விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீர சோழன் அருகே மினாக்குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக 4 பழமையான ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் போலீசார் பல இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே கமுதி – திருச்சுழி சாலை அபிராமம் சந்திப்பில் வீரசோழன் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையிலான காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக திருச்சுழி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காவலர்களைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த காவலர்கள் அவர்களிடம் சோதனை நடத்தியதில் உலோகத்திலான சிறிய அம்மன் சிலை ஒன்று இருந்தது தெரியவந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் சிலையோடு நரிக்குடி காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் பழனிசாமி மற்றும் கூறிப்பாண்டி என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட அம்மன் சிலை ஐம்பொன் சிலை எனவும் இதே போல் மேலும் 3 சிலைகள் தங்களது கூட்டாளியான மினாக்குளத்தை சேர்ந்த பூசாரி சின்னையா என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நரிக்குடி காவல்துறையினர் மினாக்குளம் சென்று சின்னையாவின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி அங்கு சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, விநாயகர் சிலை மற்றும் பெரிய அம்மன் சிலை என மேலும் மூன்று சிலைகளை மீட்டனர்.
சட்டவிரோதமாக சிலைகளைப் பதுக்கியதாக சின்னையா மற்றும் பழனி முருகன் என்ற மேலும் இருவரை காவலர்கள் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைப்பற்ற சிலைகள் அனைத்தும் ஐம்பொன் சிலைகள் எனவும் தற்போது ஊரடங்கு காரணமாக செலவிற்கு பணமில்லாததால் ஏதேனும் நகைப்பட்டறையில் சிலையை விற்க முடியுமா என திருச்சுழிக்குக் கொண்டு செல்ல முயன்றதாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்து ஏதேனும் கோயிலில் சிலைகளை திருடினார்களா இல்லை வெளிநாடுகளுக்கு விற்பதற்காகக் கடத்திக் கொண்டுவரப்பட்ட சிலைகளா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடனில் சிக்கியவர்களுக்கு விடிவு தரும் ஏகாக்ஷி நாரியல் - வீட்டில் செழிப்பு பெருக எளிய ஆன்மிக முறைகள்! நாம் எவ்வளவு உழைத்தாலும், ஒரு சிலருக்கு பணம் எப்போதும்...
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்கும் படத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டுமா இல்லையா? வைக்கக் கூடாதா? அத்தகைய ஒரு பொருளை உங்கள் வீட்டில் வைத்திருந்தால் அதன் அதிசயங்களைப் பாருங்கள். வீட்டில்...
பூசாரியாக இருந்தாலும், இந்த நேரத்தில் நீங்கள் சிவன் கோவிலுக்குள் செல்லாதீர்கள், பின்னர் நீங்கள் சில ஆச்சரியங்களை சந்திக்க நேரிடும். அவை ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடும்.உங்களுக்குத் தெரியாவிட்டாலும், இந்த நேரத்தில்...