மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து வழங்கப்படும் உணவு பொட்டலங்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்கள் சார்பில் அருகில் உள்ள அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 2 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதல் நாளில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தினமும் ஒரு வகையான சாதம் என்ற வகையில் வழங்கப்படும். உணவு பொட்டலங்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் தயாரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு வழங்கப்படும். கோவிலில் இருந்து வழங்கப்படும் உணவு பொட்டலங்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.