கைலாசா நாட்டின் மீது உயிர் போர்…. இந்து மதத்தை அழிக்க மர்ம விதை…. நித்யானந்தா அலறல்…! Bio war on Kailasa country …. Mystery seed to destroy Hinduism …. Nityananda Screaming..!
கைலாசா நாட்டின் மீது பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்காமலேயே சிலர் மர்ம விதைகளை அனுப்பி வைத்துள்ளனர் என நித்யானந்தா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். இந்த கைலாசா நாடு எங்கு இருக்கிறது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அங்கிருந்து பேசுவது போன்று நித்யானந்தா அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
கைலாசாவில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வெப்சைட் முகவரியையும் வெளியிட்டார். அங்கு ஓட்டல் தொடங்க மதுரை இளைஞர் ஒருவரும் விண்ணப்பித்தார். கைலாசா நாட்டில் ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளதாக கூறி சில நாணயங்களையும் நித்யானந்தா வெளியிட்டார். பல்வேறு நாடுகளுடன் வர்த்தகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இப்படி கைலாசா நாடு பற்றி புதிது புதிதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன.
இந்நிலையில் கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நித்யானந்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், ‘’கைலாசா நாட்டின் மீது பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்காமலேயே சிலர் மர்ம விதைகளை அனுப்பி வைத்துள்ளனர். கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவே இது தெரிகிறது.
என்னை பல பேர் பல்வேறு வழிகளில் தாக்கியதாலேயே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக பயங்கரவாதத்தை விதைகள் மூலம் அனுப்பும் கொடிய சதி நடக்கிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.
அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த பட்டணம் ஒன்று இருந்தது. அதன் பெயர் மிதிலாபுரி. அதை ஜனசு மஹாராஜா ஆண்டு வந்தார் அவர் கல்வியிலும் மேன்மையுற்றிருந்தார். பண்பாட்டில் சிறந்த அவர்...
தேங்காய் தீபம் ஏற்றுவதற்கு ஆன்மிகம், விஞ்ஞானம், மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய பல்வேறு விளக்கங்கள் உள்ளன. தேங்காய் தீபத்தின் முக்கியத்துவம் 1. தேங்காயின் தன்மை தேங்காய் (கோப்பரை) தெய்வீக...
வீமன் மற்றும் சமையல் கலை: தமிழ் இலக்கியத்தின் சிறப்பு தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்றவை தமிழர்கள் அன்றைய சமூகத்தின் மேம்பட்ட வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்துகின்றன. சங்க...
கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் எப்போதும் ஒரு ஆதர்சம் மற்றும் பாடமாகவே திகழ்கின்றன. குறிப்பாக இக்கதையில் அவர் மூலம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான தர்மம் இருப்பதை...
விபூதியின் தத்துவம்: ஆன்மீகத்தின் அடையாளம் மற்றும் இதின் பரிமாணங்கள் விபூதி என்பது வெறும் திருநீறாக பார்க்கப்படுவது மட்டுமல்ல; அது ஆன்மீகத்திலும் பாசறையின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. மனிதர்களின் தன்னல...
கிரகமும் - அனுகிரகமும்மனித வாழ்க்கையில் தெய்வங்களின் கிரகங்களின் அனுகிரகங்களைப் பெற்றுக் கொண்டு பல நன்மைகளை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு கிரகமும் தனித்துவமான பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், அவற்றின் தலையிடல்...