மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டப்பணியில், 13 சிறுமியை ஈடுபடுத்திய ஒப்பந்ததாரர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து குழந்தை தொழிலாளர் நல கமிட்டிக்கும், போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.இதையடுத்து, பணி நடக்கும் இடத்துக்கு வந்த அதிகாரிகள், தொழிலாளர்களிடம் விசாரித்ததில், கூலியை மிச்சப்படுத்துவதற்காக 13 வயது சிறுமியை, ஒப்பந்ததாரர் நியமித்தது உறுதியானது.இதையடுத்து, ஒப்பந்ததாரர் ஜெகதீஷ், 50, மாண்டியாவின் துணை ஒப்பந்ததாரர் புனீத், 40, சித்தர்காவின் துணை ஒப்பந்ததாரர்கள் சீனிவாசன், 46, தொட்ட திம்மையா, 35, ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:ஒப்பந்ததாரர்களுக்கு தொழிலாளர்களின் விபரம், வயது, எங்கிருந்து வந்தவர் என்பது தேவையில்லை. அவர்களுக்கு குறைந்த கூலியில் வேலை செய்ய ஆட்கள் தேவை. கிராமப்புற பகுதிகளில் இதுபோன்று நடந்து வருகிறது. ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கு விழிப்பணர்வு இல்லாததே காரணம்.மீட்கப்பட்ட சிறுமி, படிப்பை பாதியில் நிறுத்தியதால், கூலி பணிக்கு வந்துள்ளார். அவரை குழந்தை தொழிலாளர் நல கமிட்டியினரிடம் ஒப்படைத்துள்ளாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Discussion about this post