“தெய்வ தமிழ் பேரவை” என பெயர் வைத்துக் கொண்டு எந்த பொய்யை கூறினாலும் தமிழ் மக்கள் நம்பிவிடுவார்கள் என யாரோ இந்த பெ.மணியரசன், கலையரசி கூட்டத்தை தவறுதலாக தூண்டிவிட்டுள்ளது போல தெரிகிறது!
தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லையே!
World Economic Forum தொடங்கி Harvard, St.Petersberg Intl Economic Forum, United Nations, Google என உலகம் முழுவதும் பல்வேறு மக்களால் போற்றிக் கொண்டாப்படும் சத்குரு போன்ற ஒருவரை இங்குள்ள ஒரு சில அடிப்படைவாத கும்பல் எந்த அடிப்படையுமே இல்லாமல் போலி அவதூறுகளை வைத்து குற்றம்சாட்டுவதை பார்த்தால் கோபம் வரவில்லை, சிரிப்பு தான் வருகிறது!
கோயில்களை காப்பாற்ற சத்குரு #FreeTNTemples என்ற முயற்சியை ஆரம்பித்ததால், அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற முனைப்புடன் மணியரசன் போன்ற ஆன்மிக வேடம் போடும் ஆசாமிகள் களமிறக்கப்பட்டுள்ளனர் என்பது நிதர்சனம். இதற்காக ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் சத்குரு மீது வரிசையாக பொய் பழிகளை முன்வைத்து வருவது கண்கூடாக தெரிகிறது, அனைத்து தமிழ் மக்களுக்கும் இது புரியும் என எண்ணுகிறேன்!
நிஜமாகவே கோயில் மீது அக்கறை இருக்கும் மக்களாக இருந்தால் அவர்கள் சத்குருவிற்கு ஆதரவு தெரிவித்து கீழுள்ள கேள்விகளை எழுப்பி இருப்பர் என்பதில் எனக்கு ஐயம் ஏதும் இல்லை!
12000 தமிழக கோவில்களில் ஒரு வேளை பூஜை கூட நடக்காமல் சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் தமிழர்களின் ஆன்மாவான கோவில்களை காக்க முயலாதது ஏன்?
வெளி தணிக்கை (External Auditing ) நடத்த பட வேண்டும் என்ற சத்குருவின் கோரிக்கையை முன்மொழியாதது ஏன்?
அறநிலைத்துறையில் நடக்கும் ஊழலை கேள்வி கேட்காதது ஏன்?
இப்படி கோவில்கள் அழிவது பற்றியும் அதை காப்பது பற்றியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கோவிலை மீட்க நினைப்பவர்களை குற்றம் சொல்வது இவர்களை எப்படிப்பட்டவர்கள் என மிக தெளிவாக காட்டுகிறது..
எது எப்படியோ, இப்படி பல போலி அவதூறுகளை எல்லாம் ஈஷா அறக்கட்டளை நிறையவே பார்த்தாகிவிட்டது. இவர்கள் இப்படி பொய்களை பரப்புவதால் மணியரசன் போன்றோரின் போலி போராளி முகத்திரை உலகிற்கு இன்னும் வெளிச்சமாக தெரியுமே தவிர, ஈஷா அறக்கட்டளைக்கோ சத்குருவிற்கோ இதனால் எந்த பாதிப்பும் கட்டாயமாக இல்லை😊✌️
#FreeTemples #கோவில்அடிமைநிறுத்து முயற்சிக்கு இதுவரை 3.25 கோடி மக்களுக்கும் மேல் ஆதரவு அளித்துள்ளோம், கண்டிப்பாக தமிழக கோவில்களை காக்கும் இந்த முயற்சி நடந்தே தீரும், நடத்துவோம்
பூஜை அறையில் எவர்சில்வரில் பூஜை பாத்திரங்களை வைக்கக் கூடாதது ஏன்? வீட்டில் உள்ள பூஜை அறை என்பது ஒவ்வொரு வீட்டின் ஆன்மிக மையமாக பார்க்கப்படுகிறது. ஒரு வீட்டின்...
பூஜை அறையில் என்ன செய்யலாம்! என்ன செய்யக்கூடாது? கையில் துளசியை வைத்திருந்தால் என்ன நடக்கும்? பூஜை அறையில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்....
பதினேழாம் நாள் போர்... சல்லியன் தேர்ப்பாகனாதல் 10றுநாள் பொழுது புலர்ந்தது. பொழுது புலர்ந்தவுடன், கர்ணன் துரியோதனனிடம் சென்றான். அவனிடம், கர்ணன், "அரசே! இன்றைய போரில் அர்ச்சுனனைக் கொன்...
கையெழுத்தும், அதனால் தீர்மானிக்கப்படும் அதிர்ஷ்டமும்! ஒருவரின் கையெழுத்து என்பது அவர்களின் தனிப்பட்ட அடையாளமாக மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வில் முக்கியமான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியதாகும். பல வாஸ்து நிபுணர்களும் கைரேகை...
கடனில் சிக்கியவர்களுக்கு விடிவு தரும் ஏகாக்ஷி நாரியல் - வீட்டில் செழிப்பு பெருக எளிய ஆன்மிக முறைகள்! நாம் எவ்வளவு உழைத்தாலும், ஒரு சிலருக்கு பணம் எப்போதும்...
பதினைந்தாம் நாள் போர்.. துரோணர் வீழ்ந்தார் பீமன் மகன் கடோத்கஜனும், அர்ச்சு னனின் அருமைப் புதல்வர்கள் இரவானும், அபிமன்யுவும் பாண்டவர்களுக்காகப் பெரும் போர் செய்து தங்கள் இன்னுயிரைத்...