பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கியுள்ள இந்த விழா வரும் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நேற்று முதல் வருகிற 6ஆம் தேதி வரை வெளிக்கோடை திருநாளும், 7ஆம்தேதி முதல் 11ஆம்தேதி வரை உள்கோடை திருநாளும் நடைபெறுகிறது. உள்கோடை நாட்களில் வீணை ஏகாந்த சேவை நடைபெறும். மேலும் வருகிற 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஸ்ரீரங்நாச்சியார் வசந்த உற்சவம் நடைபெறும்.
வெளிக்கோடை உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர் ரங்கநாச்சியார் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை அடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 7 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைகிறார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
ரங்கநாச்சியார் வசந்த உற்சவம் வருகிற 12-ந் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவ நாட்களில் தாயார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
கடனில் சிக்கியவர்களுக்கு விடிவு தரும் ஏகாக்ஷி நாரியல் - வீட்டில் செழிப்பு பெருக எளிய ஆன்மிக முறைகள்! நாம் எவ்வளவு உழைத்தாலும், ஒரு சிலருக்கு பணம் எப்போதும்...
பதினைந்தாம் நாள் போர்.. துரோணர் வீழ்ந்தார் பீமன் மகன் கடோத்கஜனும், அர்ச்சு னனின் அருமைப் புதல்வர்கள் இரவானும், அபிமன்யுவும் பாண்டவர்களுக்காகப் பெரும் போர் செய்து தங்கள் இன்னுயிரைத்...
பதிநான்காம் நாள் போர் கதிரவன் குணதிசை சிகரம் வந்து எழுந்தான்; கனையிருள் அகன்றது; காலையம் பொழுதும் வந்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கண்ணபிரான் தரும புத்திரரைக்...
அகத்தியர் உருவாக்கிய 166 அகத்தீஸ்வரர் சிவாலயங்கள்(மொத்தம் 1008 ஆலயங்கள் உள்ளன. அகத்தியரின் ஜென்ம நட்சத்திரமான மாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் வருகிறது. உங்களுக்கு அருகில் உள்ள அகத்தீஸ்வரர்...
நட்டாலம் சங்கரநாராயணர் மற்றும் மகாதேவர் கோயில்கள் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்ற இடத்தில் அமைந்துள்ள சங்கரநாராயணர் ஆலயம் மற்றும் மகாதேவர் ஆலயம், இரண்டும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்...