நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய வேதங்கள் நான்கும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும், பின்னர், கோயிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்றதாகவும் செவிவழித் தகவலாக கூறப்பட்டு வருகிறது.
பின்னாளில், இந்தக் கோயிலுக்கு வந்த சமயக் குரவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவரும் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடியதால் கதவு மீண்டும் திறந்ததாகவும் கோயில் தல புராணத்தில் கூறப்படுகிறது.
இதில் அப்பர் கதவைத் திறக்கவும், சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம். இதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழாவின்போது, தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு விழாவானது ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றதையொட்டி, பிரதான கதவின் எதிரே அப்பர், சம்பந்தர் ஆகியோர் எழுந்தருள, இவர்களாக உருவகப்படுத்தப்பட்ட ஓதுவா மூர்த்திகள் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடினர்.
அப்போது, கோயில் கதவு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து திறக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் பூக்கள், உள்ள விஷயங்களைப் பற்றிய நம்பிக்கைகள் மற்றும் மரபுகள் அடிப்படையில் மாறுபடுகின்றன. சில பூக்கள், அவற்றின் தன்மைகள் மற்றும் அண்மைய காரணங்களால்,...
துளசியின் மகிமை மற்றும் அவற்றின் விரிவான குணாதிசயங்கள் துளசி, இந்தியாவில் தெய்வீக மரியாதைப் பெற்ற புனித மூலிகையாக விளங்குகிறது. விஷ்ணுவின் பக்தியில் அதன் முக்கியத்துவம், அதன் மருந்தியல்...
ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மம் என்பது தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னட பாரம்பரியங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான புனித நாள் ஆகும். இது ஆவணி மாதத்தில்...
வில்வத்தரு அல்லது வில்வ மரம் இந்து மதத்தில் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இது பில்வம், ஸ்ரீ த்ரிவேணி என்றும் அழைக்கப்படுகிறது. வில்வத்தின் மகிமை புராணங்கள், வேதங்கள் மற்றும்...
பூஜைக்கு உகந்த மலர்கள் பலவகையானவை உள்ளன, அவை தெய்வங்களுக்கு உகந்தவை, போற்றப்படும் விதத்தில் பூஜைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பல தெய்வங்களுக்கு அவர்கள் விரும்பும் மலர்களைப் பூஜையில் செலுத்துவது சிறப்பு....
நடிகர் விஜய், தமிழ்த் திரையுலகின் முக்கியமான முகவாணியாக, தனது பயணத்தை வெற்றியுடன் கடந்து வந்துள்ளார். அவரது வாழ்க்கை மற்றும் தொழிலாளர் வரலாறு, சாதனைகள் மற்றும் அரசியல் முன்மொழிவுகள்...