மேஷம்:
இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள் .
ரிஷபம்:
இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம் . திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள் . காரிய தடைகள் நீங்கும் . நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும் . தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள் . மனோதைரியம் கூடும் . எல்லா வகையிலும் சுகம் உண்டாகும் .
மிதுனம்:
இன்று அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும் . முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும் . தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும் . வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும் . மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்தது போல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம் . கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும் .
கடகம்:
இன்று தடை தாமதம் ஏற்படலாம் . வீண் அலைச்சல் உண்டாகும் . உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம் . சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது . குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள் .
சிம்மம்:
இன்று கணவன் , மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும் . பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும் . உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை . முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும் . எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் . பணவிஷயத்தில் சிக்கனத்தை கடை பிடிப்பீர்கள் . மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள் .
கன்னி:
இன்று புதிய வாகனம் யோகம் வந்துசேரும் . உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம் . முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் . உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது . மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும் .
துலாம்:
இன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள் . உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும் . குடும்பத்தில் அமைதி உண்டாகும் . வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் . காரிய வெற்றி கிடைக்கும் . நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும் .
விருச்சிகம்:
இன்று ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும் . வீண் வாக்குவாதங்கள் , அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம் . தந்தை மூலம் செலவு உண்டாகலாம் . வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம் . நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும் . தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் .
தனுசு:
இன்று மனோதைரியம் அதிகரிக்கும் . செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும் . தன்னம்பிக்கை அதிகரிக்கும் . உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது . வாகனங்களால் செலவு ஏற்படும் . புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும் . உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும் . ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும் .
மகரம்:
இன்று செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது . புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது . வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும் . அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும் . குடும்பத்தில் கலகலப்பு குறையும் . எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம்
கும்பம்:
இன்று வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் . வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும் . கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும் . கணவன் , மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும் . பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது .
மீனம்:
இன்று விரோதங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிவரலாம் . உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள் . அவர்களால் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம் .