நவராத்திரியின் புனிதமான ஒன்பது நாள் திருவிழா இந்த ஆண்டு அக்டோபர் 17 முதல் 25 வரை நீடிக்கும், விஜயதாசமி அக்டோபர் 26 அன்று கொண்டாடப்படுகிறது. 9 நாள் நீடிக்கும் இந்த பண்டிகையில், மக்கள் தேவியை, துர்கா, லட்சுமி, சரஸ்வதி ரூபத்தில் வணங்குகிறார்கள்.
நவராத்திரியின் போது, தேவியின் பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் பண்டிகைக்காக தயாராகி வருகிறார்கள். கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வீடுகளில் கொலு வைத்து, அம்மனை அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள்.
முதல் மூன்று நாட்கள், துர்கையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் ஆராதனை செய்து வணங்குகிறார்கள்.
இந்த வருடம் கொரோனாவினால், சிறிது பாதிப்பு என்றாலும், உள்ளூர் நிலையில் கொண்டாட்டங்கள், கட்டுபாடுகளுடன், கொரோனா விதிமுறைகளுடன் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க |
நாடு முழுவதிலும் கொண்டாட்டப்டும் பண்டிகை நவராத்திரி ஆகும்.
தமிழ்நாட்டில் கொலு வைத்து கொண்டாடும் நேரத்தில். கொல்கத்தாவின் காளி பூஜை மிகவும் பிரசித்தம். அதைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. காளியின் பிரம்மாண்டமான சிலைகள் வைக்கப்பட்டு, காளியை விதம் விதமாக அலங்காரம் செய்து, மக்கள் பூஜித்து மகிழ்கின்றனர்.
மைசூர் மற்றும் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் என அனைத்து இடங்களிலும் கொண்டாட்டங்கள் குறைவில்லாமல் இருக்கும். தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்தில், இதனை பந்துகம்மா என்ற பெயரில் கொண்டாடுவார்கள். மைசூரில் மிகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டேஸ்வரியை பூஜித்து கொண்டாடுவார்கள்.
வடக்கில் நவராத்திரியின் இறுதியில் கொண்டாடப்படும் ராம்லீலா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதில் விஜயதசமியன்று, இராவணன் எரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இப்படிப்பட்ட உன்னதமான நவராத்திரியில், உணவில் வெங்காயம் மட்டும் பூண்டு சேர்த்துக் கொள்வது ஏன் தவிர்க்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.
இந்து மதத்தில், உணவுப் பொருட்கள் ராஜசம், தமாசம் மற்றும் சாத்வீகம் என மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சத்வீக உணவுப் பொருட்கள் தான் ஆன்மீக உணர்வை ஏற்படுத்துகின்றன. இதை சாப்பிடுவதாக, மனதை அடக்க முடியும், சகிப்புத் தன்மை, கருணை மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளை கொடுக்கிறது
பருவகால உணவுகள், பழங்கள், பால் பொருட்கள், கொட்டைகள், விதைகள், எண்ணெய்கள், பழுத்த காய்கறிகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் இறைச்சி அல்லாத புரத உணவுகள் சாத்வீக உணவுகள் ஆகும்
ராஜசம் குணம் உள்ள உணவுப் பொருட்கள், மறுபுறம், உடல் மற்றும் மனதில் ஊக்க உணர்வை ஏற்படுத்துகின்றன. வீரம், பிடிவாதம், சண்டையிடுதல் உற்சாகம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் உடலில் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க |
மனது அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு தாமச உணவு ஆகும். இது மன மந்தநிலையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. காமம், அச்சம், சோம்பல், மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல் போன்ற குணங்களை தூண்டுகிறது. எனவே தாமச வகை உணவான வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை இயற்கையில் தாமச குணம் கொண்டவை என வகைப்படுத்தப்படுவதால், ஒன்பது நாள் நீடிக்கும் இந்த பண்டிகை காலம் மட்டுமின்றி, எந்த பண்டிகை அல்லது பூஜையின் போதும், பித்ருக்களுக்கு செய்யும் சிரார்த்த காரியங்களின் போது, இவற்றை உண்ணக் கூடாது என நமது இந்து மதத்தில் கூறப்படுகிறது.