மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை யெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
மிதுனம்
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கடகம்
கடகம்: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்பார்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்
தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
சிம்மம்
சிம்மம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.
கன்னி
கன்னி: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புகூடும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.
துலாம்
துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
தனுசு
தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களது உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்
கும்பம்
கும்பம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
மீனம்
மீனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நன்மை நடக்கும் நாள்.