பரிக்ஷித்து மன்னர் மாண்ட வரலாற் றைக் கூறிய பின் உதங்கர் ஜனமே ஜயனை நோக்கி, “மன்னனே! உன் தந்தையைக் கொன்ற தக்ஷகன் முதலான பாம்புகள் அழியும்படியான சர்ப்ப யாகத்தை இனி மேலாவது செய்வாயாக” என்று கூற, ஜனமே ஜயனும் சர்ப்ப யாகத்தைத் தன் மனைவி வபுட்டையுடன் இருந்து தொடங்கலானான். வியாச முனிவர் முதலானோர் அங்கு வந்து உரிய மந்திரங்களையோதி, மிகுதியான சமிது களைச் சேர்த்து அக்கினியைப் பெருமள வில் மேலெழச் செய்தனர். அதனால் நாகங்கள் எல்லாம் யாக நெருப்பில் விழுந்து எரிந்தன. இதனைக் கண்டு தக்ஷகன் மனங்கலங்கி இந்திரனைச் சரண் அடைந்தான். இந்திரனும் தக்ஷகனுக்கு அபயம் அளித்து தன்னிடத்தில் பாதுகாப் பாக இருக்கும்படி செய்தான். ஓதப்பட்ட மந்திரமானது வாசுகியை மூண்டெரிக்கின்ற யாகத்தீயை நோக்கி இழுக்க, அவன் தன் தாய் கத்ருவிடம் சரண் அடைந்தான். உடனே அவள், தன் மகள் ஜரத்காருவை அழைத்து, ”உன் மகன் ஆஸ்திகன் நடந்து யாக சாலைக்கு வருவானாயின் நாகங்கள் பிழைக்கும் ” என்று கூறினாள். தாயின் சொல்படி ஜரத்காரு தன் மைந்தன் ஆத்தி கனை யாகசாலைக்கு அழைத்து வந்தாள்.
தன் தங்கை மகனைக் கண்ட வாசுகி, ”தனக்கும் தன் சகோதரர்களுக்கும் நேர விருக்கும் ஆபத்தைச் சொல்லித் தங்களைக் காக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். ஆஸ்திகனும் தன் மாமன் கோரிக்கையை ஏற்று, மாதவர்கள் புடை சூழ ஜனமே ஜயனை அடைந்தான்.
அர்ச்சுனனை விட உயர்ந்தவன்
ஆஸ்திகனைக் கண்டவுடன் ஜனமே ஜயன் எதிர்கொண்டு வரவேற்று ஆசனத் தில் இருத்தி வணங்கினான். அப்பொழுது ஆஸ்திகன், “மணம் வீசுகின்ற மாலை அணிந்த மன்னனே! உன்னுடைய பெருமைகளை எடுத்துக் கூறுவதற்கு நான் முகனாலும் இயலாது. உன் தந்தை பரிக்ஷித்து மரணமடையக் காரணமாக இருந்த தக்ஷகன் செய்த பெருங்குற்றத்திற் காக, அவன் குலத்தைச் சேர்ந்த நாகங்கள் எல்லாம் இறந்து போகும்படி சர்ப்பயாகம் செய்து உன் பகைமையைத் தணித்துக் கொண்டாய். குருக்ஷேத்திரப் போரில் பதின் மூன்றாம் நாள். அர்ச்சுனன் தன் மகனும், உன் பாட்டனுமாகிய அபிமன்யு வைச் சூழ்ச்சியினால் கொன்ற சயத்திர தனை, மறுநாள் சக்கரப் படையை அகற்றிப் பகலவனை வெளியே தெரியச் செய்த கண்ணன் சூழ்ச்சியினால், தன் அம்பினால் கொன்று தன் பகையைத் தீர்த்துக் கொண்டான். அத்தகைய சூழ்ச்சி எதுவும் புரியாமல், இருந்த இடத்தில் இருந்து கொண்டே சர்ப்பயாகம் செய்து நாகங்களை வீழ்த்தி உன் பகையைத் தீர்த்துக் கொண்டாய். எனவே உன் பாட்டன். தந்தையராகிய (கொள்ளுப் பாட்டன்) அர்ச்சுனனைவிட உயர்ந்தவன் ஆனாய். நீ ஒப்பற்ற தவத்தைச் செய்துள் ளாய். கலியினால் ஏற்படும் தீமைகளை எல்லாம் அகற்றி, ஒரு வெண்குடைக் கீழ் செங்கோலாட்சி செலுத்திய தரும புத்திர ரின் குலத்தில் தவப்பயனால் தோன்றின வனே! நான் விரும்புகின்ற ஒரு வரத்தை எனக்கு அருள வேண்டும்” என்று ஜனமே ஜயனைப் பலவாறு புகழ்ந்து கேட்டார்.
யாகத்தை நிறுத்துகிறேன்
புகழுரைக்கு மசியாதவர்கள் யார் இருக்கின்றார்கள்? அதனால் ஜனமே ஜயன் ஆஸ்திகரிடம், “வேதங்களில் வல்ல முனிவரே! நீர் எது கேட்டாலும் தருகின் றேன் கேளும்” என்றான். அதைக் கேட்ட ஆஸ்திக மாமுனிவர், “மன்னவனே/ அக்கினி கொண்டு செய்யும் இந்த யாகத் தில் மாய்ந்து போனவர்கள் தவிர மற்றவர் கள், உயிரோடு வாழும்படியாகச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதனைக் கேட்ட ஜனமே ஜயன், அவர் கோரிக்கையை ஏற்று “இதுவரையில் இறக்காத நாகங்கள் உயிரோடு வாழும் படியாக, இந்த யாகத்தை இப்போதே நிறுத்துகின்றேன்” என்று கூறினான். ஆஸ்திகரும் மனமகிழ்ந்து மன்னனை வாழ்த்தினார்.
என்றாலும் யாகத்தை நடத்தும் முனிவர் கள், முன்னமேயே கொழுந்து விட்டு எரி கின்ற யாகத்தில் நெய்யை ஊற்றி உச்சரித்த மந்திரத்தின் காரணமாக தக்ஷகன் முதலாய நாகங்களை, அம்மந்திரத்தின் சக்தியானது யாகத்தீயை நோக்கி இழுத்து வரலாயிற்று. உடனே தக்ஷகன் இந்திரன் சிம்மாசனத் தைப் பற்றிக் கொள்ள, அந்த இந்திர சிம்மாசனத்தோடு தக்ஷகனும், இந்திரனும் யாகத்தை நோக்கி விழலானார்கள். ஆனால் அதற்குள் அக்கினி கொண்டு செய்த யாகத்தை நிறுத்தவே அவர்கள் தப்பிப் பிழைத்தார்கள். நெற்பொரி, சமிது, நெய் முதலியவற்றை ஆகுதிகளாகச் சொரிந்து ஜனமே ஜயன் கட்டளைப்படி அந்தணர் கள் யாகத்தை முடிவுறச் செய்தனர். பின்னர் முனிவர்களுக்கும், அந்தணர்களுக்கும், குடி மக்கட்கும், தானம் செய்து ஜனமே ஜயன் அவர்களின் நல்வாழ்த்தினைப் பெற்றான். ஆஸ்திகரும் மன்னனை வெகுவாகப் பாராட்டினார்.
தன் மாமன்களுடைய துன்பத்தையெல் லாம் போக்கிய ஆஸ்திகர், அவர்களிடம், “இந்த உலகத்தில் அந்தணர்களாகட்டும், மற்றவர்களாகட்டும், தெளிந்த சிறந்த மனத் தோடு இந்த தர்மக் கதையைக் காலையும், மாலையும் படிப்பார்களாயினும், அல்லது பிறர் சொல்லக் கேட்பாராயினும், அவர் களுக்கு நாகங்களாகிய உங்களிடமிருந்து எந்த விதத் தீங்கும் நேரக் கூடாது” என்று ஒரு வரம் வேண்டிப் பெற்றுத் தன் இருப்பிடம் சேர்ந்தார். பின்னர் தக்ஷகன், வாசுகி, ஆதிசேடன் முதலானோர் சாப விமோசனம் பெற்று இடையூறின்றி வாழ்ந்து வரலானார்கள்.
வியாச பகவான் வந்தார்
சர்ப்ப யாகத்திற்கு வந்திருந்தவர்கள் போன பின்னர் ஜனமே ஜயன், முனிவர் கள், தேவதைகள், பிதிரர்கள் முதலானோ ருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை குறைவறச் செய்து, மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரும் நாளில் ஒரு நாள், வியாச பகவான் தன் சிஷ்யர்களுடன் ஜனமே ஜயன் சபைக்கு வந்தார். (இவரைப் பற்றிய பிறப்பு முதலானவை பின்னர் சொல்லப் படும்.)
விதியின் பயனால் நடந்தது
வந்த தன் குல முன்னோராகிய வியாச பகவானை எதிர் கொண்டழைத்து, வேத முறைப்படி உபசாரங்கள் பல செய்து, ஆசனத்தில் எழுந்தருளப்பண்ணி, அவர்கள் பணித்தபடி தான் அரசுக் கட்டிலில் அமர்ந்து ஜனமே ஜயன், “வேதங்களை வகுத்த மாமுனிவரே! குருக்ஷேத்திரப் போரில், பாண்டவர்கள் ஐவர் தவிர, கௌரவர்கள் நூறு பேரும்,இருவரைச் சார்ந்த வீரர்களும், இருவர் குலத்தில் பிறந்தவர்கள் மிச்சமில்லாதபடி மாள நீங்கள் விரும்பினீர்கள் போலும். விரும்பி யிருந்தால் நீங்கள் தடுத்திருக்கலாமே! ஏன் செய்யாது விட்டீர்கள்” என்று பணிவுடன் கேட்டான். அதனைக் கேட்ட வியாசர், ”குருக்ஷேத்திரப் போரானது முன்னை செய்த விதியின் பயனால் நடந்தது. ஊழ் வினையை யாராலும் தடுக்க முடியாது. நடக்க வேண்டியவை யார் தடுத்தாலும் நிற்காது.நடந்தே தீரும். ஊழிற் பெருவழி யாவுள?” என்று பதிலளித்தார். அதனைக் கேட்ட ஜனமே ஜயன் “ஊழ் வினைப் பயனால் மாபெரும் பாரதப் போர் நடந்தது என்கிறீர்கள். அவ்வாறு எனில் அந்தப் பாரதக் கதையை எனக்கு விளக்கமாகக் கூறுங்கள்” என்று கேட்டுக் கொண்டான்.
ஜனமே ஜயன் கோரிக்கையை ஏற்ற வியாச பகவான், தன்னுடைய சீடர்களில் பெருமை மிக்கவராகிய வைசம்பாயனரை அழைத்து, “மன்னனுக்குப் பாரதக் கதையைச் சாற்றிடுக” என்று கட்டளை யிட்டுத் தன் இருப்பிடம் சேர்ந்தார்.
வேலினை ஏந்திய ஜனமே ஜயன் தன் மனைவியாகிய வபுட்டையுடன் பரிசுத்த மாக வந்து, மாபெரும் பாரதக் கதையைக் கேட்பதற்குச் சித்தமாக இருப்பதாகவும் அவர் பாங்கினை அறிய விரும்புவதாகவும் கூறி வியாச முனிவரின் சீடராகிய வைசம் பாயனரை வணங்கினான். வைசம்பாய முனிவரும் தமது குருவாகிய வியாச பகவானை நினைத்து வழிபட்டு, அவர் கிருபையை முன்னிட்டுக்கொண்டு ஐந்தாம் வேத மாகிய மகாபாரதக் கதையைச் சொல்ல லானார். அந்தப் பிரகாரமே உக்கிரசிரவஸ் என்னும் சூத முனிவர், தகுதி படைத்த நைமிசாரணிய வாசிகளான முனிவர்களுக்கு வைசம்பாயனார் கூறிய வழியைப் பின்பற்றிச் சொல்லலானார்.
மகாபாரதம் – 4 சர்ப்ப யாகச் சருக்கம் | அர்ச்சுனனை விட உயர்ந்தவன்….!?