங்கள் இவ்வாறு பேசுவது தகுதியன்று; இங்கிருந்து போய் விடுங்கள்” என்று மனவேதனையுடன் கூறினான்.
அர்ச்சுனனின் இந்த கண்டிப்பான வார்த்தைகளைக் கேட்டு ஊர்வசி அதிர்ச்சி யும் அவமானமும் கோபமும் அடைந்தாள். “அர்ச்சுனா! நானே உன்னை நாடி வந்தும் என்னை ஏற்காது அவமதித்து விட்டாய். எனவே பேடியாகி, பெண்களின் மத்தியில்
திரிவாயாக என்று சாபமிட்டு மிக்க கோபத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள். ஊர்வசியின் சாபத்தைப் பெற்ற அர்ச்சுனன் பெரிதும் மனத் து துயரம் கொண்டான். பொழுது புலரும் வரை காத்திருந்தான். காலையில் சித்திரசேன னிடம் நடந்ததைக் கூறி வருத்தமுற்றான். அவன் கூறியதைச் சித்திரசேனனும் இந்திரனுக்குத் தெரிவித்தான்.
இந்திரன் துயரத்தில் மூழ்கியுள்ள தன் மகன் அர்ச்சுனை அர்ச்சுனனை வரவழைத்து ஆறுதல் மொழிகளைக் கூறி அவன் மனத் துயரை குறைத்தார். பின்னர், “மகனே/ தனஞ்சயா! நல் பண்புடைய மகனைத்தான் குந்திதேவி பெற்றெடுத்துள்ளாள். நீ கொண்ட உறுதி மிகச்சிறந்தது. பதின் மூன்றாவது ஆண்டு நீங்கள் அஞ்சாத வாசம் செய்ய வேண்டும் அல்லவா! அப்பொழுது இந்தச் சாபம் உனக்குப் பயன்படும். ச் ஊர்வசியின் இந்தச் சாபத்தை பயன்படுத்தி அந்த ஓராண்டைக் கழித்து விடு. இப் பொழுது ஊர்வசியும் மனமாறி நீ எப் பொழுது விரும்புகிறாயோ அப்பொழுது ஓர் ஆண்டிற்குப் பேடியாக இருக்கலாம் என்று சாபவிமோசனம் தந்துள்ளாள். அக்காலத்தில் ஊர்வசியின் சாபத்தை தை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லாம் நன்மைக்கே” என்று ஆறுதல் மொழி பல புகன்றார்.
இந்திரன் ஆறுதல்
இந்திரன் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டு அர்ச்சுனன் மகிழ்ச்சி அடைந்த வனாகிச் சாபத்தைப் பற்றிய கவலையிலி ருந்து நீங்கினான். அங்கேயே இந்திரனுடன் சில நாட்கள் தங்கியிருந்தான். அப்பொழுது உரோமச முனிவர் என்பவர், இந்திரன் சபைக்கு வந்தார். அவரிடம் இந்திரன், “முனிவர் பெருமானே! இந்த அர்ச்சுனன். சாதாரண மானிடன் என்று எண்ண வேண்டாம். நர நாராயணர்கள் என்ற ரிஷிகளே இந்த கிருஷ்ணார்ச்சுனர்கள். பூமியின் பாரத்தைக் குறைக்கும் பொருட்டு பகவான் கிருஷ்ணனும் இந்த அர்ச்சுனனும் தோன்றியுள்ளார்கள். இவர்கள் இருவருமே தங்கள் வல்லமையை உலகிற்கு எடுத்துக் காட்டி வருகின்றனர். தற்போது அர்ச்சுனன் தெய்வீக அஸ்திரங்கள் பெறும் பொருட்டு இங்கு வந்துள்ளான். நீர் பூமியை அடைந்து காம்யக வனத்தில் தங்கி இருக்கும் யுதிஷ்டிரரைச் சந்தித்து, ‘அர்ச்சுனன் இந்திர லோகத்தில் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அஸ்திரங்கள் பெற்று வருவ தாகவும் கூறுங்கள். அவனைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் கூறுங்கள்” என்று அம்முனிவரிடம் கூறிய அவ்விந்திரன், “நீவீர் பூலோகம் சென்று அரக்கர்களிடமிருந்தும் பகைவர்களிட மிருந்தும் யுதிஷ்டிரரைக் காப்பாற்ற வேண்டும். அவருக்கு வேண்டிய ஆறுதல் மொழிகளைக் கூறுங்கள்” என்றும் கூறினார். அவ்வாறே உரோமச முனிவர் யுதிஷ்டிரரை காணும் பொருட்டு இந்திர னிடம் விடைபெற்று, காம்யக வனம் சென்றார். அதாவது பூமியை அடைந்தார்.