அம்மே சரணம் தேவி சரணம்….!!!
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் புதன்கிழமை காலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்கள் இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும்; அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கேரளம் மாநிலத்திலிருந்து ஏராளமான பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோவிலுக்கு வருவதால், `பெண்களின் சபரிமலை’ என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் வழக்கம்போல் புதன்கிழமை காலை பூஜை நடந்துகொண்டிருந்த போது கேவிலின் மேற்கூரையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த குளச்சல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை முன்னாள் மத்திய அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்கள்
Related