கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான ‘திருப்புகழ்’ நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர். அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீ ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம் ஓதவேண்டும். தினமும் ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம் சொல்வதால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும். குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சிபுரத்தில் உள்ளது.
அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்தரிக்கபட்டுள்ளான். முருகனைக் குறித்துக் ‘குமார சம்பவம்’ என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி காளிதாசர்.
முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும். முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.
முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு கிழக்கு பக்கம் பார்த்தவாறு வைத்துக்கொள்ள வேண்டும். முருகருக்கு அரளிப்பூ அல்லது முல்லை பூ வாங்கி சூட்டுவது மிகவும் சிறந்தது.
நெய் தீபம் ஏற்றிய பின்பு முருகப்பெருமானின் முன்பு அமர்ந்து மனதார பதினோரு முறை ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை முதலில் உச்சரிக்க வேண்டும். அதன்பின்பு முருகப்பெருமானுக்குரிய இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிப்பது மிகவும் சிறந்தது