கனமழையால் அயோத்தி ராமர் கோவில் சாலை சேதமடைந்துள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில், கனமழை காரணமாக கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள சாலை சேதமடைந்துள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களால் வாகனங்கள் சிக்கி சேதமடைந்தன.
ராமர் கோவிலின் மேற்கூரை வழியாகவும் மழைநீர் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணியில் அலட்சியம் காட்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.