அத்தினாபுரத்தில் பாண்டவர்கள் ஐவரும், கௌரவர்கள் நூறு பேரும்,சில காலம் வரை ஒற்றுமையோடு விளையாடிக் கொண்டும், ஒன்றாக உணவு உண்டும், ஒரே இடத்தில் படுத்து உறங்கியும், இருந்த னர். விளையாட்டுக்களில், பீமனே எல்லா ரையும் விட மிஞ்சியிருந்தான். மேலும் விளையாடும்போது, விளையாட்டுக் காகவே பிறரைத் துன்புறுத்துவான். கௌரவர் தம்மை உண்மையிலேயே துன் புறுத்துவதாக எண்ணி, அவனிடம் அச்சம் கொண்டார்கள். நாளடைவில் தம்மை விட வலிமையாக இருப்பதால், கெளரவர் அனைவருக்கும் அவன்பால் அச்சத்தோடு பொறாமையும் உண்டாயிற்று. அதோடு துரியோதனனுக்கு வேறு ஒரு தீய எண்ணமும் தோன்றி அதனால், பீமனை ஒழிக்க வேண்டும் என்று எண்ணலானான். அதாவது தன் தந்தையார் பிறவிக் குருடர்; இதுவரை நாட்டைச் சிற்றப்பன் பாண்டு தான் ஆண்டு கொண்டிருந்தான். பாண்டு இறந்துவிட்டதால், யாவர்க்கும் மூத்தவனா கிய தர்மன்தான் இனி இளவரசன் ஆவான். அவன் இளவரசனாகிவிட்டால், பாண்டவர் களுக்குக் கர்வம் உண்டாகும். அதிலும் பீமனுடைய செருக்கு அதிகரிக்கும். அதனால் அவன், தங்கட்கு அப்பொழுது இப்போதைவிடப் பெரிதும் தொல்லை கொடுப்பான், என்று நினைக்கலானான். இந்த எண்ணம் அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதியலாயிற்று.
பீமனை கொல்ல முயற்சி
அதற்காகப் பீமனைக் கொல்ல வேண்டும். எனவும் அவ்வாறு பீமனைக் கொன்றால், பாண்டவர்களின் கொட்டம் அடங்கும் எனவும், அப்பொழுது தான் நாட்டை ஆளலாம் எனவும், எண்ணித் திட்டமிட்டு அதனைச் செயல்படுத்த தாய்மாமன் சகுனியையும், தேரோட்டி அதிரதன் மகன் கர்ணனையும், உடன் சேர்த்துக் கொண்டான். பின்னர் அவர் களோடும் தம்பியரோடும் சேர்ந்து வாய்ப்பு வரும்போது, பீமனைக் கொன்று விடுவது என்று முடிவு கட்டினான். அதற்குரிய நாளையும் எதிர்பார்த்திருந்தான்.
ஒருமுறை பாண்டவர்களும், கெளரவர் களும் நட்புடன் மகிழ்ச்சியோடு கங்கை நதியில் விளையாடினர். பின்னர் கரையை அடைந்தனர். அதன்பின் பொன்மயமான அழகான மாளிகையில், அனைவரும் ஒன்றாக அமர்ந்து அறுசுவையோடு கூடிய உணவை பிறகு மகிழ்வோடு உண்டனர். அங்கேயே உறங்கினார்கள். நள்ளிரவில் துரியோதனன், கர்ணன், சகுனி உதவியுடன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பீமனை, நீண்ட வலிமையான கொடிகளால் அவன் கைகளையும், கால்களையும், நன்றாக இறுக்கிக் கட்டி ஆழமான, அலைகள் வீசு கின்ற, கங்கா நதியின் பிரவாகத்தில் வீசி எறிந்தான். ஆனால் பீமன் தன் உடல் வலிமையால், கட்டியிருந்த கொடிகளை யெல்லாம் எளிதில் அறுத்துக் கொண்டு, கரையேறி, அந்தக் கரையின் மேலேயே மீண்டும் உறங்கலானான். எந்தவிதக் காயமும் இல்லாமல் கங்கைப் பிரவாகத் திலிருந்து கரையேறி, மீண்டும் பீமன் அயர்ந்து உறங்குவதைக் கண்டு (அரவக் கொடியோனாகிய) துரியோதனன், அவன் மேல் நஞ்சுடைய நாகப் பாம்புகளை ஏவினான். அவை பீமனை நெருங்கிக் கடித்திடவும், அதன் காரணமாக உறக்கத் தினின்று அவன் எழுந்து, அப்பாம்புகள் அனைத்தும் துடித்து அழியும்படி, கைகளால் பிசைந்து நசுக்கிக் கொன்று, கங்கையில் வீசினான். பின்னர் இடி போல யாவரும் அஞ்சிடப் பெரு முழக்கம் செய்து கொண்டு, சகோதரர்களுடன் அஸ்தினா புரம் போய்ச் சேர்ந்தான்.
பின்பு ஒரு நாள் துரியோதனன், கங்கை நீர்த்துறையில் இரும்பினாலும், செம்மரத் தினாலும், செய்த கூர்மையான கழு மரங் களை நீரில் வெளியே தெரியாதபடி தண்ணீ ருள்ள இடத்தில் நாட்டிய பின்னர், ‘கங்கை யில் விளையாடலாம் வா’ என்று பீமனை அழைத்துச் சென்றான். நயவஞ்சகமாகத் தேனொழுகும் இனிமையான சொற்களால், உள்ளே கழு மரங்கள் நாட்டியிருக்கின்ற இடத்தைச் சுட்டிக்காட்டி, “இந்த இடத்தில் குதித்து உன் வீரத்தை வெளிப்படுத்து வாயாக” என்றான். ஆனால், அதற்கு முன்னமேயே, அங்கே ஆபத்பாந்தவன். அநாதை ரட்சகன், பரந்தாமன் கண்ண பிரான், வண்டுகளின் உருவெடுத்து, நாட்டி யுள்ள எல்லாக் கழுக்களின் முனை மேலே பறந்து கொண்டிருந்தான். குறிப்பிட்ட இடத்தில் குதிக்கப் பாய்ந்த பீமன், அந்த இடத்தில் வண்டுகள் பறந்திருக்கக் கண்டு, அவற்றின் மீது இரக்கம் கொண்டு, சற்று தள்ளிக் குதித்துக் கரையேறினான். குதிக்கும்பொழுது உள்ளே கழு மரங்கள் நாட்டப்பட்டிருப்பதைக் கண்டு, துரியோத னனின் வஞ்சனைச் செயலைப் புரிந்து கொண்டான்.
கங்கையாற்றில் பீமன்
பின்னொரு நாள், துரியோதனன் பீமனுக்கு நல்ல உணவு கொடுப்பதைப் போல ஏமாற்றி, உண்பதற்குத் தகுந்த பலவித உணவுகளிலும், விஷம் கலந்து கொடுத்தான். உணவுப் பிரியனான பீமனும், உணவில் நஞ்சு கலந்திருப்பதை அறியாது, எல்லா உணவையும் உண்டான்.
அதனால் அறிவு அழிந்து மயங்கி வீழ்ந்தான். உடனே துரியோதனன், ஏவலர் களைக் கொண்டு கயிற்றால் நன்றாக இறுகக் கட்டி, முன்னைப் போலவே கங்கையாற்றில் வீசினான். வெளியில் வராதபடி அழுத்தி னான். அதனால் பீமன் நாகலோகம் போய்ச் சேர்ந்தான். அங்கி ருந்த பாம்புக் குட்டிகள் எல்லாம், அவனைக் கடித்து வருத்தின. அதனால் அவன் உடலில் நஞ்சு ஏறியது. ‘நஞ்சை முறிக்க நஞ்சே மருந்து’ என்றாற்போல ஏறிய பாம்பு விஷத்தினால், முன்னே உணவில் கலந்து சாப்பிட்ட விஷ மெல்லாம் வெளியே வந்து நீங்கியது. அதனால் கயிற்றால் கட்டிய வலியெல்லாம் நீங்கப் பெற்றது. மேலும் அவன் உடலில் எந்த விஷம் சேர்ந்தாலும், அவை முறிந்து போய் பயனற்றதாகிவிடும் நிலை வந்தது. அஃதாவது விஷம் அவனுக்கு எந்தவிதத் துன்பமும் கொடுக்காது. இப்பொழுது கதிர் களை வீசிக்கொண்டு வரும் சூரியன் போல ஒளியுடன் திகழ்ந்தான்.
மேலும் அங்கிருந்த அட்ட நாகங்களில் ஒன்றான வாசுகி, குந்திக்குத் தாயின் உறவு கொண்டது. பீமன், குந்தியின் மகன் என்பதை அந்த வாசுகி நாகம் அறிந்த வுடன், அவனைத் தழுவிப் பாதுகாத்து தன்னோடு இருக்கக் செய்தது. அதோடு குற்றமற்ற சாவா மருந்தாகிய தேவாமிர் தத்தைக் கொடுத்தது. அதனை பீமன் மகிழ்ச்சியோடு உண்டான். அதனால் கொடிய விஷத்தைத் துரியோதனன் கொடுக்க உண்டதனால், நிலை குலைந்தி ருந்த பீமனது உடம்பு, பெறற்கரிய அமிர் தத்தை உண்டதனால், நல்ல பொலிவுடன் விளங்கலாயிற்று. பதினாயிரம் யானை பலம் உடைய பீமன், சிறந்த தவத்தைச் செய்திருந்ததனால் வாசுகியின் உயர்ந்த மாளிகையில், எட்டு நாட்கள் சிறப்புடைய விருந்தினனாகத் தங்கியிருந்தான்.
கொடியவனாகிய துரியோதனன், பலம் பொருந்திய பீமனைக் கங்கையில் தள்ளி, அழுத்திவிட்டு, மற்றைய தம்பிமாருடன் மாலைப் பொழுதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அஸ்தினாபுர மாளிகை அடைந்தான். பொழுது போயும் பீமன் வருகையை எதிர்பார்த்து, எதிர்பார்த்துக், குந்தி சோர் வடைந்தாள். அவனுக்கு என்ன ஆயிற்றோ என அஞ்சினாள். மற்றைய பாண்டவர் களும் பீமனைப் பலவிடத்தும் தேடினார் கள். கிடைக்காமையால் மனம் வருந்தினர். உண்ணல், உறங்கல் இன்றி இருந்த அவர் கள், பீஷ்மரிடம் சென்று, பீமன் காணாமல் போன நிலையைக் கூறினார்கள். பீஷ்மரும் குந்தியையும், பாண்டவரையும் அழைத்து, “நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம். பீமன் வலிமையானவன். எந்த ஆபத்தையும் எதிர் கொண்டு வெற்றி பெறுவான். மேலும் பீமனுடைய ஆயுள் மிகக் கெட்டி. துரி யோதனுடைய சூழ்ச்சிகளையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு இன்னும் கொஞ்சம் நாளில் பொலிவுடன் திரும்பு வான் ” என்று பலவாறு ஆறுதல் கூறினார்.
வாசுகியின் கட்டளையை ஏற்று, நாகங் கள் பீமனைச் சுமந்து கொண்டு, கங்கைக் கரையின் முன்பு அவனைத் தள்ளிய இடத் திலேயே கொண்டு வந்து விட்டு, அவை சென்று விட்டன. குந்தி அன்னை, சகோ தரர்கள், விதுரர், பீஷ்மர், நகர மக்கள், அந்தணர்கள், சான்றோர்கள், நன்னிமித்தம் சொன்ன சோதிடக் கலைஞர்கள், முதலான வர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கவும் துரியோதனாதியர் உள்ளத்தில் அச்சம் தோன்றவுமாக, பீமன் வெற்றி வீரனாக அஸ்தினாபுரம் புகுந்தான். தாயினையும், தருமனையும், பீஷ்மரையும், விதுரரையும் வணங்கி, சகோதரர்களைத் தழுவிக் கொண்டான். அவர்களிடம் நடந்தவற்றைக் கூறினான். பீஷ்மரும், விதுரரும் கௌர வர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு கூறினர். ஆனாலும் தருமன் முதலான பாண்டவர்கள், நடந்தவற்றை வெளிக் காட்டிக் கொள்ளாமல் எந்தவிதப் பழி யுணர்ச்சியும் இல்லாமல் முன்பு எப்பொழுதும் இருந்ததைப் போலவே, துரியோதனாதியரிடம் பழகி வந்தனர்.
துரோணர்
வேதம் ஒதுதலிலும் வில்வித்தையிலும் தேர்ந்த, ‘சரத்துவான்’ என்னும் முனிவன் பெருந்தவம் செய்து வந்தான். அவனது தவத்தைக் கெடுத்தற் பொருட்டு, இந்திரன் ஊர்வசியை அனுப்பினான். அவளும் இந்திரன் கட்டளைப்படி, தன் அழகால் முனிவனை மயக்கினாள். அவள் அழகில் மயங்கிய அம்முனிவன், வில்லோடு அஸ்திரங்களையும், வேதங்களையும் கைவிட்டான். அதோடு தன் விந்துவையும் கீழே விட்டான். அது நாணற்கட்டையில் விழுந்தது. முனிவன் அதைக் கவனிக் காமல், ஆசிரமத்தை விட்டுச் சென்று விட்டான். பின்னர் அது ஓர் ஆண் மகவும், பெண் மகவுமாக ஆயிற்று. அந்த வழியே வேட்டையாடி வந்த சந்தனு மன்னன், அந்த இரண்டு குழந்தைகளும் அனாதர வாய் அழுது கொண்டிருத்தலைக் கண்டான். அக்குழந்தைகள் அருகில் வில், அம்பறாத் தூணி ஆகியன இருப்பதையும் பார்த்து, அக்குழந்தைகளோடு வில், அம்பறாத் துணியையும் எடுத்துக் கொண்டு அஸ்தினா புரம் சேர்ந்தான். பின்னர் அவன் ஆண் குழந்தைக்குக் ‘கிருபன்’ எனவும் பெண் குழந்தைக்கு ‘கிருபி’ எனவும் அக்குழந்தைகளிடத்துக் கிருபை கொண்டு பெயர்களை வைத்தான். பெயர் வைத்த நாளில் ‘சரத்துவான்’ என்னும் அம்முனிவர் அங்கு வந்து குழந்தைகள் பிறந்த வரலாற் றைக் கூறினார். அங்கேயே சில நாட்கள் தங்கினார்.
கிருபருக்கு அவர் எல்லாவிதமான கலை களிலும் நன்கு பயிற்சி அளித்தார். பின்னர் அவர் ஆசிரமம் சென்று விட்டார். அதன்பின் கிருபரும், அவர் தங்கை கிருபி யும், சந்தனு மன்னன் பாதுகாப்பில் இருந்த னர். அச்சந்தனு மன்னன், இறந்தபின் பீஷ்மரின் பாதுகாப்பில் இருக்கலாயினர். பீஷ்மர் ஒருநாள் கிருபரை அழைத்து வந்து கெளரவர்களையும், பாண்டவர்களையும் அவரிடம் ஒப்புவித்து, “இவர்கள் இன்று முதல் உங்கள் சீடர்கள்” என்று கூறினார். அவர்களும், அவரிடம் எல்லாக் கலை களிலும் பயிற்சி பெற்று வந்தனர். ஆரம்பத் தில் காட்டில் இருந்தபொழுது, பாண்டவர் கள் ‘சுக்ரராஜன்’ என்பவரிடத்தில் அஸ்திரப் பயிற்சி பெற்றனர் என்பதை இங்கு நினைவு கொள்ளல் வேண்டும். அதோடு பல நாட்டு அரசர்களும், கிருபரிடம் அஸ்திரப் பயிற்சி பெற்று வந்தனர்.
அங்கிரசு என்னும் முனிவரது மரபில் தோன்றிய பரத்வாச மாமுனிவர், கங்கை உற்பத்தியாகும் ‘தவிர்த்தானம்’ என்னும் இடத்தில், யாகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு நீராட வந்த ‘கிருதாசி’ என்னும் தேவமாதின் கட்டழகினைக் கண்டு, மனம் நெகிழ்ந்து தன் விந்தினை நெகிழ்த்துவிட, அது அம்முனிவரது விருப்பத்தால், ஒரு துரோண கலசத்தில் விழுந்தது.(துரோணகலசம் என்பது ஒரு பதக்களவுநீர் நிறையும் அளவு கொண்ட பாத்திரமாகும்.) அது பின்னர் குழந்தை யாகி,அத்துரோண கலசத்திலிருந்து அழுது கொண்டு, கைகளை நீட்டிக் கொண்டு வெளியே வந்தது. துரோண கலசத்தி லிருந்து தோன்றியதனால் அக்குழந் தைக்குத் துரோணர் என்ற பெயர் வந்தது.
அங்கிரசு முனிவரது ஆசிரமத்தில் துரோணர், வேத வேதாகமங்களையும், அஸ்திரப் பயிற்சியையும் கற்றார். அவரு டன் தந்தை பரத்வாஜருக்கு நண்பனான பாஞ்சால தேசத்து மன்னன், பிருஷகன் குமாரன் யாகசேனன், கல்வி கற்றுக் கொண்டிருந்தான். இந்த யாகசேனனைத் துருபதன் எனவும் கூறுவர். இருவரும் ஒரே இடத்தில் ஒன்றாகப் படிக்கவே நண்பரா யினர். இளமை வேகத்தில் துருபதன், துரோணரின் ஏழ்மை நிலையை எண்ணிப் பார்த்து,மனம் நெகிழ்ந்து தான் பட்டத் துக்கு வரும்போது பாதி நாடு கொடுப்ப தாகத் துரோணரிடம் கூறினான். ஆசிரம வாசம் முடிந்தது.துரோணரும்,துருபத னும் பிரிந்தனர்.
ஆசான்
துரோணர் கிருபாச்சாரியாரின் சகோதரி யான கிருபியை மணந்து கொண்டார். குதிரை முகத்தையுடைய அசுவத்தாமனை மகனாகப் பெற்றார். குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தது. எப்படியாவது பொருள் திரட்ட வேண்டும், என்ற எண்ணம் ஏற்பட்டது. பரசுராமர் தன்னுடைய செல்வத்தையெல்லாம், அந்தணர் களுக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்குச் செல்லப்போவதாகக் கேள்விப்பட்டு, அவரிடம் சென்றார். அவருக்கு முன்னே அவரது துரதிர்ஷ்டம் போய் நின்றது. அப்பொழுது தான் எல்லாப் பொருள்களை யும் கொடுத்து விட்டுப், புறப்படும் தருவாயிலிருந்தார். துரோணர் போய் நின்ற வுடன், “அந்தணர் குல திலகமே! சற்று முன் வந்திருக்கக் கூடாதா? மிச்சம் எதுவும் வைக்காமல், எல்லாப் பொருள்களையும் தானம் செய்து விட்டேனே. இப்பொழுது என்னிடம் அஸ்திரங்கள்தான் உள்ளன” என்றார். அதனைக் கேட்டுத் துரோணர், “முனிவரே அந்த அஸ்திரங்களைக் கொடுத்து அதனைப் பற்றி உபதேசித்து அருள வேண்டும்” என்று வேண்டினார். ஏழு நாட்கள் பரசுராமர், அந்த அஸ்திரங் களைப் பற்றி உபதேசித்து, பின்னர் அந்த அஸ்திரங்களையும் கொடுத்து விட்டுச் சென்றார்.ஆக, பரசுராமரிடம் சென்றதில் செல்வம் கிடைக்கவில்லை. மாறாக விலை மதிக்க முடியாத, அஸ்திரப் பயிற்சி கிடைத் தது. அதனால்தான் அவர் பாண்டவர் கெளரவர்களுக்கு ஆசானாக வர முடிந்தது.
பாஞ்சால தேசம்
பாஞ்சால தேசத்து மன்னன் இறந்து போனதால், அவன் மகன் துருபதன் (யாக சேனன்)அரசனானான். “தன்னுடன் படித்தவன் அல்லவா! படிக்கின்ற நாளில் பாதி ராஜ்யத்தைக் கொடுப்பதாகச் சொன்ன வன்” என்று நம்பி, பாஞ்சாலதேசம் சென் றார். மன்னன் அவைக்குப் போய் மன்ன னைக் காண அவன், அவரை “யார் நீ” எனக் கேட்க, “கல்வி கற்கின்ற காலத்து, இருவரும் நண்பராக விளங்கியவர்கள் என்பதை நீ அறிந்திருப்பாயே ” என்று கூறினார். அரச போகத்தில் திளைத்திருக் கும் அவனுக்கு, ஏழ்மைக் கோலத்தில் இருந்த அவரைப் பார்க்கவே பிடிக்க வில்லை. அன்று தான் கூறிய பாதி ராஜ் யத்தைத்தான் கேட்க வந்திருக்கின்றார் என்று தவறாக எண்ணி, அவரைப் பார்த்து “மன்னனாக விளங்கும் எனக்கும், வறுமைக் கோலத்தின் பிடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும், உனக்கும் எவ்வாறு நட்பு ஏற்படும். ஏதோ ஒரு வேகத்தில் அறியாப் பருவத்தில், நாட்டில் பாதி கொடுப்பதாகச் சொன்னேன். அதற்காக வந்து விடலாமா? காலமும் மாறும்; கொள்கையும் மாறும். மனிதரும் மாறுவார்கள், என்பதை அறிந்து கொள். வறுமைக் கோலத்தில் உள்ள உன்னை, என் நண்பன் எனச் சொல்லிக் கொள்வதற்கு எனக்கு வெட்கமாய் இருக் கின்றது. அமைச்சரிடத்தில் கொஞ்சம் பொருளைக் கொடுக்கச் சொல்லியிருக் கின்றேன். வாங்கிக் கொண்டு போ. திரும்பி வராதே ” என்று அகங்காரத்துடன் கூறி, பலர் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தினான்.
பலர் முன்னிலையில் துருபதன் அவமானப்படுத்தியதைக் கண்டு துரோணர் கோபங்கொண்டார். அவனிடம், “மன்னா! படிக்கின்ற காலத்தில் நான் உன்னிடம் பாதி ராஜ்யம் கொடு. என்று கேட்க வில்லை. கேட்கவும் என் நா எழாது. நீதான் வலிந்து எனக்குப் பாதி ராஜ்யம் கொடுப்ப தாக அன்று சொன்னாய். ஆனால் இன்றோ உன்னிடம் பாதி ராஜ்யம் கேட்ட மாதிரி எண்ணிக் கொண்டு, வாக்குத் தவறிப் பேசி என்னைப் பலர் முன்னிலையில் அவமதித் தாய். காலம் மாறும்; அன்று உன்னைவிட ஏற்றம் மிகுந்த நிலையில் நான் வருவேன். இது நிச்சயம். அன்று உன்னைப் போரில் தோற்கடிக்கச் செய்து, தேர்க்காலோடு உன்னைக் கட்டி சிறைப் படுத்துவேன். அன்று, எனக்கு நீ தருவதாகச் சொன்ன பாதி ராஜ்யத்தை, உன்னிடத்திலிருந்து பெறுவேன். இஃது உறுதி” என்று சபதம் செய்து அவ்விடம் விட்டு வெளியேறினார்.
துரோணரின் எண்ணம்
துருபதனைப் பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன், அஸ்தினாபுரம் வந்து தன் மைத்துனர் கிருபாச்சாரியார் இல்லத் தில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் பாண்ட வர்களும், கௌரவர்களும், விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது விளை யாடிக் கொண்டிருந்த பந்தும், தருமரின் மோதிரமும், அங்கிருந்த கிணற்றில் விழுந்து விட்டன. அதை எடுக்க முடி யாமல் அந்த ராஜகுமாரர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த இடத்தில் துரோணர் வந்தார். அவரைப் பார்த்து “பிராமணரே! மோதிரமும், பந்தும் கிணற்றில் விழுந்து விட்டன. அதை எடுத்துக் கொடுங்கள்” என்று அந்த ராஜ குமாரர்கள் கேட்டனர். யுதிஷ்டிரரோ, “நீர் பந்தையும், மோதிரத்தையும் எடுத்துக் கொடுத்தால், கிருபரின் வீட்டில் நல்ல உணவு வழங்க ஏற்பாடு செய்கிறோம் ” என்றார்.
துரோணராகிய அந்தப் பிராமணர், ஒரு குச்சியை எடுத்து அஸ்திரத்துக்கு வேண்டிய மந்திரத்தைச் சொல்லி, கிணற்று நீரில் வீசி எறிந்தார். அது பந்தைத் தேடிக் கொண்டு அதைப் பற்றிக் கொண்டது. பிறகு வேறு பல குச்சிகளையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டார். போட்டவுடன் அவை ஒன்றுடன், ஒன்று சேர்ந்து,நீண்டு தண்ணீ ருக்கு வெளியே தலை காட்டி நின்றன. பின்னர் மேல் குச்சியைப் பிடித்துப், பந்தை எடுத்துக் கொடுத்தார். பின்னர் ஓர் அம்பை எடுத்து, வில்லில் தொடுத்துக் கிணற்றில் எய்தார். அது மோதிரத்தைக் குத்தி மேலே கிளப்ப, துரோணர் அம்மோதிரத்தை எடுத்துக் கொடுத்தார்.இவ்வாறு மோதிரத் தையும், பந்தையும் எடுத்துக் கொடுத்த வுடன், ராஜகுமாரர்கள் வியப்படைந்தனர். உடனே அவர்கள், “நீங்கள் யார்? உமக்கு எங்களால் ஆகக் கூடியது ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள்.”ராஜ குமாரர்களே, “பீஷ்மரிடம் சென்று என் உருவத்தையும், குணத்தையும், இப் பொழுது நடந்த செயலையும், கூறுங்கள். அவர் புரிந்து கொள்வார்” என்று கூறினார். உடனே ராஜகுமாரர்கள் பீஷ்மரிடம் நடந்த வற்றைக் கூறினார்கள். அவர்கள் சொன்ன குறிகளினின்று புகழ் பெற்ற துரோணர், என்று அறிந்து கொண்டு ‘இனி, பாண்ட வர்களுக்கும், கௌரவர்களுக்கும் கொடுக்க வேண்டிய பயிற்சி தரக்கூடிய ஆசிரியர், அவரே என்று தீர்மானித்தார். உடனே பாண்டவ கௌரவர்களை, ஆயுதப் பயிற்சியைப் பூர்த்தி செய்து கொள்ள, துரோணரை விசேஷ மரியாதையுடன் அழைத்து வந்து, அவரிடம் அவர்களை ஒப்படைத்தார். தன் பேரர்களைத் துரோணரிடம் ஒப்படைத்த பீஷ்மர், ‘அந்தணரே! நீங்கள் விரைவில் இந்த நூற்றைவர்க்கும் படைக்கலப் பயிற்சி தந்து, இவர்களை வல்லவர்களாக்கி, நீங்கள் துருபதனிடம் செய்த சபதத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். இன்று முதல் நீங்கள் குருநாட்டுத் தலைவர்களில் ஒருவராக ஆனீர்கள். இனி போர் செய்தலை யும் எங்கள் சார்பாக மேற்கொள்ளலாம்” என்று சொல்லி, துரோணருக்கு, அரசர்க் குரிய குடை முதலான பல சிறப்புச் சின்னங்களை (குடை, படை, கொடி, முரசு, புரவி, களிறு, தேர், தார், முடி முதலியன) அளித்தார்.
தரும புத்திரர் முதலான ஐவரும், துரியோதனன் முதலான நூறு பேரும், அன்று முதலாக, துரோணர் அளித்த பயிற்சி யாலும், அவரின் அருள் தன்மையாலும், உடல் வலிமையாலும், உயர்ந்த அறிவுடை மையாலும், படைக்கலப்பயிற்சியிலும், கல்வியிலும், வேத சாஸ்திரங்களிலும், ஒருத்தர் போலவே, அனைவரும் தேர்ச்சி பெற்றார்கள். அவர்களில் அர்ச்சுனன் வில்லின் தேர்ச்சியால் வில்லாற்றலில் சிறந்து விளங்கினான். அவனெதிரே துரியோதனாதியர், சூரியன் எதிரே விளங்கும் மின்மினி போலாயினர்; அதனால் கெளரவர்களுக்கு ஏற்கனவே பீமன் மேல் ஏற்பட்ட பொறாமையைப் போல, அர்ச்சுனன் மேலும் ஏற்பட்டது. முதல்தர மாணவனாய் அர்ச்சுனன் இருத்தலால் அவன் மீது துரோணருக்கு அன்பும் மதிப்பும் அதிகமாயின.
குருவை காப்பாற்றிய அர்ச்சுனன்
இவ்வாறு துரோணரிடம் நூற்றைவரும் கல்வி கற்று வருகின்ற நாளில், நீர்த்துறை யில் துரோணர் இறங்கியபொழுது அவருடைய இரண்டு கால்களையும் முதலை ஒன்று பற்றிக் கொண்டு நீரில் இழுத்தது. இதனைக் கண்ட குருகுலக் குமாரர்கள் அனைவரும் செயலற்று, கைபிசைந்து திகைத்து நின்றனர். ஆனால் அர்ச்சுனனோ ஆதிமூலமே’ என்று அன்று முறையிட்டபோது, எம்பெருமான் சங்கு சக்கரங்களுடன் கருடாழ்வார் மீது அமர்ந்து, வேகமாக வந்து கஜேந்திரன் (யானை) காலைப் பற்றி இழுத்துக் கொண்டிருந்த முதலையைத் சக்கராயுதத் தால் பிளந்து தள்ளியது போல், இன்று, தன் அம்பினால் முதலையை வீழ்த்தி, தன் குருவான துரோணரைக் காப்பாற்றினான். இதனால் மனமகிழ்ந்த துரோணர் அர்ச் சுனனை வாழ்த்தி, பகைவரைக் கொல்லத் தக்க உயர்ந்த அஸ்திரங்கள் பல கொடுத் தார்.
குருகுலக் குமாரர்கள் கிருபர், துரோணர் ஆகியவர்களைத் தொழுது, தங்கள் வில்லை வளைத்து, நாணிழுத்து, ஒலி எழுப்பி ஆசான்கள் குறிப்பிட்டுச் சொல்லு கின்ற, இலக்கினைக் குறி பார்த்து, அம்பு தொடுத்து அதனை அடித்து வீழ்த்தினார் கள் மற்றவர்கள் விடுகின்ற அம்புகளைத் தாங்கள் விடுக்கும் அம்புகளினால் பல துண்டாக்கினார்கள். இவ்வாறு தங்களு டைய படைக்கலப் பயிற்சியை,நன்கு வளர்த்துக் கொண்டார்கள். யானை யேற்றம், குதிரையேற்றம், திண்ணிய தேரோட்டுதல் போன்றவற்றிலும், சிறந்து விளங்கினார்கள். காற்று வேகம், மனோ வேகம் என்று சொல்லும்படியாகக் குதிரை களைச் செலுத்தித், தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டார்கள்.
அடுத்து, துரியோதனனும், பீமனும் கதைப் போர் செய்யத் தொடங்கினார்கள். இரண்டு மத யானைகள் எதிர்க்கின்ற தன்மை போல, எதிர்த்துப் போரிட்டனர். கதைகளை ஏந்தி எதிர் எதிர் நின்று மோதி யும், கால்களையிட்டுப் பல சுதிகளைச் செய்தும், இடி போலத் தாக்கியும் ஒருவரை யொருவர், மூர்க்கத்தனமாகத் தாக்கிக் கொள்ளலாயினர். இதனைக் கண்ட அசுவத் தாமன், இரண்டாவது தடவையாக மோத லாம் என்று சொல்லி, அவர்களை விலக்கி னான். அந்த அளவு சமமான நிலையில் வெற்றி தோல்வி இன்றிக் கதைப்போர் செய்யலாயினர்.
அதன்பின் அர்ச்சுனன் துரோணரது குறிப்பை அறிந்து, அவரை வணங்கி, உடம்பில் கவசம் அணிந்தவனாய், இடக் கையில் வில்லை ஏந்தி, யானையும் அதற்குப் பகையான சிங்கமும், பாம்பும் அதற்குப் பகையான கருடனும், அக்னியும் அதற்குப் பகையாக இருக்கக் கூடிய தண்ணீரும், என்று சொல்லக் கூடிய தெய்வத் தன்மை வாய்ந்த அஸ்திரங்களை (கஜாஸ்திரம் – சிம்மாஸ்திரம்; நாகாஸ் திரம் -கருடாஸ்திரம்; அக்கினியாஸ்திரம் வருணாஸ்திரம்) கண்டோர் போற்றிப் புகழும் வண்ணம் ஏவி, அவற்றின் செயல் பாடுகளைக் காட்டினான்.
அப்பொழுது அவ்விடத்திற்குச் சூரியன் மகனும், தேரோட்டி அதிரதன் மகனுமான தான வீரன் கர்ணன், வந்தான். அங்கு வந்த அவன், துரோணரை வணங்கி, அவர் அனுமதி பெற்று, தன் குருவாகிய பரசு ராமரை நினைத்து உள்ளத்தால் வணங்கி, துரியோதனாதியர் மனம் மகிழும் வண்ணம், அதே சமயத்தில் அர்ச்சுனன் வெட்கமுறும் வண்ணம், தெய்வத் தன்மை வாய்ந்த அஸ்திரங்களைப் பலவகையாகச் செலுத்தி, அர்ச்சுனனைவிட சிறந்த வில்லாற்றலுடையவன், என்று போற்றும் படி அந்த அரங்கத்தில் மெய்ப்பித்துக் காட்டினான். செய்து காட்டியதோடு மட்டு மல்லாது, தன்னுடன் விற்போர் செய்ய வருமாறு அர்ச்சுனனை அறைகூவி அழைத் தான். துரியோதனாதியர் இதனைக் கண்டு, பாண்டவர்களை அடக்குவதற்கு இது ஏற்ற சமயம் என்று எண்ணி, கர்ணனை அர்ச்சு னனுடன் மோதி விற்போர் புரிவதற்கு அவனுக்கு ஊக்கம் கொடுக்கலாயினர்.
கர்ணனுடன் போர்
ஆனால் கர்ணனின் அறைகூவலைக் கேட்டு, அர்ச்சுனன் கோபங்கொண்டு, அவன் தன் மூத்தவன் என்று அறியாது அவனை நோக்கி, “தேரோட்டி மகனாகிய நீ எனக்கு எதிராகப் போர் செய்ய வருகின் றாயா? க்ஷத்திரியனாகிய என்னிடம் குலம் பேர் தெரியாத நீ, தேரோட்டி மகனாகிய நீ, மோதுவதற்கு என்ன தகுதி உள்ளது?” என்று சீறினான். அதனைக் கேட்ட கர்ணன் வெகுண்டு, “போர்க்களத்தில் உன் தலையை வெட்டி, கொற்றவைக்குப் பூஜை செய்வேன்” என்று கூறினான். இதனைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அடுத்து என்ன நடக்குமோ என்ற அஞ்சி, திகைத்து நின்றனர்.
அப்பொழுது கிருபாச்சாரியார் எழுந்து நின்று, ‘வையம் காக்கும் மன்னரின் மகனாகிய அர்ச்சுனனை, குலம் தெரியாத தேரோட்டி மகன், போருக்கு அழைத்து அறை கூவல் விடுதல் குற்றமாகும்” என்றார். அதனைக் கேட்ட துரியோதனன் கர்ணன் சார்பாக எழுந்து நின்று, “குருவே! கற்றவர்க்கும், அழகு நிறைந்த கன்னியர்க் கும், கொடைத் திறன் உடையவர்க்கும், வீரர்க்கும், மன்னர்க்கும், முனிவர்க்கும் சாதி ஒன்றே.உயர்வு தாழ்வு என்பது இல்லை. பரம்பொருளாகிய திருமால் அவதரித்தது தூணில்; (நரசிம்மாவதாரம்), பிறைமுடிச் சடையோனாகிய சிவபெரு மான் தோன்றியது மூங்கிலில்; (திருநெல் வேலியில் எழுந்தருளியிருக்கும் வேணு வன நாதர்), முருகவேள் பிறந்தது நாணற் காட்டை அடுத்துள்ள சரவணப் பொய்கை யில்; அகத்தியரும் எங்கள் ஆசிரியர் துரோணரும், அவதரித்தது கும்பத்தில்; என் மதிப்பிற்குரிய தாங்கள் அவதரித்தது நாணற்கட்டையில்; இவர்களில் யார் தாழ்ந்தவர்? அனைவருமே போற்றி மதிக்கத்தக்கவர்கள். அவ்வாறே கர்ணனும் தாழ்ந்தவன் அல்லன். அவன் அர்ச்சுன னுக்கு எதிராகப் போட்டியிடத்தக்கவன்” என்று கூறினான். இவ்வாறு பேசிய துரியோதனன் சும்மா இருக்கவில்லை; கர்ணனை எல்லோரும் சமமாக மதிக்க வேண்டுமென்று கருதி, அவன் இழிவைப் போக்க, உடனே அங்க நாட்டு அரசனாக்கி, அவனுக்குத் திருமுடி சூட்டினான். அது முதல் கர்ணனும் துரியோதனனும் உயிரும் உடம்பும் போல ஆருயிர் நண்பர்களாக விளங்கலானார்கள்.
குருகுலக் குமாரர்கள் படைக்கலங் களைப் பிரயோகிக்கக் கூடிய திறமையில் இனிப் பகைவர்கள் யாரும் மிஞ்ச முடி யாது” என்று துரோணர் எண்ணி, அவர் களை நோக்கி,”மாணவச் செல்வங்களே! நீங்கள் என்னிடம் பயின்றதற்குக் குருதட் சணை கொடுக்க வேண்டும். உங்கள் பிதாமகர் பீஷ்மர் எனக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின் றார். ஆகையால் நீங்கள் யாரும் பொருள் கொடுக்க வேண்டாம். அதற்கு மாறாக என்னை அவமானப்படுத்திய, பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனைப்,போரில் கொல்லாமல் உயிரோடு தேர்க்காலில் இட்டுக் கட்டி, என்முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். இதுதான் நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய குருதக்ஷி ணை” என்றார். உடனே குருகுல மைந்தர் அனைவரும், தங்கள் ஆசான் துரோணரை வணங்கி, விடைபெற்றுக் கொண்டு, படைக்கலங்களோடும் சதுரங்க சேனை யோடும் சிங்கமென இடிமுழக்கம் செய்து கொண்டு பாஞ்சால நாட்டை அணுகி, அதனை முற்றுகையிட்டனர். குருகுல மைந்தர் அனைவரும் தன் நாட்டை முற்றுகையிட்டதை அறிந்து, பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் கடுங்கோபங் கொண்டு, நெருப்புப் பொறி பறக்க, தன் சகோதரர்களுடனும், பெரும்படையுடனும் வந்து கெளரவர்களை எதிர்த்துப் போரிட லானான். துரியோதனாதியரும் துருபத னோடு, கடுமையாகப் போரிட்டனர். இறுதியில் துருபதனின் படை ஆற்றலுக்கு எதிர் காண முடியாதவர்களாய் புறங்காட்டி ஒடலாயினர். கெளரவர்கள் எல்லோரும் தோல்வியுற்றுப் புறங்காட்டி ஓடியபின், அர்ச்சுனன், துரோணரின் அனுமதி பெற்று துருபதனோடும், அவன் படையுடனும் கடுமையாக எதிர்த்துப் போரிடலாயினான். அவன் வில்லாற்றலுக்குமுன், துருபதன் படைகள் எதிர் நிற்க முடியாது புறங்காட்டி ஓடலாயின. பின்னர் துருபதனோடு கடுமையாகப் போரிட்டான். அவனாலும் அர்ச்சுனனை வெல்ல முடியவில்லை.
தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்ட துருபதனைக் குருவின் ஆணைப்படி தேர்க்காலிலிட்டுக் கட்டிக் கொண்டு போய்த் தன் குருவின் முன் நிறுத்தி, வெற்றி வீரனாய்த் திகழ்ந்தான். இந்தப் போரில் அர்ச்சுனன் குருவின் கட்டளையை நிறைவேற்றியதோடு, துரியோதனாதிய ருடைய கர்வத்தையும், அடக்கினான் என்பதை அறியலாம்.
வெற்றிக் களிப்பில் துரோணர்
துருபதன் தலைகுனிந்து நிலத்தை நோக்கி, வெட்கத்தோடு தன் பழைய நண்பர் துரோணர் எதிரில் நின்றான். வெற்றிக் களிப்பில் மிதந்த துரோணர் அவனைக் கண்டு இகழ்ச்சிச் சிரிப்புடன் “துருபதனே! பின் வருகின்ற விளைவினை அறியாது உன்னுடைய அவையில், பலர் முன்னிலையில், அன்று என்னை அவ மதித்து இகழ்ந்து இழிமொழிகள் பேசி னாய்; நான் குற்றமற்ற ஏழை அந்தணன். நீயோ உயர்ந்த க்ஷத்திரியன். உன்னால் இகழப்பெற்ற இந்தச் சாதாரண ஏழை அந்தணன், பெருமன்னனாகிய உன்னை, என் மாணாக்கனைக் கொண்டே வென்று, என் சபத மொழியை நிறைவேற்றிக் கொண்டேன். இப்பொழுது உன்னுடைய நாடு எனக்குச் சொந்தம். என்றாலும் அன்று நீ எனக்குக் கொடுப்பதாகச் சொன்ன பாதி ராஜ்ஜியமே எனக்குப் போதும். மீதி பாதி ராஜ்ஜியத்தை உனக்குத் தானமாக நான் வழங்குகின்றேன். இனி உன் நாட்டிற்குச் சென்று உனக்குக் கொடுத்த பாதி ராஜ்ஜியத்தைச் சுதந்திரமாக ஆண்டு கொண்டிரு” என்று கூறி அவனை அவன் நாட்டிற்கு அனுப்பினார்.
துருபதனின் யாகம்
துருபதன் வெட்கத்தோடும். வேதனை யோடும், கோபத்தோடும், சென்றான். உடனே கங்கா நதி தீரத்தில் அந்தணர் பகுதியில் வாழும் யாசன், உபயாசன் என்னும் இரண்டு முனிபுங்கவர்களை அணுகி, துரோணரைக் கொல்ல வல்ல ஓர் ஆண் மகனையும், தன்னைவென்று தன் திறமையை உலகறியக் காட்டிய வில்லாற்றல் மிக்க வீரன் அர்ச்சுனனுக்குப் பரிசாக, திருமணம் செய்து கொடுக்க அவனுக்கு ஏற்ற பெண் மகளையும் தனக்கு அளித்து அருளுமாறு வேண்டிக் கொண்டான்.
யாசன், உபயாசன் என்ற அம்முனிவர் இருவரும், துருபதனின் வேண்டுகோளை ஏற்று ஓர் அரிய யாகத்தைச் சிறப்புறச் செய்தனர். யாகத்தையெல்லாம் முடித்த பின் அவியுணவின் சேஷத்தை, அரசன் மனைவிக்குத் தரப்புகும்போது, அவள் சூதகம் ஆகிவிட்டாள். அதனால் மந்திரப் புனிதமான அவியுணவை அரசன் மனை விக்குக் கொடுக்க முடியாது போய்விட்டது. எனவே அதை யாகாக்னியில் பயபக்தி யுடன் பெய்தனர். அப்பொழுது அந்த அக்கினியிலிருந்து, தலையில் அழகிய திருமுடி; உடம்பில் கவசம்; காதுகளில் குண்டலங்கள். நெருப்பைப் போன்ற நிற அமைப்பு; ஆகிய இவற்றுடன் இவன் மன்மதனோ! அல்லது முருகனோ என்று சொல்லுமாறு பேரழகு பூண்டு பெரிய தேரின் மேல் அமர்ந்து வில்லினை ஏந்திய படியே ஓர் ஆணழகன் வெளிப்பட்டான். அப்பொழுது பொழுது அசரீரியானது, “இவன் துரோணரின் சீடனாகவும், அவருக்கு எமனாகவும் இருப்பான்; பாஞ்சாலர்களின் பயத்தைப் போக்குவான்; துரோணரைக் கொன்று, துருபதனின் துயரத்தைப் போக்குவான்” என்று கூறியது.
அவன் தோன்றிய சிறிது நேரத்தில், கரிய நெடிய கூந்தலும், செவ்வாயும், முத்துப் போன்ற பற்களும், தாமரை அன்ன முகமும்,மயில் போன்ற சாயலும், நுண்ணிய இடையும் உடைய தன்னிகரற்ற ஓர் அழகுடைய நங்கை, நங் செந்தாமரை மலரை ஆசனமாகக் கொண்டு அமர்ந்தி ருக்கும் திருமகளைப், போல வெளிப் பட்டாள். இதனை,
”மின்னும் கொடியும் நிகர் மருங்குல் வேய்தோள் முல்லை வெண்முறுவல் பொன்னும் பிறந்தாள் கோகனகம் பூமீது எழுந்த பொன் போல்வாள்” என்று வில்லிபுத்தூரார் அழகாகக் கூறுகின்றார்.
அசரீரி
“முன்பு திரேதாயுகத்தில் அரக்கர் குலம் அழியும்படி, திருமகள் பூமியிலிருந்து தோன்றினாள். இந்தத் துவாபர யுகத்தில் ஆணவமிக்க மன்னர் குலத்தை அழிக்கும் பொருட்டு அக்கினியினின்று இவள் பிறந் துள்ளாள்” என்று ஓர் அசரீரி வாக்கு விண்ணிலிருந்து யாவரும் கேட்க எழுந்தது. யாகத்தால், முதலில் பிறந்த குமாரனால் துரோணருக்கு அழிவு உண்டாதலையும், அவனுக்குப் பின் பிறந்த அழகிய நங்கை யால், வில்லுக்கு விசயன் எனப்படும் அர்ச்சுனன் இன்பம் அடையப் போதலை யும், கணித்து அறிந்து துருபதன் மனமகிழ்ந் தான். அக்கினியினின்று முன் பிறந்த ஆண்மகனுக்குத் ‘திட்டத்துய்மன்’ எனவும், அவனுக்குப் பின் பிறந்த பெண்மகளுக்குப் பின்னோரும் இருகை கூப்பிப்போற்றும் படியாகக் ‘கிருஷ்ணை’ எனப் பெயர் இட்டு நன்கு வளர்த்து வந்தான். பின்னர் துருபதன் மகன் ஆதலால் திரெளபதி, எனவும் பாஞ்சாலமன்னன் மகள் ஆதலால், பாஞ் சாலி, எனவும் இவளுக்கு வேறு பெயர்கள் வழங்கலாயின.
துரோணரை வணங்கிய திட்டத்துய்மன்
அதன்பின் திட்டத்துய்மன் துரோண ரிடத்தில் சென்று, கால்களில் விழுந்து வணங்கி, தனக்கு வில்வித்தை முதலான வற்றைக் கற்பிக்குமாறு வேண்டினான். துரோணரும், அவனால் தனக்கு மரணம் நேரும் என அறிந்தாராயினும், விதியினை யாராலும் வெல்ல முடியாது எனக்கருதி, மறுக்காமல் எந்தவிதப் பாரபட்சமும் காட்டாமல், வில்வித்தை முதலானவற் றைக் கற்பித்தார். அவனும் நன்கு கற்றான்.
இவ்வாறு பாஞ்சால நாட்டில் துருபதனும், அத்தினாபுரியில் குருகுலக் குமாரர்களும், மகிழ்ந்து இருக்கும் நாளில் நான்மறைகளை வகுத்த வேதவியாசர் அஸ்தினாபுரம் வந்து, தன் தாயாகிய பரிமளகந்தியை வணங்கி, ”பாண்டவரும் கௌரவரும், எதிர் காலத்தில் மாறுபட்டு (குருக்ஷேத்திரம் ) போரிடப் போகிறார்கள்.
எனவே இங்கு இருப்பது தகுதியன்று உன் மருமகள்கள் இருவரையும், அழைத்துக் கொண்டு காட்டிற்குச் சென்று தவம் செய்ய” எனக் கூற மகனின் சொல்லை மறுக்காது பரிமளகந்தி, தன் மருமகள்கள் அம்பிகை, அம்பாலிகை ஆகியவருடன் காட்டிற்குச் சென்று, அரிய தவத்தைச் செய்து இறைவனின் திருவடி நிழலை அடைந்தாள். மருமகள் அவளைப் பின்பற்றி இறைவன் திருவடி நிழலைச் சேர்ந்தார்கள்.
அரக்கு மாளிகை
பீமனுடைய வலிமையையும், அர்ச்சுன னுடைய வில்லாற்றலையும், கண்டு துரி யோதனன் உள்ளத்தில் பொறாமை தோன்றி, அது வேர் விட்டு வளர்வ தாயிற்று. மேலும் அவனுக்கு நன்கு தூபமிட உட்பகை கொண்ட மாமன் சகுனி, அவன் நண்பன் கர்ணன், முரட்டுத் தம்பி துச்சாதனன் வந்து சேர்ந்தார்கள். திருத ராட்டிரர் நல்ல அறிவு படைத்தவர்.தம்பிப் பிள்ளைகளிடத்தில் அன்பு கொண்டவர். அதைவிட துரியோதனனாகிய தன் மகன் மேல் கண்மூடித்தனமான பாசம் கொண்டி ருந்தார். அதனால் துரியோதனன் கூறும் தவறான ஆலோசனையைக், கண்டிக்க முடியாமல் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத் திற்கு ஆளானார். இந்நிலைதான் துரியோ தனாதியர் அழிவுக்கே பெரும் காரண மாயிற்று.
இளவரசு பட்டம்
“பிறவிக் குருடனாகிய திருதராட்டிரர் பாண்டு இறந்த பிறகும், அரசனாக இருப் பது நியாயமன்று; ஆகையால் மூத்தவரான தருமருக்கே இளவரசு பட்டம் சூட்ட வேண்டும்’ என்று அனைவரும் விரும்பி னார்கள். பீஷ்மரும் அதையே எண்ணினார். அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல நாளில் தருமருக்கு இளவரசு பட்டம் சூட்டினார்கள். அத்தருமரும் மற்றைய தம்பிமார்களுடன், இணைந்து ஆட்சி நடத்தலானார். அவருக்குப் பீஷ்மர், விதுரர், ஆகியவர்களின் ஆசியும், திருதராட்டிரரின் மேலோட்டமான அன்பும், துரோணரின் நல்வாழ்த்தும் கிடைத்தன. ஆனால் துரியோதனாதியரால், இதனைத் தாங்கிக் கொள்ள முடி முடியவில்லை. தன் தந்தைமேல் கோபம் கொண்டனர்.
அதன்பின் துரியோதனன், நண்பன் கர்ணனுடனும், மாமன் சகுனியுடனும் கூடி, சதியாலோசனை நடத்தினான். அதில் “பாண்டவர்களை வெளிப்படையாக எதிர்க்க முடியாது; அதனால் வாரணா வதத்திற்கு அவர்களை அனுப்பி, அங்கு கொன்று விடுவது”எனச் சூழ்ச்சி செய் தனர். துரியோதனன் தன் தந்தை திருத ராட்டிரரிடம் சென்று, “பாண்டவர்களிடம் அரசாட்சி போனால், நாங்கள் அவர்களுக்கு முன் கைகட்டி நிற்க வேண்டிவரும். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை விட உயிரைவிடுவதே மேல்” எனக் கூறினான். பெற்ற பாசம் அல்லவா! தருமத்தை மறந்தார். மற தனயன் கூறியதை ஏற்றுக்கொண்டு, “நாமாகக் கொடுத்த ஆட்சியை எவ்வாறு கவர்வது?” எனக் கேட்டார். அதற்குத் துரியோதனன், “இறந்து போன பாண்டு மன்னனுக்குப் பிதிர்க்கடன்கள் செய்யவேண்டுமென்றும்; அதற்கு அவர்கள் வாரணாவதம் (வாரண வாசி அல்லது காசி) செல்ல வேண்டும் என்றும், பாண்டவர் ஐவர்க்கும் நயமாகக் கூறி அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்து அங்கு அனுப்பிவிடுங்கள். பின்னர் நான் மாமா சகுனியோடும். நண்பன் கர்ன னோடும் சேர்ந்து, அவர்கள் இங்கு மீண்டும் வராதபடி செய்துவிடுகிறேன். பீஷ்மர், துரோணர், விதுரர் முதலானவர் களைப் பாண்டவர்கள் வாரணாவதத்திற்குச் செல்வதை, ஏற்கும்படியாக நீங்கள் செய்து விடுங்கள் ” என்று கூறினான். பெற்ற பாசத்தால், தான் செய்வது அதர்மம் என்று தெரிந்தும், துரியோதனன் கூறியதை ஏற்றுக் கொண்டார்.
அதன்பின் பாண்டவர்களைத் தன்பால் அழைத்துப் பரிவுடன் அவர்களை நோக்கி, “என் அருமை மைந்தர்களே! உன் தந்தை பாண்டு மன்னர் நற்கதி அடைந்தார் என்றாலும், புதல்வர்கள் செய்ய வேண்டிய பிதிர்க்கடன்களை, முறைப்படி நீங்கள் வாரணவாசி என்கிற காசியில் செய்தால், அவருக்கு நிச்சயமாக நற்கதி கிடைக்கும். ஆதலின், நீங்கள் உங்கள் தாயோடு வாரணாவதம் சென்று, பிதிர்க்கடன்களைக் குறைவறச் செய்து பின்பு இங்கு வந்து அரசினை ஏற்றுக் கொள்ளலாம். அதோடு உங்களுக்கு ஆலோசனை சொல்லுவதற்குப் புரோசனன், என்பவரை அமைச்சராக நியமிக்கின்றேன். நீங்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் குறைவறச் செய்யக் கட்டளையிட்டுள்ளேன். என்னால் நியமிக்கப்பட்டுள்ள புரோசனனை, உடன் அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்கு உதவியாக இருப்பார்” என்று கூறினார். பாண்டவர்கள் பெரிய தந்தையார் கூறியதை ஏற்றுக் கொண்டனர். பின்பு திருதராட்டிரர், பீஷ்மர், விதுரர், துரோணர் முதலானவர்களை, வணங்கி விடை பெற்றுக் கொண்டு வாரணாவதத்திற்குத் தாயுடன் புறப்பட்டனர்.
வாரணாவதம்
பாண்டவர்கள் வாரணாவதம் சேர்வ தற்கு முன்னரே, துரியோதனனுக்கு துரியே வேண்டியவனான புரோசனன் வேகமாக வாரணாவதம் போய்ச் சேர்ந்தான். அவன் பாண்டவர்கள் தங்குவதற்கென்று, நெய், எண்ணெய், கொழுப்பு, அரக்கு, மூங்கில், விழல், அருகம்புல் போன்ற எளிதில் தீப்பிடிக்கத்தக்க பொருள்களை, மண் ணோடு கலந்து, அழகான ஒரு மாளிகை யைக் கட்டினான். மேலும் ஆங்காங்கே மறைவாக எளிதில் தீப்பிடிக்கத்தக்க பொருள்களை, வைத்தான். மனதைக் கவரும்படியாகச் சுவர்களையும், தரையை யும், அமைத்திருந்தான். “ஆசனங்கள், படுக்கைகள், போன்றவற்றை அழகுற அமைத்து, தங்குவதற்கேற்ற வசதிகள், அனைத்தையும் செய்து வைத்தான். சில நாட்கள் பாண்டவர்களை அங்கு தங்கச் செய்து, அவர்கள் தூங்குகின்ற காலத்து நெருப்பு வைத்து, அவர்களை அந்த நெருப்பில் அழித்து விடவேண்டும்.
வெளியுலகத்திற்குத் தற்செயலாக நடந்து விட்டது என்று விளம்பரப்படுத்தி விட வேண்டும்” என்ற சகுனி, துரியோதனன் திட்டத்தைத்தான், முன்கூட்டிச் சென்ற புரோசனன் செயல்படுத்தினான்.
பாண்டவர்களை வாரணாவதத்திற்கு அனுப்புவதில், ஏதோ சதி இருக்கின்றது என்று நுண்ணறிவு மிக்க விதுரர் அறிந்து கொண்டார். அதனால் வாரணாவதத் திற்குப் பாண்டவர்கள் புறப்படுகின்ற காலத்தில் தருமரிடம் விதுரர், “ஏதோ ஆபத்து வாரணாவதத்தில், உங்களுக்கு வரக் காத்திருக்கின்றது. உங்கள் அறிவைப் பயன்படுத்திக் காத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். தருமர் தன் தாய் குந்தி யிடம் இதனைக் கூறினார். இதனை மற்ற வர்களுக்குத் தெரியப்படுத்தாது, வாரணா வதம் சென்றனர். புரோசனன் திட்டமிட்டுக் கட்டிய அழகான ‘அரக்கு மாளிகையில் தங்கினர். அப்பொழுது தருமருக்கு வயது இருபத்தொன்பது. அதாவது பாண்டு மறைந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆயின. தன் தந்தைக்கு வேண்டிய பிதிர்க்கடன் களைக் குறைவில்லாது செய்தனர். பின்னர் வாரணா வாசியில், எழுந்தருளியிருக்கும் விசுவநாதப் பெருமானையும், அன்னை விசாலாட்சியையும், வணங்கினார்கள். இவ்வாறு சில நாட்கள் கழிந்தன.
அரக்கு மாளிகைக்குத் தீ
புரோசனன் அரக்கு மாளிகைக்குத் தீ வைக்கத் தகுந்த நாளை எதிர்பார்த்திருந் தான்; ஒருநாள் விதுரரால் அனுப்பப்பட்ட கைதேர்ந்த சிற்பியொருவன், பீமனை வணங்கி, அவனைத் தனியே அழைத்துச் சென்று, “ஐயா! இந்த மாளிகை உங்களை அழிப்பதற்கு என்று அரக்கு போன்ற எளிதில் தீபபிடிக்கத்தக்க, பொருள்களைக் கொண்டு துரியோதனாதியரின் சூழ்ச்சிப் படி கட்டப்பட்டது. ஆதலின் நீங்கள் இதிலிருந்து விரைவில் உயிர் தப்பிப் பிழைப்பதற்குக், கருணையுள்ளம் படைத்த உன் சிறிய தந்தை விதுரர், என்னை அனுப்பியுள்ளார். நான் அவர் ஏவலின்படி பிற ஏவலர்கள் அறிந்து கொள்ள இயலாத படி, குற்றமற்ற நிலவறை (சுரங்கப்பாதை) அமைத்துள்ளேன். அதன் வழியாக சென்றால் நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். இந்தக் கம்பத்தை (அதனைச் சுட்டிக் காட்டி) வலிமையுடன் பெயர்த்தால், அந்த நிலவறை தென்படும். அந்த நிலவறை வழியாகச் சென்றால், இந்நாட்டிற்கு அப்பாலுள்ள இடும்ப வனக் காட்டிற்குச் செல்லலாம் என்று கூறி அவனிடம் விடைபெற்றுக் கொண்டு தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தான்.
பீமன், புரோசனன் அரக்கு மாளிகையில் தீ வைப்பதற்கு முன்னமேயே, தான் அதற்குத் தீ வைத்து வெளியேறிவிட வேண்டுமென்று எண்ணி அதற்கேற்ற தருணத்தை எதிர்நோக்கி இருந்தான். ஒருநாள் பீமன் புரோசனனுடன் அன்பொழுகப் பேசி, அவனை அந்த அரக்கு மாளிகையினுள் படுக்க வைத்து, நன்றாக உறங்கும்படியாகச் செய்தான். அவன் அயர்ந்து நன்றாக உறங்கும்போது, பீமன் அந்த அரக்கு மாளிகைக்குத்தானே தீ வைத்துவிட்டு, தன் தம்பியர்களை, தரும புத்திரரோடும் தாய் குந்தியோடும், ஸ்தபதி முன்னர்க் காட்டிய தூணைப் பெயர்த்து, அந்தத் தூணின் கீழ் காணப்பட்ட சுரங்கப் பாதை வழியாக, இமைப் பொழுதில் அந்த நாட்டைத் தாண்டி ஒரு காட்டினை அடைந் தான்.
காலையில் எழுந்து பார்த்தபோது. அங்கிருந்தோர், பாண்டவர்களுக்கு முன் நாள் நஞ்சு கொடுக்க வந்த வேடர்கள் ஐவரும், அவர்கள் தாயும் துரியோதனனால் பாண்டவர்களைக் கொல்ல ஏவப்பட்ட புரோசனனும் வெந்து போனதை அறியாமல், துரியோதனாதியரின் வஞ்சகச் சூழ்ச்சியால் அங்கு தங்கியிருந்த பாண்ட வர்கள் ஐவரும், குந்தி அன்னையும் புரோசனனும் தீயில் அகப்பட்டு வெந்து சாம்பலாயினர், என்று எண்ணி வருந்தினர். அவர்களுக்குப் பாண்டவர்கள் ஐவரும் குந்தியும் தப்பிச் சென்றது தெரிய வாய்ப் பில்லை. அல்லவா! அதனால் வருந்தினர்
பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், தாய் குந்தியோடு அரக்குமாளிகைத் தீயில் வெந்து சாம்பலாயினர், என்ற செய்தி அஸ்தினாபுரத்திற்கு எட்டியது. பீஷ்மர் துரோணர் உட்பட அனைவரும் பொறுத்துக் கொள்ள முடியாத சோகத்தை அடைந்தனர். ஆனால் மகிழ்ச்சி கொண்டவர்கள், நால்வர் அவர்கள்.
(1) அரவக் கொடியோன் துரியோதனன், (2) குருகுலத்தை உட்பகை கொண்டு அழிக்க வந்த அவன் மாமன் சகுனி, (3) துரியோதனன் தம்பி முரடன் துச்சா தனன், (4) தன் பிறப்பை அறியாமல் பாண்டவர்களுக்கு மூத்தவன் என்பதை உணராமல், துரியோதனன் ஆருயிர் நண்பனாய், செஞ்சோற்றுக் கடன் கழித்துக் கொண்டிருக்கும் கர்ணன். விதுரர் மட்டும், பாண்டவர்கள் எப்படியும் தப்பியிருப் பார்கள்,என்று எண்ணி மனத்திலே நிம்மதி கொண்டிருந்தார். புறத்திலே வருந்தினார்.
மகாபாரதம் – 9 வாரணாவதச் சருக்கம்… பாஞ்சால தேசம், துரோணரின் எண்ணம் | Asha Aanmigam