எள், தர்ப்பை தர்ப்பணம் செய்வது எப்படி..? என்ன பலன்..!?

0
20

எள், தருப்பை போன்றவை

கருடன். திருமாலைப் பணிந்து, தாங்கள் இதுவரை கூவிள்களை மிகவும் காருங்கமாகச் சொல்லி மேர்கள் கருது போதாது. கருமங்களைச் செய்ய கோமயத்தால் ஏன் மெழுக கருண்டிய ஸ்தலத்தைக் கோமயத்தாலனைன் வேண்டும்? பிதுரர்களுக்குரிய கர்மங்களைச் செய்யும் போது மட்டும் எள்ளையும் தர்ப்பைப் புற்களையும் உபயோகிப்பானேன்? கட்டிலில் படுத்துறங்கியபடியே இறந்தவனும் உப்பரிகையில் மாய்ந்தவனும் நற்கதியை அடையமாட்டான் என்று தேவரீர் முன்பு ஒரு சமயம் கூறியிருக்கிறீர்கள். அப்படியானால் இறக்கும் நிலையை அடைந்தவன் எந்த இடத்தில் எப்படி இறத்தல் வேண்டும்? தானங்களையெல்லாம் எப்படிச் செய்தல் வேண்டும்? அவ்வாறு செய்யப்படும் தானங்களுக்கு ஏற்படும் பயன்கள் யாது? இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தான். “சர்வேசா!

கருடாழ்வான், அவ்வாறு வேண்டியதும், பரமகாருண்யனான ஸ்ரீபுருஷோத்தமன், கருடனை நோக்கிக் கூறலானார்:

“வைனதேயா! நல்ல கேள்வி! இந்தக் கேள்வியைக் கேட்டது சரியானதுதான். மாய்ந்தவனைக் குறித்துச் செய்ய வேண்டியவற்றையெல்லாம் விளக்கமாகக் கூறுகிறேன். நீயும் கவனமாகக் கேட்பாயாக. புத்திரனைப் பெறாதவனுக்கு எந்தவுலகத்திலும் இன்பம் இல்லை. இகத்திலும் பரத்திலும் இன்பத்தைப் பெற வேண்டும் என்று இச்சிப்பவன், நிச்சயமாகக் கருமமும் தவமும் செய்த நற்புத்திரனைப் பெறவே வேண்டும். தாமமும் தவமும் செய்யவில்லையென்றால் அவனது மனைவியின் வயிற்றில் கர்ப்பம் தரியாது. அப்படியே தரித்தாலும் அது பத்து மாதம் நிரம்புவதற்கு முன்னாலேயே கரைந்து, கழிந்து போகும். கருவானது கரைந்து சிதைந்தால் புருஷனுக்கு நற்கதி கிடைக்காது.

நல்லதொரு நன்மகனைப் பெற்றவனே, எல்லா உலகங்களிலும் நன்மையை அடைவான்.

“வைனதேயா! கருமங்களைச் செய்யத் துவங்குவதற்கு முன்னாலேயே, ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தை திருவலகால் துடைத்துச் சுத்தம் செய்து, கோமயத்தால் நன்றாக மெழுகிய பிறகே, எந்தக் கர்மத்தையும் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தஞ் செய்யாமல் கிரியைகளைச் செய்தால், அரக்கரும் பூதங்களும் பிரேதங்களும் பைசாசங்களும் அங்கு வந்து அக்கருமங்களை அங்கு செய்யவிடாமலும், அக்கர்மங்களை முற்றுப் பெற முடியாதவாறும் தடுத்து நிறுத்தி விடும். சுத்தம் செய்த ஸ்தலத்தில் கருமம் செய்யத் துவங்கினால், தேவர்கள் அவ்விடம் வந்து அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள். மரித்தவன் தானே;’ அவனுக்குச் செய்யும் கர்மங்களை எங்கு செய்தால்தான் என்ன? என்று எண்ணி, மரித்தவனுக்குத் தூய்மை செய்யாத இடத்தில் கர்மங்களைச் செய்தால், அக்கருமங்களைச் செய்ததனாலடையும் பயனை, இறந்தவன் அடைய முடியாமற் போவதோடு, இறந்தவன் நரகத்தையே அடைய நேரிடும்.

‘எள்’ என்பது எனது வியர்வையிலிருந்து தோன்றியதாகையால், அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும். அந்த எள் இரு வகைப்படும். கறுப்பு எள், வெள்ளை எள் என்ற இருவகையில் எந்த நிறமுள்ள எள்ளையேனும் தானங்களோடு சேர்த்துக் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். அதாவது சிறப்புடையதாக அமையும். சிரார்த்த காலத்தில் கறுப்பு எள்ளைச் சேர்த்தால், பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள். சூசைப் புல்லாகிய தர்ப்பைப்புல், ஆதியில் ஆகாயத்தில் உண்டாயிற்று! அந்தத் தருப்பையின் இரு கடையிலும் பிரமனும் சிவனும், அதன் நடுவே, ஸ்ரீஹரியும் வாசஞ் செய்கின்றனர். தர்ப்பை இல்லாமல் சிரார்த்தம் முதலிய கர்மங்களெதையும் செய்யலாகாது. பிராமணருக்கும் மந்திரத்திற்கும் தர்ப்பைக்கும் அக்கினிக்கும் திருத்துழாய்க்கும் நிர்மாலிய தோஷமில்லை. ஆகையால் பயன்படுத்திய தர்ப்பைப்புல்லையே மீண்டும் உபயோகப்படுத்தலாம். ஏகாதசி விரதமும் திருத்துழாயாகிய துளசியும், பகவத் கீதையும் பசுவும் பிராமண பக்தியும் ஸ்ரீஹரியின் சரணமும் ஆகிய இவையனைத்தும் சம்சார சாகரத்தைக் கடக்க வேண்டியவருக்கு நல்ல தெப்பமாகும். இறக்கும் நிலையை அடைந்தவன், கோமயத்தில் நன்றாக மெழுகப்பட்ட ஸ்தலத்தில், சூசைப் புல்லைப் பரப்பி, அதன் மீது எள்ளை இறைத்து, அந்தத் தர்ப்பைப் புல்லணையின் மீது சயனித்து, தருப்பைப் புல்லையும் திருத்துழாயையும் கையில் ஏந்தி, எனது நாமங்களை வாயாரப் புகன்ற வண்ணம் மடிவானாகில், அவன் அயனரனாதியருக்கும் அரியதாகிய நிரதிசய இன்ப வீடாகிய நமது உலகத்தை வந்தடைவான். மாய்பவன், தர்ப்ப சயனத்தில் குப்புறப்படுக்கலாகாது, முதுகு கீழுறவே சயனஞ் செய்தல் வேண்டும். உயிர் நீங்கும் முன்பே திருத்துழாயோடு, தனது நல்லுலக வாழ்வைக் கருதிய தானங்களையெல்லாம் கொடுத்து விடவேண்டும். அவற்றில் உப்பைத் தானம் செய்வது மிகவும் சிறப்பாகும். உப்பானது, விஷ்ணு லோகத்தில் உண்டானதாகும். ஆகையால் அதற்கு மகிமை அதிகம். மரித்தவன் உப்பைத் தானம் செய்வதால் சுவர்க்க லோகத்தை அடைவான்!” என்றார் திருமால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here