அருள்மிகு ஶ்ரீ யோகாம்பிகை சமேத ஶ்ரீஆத்மநாத சுவாமி திருக்கோயில், சின்ன ஆவுடையார் கோயில் (கொள்ளுக்காடு கிராமம்), பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
(பட்டுக்கோட்டை to மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் 15-k.m.தொலைவு)
(மிகப் பழமையான, மிகவும் சிதிலமான இந்த கொள்ளுக்காட்டுச் சிவதலத்தில், நம் இனிய ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருட்காட்சியளிக்கிறார்.
(ஒரு புராண நிகழ்வின்படி; திருப்பெருந்துறை ஆண்டவன், வாதவூராருக்காக (திருநாவுக்கரசருக்காக) ஒரு ஆவணி மூல நட்சத்திரத்தி நாளில், நரிகள் அனைத்தையும் பரி(குதிரை)களாக்கினார். நரிகளாகிய பரி (குதிரை)களுக்கு மாணிக்கவாசகர் கொள்ளு வாங்கிக்கொடுத்த இடம்தான் ‘கொள்ளுக்காடு|’ என்றழைக்கப்படுகிறது)
இங்குதான் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் போன்று, (இறைவனும்ழ, இறைவியும் அதே திருப்பெயர்கொண்டு) சிறிய ஆவுடையார் கோயில் அமைந்துள்ளது.
வேதாரண்யம் ஶ்ரீவேதாரண்யேஸ்வரர் தேவஸ்தான பராமரிப்பில் தற்போது உள்ளது. 12-ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறவேண்டிய திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் பல ஆண்டுகளாகியும் இன்னும் நடைபெறவில்லை.
இந்த பழம்பெருமை பெற்ற சிவாலயம் தற்போது, மிகவும் சிதிலமடைந்து பொலிவற்று காணப்படுகிறது.
பல பல நூற்றாண்டுகளையும், பல பல அரசாண்டவர்களையும்,
பல பல
ஆன்றோர் சான்றோர்களையும் பொலிவுடன் கண்ட
இந்த ஈசனாலயத்தின்
தற்போதைய நிலைமை….
இது போல
சிதலமடைந்து கிடக்கும் (நமது தமிழகத்தில் மட்டும்) சைவ, வைணவ வரலாற்று ஆலயங்கள் பல பல உள்ளன.
(🙏🏻இத்தல இறைவன் ஆத்மநாத சுவாமியோ
வெளியே ஒரு கொட்டகையில் ஒரு நேர பூஜைகூட இல்லாமல், தன்னிடம் திருவடி தீட்சை வாங்குவதற்கு மாணிக்கவாசகர் போல வேறு யாரும் வரமாட்டார்களா என எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறாராம்.
இந்த சிதிலமடைந்த ஆலயத்தின் நிலையை கண்ட ஒரு சிவபக்தர்
தன்னுடைய வலைப்பதிவில் இப்படி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்)
( நிகழ்வுகள் அத்தனையும், சிதலமடைந்த ஆலயத்தினுள் வீற்றிருந்து (நடத்திக்கொண்டிருக்கும்) நோக்கிக்கொண்டிருக்கும ஈசனுக்கு தெரியாததா என்ன?! 🤔ஒரு சமயம், நம்முடைய வேண்டுதலுக்கு. (காத்திருக்கிறார் போல..) செவிசாய்த்து தன் ஆலய திருப்பணியை தானே முடுக்கி வைப்பாரோ..என்னவோ…)
கார்த்திகை சோமவார விழா இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது).
🙏🏻ஓம் நமச்சிவாய நமக: