பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கியுள்ள இந்த விழா வரும் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நேற்று முதல் வருகிற 6ஆம் தேதி வரை வெளிக்கோடை திருநாளும், 7ஆம்தேதி முதல் 11ஆம்தேதி வரை உள்கோடை திருநாளும் நடைபெறுகிறது. உள்கோடை நாட்களில் வீணை ஏகாந்த சேவை நடைபெறும். மேலும் வருகிற 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஸ்ரீரங்நாச்சியார் வசந்த உற்சவம் நடைபெறும்.
வெளிக்கோடை உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர் ரங்கநாச்சியார் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை அடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 7 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைகிறார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
ரங்கநாச்சியார் வசந்த உற்சவம் வருகிற 12-ந் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவ நாட்களில் தாயார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் விற்றுவிடுவது – நம்பிக்கையா? நியாயமா? நம் சமூகத்தில் பலவிதமான நம்பிக்கைகள் பரிமாறப்பட்டுள்ளன. “வாகனத்தில் பன்றி இடித்தால் அது ஓமென் (எச்சம்) ஆகும், அந்த...
மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதது ஏன்? – பாரம்பரியமும் அறிவியலும் கூறும் காரணங்கள் தமிழ் மரபிலும், வேதங்களிலும், தாத்தா-பாட்டிகள் சொல்லும் பழக்கங்களிலும் மாலை நேரத்தில் சில செயல்களைத்...
பூஜை, விரதம்: ஆண்கள் செய்யக்கூடாதா? – ஒரு தெளிவான பார்வை பூஜை, விரதம், தவம், தியானம் போன்ற ஆன்மிகச் செயல்கள் பெரும்பாலும் பெண்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக ஒரு...
கனவில் பாம்பு வருவதற்கான பொதுவான காரணங்கள்: அதிக எண்ணம் அல்லது பயம் – மனதிற்குள் பதிந்து இருக்கும் பாம்பைப் பற்றிய பயங்கள் கனவாகும். பழைய கர்ம வினைகள்...
பல வளங்கள் தந்திட,விசுவாவசு வருகிறாள்!வண்ண மேகம் விரித்து வந்து,வாழ்த்தி நாம் வரவேற்போம்! பல வளங்கள் தந்திட,விசுவாவசு வருகிறாள்!வண்ண மேகம் விரித்து வந்து,வாழ்த்தி நாம் வரவேற்போம்! சித்திரையைச் சீராக்கி,...
தமிழ்ப் புத்தாண்டில் பஞ்சாங்கம் படியுங்கள் – பாரம்பரியமும் பண்பாடும் இணையும் ஒளிக்கிழி தமிழர்களின் பாரம்பரியம் என்பது காலம் கடந்தும் அழியாதது. காலத்தால் சோதிக்கப்பட்டு பல தலைமுறைகள் அனுசரித்துவரும்...