பீமன் மிகக் கோபமாகத் தன் மரியா தைக்குரிய தமையனாரைக், கடிந்து கூறி யதைக் கேட்ட அர்ச்சுனன், பீமனைப் பார்த்து, ”அண்ணா! இதற்கு முன்னர் நீ இத்தகைய கொடிய வார்த்தைகளைக் கூறிய வன் அல்லவே! அதுவும் இந்தக் கயவர்கள் முன் தருமத்தின் மறு உருவான நம் அண்ணனைப் பழித்துக் கூறி விட்டாயே. “தருமத்தின் வாழ்வதனைச் சூது சில காலம் கவ்வியிருக்கும். தருமம் மறுபடியும் வெல்லும்” என்பது உலக நியதி. ஆதலின் தருமத்தின் வழி நடப்பதே நமக்குச் சிறப்பு. பெருமையும் கூட. எனவே அறவோனாக விளங்கும் நம் தமையனாரை, மிஞ்சி நடப் பது நமக்கு அழகன்று; சிறிய அண்ணா! நம் அண்ணாவை இந்தக் கயவர்கள்தான் சூதுக்கு அழைத்தார்கள். தானாக அவர் செல்லவில்லை.வியாசர் கூறிய கூற்றின் படி, தாம் மேற்கொண்ட பிரதிக்ஞையை நினைத்துத்தான், சூதாடுவதற்கு ஒப்புக் கொண்டார். அஃதாவது வியாசர் கூறியபடி போர் வருவதற்குத் தாம் காரணமாயிருக்கக் கூடாது, என்ற நல்லெண்ணத்தினால்தான் வஞ்சகன் சகுனியின் விருப்பத்தை ஏற்றார். அதனால்,நாம் இன்று கட்டுண்டோம். பொறுத்திருப்போம். காலம் இப்படியே இருக்காது. நிச்சயம் மாறும். அதர்மம் எக்காலத்தும் நீடித்து இருக்காது. தருமம் அப்போது அதர்மத்தை வெல்லும் அதர்மர் களாகிய இக்கயவர்கள் வர்கள் கூண்டோடு அழிவர்” என்றான்.
விகர்ணனின் அறிவு முதிர்ச்சி
பாண்டவர்கள் அடைந்துள்ள பெருந் துன்பத்தையும் பாஞ்சால நாட்டுத் திரு மகள் திரௌபதி பரிதாபமாக அலைக் கழிக்கப்படுகின்ற விதத்தையும் காணச் சகிக்க முடியாதனவாகி, சேற்றில் முளைத்த செந்தாமரை என விளங்குபவனும், அற வோனுமாகிய திருதராட்டிரரின் இளைய மகன் விகர்ணன் என்பான் எழுந்து, ”டித்திரிய மன்னர்களே பெரியோர்களே! அறநெறி உணர்ந்த சான்றோர்களே! திரௌபதி கேட்ட நியாயமான கேள்விக்கு உரிய பதிலைக் கூறுங்கள்; இல்லை யென்றால் நமக்கு நரகமே மிஞ்சும்.இதில் ஐயமில்லை. துரோணர், கிருபர், முதலான வேதசாத்திரங்களில் கரைகண்ட ஆசார்யர் களும் கூட, ஏன் பதில் கூறாமல் மௌன மாய் இருக்கின்றார்கள் என்பது எனக்குப் புரியவில்லை” என்று கூறிச் சிறிது நேரம் அமர்ந்தான். யாரும் அவனுக்குப் பதில் கூறுவதாகத் தெரியவில்லை. அதனால் அவன் மீண்டும் எழுந்து, “க்ஷத்திரிய மன்னர்களே! சான்றோர்களே! நீங்கள் என்ன காரணத்தால், நியாயத்தை எடுத்துச் சொல்லாமல் இருக்கின்றீர்கள். நான் வயதில் சிறியவன். வயதிலும், அறிவிலும், என்னைவிட முதிர்ந்த பெரியவர்கள் மௌனமாக இருப்பதால் என் கருத்தைச் சொல்லுகின்றேன்.
“என் அண்ணா யுதிஷ்டிரர் வஞ்சகமாக இங்கு அழைக்கப்பட்டார். அவரை இங்கு இந்தச் சூதாட்டத்தில் சிக்க வைத்ததை, இந்தச் சபையே அறியும். வஞ்சகர்கள் விரித்த வலையில், அவர் அகப்பட்டுக் கொண்டார்.கள், சூதாட்டம், போன்றவை அறிவை அழிக்கக் கூடியவை. எனவே சூதாட்டத்தில் மூழ்கிய யுதிஷ்டிரர், தன் சுய நினைவை இழந்து, தன்னை இழந்தபின். பாஞ்சாலன் பெற்ற திருமகளைப் பணயம் வைத்தார். தெளிந்த நிலையில், அவர் இருந்திருந்தால் தான் அடிமையான பிறகு நிச்சயம் அந்நங்கையைப் பணயம் வைத் திருக்கமாட்டார்; சிறந்த அறிவாளியான அவர், அத்தகைய தவறான செயலைச் செய்யமாட்டார். அதனால் இந்தப் பந்தயமே செல்லாது; அது மட்டுமன்று. இந்தத் தெய்வத் திருமகள் பாஞ்சாலி, யுதிஷ்டிரருக்கு மட்டும் உரியவள் அல்லவே! பாண்டவர் அனைவர்க்கும் பொதுவானவள். மற்றோர் ஆட்சேபணை யும் இங்கு உண்டு. வஞ்சகச் சகுனிதான் முதலில், பாஞ்சாலன் பெற்ற திருமகளைப் பணயப் பொருளாக வைக்கும்படி, சூதில் மூழ்கியிருந்த யுதிஷ்டிரரைத் தூண்டினான். இஃது நம் போன்ற க்ஷத்திரியர்கள் ஆடும் முறைக்கு முரண்பட்டதாகும். அஃதாவது குறிப்பிட்ட பொருளைப், பணயமாக வைக்கும்படி எதிராளி சொல்லக்கூடாது. சகுனிதான் தருமர் தன்னை இழந்த பின்னும், பாஞ்சாலியைப் பணயப் பொருளாக வைக்கும்படி தூண்டினான். இவற்றையெல்லாம் பார்த்து ஆராயும் பொழுது, பாஞ்சாலி நிச்சயமாக நியாயமாக ஜெயிக்கப்பட ஜெயிக்கப்படவில்லை. இது என் கருத்து “என்று துணிந்து நியாயத்தை எடுத்துக் காட்டினான்.
இவ்வாறு வயதில் சிறியவனாகிய விகர்ணன், அறிவு முதிர்ச்சியோடு, பேசி யதைக் கேட்டு, சபையோர் அனைவரும் புகழ்ந்தனர். பேரொலி செய்தனர். ‘தருமம் பிழைத்தது ‘என்றனர். சகுனியையும் துரியோதனாதியரையும் இகழ்ந்தனர்.
கர்ணனின் துடுக்குத்தனம்
அந்தச் சமயத்தில் கர்ணன் கோபத்துடன் எழுந்து,”விகர்ணா! சபையில் பெரிய வர்கள், அறிவில் முதிர்ந்தவர்கள், வேதசாத் திரங்களில் வல்லவர்கள், முதலானவர் பலர் இருக்க, சிறு பையனான நீ, விதண்டா வாதம் செய்கிறாய். நெருப்பைக் கடைந்த அரணிக்கட்டையை, அந்த நெருப்பே பற்றிக் கொள்வது போல நீ அறியாமை யால், அவசரப்பட்டுப் பிறந்த வீட்டுக்கே துரோகம் செய்கின்றாய். திரெளபதி முறைப்படிதான் ஜெயிக்கப்பட்டாள். அதனால்தான். சபையோர் அவள் கேள்விக்குப் பதில் கூறாது விட்டனர். அவசரப்பட்டு ஏதேதோ உளறுகின்றாய். ‘பந்தயப் பொருள் திரௌபதி’ என்று சகுனி கூறியதைத் தருமன்தான். ஏற்றுக் கொண் டானே! பின் திரௌபதி ஜெயிக்கப்பட வில்லை என்று எவ்வாறு கூறுகின்றாய்? இவளை ஒற்றையாடையுடன், இழுத்து வந்ததைத் தவறு என்கிறாய். பொதுவாக ஒருத்திக்கு ஒரு கணவன்தான் நியதி. இவளோ, ஐந்து பேரைக் கணவராகக் கொண்டிருக்கின்றாள். அதனால் இவளைக் குலமகள், என்று சொல்ல முடியாது. பொதுமகளாகத்தான் கருதமுடியும். பொது மகளானவள், ஒற்றையாடையுடன் இருந் தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இத்தகையவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். பாண்டவர்களையும் அவர்களுடைய நாட்டையும், செல்வத்தையும், இவளையும் தரும வழியில்தான் ஜெயித்துள்ளார்கள். பெரியவர்கள் நிறைந்த சபையில், எல்லாம் தெரிந்தவன் போலப் பேசுகின்றாயே! பேசாமல் உட்கார்” என்று கூறி அவனை அடக்கினான்.
பின்னர் கர்ணன், துச்சாதனன் பக்கம் திரும்பி, “அடிமைகளான இந்தப் பாண்ட வர்கள் மார்பிலேந்தும் ஆடையையும் களைவாய்; இந்தத் தையல் திரௌபதியின் சேலையையும், களைவாய்; பின் அதனைச் சகுனிக்குத் தருவாய்” என்றான். பாண்டவர்கள் கர்ணன் சொன்ன கொடிய குரூரமான பேச்சைக் கேட்டு, “தருமத்திற்குச் சோதனை இன்னும் இருக்கின்றது போல உள்ளது” என்று எண்ணி உடனே தன் மேலாடைகளை வீசி எறிந்தார்கள்.
துகில் உரித்த துச்சாதனன்
அதன்பின், துச்சாதனன் சபை நடுவில் நின்ற திரெளபதியிடம் சென்று,அவள் புடைவையைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்து, அவிழ்க்கத் தொடங்கினான். அப்பொழுது பீமன் கோபத்தோடு தன் கதையை நோக்கினான்; அர்ச்சுனன் தன் காண்டீபத்தை எடுத்தான்; தருமர் குறிப் பினால் தம்பியரது கோபத்தைத் தணித் தார். திரெளபதி யாருடைய ஆதரவும் இல்லாத நிலையில், பீஷ்மர், துரோணர், விதுரர், கிருபர், முதலான சான்றோர் நிறைந்த சபையில், நிலை கலங்கி நின்றாள். அவள் கண்களிலிருந்து அந்நிலை யில், கண்ணீர் ஆறாகப் பெருகலாயிற்று. நெடிய கரிய கூந்தல் அவிழ்ந்து புரளலா யிற்று; துச்சாதனன் வலிமையுடன் இழுத்த லால், அவிழ்ந்து நழுவுகின்ற சேலையைப் பிடித்திருந்த கைகள் நெகிழலாயின; உடம்போ தளர்ச்சி அடையலாயிற்று; ‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’ என்றாற்போல, அப்பெருமானையே நினைத்துக்கொண்டு வேறோர் நினைவும் இல்லாமல், வேறோர் சொல்லும் கூறாமல், இருகையையும் மேலே கூப்பிக்கொண்டு, “கோவிந்தா கோவிந்தா, சங்கு சக்கராயுத கோபாலா, கண்ணா, அச்சுதா! சரணம் சரணம், ஸ்ரீ மந்நமோ நாராயணாய சரணம் சரணம்” என்று எம்பெருமானைப் பற்றிய அமிர்தம் அன்ன அவன் திருநாமங்களையே கூறி அவனையே அடைக்கலம் புகுந்தாள்.
கண்ணனின் அனுக்கிரகம்
விண்ணவர்களும், மண்ணவர்களும், தனது ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு போற்றப் பெறுகின்றவனுமான பரந்தாமன் கண்ணபிரானது செவிகளில், திரௌபதி யின் இந்தக் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முறையீடு ஒலித்தது. அன்று ‘ஆதி மூலமே’ என்று வேறோர் ஆதரவும் இல்லாமல், அவனைத் தவிர வேறு துணையுமில்லை என்று கருதி, அவனிடமே அடைக்கலம் புகுந்து ‘கதறிய கஜேந்திரனுக்கு எதிரில் சுருடவாகன ரூபராய்த் தோன்றி, தன் சுதர்சன சக்கரத்தால், அக்கஜேந்திரனைப் பற்றி விழுங்கும் முதலையை வீழ்த்தி, அந்த யானைக்கு அருள் சுரந்தது போல, அப்பெருமான் இன்றும் ஆபத்பாந்தவனாய் அநாதரக்ஷகனாய், விளங்கும் பரந்தாமன் கண்ணபிரான், திரௌபதியின் மனம் கலங் காதபடி அவள் மனத்தில் எழுந்தருளி, காட்சி தந்து, பிறர் எவர்க்கும் தெரியாமல், அவள் மானம் குலையாமல், சேலை வளருமாறு அருள் செய்தார். திரௌபதி யின் சேலையை அறிவுக் கேடனான துச்சாத னன் உரிய, உரிய, அவள் உடுத்தியிருந்த சேலை முடிவு பெறாமல், பலப்பல நிறங்களைப் பெற்று, மிகப்பல சேலை களாக வளரும்படி அருள் செய்ததனால், அந்தத் துச்சாதனனால், உரியப் பெற்ற சேலைகள் அச் சபாமண்டபமும் கொள்ளா மையால், மிகப் பல வீரர்கள் அந்தச் சேலை களை எடுத்துச் சென்றனர். துச்சாதனனும் தன் இருகைகளால் இழுத்து, கைசோர்ந்து, மெய் சோர்ந்து, களைப்படைந்து நெட்டைப் பனைமரம் வீழ்தல் போலக் கீழே சாய்ந்தான்.
திரௌபதி ஒற்றையாடையுடன் சபை நடுவில் நின்று, இருகைகளை மேலே தூக்கி, கண்ணனையன்றி வேறொன்றையும் நினையாமல் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று கூறி, அவனைச் சரண் அடைந்த தன்மைக்கு ஸ்ரீலசன பூஷண ஆசிரியர் ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர் விளக்கம் தருகிறார். அருமையான
”ஏதேனும் ஓரிடத்தில், ஏதேனும் ஒரு காலத்தில், சேதனனுக்கு எம்பெருமானைப் பற்ற வேண்டும் என்ற ருசி தோன்றலாம். கணந்தொறும், கணந்தொறும், நெஞ்சு மாறிவிடக்கூடியது. எனவே அந்த ருசி (பேரவா) மாறிவிடுவதற்கு முன்னேயே, அச்சேதனன் எம்பெருமானைப் பற்ற வேண்டுமென்பதற்காகப் பிராட்டி,எம் பெருமானொடு நித்திய சம்பந்தமுடைய வளாயிருக்கின்றாள். ஆகையால் பிரபத் திக்கு (எம்பெருமானை சரண் புகுதலுக்கு) தேசமும், காலமும், நியதியும், இருக்க வேண்டுமென்பதில்லை. இந்தக் கருத்துத் தான் திவ்யத்தின் முதற்பதமான ‘ஸ்ரீமந்’ என்பதிலிருந்து, நன்கு விளங்குகின்றது. ஆகையால் பகவானை நாம் எந்த இடத் திலும், எந்தக் காலத்திலும், வணங்கலாம் என்பது புலனாகின்றது. இதனை அரண் செய்வது போல மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை ஒரு சூத்திரமாக எடுத்துக் காட்டுகின்றார் ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர். அச்சூத்திரம்: “திரௌபதி ஸ்நாதையன்றே ப்ரபத்தி பண்ணிற்று”. (20)
விளக்கம் : துச்சாதனனால் இழுத்துவரப் பட்டபோது திரெளபதி, மாதவிடாயில் ஒற்றையாடையில் இருந்தாள். அஃதாவது சுத்தமாக இல்லாமல் இருந்தாள். அந்த நிலையிலும், கண்ணனை மறக்காமல் தன் துகிலைப்பற்றிக் கொள்ளவேண்டிய நிலை யில், அக்கண்ணனே காத்தற்குரியவன் என்று மகா விசுவாசத்தோடு ‘கோவிந்தா’ புண்டரீகஷா’ என்று வாய் அரற்ற, கண்க ளில் கண்ணீர் ஆறாகப் பெருக, மெய்சோர, அக்கண்ணனைத் தவிர, வேறு எதையும் நினையாமல் நாணத்தையும் கைவிட்டாள். பற்றியிருந்த இரண்டு கைகளையும் விட்டு, மேலே கூப்பினாள். அதன்மூலம் எம்பெரு மானை,நீசர் நடுவிலே சரணடைந்தாள். அத்தகைய நிலையிலும், திரௌபதிக்கு சேலை வளர்ந்து எம்பெருமான் அருள் கிட்டியது. இதன் மூலம் சேதனன் எம்பெருமானிடம் சரணாகதி அடைவதற்கு தேசமும், காலமும், நியதியும்,தேவை யில்லை என்பது புலனாகின்றது. இதற்கு இராமாயணத்திலிருந்து, உதாரணம் காட்ட லாம். கடற்கரையில் தன் தோழர்களோடு சரண் புகுந்தான் வீடணன். அருகில் கடல் இருக்கவும், அதில் நீராடி புனிதமாக வராது இராமபிரானைச் சரணடைய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அப்பெருமானி டம், நேரே வந்து சரண் புகுந்தான். இதன் மூலம் சேதனன் எம்பெருமானிடம், சரணா கதி அடைவதற்குத் தேசமும் காலமும் நியதியும், அவசியமில்லை என்பது புலனா கிறதல்லவா. ஆகையால் நாம் பகவானை எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், வணங்கலாம் என்பது வெளிப்படை.
இந்தக் கொடுமையான நிகழ்ச்சியைக் கண்ட பீமன், அடைந்த கோபத்திற்கு அளவே இல்லை. அவன் உதடுகள் துடித் தன; கண்கள் சிவந்தன; துச்சாதனனையும் துரியோதனனையும், தன் கையால் சுட்டிக் காட்டி இடிபோன்ற பெருங்குரலில் முழங் கலானான். (இங்கும் பாரதியார் உணர்வு களையே பகிர்ந்து கொள்வோம்.) இங்கு விண்ணவர் ஆணை, பராசக்தி ஆணை தாமரைப் பூவினில் வந்தான் – மறை சாற்றிய தேவன் திருக்கழலாணை. மாமகளைக் கொண்ட தேவன் எங்கள் மரபுக்குத்தேவன் கண்ணன்பதத்தாணை காமனைக் கண்ணழலாலே சுட்டுக் காலனை வென்றவன் பொன்னடி மீதில் (1)
ஆணையிட்டு இஃது உரை செய்வேன் – இந்த ஆண்மையிலாத் துரியோதனன் தன்னை பேணுங் பெருங்கனலொத்தாள் எங்கள் பெண்டு திரெளபதியைத் தொடை மீதில் நாணின்றி ‘வந்திரு’ என்றான் – இந்த நாய் மகனாம் துரியோதனன் தன்னை மாணற்ற மன்னர்கள் முன்னே – என்றன் வன்மையினால் யுத்தரங்கத்தின் கண்ணே (2)
தொடையைப் பிளந்து உயிர்மாய்ப்பேன் தம்பி சூரத் துச்சாதனன் தன்னையும், ஆங்கே கடைப்பட்ட தோள்களைப் பிய்ப்பேன் – அங்கு கள்ளென ஊறும் இரத்தம் குடிப்பேன் நடைபெறும் காண்பீர் உலகீர் -இது நான் சொல்லும் வார்த்தை என்றெண்ணிடல் வேண்டா தடையற்ற தெய்வத்தின் வார்த்தை – இது சாதனை செய்க பராசக்தி” என்று சபதம் செய்தான்.
பீமனுடைய, சபதத்தைக் கேட்டவுடன், சபையோர் ஆரவாரம் செய்தனர்; புகழ்ந்து பேசினர். துச்சாதனன், துரியோதனன், திருதராட்டிரன், ஆகியவர்களை இகழ்ந் தனர். “திரௌபதியின் கேள்விக்கு விகர்ண னைத் தவிர, வேறு யாரும் சரியான பதில் கூறவில்லை” என்றனர். விதுரர் அனை வரையும் அமைதியாயிருக்கும்படி கூறி னார்.
அப்பொழுது துச்சாதனன் துடுக்காக, வெட்கத்துடனும் நடுக்கத்துடனும் நின்றி ருந்த, திரெளபதியைப் பிடித்து இழுத்தான். அதனால் திரெளபதி நடு நடுங்கி, சபை யோரிடம், “சான்றோர்களே! பெரியோர் களே! இந்தத் துச்சாதனன் என்னை பலவந்த மாய்ப் பற்றி இழுத்ததனால், நான் சக்தி அற்றவள் ஆனேன். நான் இந்தச் சூதில் பங்கேற்கவில்லை. பங்கேற்காத என்னை, இங்கு இழுத்துக் கொண்டு வந்து, கொடு மைப் படுத்துகின்றனர். நாக்கில் நரம் பின்றிப் பேசுகின்றனர். இது எந்த வகை யில் நியாயம்? இது குருகுல வம்சத் தாருக்குப், பெருமை தரத்தக்கதன்று. மீண்டும் நான் கேட்கிறேன், நான் ஜெயிக் கப்பட்டவளா? ஜெயிக்கப்படாதவளா?” என்றாள்.
பீஷ்மரின் பதில்
இதனைக் கேட்ட பீஷ்மர், “பெண்ணே! நீ கேட்ட கேள்வி மிக நுட்பமானது. அதனால் தீர்மானமாக என்னால், உன் கேள்விக்குப் பதில் சொல்ல முடிய வில்லை. என்னால் ஒன்று சொல்ல முடியும். அஃதாவது இந்தக் குருகுலம் அழியப்போவது உறுதி. பேராசையும், பொறாமையும், துடுக்குத்தனமும், கொண்டு கெளரவர்கள் செயல்படுகின்ற னர். துரோணர் போன்ற சிறந்த அறிவுடைய ஆசான்களும், உன் கேள்விக்குப் பதில் சொல்லாது தலை குனிந்து நிற்கின்றனர். இப்பொழுது பதில் கூற வேண்டியவன் யுதிஷ்டிரனே” என்றார்.
துரியோதனன் பீஷ்மரைப் பின்பற்றி, “பாஞ்சாலன் மகளே! நீ கேட்ட கேள்விக்கு உன் கணவன்மார்கள்தான் பதில் கூற வேண்டும். உன் விஷயத்தில் யுதிஷ் டிரனுக்கு யாதோர் உரிமையுமில்லை. என்று இச்சபை நடுவில் மற்ற பாண்ட வர்கள் சொல்லட்டும். அதன் மூலம் அவனைப் பொய்யனாக்கட்டும். அவ்வாறு தர்மனைப் பொய்யனாக்கினால் அடிமைத் தளையிலிருந்து நீ விடுவிக்கப்படுவாய்” என்றான். அப்போது சபையோர், பாண்ட வர்கள் என்ன பதில் கூறப் போகிறார்கள் என்று அவர்களை ஆவலோடு பார்த் தார்கள். உடனே பீமன் எழுந்து, “பெரியோர் களே! எங்கள் தமையனார் யுதிஷ்டிரர் எங்களுக்கு மேலோன். அவர் சொல்லே எங்களுக்கு வேதவாக்கு. அவர் மட்டும் இங்கு இல்லாதிருந்தால், இந்தக் கெளரவர் களை, இந்தக் கொடூரமான அளவுக்குப் போகவிட்டிருக்கமாட்டோம். அவர் தம்மைத் தோற்றதாக நினைத்தாலே நாங்கள் தோற்றவர்கள்தான். இதில் ஐயமில்லை. பாஞ்சாலியின் கூந்தலைப் பிடித்து இழுத்து வந்த, இந்த அற்ப மிருகம் துச்சாதனன் என்னிடமிருந்து இதுவரை தப்பியுள்ளதற்குக் காரணம், என் தமைய னாரின் பெருந்தன்மைதான். காலம் ஒன்றும் கடந்து விடவில்லை. என் தமையனார், இப்போது அனுமதி தரட்டும் இந்தக் கெளரவர்கள் அனைவரையும் நாச மாக்கிக் காட்டுகிறேன்” என்று கோபத் துடன் கூறினான்.
திரௌபதியை இழித்து பேசிய கர்ணன்
அப்போது பீஷ்மரும், துரோணரும். விதுரரும்,”பீமா! உன் பலத்தை நாங்கள் அறிவோம். ஆயினும் இப்போது பொறுத் துக்கொள்” என்றனர். அப்போது கர்ணன், திரௌபதியை இழித்துப் பேசினான். பின்னர் துரியோதனனும், கர்ணனும் சேர்ந்து, பீமனை அவமானப்படுத்திப் பேசினர். இவ்வளவு நடந்தும் கண்ணிலான் திருதராட்டிரர் பேசவே இல்லை. புத்திரர் களின் துடுக்குத்தனமான, கீழ்த்தரமான, செயல்களைக் கண்டிக்கவேயில்லை.
பாஞ்சாலியின் சபதம்
அப்போது துரியோதனன் விதியினால் மதியிழந்து, திரெளபதியைத் தன் தொடை மீது அமரச் சொன்னான். அதனைக் கண்ட பீமன் கடுங்கோபங்கொண்டு, “கொடியவ னான இந்தத் துரியோதனனை நான் கொல் வேன்; அர்ச்சுனன் குலமறியாக் கர்ணனைக் கொல்வான். வஞ்சகச் சகுனியை என் இளவல் சகாதேவன், கொல்வான். போர்க் களத்தில், இந்த அரவக் கொடியோனை துரியோதனனை என் கதையினால் கொல் வேன். தரையில் விழுந்தவுடன் அவன் தலையை மிதித்துத் துவைப்பேன், இந்தத் தீயவன், தாய்க்கும் தாரத்துக்கும், வேறு பாடு அறியாத இந்தக் கயவன் துச்சாதனன் மார்பைப் பிளந்து அவன் இரத்தத்தைக் குடிப்பேன்” என்று கோபத்தோடு கூறினான். அதனைக் கேட்ட அர்ச்சுனனும், சகாதேவனும், அண்ணன் கூறியபடியே செய்வதாக உறுதி கொண்டனர். அடுத்து நகுலன், சகுனியின் மைந்தர்களைக் கொல் வதாகச் சபதம் செய்தான். அப்போது திரௌபதி, துரியோதனனைப் பார்த்து, ”பாவியே/ நீ தொடையையா எனக்குக் காண்பிக்கின்றாய்! எந்தத் தொடையை நீ எனக்குக் காண்பித்தாயோ, அந்தத் தொடை யில்தான் அடிபட்டுச் சாகப் போகின்றாய், உனக்கு மரணம் தொடையிலேதான் எனக் குறித்துக்கொள். உன் சகோதரன் துச்சாதனன், மார்பைப் பிளந்து அவன் இரத்தத்தை பீமன் குடிப்பார்; குலமறியா தேரோட்டி மகன், அந்தக் கர்ணனை எங்கள் அர்ச்சுனன் கொல்வார்” என்று சபதம் செய்தாள். பாஞ்சாலி எடுத்த இந்தச் சபதத்தைத் தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரும் ; வில்லிபுத்தூராழ்வாரும் கூறியுள்ளதைக் கீழே காண்க :-
“தேவி திரெளபதி சொல்வாள் :- ஓம் ஓம் தேவி பராசக்தி ஆணையுரைத்தேன்; பாவி துச்சாதனன் செந்நீர் – அந்தப் பாழ்த்துரியோதனனின் ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து – குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன்யான் – இது செய்யுமுன்னே முடியேன்” என்றுரைத்தாள்.
தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார்.
“தந்தை விழி இருள்போலத் தருமனத் தோனும் (துரியோதனன்) துச்சாதனனை சாதனனை நோக்கிப் பைந்தொடியைக் கொணர்ந்தினி என் மடியின் மிசை இழுத்துக்க” எனப் பணித்திட்ட பொழுது,
“அருந்ததிக்கு எய்தாத
கற்புடையாள் இடியேறு உண்ட வன்தலைவெம் பணிபோல நடுநடுங்கி மாயனையும் மறவா ளாகிப் புன் தொழிலோன் யானிருக்கக் காட்டியதன் தொடைவழியே புள்வாய் குத்தச் சென்றிடுக ஆருயிர் என்று எவரும் வெரு வுறச் சபித்தாள் தெய்வம் அன்னாள் (1)
“அரசவையில் எனை ஏற்றி அஞ்சாமல் துகில்தீண்டி அளகம் தீண்டி விரைசெய் அளி இனம்படிதார் வேந்தர்
எதிர் தகாதனவே விளம்பு வோரைப் பொரு சமரின் முடி துணித்துப் புலால்நாறு வெங்குருதி பொழிய வெற்றி முரசறையும் பொழுதல்லால் விரித்தகுழல் இனி எடுத்து முடியேன்” என்றாள். வில்லிப்புத்தூர் ஆழ்வார்.
அப்பொழுது, ஓமென்று உரைத்தனர்
தேவர் – ஓம் ஓமென்று சொல்லி உறுமிற்று வானம் பூமியதிர்ச்சி உண்டாச்சு – விண்ணைப் பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று சாமி தருமன் புவிக்கே -என்று சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும்
பாஞ்சாலி சபதம்.
அதே நேரத்தில், கண்களில் தீப்பொறி பறக்க அர்ச்சுனன், காண்டீபத்தைக் கையில் ஏந்தினான். பீமனோ தன் தொடை தட்டி எடுத்தான் கதாயுதத்தைத் துரியோதனனை வீழ்த்த; அரசர்களெல்லாம் அஞ்சி நின்ற னர். உலகமே நடுங்கலாயிற்று; அவ்விருவர் தோற்றத்தைக் கண்டு சூரியனும் அஞ்சி ஓடினான்.
அப்போது தருமபுத்திரர், “பீமா! அர்ச் சுனா! அவசரப்பட்டு எந்த முறையற்ற காரியத்தையும் செய்துவிடாதீர்கள். நாம் ஆயுதமே ஏந்த வேண்டியதில்லை. என் கோபத்தின் மூலமாகவே, இந்தப் பாவி களை நான் அழிக்கமுடியும். ஆனால் அது அதர்மத்தின் வழி என்பதனால் விட்டேன். எனவே நீங்களும் உங்கள் கை கோபத்தை அடக்கிக் கொள்ளுங்கள்” என்றான். அதனால் இருவரும் சினந்தணிந் தனர்.
அரண்மனையில் தோன்றிய தீச்சகுனங்கள்
அப்போது திருதராட்டிரர் அரண்மனை யில் தீச்சகுனங்கள் தோன்றின; நரிகள் ஊளையிட்டன; கழுதைகளும் கொடிய பறவைகளும் ஓலமிட்டன. இவற்றைக் கேட்ட விதுரர், காந்தாரி, பீஷ்மர், துரோ ணர் முதலானோர் மிகவும் கவலை கொண் டனர். திருதராட்டிரர் பெரிதும் கவலை கொண்டு துரியோதனனைப் பார்த்து, ”துரியோதனா! அழிவுக்குரிய காரியத்தைச் செய்துவிட்டாய். ஓர் அபலைப் பெண்ணை இந்தச் சபையின் முன் கொண்டு வந்து நிறுத்தி அவமானப்படுத்தினாய். அச் செயல், நம்முடைய தலையில் நாமே கொள்ளி வைத்துக் கொண்டது போலாகும். இனி நமக்கு அழிவுதான்” என்று கூறி நிந்தனைகள் செய்தார்.
பின்னர் திரெளபதியை அழைத்து, “திரௌபதி! நீ தர்மத்தின் சொரூபம்; கற்பின் அணிகலம்; என் மருமகள்களுள் நீயே உயர்ந்தவள். உனக்கென்ன வரம் வேண்டுமோ அதைக் கேள் தருகின்றேன்” என்று இதமாகப் பேசிக் கேட்டார். அதற்குத் திரெளபதி, “பரதகுலத்தலை வரே! நீங்கள் வரம் கொடுப்பதாயிருந்தால் அறநெறியிலிருந்து தவறாத, யுதிஷ்டிரர் அடிமைத்தளையிலிருந்து விடுபட வேண்டும். என்றாள். திருதராட்டிரர் மனமுவந்து அந்த வரத்தைத் தந்ததாகக் கூறிவிட்டு மேலும் ஒருவரம் கேட்குமாறு கூறினார். அதற்குத் திரெளபதி, “அரசே! பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரும் அடிமைத்தளையிலிருந்து விடுபடவேண்டும்” என்று இரண்டாவது வரமாகக் கேட்டாள். உடனே திருதராட் டிரர், “பெண்ணே நீ விரும்பிய இரண் டாவது வரத்தையும் தந்தேன். முன்னி ரண்டு வரங்கள் மூலம் நீ முழுமையான நன்மை பெறவில்லை. ஆதலின் மூன்றா வது வரமாக மேலும் ஒன்று கேள்” என்று கேட்டார். பாண்டவர்களின் கோபத்தை நீக்கி, கெளரவர்களுக்கு ஏற்படப்போகும் அழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்பதே அவர் எண்ணம். அதனால் தான் மூன்றாவது வரமும் கொடுப்பதாகக் கூறினார்.
அதற்குத் திரெளபதி, “பெருமைமிக்கவரே! பெண்ணுக்கு இரண்டு வரங்கள் என்றும், அரசனுக்கு மூன்று வரங்கள் என்றும் சொல்வர். அதனால் நீங்கள் கொடுத்த இரண்டு வரங்களே போதும். என் கணவர்களை, அடிமைத்தளையிலி ருந்து மீட்டுக் கொடுத்ததே போதும்” என்றாள். அதன்பின் திருதராட்டிரர் பாண்டவர்களை அழைத்து, அவர்களுக் குரிய நாட்டைக் கொடுத்து ஆளும்படி கூறியதோடு, துரியோதனாதியர் செய்த கொடுமையை மறந்துவிடும்படியும்,அவர் களிடம் நட்பாயிருக்கும்படியும் கூறிவிடை கொடுத்து அனுப்பினார். அதன்பின் யுதிஷ்டிரர் தன் தம்பியருடனும் திரௌபதியுடனும் இரதங்களில் ஏறி இந்திரபிரத்தத்திற்குச் செல்லலாயினர்.
மனம் திருந்தா துரியோதனன்
பாண்டவர்க்குத் தாம் சூதாடி வென்ற நாட்டைத் திருதராட்டிரர் திருப்பிக் கொடுத்தது கேட்டு, துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாதனன் முதலானோர் கோபங் கொண்டனர். தந்தையிடம் சென்று துரியோ தனன், “பாண்டவர்கட்கு நாட்டைத் திருப்பிக் கொடுக்கக்கூடாது. அது நமக்கு ஆபத்தில் முடியும், அவர்கள் நம்மை வெல்ல, சேனை சேர்க்க செல்கின்றனர். நம்மீது மிகுந்த கோபங்கொண்டுள்ளனர். அர்ச்சுனன் ஒருவன் போதும், நம்மை அழிக்க” என்றான். திருதராட்டிரர் பாண்டவர்களிடம் நட்புடன் இருக்கும் படி எவ்வளவோ கூறிப் பார்த்தார். “மூர்க்க னும் முதலையும் கொண்டது விடா” என்றாற் போலத் துரியோதனன், மனம் திருந்துவதாகவும் இல்லை. பாண்டவர்களிடம் நட்புப் பாராட்டுவதாகவும் இல்லை.
பின்னர் ஒருவாறு கலந்து பேசி, “பாண்டவர்களை மறுபடி அழைத்துச் சூதாடுவது. தோற்றவர்கள் பன்னிரண்டு ஆண்டு கால வனவாசமும் ஓர் ஆண்டு யாருக்கும் தெரியாமல் மறைவாக வாழும் படியான அஞ்ஞாதவாசமும், செய்ய வேண்டும். ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசத் தில் அவர்களைக் கண்டுபிடித்துவிட்டால், மீண்டும் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும்,ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசம் செய்ய வேண்டும்” என்று முடிவுக்கு வந்தார்கள்.
உடனே திருதராட்டிரர் தம் நாட்டிற்குச் சென்ற பாண்டவர்கள் திரும்பி வருமாறும், மறு சூதாட்டம்ஆட வேண்டுமென்றும் கூறி, தோற்றால் அடையப்போகும் வன வாசத்தையும் அஞ்ஞாதவாசத்தையும் எடுத்துச் சொல்லி அவர்களை வரச் செய் தார். தருமபுத்திரர் “எல்லாம் விதியின் செயல் . சூதாட்டம் தீமை, என்று அறிந்தும் தந்தையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவன் ஆகிறேன்” என்று கூறி அஸ்தினாபுரத்திற்கு தம் தம்பியருடன் புறப்படலானார்.
காந்தாரியின் அறிவுரை
மறு சூதாட்டத்திற்கு அனுமதி அளித்த தைக் கேள்வியுற்றுக் காந்தாரி, திருதராட்டிரரிடம், ”அரசே! மறு சூதாட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டாம். அது நம் குல நாசத்திற்கு அடிகோலும். அறிவற்ற நம் பிள்ளையின், பேச்சை ஏற்றுக் கொள்ள வேண்டாம். கட்டின அணையை எவன் உடைப்பான்? சூதாட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டாம்?” என்று கெஞ்சினாள்.
அதற்குத் திருதராட்டிரர், “குலநாசம் வந்தாலும் என்னால் இனி தடுக்க முடியாது. அவர்கள் இஷ்டப்படி நடந்து கொள் ளட்டும். சூதாட்டத்தினால் வருகின்ற விளைவை, அவர்கள் அனுபவிக்கட்டும்” என்றார்.
மறு சூதிலும் தோற்ற தர்மர்
அஸ்தினாபுரத்திற்கு தம் சகோதரர் களுடன் வந்த தருமபுத்திரர், வஞ்சனை சகுனியுடன் மறு சூதாட்டம் ஆடினார். சுபலன் புத்திரன், காய்களை உருட்டினான்; ‘ஜெயித்தேன்’ என்றான். பாண்டவர்கள் மீண்டும் தோல்வியடைந்தார்கள்.
பின்னர் நிபந்தனைப்படி, பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செய்யவும் ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசம் செய்யவுமாகப், பாண்டவர்கள் தயாரானார்கள். அதனால் யுதிஷ்டிரர், தன் தம்பியருடன் சென்று, பீஷ்மர், விதுரர், திருதராட்டிரர், துரோணர், காந்தாரி முதலிய பெரியோர்களைச் சென்று வணங்கி விடைபெற்றுக் கொண்டார். அப்பொழுது அப்பெரியோர்கள், அனை வரும், வெட்கத்தினால் மனம் குன்றி தர்மரிடம் ஒன்றும் பேசாமல் இருந்தனர்.
விதுரர் மட்டும் தருமரிடம், “அறத்தின் நாயகனே! குந்தி காட்டுக்குச் செல்லத் தகாதவள்; மற்றவர்களால் வணங்கத் தக்கவள். அவள் காட்டிற்குச் சென்று கஷ்டப்படவேண்டாம். இங்கேயே என் வீட்டில் இருக்கட்டும்” என்றார். உடனே யுதிஷ்டிரர், “குற்றமற்றவரே! நீங்கள் எங்கள் தந்தைக்குச் சமமானவர். தங்கள் கட்டளைப்படி, நடக்க சித்தமாய் இருக் கின்றோம். நாங்கள் உங்களை நம்பி இருப்பவர்கள். என் தாய் இங்கேயே இருக்கட்டும். நாங்கள் இன்னும் என்ன செய்ய வேண்டும். கட்டளையிடுங்கள்” என்றார்.
விதுரரின் ஆசி
விதுரர், “நீ அறம் தெரிந்தவன். அதர்மத் தினால் ஜெயிக்கப்பட்டவன். தோல்வி யைக்கண்டு துவள வேண்டாம். நீங்கள் நிச்சயமாய் போரில் வெல்வீர்கள். மேலும் நீங்கள் ஒருவர் மேல் ஒருவர் அன்பு காட்டி ஒற்றுமையுடன் இருக்கின்றீர்கள். அயலார் உங்களைக் கலைக்க முடியாது. உங்களுக்கு எல்லா நலமும் உண்டாகும். ஆபத்துக் காலங்களிலும் தர்மம் தவறாமல் நடந்து கொள்ளுங்கள். கண்ணபிரான் துணையைப் பெறுங்கள். உங்களுக்கு எப்பொழுதும் வெற்றியே கிட்டும்” என்று கூறி அவரும் விடைபெற்றார்.
பின்னர் பாண்டவர்கள் ஆடை அணி கலன்கள் இன்றி, தோலாடை அணிந்து வெண்கொற்றக் குடையுமின்றி, திருமுடி யும் இன்றிச் சென்றனர். திரெளபதி அழுத கண்ணீரோடு, விரித்த கூந்தலோடு, அவர்கள் பின் சென்றாள். அவர்கள் சென்ற காட்சியைப் பார்க்கின்ற, ஒவ்வொருவர் உள்ளத்திலும் அச்சம் தோன்றியது.மனம் துயரம் கொண்டது. மேலும் அவர்கள் வாய்விட்டு அழலாயினர். திருதராட்டிரர் மருமகள்களும், தங்கள் சகோதரி பாஞ்சா லிக்கு நேர்ந்த அவமானத்தை, எண்ணி எண்ணி மனம் நொந்தனர். திருதராட்டிர ரும் தம்மக்கள் செய்த அக்கிரமத்தை எண்ணிப் பயம் கொண்டார். தங்கள் பிள்ளைகளுக்கு, என்ன துன்பம் நேருமோ, என்று அச்சம் கொண்டார். பின்னர் விதுரரை அழைத்துப் பாண்டவர்கள் எவ்வாறு சென்றார்கள்? என்று துயரத்தோடு கேட்டார்.
உடனே விதுரர், “அரசே! உம்புத்தி ரர்கள், பாண்டவர்களின் நாடு நகரங் களைக் கவர்ந்ததோடு மட்டுமல்லாது, அவர் களை அவமானப்படுத்தினார்கள். திரௌபதியைக் கண்டபடி ஏசியதோடு, அந்நங்கையை அவமானப்படுத்தினர். பரந் தாமன் கண்ணபிரான் திருவருள் இல்லை யென்றால், அவள் நிலை என்னவாகியிருக்கும்? இவ்வளவு அக்கிரமங்கள் செய்தாலும், பாண்டவர்களின் அறிவு தர்ம வழியிலேதான் செல்கின்றது.
தருமன் முகத்தை மூடிக் கொண்டு சென்றான்; பீமன் கைகளைப் பரப்பிக் கொண்டு போனான்; அர்ச்சுனன் மணலை வாரி தூற்றிய வண்ணம் சென்றான்; சகா தேவன் தன் முகத்தில் வர்ணம் தீட்டிக் கொண்டு சென்றான். திரெளபதியோ ஒற்றைத் துணியோடும், வாரிமுடிக்காத அவிழ்ந்த கூந்தலோடும் அழுத கண்ணீ ரோடும் சென்றாள். நகுலன் தன் உடல் முழுவதும் புழுதி பூசிக்கொண்டு சென்றான். ஞானவானான தௌமியரோ, தென் மேற்கு மூலையில் இருக்கும் தர்ப்பப் புல்லை அறுத்து, எமனைப்பற்றிய தோத்திரங்களைக் கூறிக் கொண்டு.முன்னே சென்றார்.கண்டோர் “இவையாவும் கெளர வர்களின் அழிவுக்கு அடையாளங்கள்” என்று கூறினர். அதோடு நாடு முழுவதும் அழிவதற்குரிய, தீச்சகுனங்கள் எங்கும் தோன்றுகின்றன” என்றும் சிலர் கூறினார் கள். இவ்வாறு பலர், பலபடியாகப் பேசிக் கொண்டிருக்கும்பொழுது நாரதர், கௌர வர்கள் சபைக்கு வந்து, அங்கு, “இன்று தொடங்கிப் பதிநான்காம் ஆண்டில், துரியோதனன் செய்த பெருந்தீங்கினால் கெளரவர்கள் குலமே, அழியப் போகின்றது. அந்த அழிவிற்குக் காரணமாயிருப்பவர்கள், பீம அர்ச்சுனர்கள் ஆவர்” என்று கூறி மறைந்து போனார்.
நாரதர் இவ்வாறு கூறிச் சென்றதைக் கேட்டுத் துரியோதனன், சகுனி, கர்ணன் முதலானோர் அஞ்சி, துரோணரிடம் சரண் புகுந்தனர். அப்போது துரோணர், “பாண்டவர் தெய்வாம்சத்தைச் சேர்ந்த வர்கள்; பிறரால் வெல்ல முடியாதவர்கள்; ஆனாலும், தஞ்சம் அடைந்த உங்களைக் கைவிடமாட்டேன். கடைசிவரை உங்களுடன் இருப்பேன்” என்று ஆறுதல் கூறினார்.
எதிர்காலத்தை நினைத்து திருதராட்டிரர் கவலை
திருதராட்டிரர் தன் புத்திரர்களின் எதிர்காலத்தை எண்ணி, பெரிதும் கவலை கொண்டு அமர்ந்திருந்தார். அப்பொழுது சஞ்சய முனிவர் அங்கு வந்தார். அவர் திருதராட்டிரரைப் பார்த்து,”மன்னரே! மிகப் பெரிய நாடு போரில்லாமல் சூதாடியே கிடைத்துள்ளது. அந்த நாட்டிற் குரிய பாண்டவர்களும், பன்னிரண்டு ஆண்டு வனவாசம் செய்யப் போய் விட்டனர். இனியும் உமக்கு என்ன துயரம்?’ என்று கேட்டார். அதற்குத் திருதராட்டிரர், சஞ்சயா! தர்மத்தின் வழி செல்பவர்கள்; போரில் வல்லவர்கள்; அத்தகைய உயர்ந்த பண்பு மிக்க பாண்ட வர்களுடன், என் பிள்ளைகள் வீணாகப் பகை கொண்டுவிட்டனர். அதனால் எப்படி துயரம் இல்லாமல் இருக்க முடியும்?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்.
அதற்குச் சஞ்சயன், “அரசே! கேடு சூழும்போது, அறிவு வேலை செய்யாது. எது நியாயம், எது அநியாயம்,என்று பகுத்தறியும் உணர்வு ஏற்படாது; சூதாடி நாட்டை வென்றதோடு உன் பிள்ளைகள் விட்டிருக்க வேண்டும் அதற்கு மாறாக, சூதாட்டத்திற்கே சம்பந்தம் இல்லாத திரௌபதியை இழுத்துவந்து, அதுவும் கூந்தலைப் பிடித்து இழுத்து வந்து, சபை முன்னிறுத்தி துகிலுரிதல் போன்ற அவமானமான, காரியங்களைச் செய்தனர். வீணாக வலிய பாண்டவர்களின் பகையைத் தேடிக் கொண்டனர். இப்பொழுதும் சொல்கிறேன், பாண்டவர்களிடம் விரோ தம் கொள்ளுதலைவிட்டு நட்பு கொள்ளு தலே, உங்கள் பிள்ளைகளுக்கு நன்மை பயக்கும். இல்லையென்றால் யாரும் எதிர்பார்க்காத, பேரழிவைச் சந்திக்க நேரிடும்” என்று கூறினார்.
இதைக் கேட்டதும் மன்னர் திருத ராட்டிரர், “சஞ்சயா!, தம்பி விதுரனும் பலமுறை, இவ்வாறுதான் கூறினான். ஆனால் பிள்ளைப் பாசத்தால் அவன் கூறியதை ஏற்றுக் கொள்ளாமல், அறி விழந்து போனேன்” என்று கூறி வருந்தினார்.
மகாபாரதம் – 18 தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், பாஞ்சாலியின் சபதம் | Asha Aanmigam